Featured Posts
Home » மவ்லவி M. றிஸ்கான் முஸ்தீன் மதனீ

மவ்லவி M. றிஸ்கான் முஸ்தீன் மதனீ

இன்ஸுலீன் மருந்தை ஊசி மூலம் ஏற்றிக் கொள்வதால் நோன்பு முறியுமா?

சர்க்கரை நோயினால் (சீனி நோய்) கடுமையாகப் பாதிக்கப்பட்டவர், நோன்போடு இருக்கும் போது இன்ஸுலீன் மருந்தை ஊசி மூலம் ஏற்றிக் கொள்வதால் நோன்பு முறியுமா? சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர் இன்ஸுலீன் போன்ற மருந்துகளை ஊசி மூலம் நிவாரணத்திற்காக ஏற்றிக் கொள்வது தடை கிடையாது. அப்படி இன்ஸுலீன் ஏற்றியதனால் நோன்பு முறியாது. அதற்காக ஏனைய நாட்களில் நோன்பிருக்கத் தேவையில்லை. என்றாலும் இந்த மருந்தை இரவில் எடுத்துக் கொள்ள முடியுமானால் மிகவும் ஏற்றமானது. மார்க்கத் தீர்ப்பு மற்றும் அறிவியல் ஆய்விற்கான நிரந்தர மையம். 10/252 அரபு மூலம்: https://islamqa.info/ar/answers/37892 தமிழில்: …

Read More »

ஜும்ஆ தொழுகை இடம் பெறும் பள்ளியில் மாத்திரம் தான் இஃதிகாப் இருக்க வேண்டுமா?

இந்த விஷயத்தில் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து முரண்பாடு இருந்தாலும் ஐங்கால தொழுகை நடத்தப்படும் எந்தப் பள்ளியிலும் இஃதிகாப் இருக்கலாம் என்பதே ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தாக இருக்கின்றது. “இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும்போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்..” (2:187) அல்லாஹ் திருமறையில் பொதுவாக மஸ்ஜித் என்று சொல்லுவதனால் ஐங்கால தொழுகை நடாத்தப்படாத பள்ளியிலும் இஃதிகாப் இருக்கலாம் என்று சில அறிஞர்கள் கூறிய போதிலும், இக்கருத்து வலுவான கருத்தாக கருதப்படவில்லை. …

Read More »

ரமளானை மூன்றாக நபியவர்கள் பிரித்து சிறப்புக்களை சொன்னார்களா?

முதல் பத்து ரஹ்மத்துடைய (அருள் நிறைந்த) பத்து இரண்டாம் பத்து மஃபிரதுடையது (பாவமன்னிப்பு) மூன்றாம் பத்து இத்குன் மினன் நார் (நரக விடுதலை) ஸல்மான் அல்பாரிஸி (ரழி) அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்படும் செய்தி இப்னு ஹுஸைமாவில் 1887 ஆம் இலக்கத்திலும், அல் மஹாமிலி தனது அமாலீ எனும் கிரந்தத்தின் 293 ஆம் பக்கத்திலும், பைஹகி அவர்கள் ஷுஅபுல் ஈமானின் (7/216) இலும் இன்னும் சில அறிஞர்களும் இந்த செய்தியை பதிவு …

Read More »

இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்தி: அல்லாஹ்வுடன் மூஸா (அலை) அவர்களின் உரையாடல்

நபியவர்களோடு இணைத்து சமூக வலைத்தளங்களில் பரப்பும் இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்தி: ஒரு தடவை மூஸா அலை அல்லாஹ்விடம், “யா அல்லாஹ்! நீ என்னை உன்னுடன் நேரடியாகப் பேசவைப்பதன் மூலம் கெளரவப்படுத்தினாய்.. இது போன்ற பாக்கியத்தை வேறு எவருக்கேனும் கொடுத்ததுண்டா?” எனக் கேட்டார். அதற்கு அல்லாஹு தஆலா, “மூஸாவே! இறுதி காலப்பகுதியில் நான் முஹம்மத் (ஸல்) இன் கூட்டத்தினரை அனுப்புவேன். அவர்கள் காய்ந்த உதடுகளுடனும், வரண்ட நாவுடனும், மெலிந்து கண்கள் குழிவிழுந்த …

Read More »

தக்க காரணம் இல்லாமல் நோன்பை விடுவது மிகப் பெரும் பாவமாகும்..

தக்க காரணம் இல்லாமல் நோன்பை விடுவது மிகப் பெரும் பாவமாகும்.. அபூ உமாமா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி (ஸல்) கூறினார்கள்: “நான் ஒரு நாள் தூங்கிக் கொண்டு இருக்கும் போது என்னிடம் இருவர் வந்து என்னை ஒரு மலை அடிவாரத்திற்கு அழைத்துச் சென்று அந்த மலை மேல் ஏறுமாறு ஏவினார்கள். நான் அதில் ஏற சக்தி பெற மாட்டேன் என்றேன். இல்லை ஏறுங்கள் நாங்கள் உங்களுக்கு உதவுகின்றோம் என்றனர். …

Read More »

கிறிஸ்தவர்களுக்கு ஓர் அன்பு மடல்

அன்பின் கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளே! இறைவனின் தீர்க்கதரிசி மோஸஸ் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பரிசுத்த வேதத்தில் இஸ்ரவேலர்கள் தமது மாற்றங்களைச் செய்து தமது சொந்த விருப்பு வெறுப்பை முற்படுத்தி இறைவேதத்தை திரித்துக் கூற முற்பட்டமையே மீண்டும் ஒரு புதிய வேதத்தை ஜீஸஸுக்கு இறைவன் அருளினான் என்பதனை எந்த ஒரு உண்மையான கிறிஸ்தவரும் மறுக்க முடியாது. எல்லாம் வல்ல இறைவனிடம் இருந்து வேதம் கொடுக்கப்பட்ட சமூகமாகிய கிறிஸ்தவ சமுதாயத்தினர்களில் பலர், தங்களுக்கு அருளப்பட்ட …

Read More »

அல்லாஹ்வின் அழகிய வழிகாட்டலில் நபி (ஸல்) அவர்களின் பொறுமை

நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையை எந்த ஒரு மனிதனாலும் இலகுவில் புரிந்து கொள்ளக் கூடிய அமைப்பிலும், அவர்களின் வரலாற்றைப் படிப்பவர் பல்வேறு பிரயோசனங்களையும் அடைந்து கொள்வார் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. குறிப்பாக நபியவர்களது வாழ்க்கையில் அவர்கள் கடைப்பிடித்த பொறுமை மானிடத்திற்கே பெரும் முன்மாதிரியாக இருப்பதை அவதானிக்கலாம். இறைவனின் ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்வதில் பொறுமை, குடும்ப வாழ்க்கையில் பொறுமை, பாசமிகு உறவுகளை இழக்கும் சந்தர்ப்பத்தில் பொறுமை, எதிரிகளைப் போர் களத்தில் …

Read More »

ஒன்றாகச் சேர்ந்து சாப்பிடும் போது ஏனையவர்கள் உணவருந்தி முடிக்கும் முன் எழுந்து செல்லலாமா?

இந்தக் கேள்வி எம்மில் அதிகமானவர்களிடம் இருந்து வருவதையும் இவ்வாறு ஒன்றாக உணவு உற்கொள்ளும் போது இடையில் எழுந்து செல்வது நபி வழிக்கு மாற்றமானது என்ற சந்தேகம் பொதுவாக நிகழ்வதைப் பரவலாக காணமுடிகின்றது. இதற்கு ஒரு அடிப்படை இருக்கின்றது. நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: உணவுத் தட்டு வைக்கப்பட்டால், அந்த உணவுத்தட்டு உயர்த்தப்படும் வரை (உண்டு முடிக்கும் வரை) எந்த மனிதரும் எழுந்துவிட வேண்டாம். …

Read More »

உயிரோடு வாழும் ஒரு மனிதருக்கு “நீ நரகவாசி” என தீர்ப்பளித்தல்

-அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் ஸுலைமான அல் மனீஃ- உயிரோடு வாழும் ஒரு மனிதரைப் பார்த்து நீ நரகத்திற்கு உரியவன் என்றோ அல்லது சுவர்க்கத்திற்கு உரியவன் என்றோ தீர்ப்பளிப்பதை கட்டாயமாக தவிர்த்துக் கொள்ள வேண்டும் என சவுதி அரேபிய மூத்த அறிஞர் குழாமின் உறுப்பினராகிய அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் ஸுலைமான் அல் மனீஃ அவர்கள் மார்க்கத் தீர்ப்பளிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பதில் அளிக்கும் போது குறிப்பிட்டார். தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் ஒரு மனிதர் …

Read More »

பெண்கள் ஸலாம் சொல்லும் போது சப்தத்தை உயர்த்தி சொல்லலாமா?

அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் ஸுலைமான அல் மனீஃ நேற்றைய தினம் (30-12-2018) அர் ரிஸாலா தொலைக்காட்சியில் “மார்க்க சட்டங்களை தெரிந்து கொள்ளுதல்” என்ற நிகழ்ச்சியில் பெண்கள் பொது இடங்களில் அதாவது சந்தை பகுதிகள், வைத்தியசாலை மற்றும் மக்கள் கூட்டமாக இருக்கும் இடங்களில் ஸலாம் சொல்லும் போது அல்லது அல்லாஹ்வை நினைவுகூரும் திக்ர்களை ஓதும் போது தனது சப்தத்தை உயர்த்தலாமா என்று ஒரு பெண்மணி கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போது, சவுதி …

Read More »