Featured Posts
Home » ஷைய்க் M.S.M. இம்தியாஸ் ஸலபி (page 9)

ஷைய்க் M.S.M. இம்தியாஸ் ஸலபி

அல்குர்ஆன் பற்றி உங்களுக்கு தெரியுமா?

– உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி குர்ஆன் இறங்கப்பட்ட மாதத்தில் குர்ஆனுடன் தொடர்புள்ளவர்களாக மாறுவதற்கு குர்ஆனை பற்றி சுருக்கமாக பின்வருமாறு அறிந்து கொள்வோம். – அல்குர்ஆன் எப்போது அருளப்பட்டது? அல்குர்ஆன் ரமழான் மாதத்தில் அருளப்பட்டது. ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாக வும் நேரான வழியைத் தெளிவாக்கக் கூடிய தாகவும் நன்மை-தீமையை பிரித்தறிவிக்கக் கூடியதாகவும் உள்ள திருக்குர்ஆன் அருளப் பெற்றது… (2:185).

Read More »

“அல்குர்ஆன்” பாக்கியம் நிறைந்த வேத நூல்

– உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி அல்குர்ஆன் என்பது அல்லாஹ்வின் வார்த்தைகள். மனிதன் எப்படி வாழவேண்டும் என்ற முழுமையான வழிகாட்டுதலைத் தருகிறது. இக்குர்ஆன் தனிமனித, குடும்ப, சமூக வாழ்வின் அத்தனை அம்சங்களை இலகுநடையில் விளக்கப்படுத்துகிறது. மனிதனைப் படைத்த அல்லாஹ் அந்த மனிதன் எப்படி அல்லாஹ்வை நம்ப வேண்டும், பின்பற்ற வேண்டும். கட்டளைகளை ஏற்று நடக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்துகிறான்.

Read More »

முதலில் போதிக்க வேண்டியது எது? அகீதாவா? கிலாஃபத்தா?

– உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி மக்கள் மத்தியில் இஸ்லாமிய பிரச்சாரப் பணியினை கொண்டு செல்லும்போது முதலிடம் கொடுக்க வேண்டிய அம்சம் எது? என்பதில் சிலர் பிரச்சினைப்படுகிறார்கள்.

Read More »

அல்குர்ஆனும் முஹம்மத் நபி(ஸல்) அவர்களும் உலக மக்களின் இறுதி வழிகாட்டி

– உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி இது விரட்டப்பட்ட ஷைத்தான் வார்த்தை அல்ல. நீங்கள் எங்கே செல்கிறீர்கள்? இது அகிலத்தாருக்கும் உங்களில் யார் நேராக நடக்க விரும்புகிறாரோ அவருக்கும் அறிவுரை தவிர வேறில்லை (81:25-28) அல்குர்ஆனைப் பற்றி அல்லாஹ் கூறும் தெளிவுரை இது!

Read More »

ரமழானும் தர்மமும்

– உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையானவற்றையும் பூமியிலிருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தியதிலிருந்தும் செலவிடுங்கள். கண்ணை மூடிக் கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள். அல்லாஹ் தேவையற்றவன். புகழுக்குரியவன் என்பதை அறிந்துகொள்ளுங்கள். (2:267).

Read More »

நோன்பின் பெயரால் ஆதாரமற்ற செய்திகள்

நோன்பின் பெயரால் ஆதாரமற்ற செய்திகள் – உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி நோன்பின் மாண்புகளை சிறப்புகளை குறித்து நபி (ஸல்) அவர்க்ள கூறிய ஆதாரபூர்வமான அநேக ஹதீஸ்கள் உள்ளன. அந்த ஹதீஸ்களை மக்கள் தெரிந்து அமல்கள் செய்வதை விட ஆதாரமற்ற செய்திகளை வைத்து அமல்கள் புரிவதில் தான் ரமழானின் காலத்தையும் நேரத்தையும் செலவிடுகிறார்கள். பின்வரும் செய்திகள் ரமழான் காலத்தில் அதிகமதிகமாக பள்ளிவாசல்களில் பயான் செய்யப்படுகின்றன. ஆனால் அவைகள் அனைத்தும் பலஹீனமான செய்திகளே …

Read More »

இறவாத மனிதர் ஹிழ்ரு (அலை)?

– எம்.எஸ்.எம்.இம்தியாஸ் ஸலபி உலகத்திற்கு அனுப்பப்பட்ட நபிமார்களில் ஹிழ்ரு (அலை) மட்டும் இன்னும் உயிரோடு வாழ்ந்து வருகிறார்கள். கடற்கரையோரத்தில் சுற்றித்திரிகிறார்கள்; கடல் பிரயாணம் செய்பவர்கள் அவரிடம் பாது காப்புத் தேடி அழைப்பு விடுத்தால் உடனே வந்து காப்பாற்றுவார்க ஆண்டு தோறும் ஹஜ் செய்ய வருகிறார்கள்ளூ ஹஜ்ஜாஜிகளுடன் முஸாபஹா செய்கிறார்கள்; எல்லா நபிமார்களையும் சந்தித்திருக்கிறார்கள்; பெரியார்கள் நாதாக்கள், ஷைகு மார்கள் கூட அவரை சந்தித்து ஸலாம் கூறியுள்ளார்கள்.. “ஐனுல் ஹயாத்” என்றொரு …

Read More »

முஹம்மத் நபி (ஸல்) அவர்களைப் பற்றி, நபித்தோழர்களின் நேர்முக வர்ணனை

– எம்.எஸ்.எம். இம்தியாஸ் ஸலபி ஒருவரை சமூக தலைவராக, ஆன்மீக வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டவர்கள் அவரது கொள்கை கோட்பாடுகள் மற்றும் அங்க அசைவுகளை முழுமையாக பாதுகாத்து வந்திருக்கிறார்கள் என்பதை பார்க்க முடியாது. ஆனால் முஹம்மது நபி (ஸல்) அவர்களை ஏற்றுக் கொண்ட சமூகம் அவரது போதனைகள் கொள்கைள் மட்டுமல்லாமல் அவரது குணநலன்கள அங்க அவையங்கள், நெளிவு சுளிவுகள், பேச்சு மூச்சுக்கள் என்று பலவற்றையும் கூர்மையாக கவனித்து துள்ளியமாக அடுத்த தலைமுறைக்கு …

Read More »

பொய்களை மூலதனமாக்க வேண்டாம். TNTJ-க்கு அன்பான வேண்டுகோள்

சத்தியக்குரல் மாத பத்திரிகையின் ஆசிரியர் இம்தியாஸ் ஸலபி எழுதிக் கொள்வது. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இலங்கையின் மஹாகொடை அசம்பாவிதம் சம்பந்தமாக சகோதரர் இஸ்மாயில் ஸலபி எழுதிய கட்டுரை தொடர்பாக சகோதரர்கள் பல கருத்துக்களை எழுதிவருகிறார்கள். அல்லாஹ் அவர்கள் அனைவருக்கும் அருள்புரிவானாக! இது தொடர்பாக நானும் ஒரு கருத்தை சொல்ல விரும்புகிறேன்.

Read More »