Home » மவ்லவி M.I. அன்வர் (ஸலஃபி)

மவ்லவி M.I. அன்வர் (ஸலஃபி)

மியன்மார்: இனசங்காரத்தில் சிக்குண்டுள்ள ரோஹிங்கிய முஸ்லிம்கள்

-எம். ஐ அன்வர் (ஸலபி)- ஐ.நா வின் அறிக்கையின்படி உலகில் இன்று தொடர்ச்சியான இன ஒடுக்குமுறைக்கு உள்ளாகிவரும், அதேநேரம் மோசமான மனித அழிவை சந்தித்துவரும் சிறுபான்மை சமூகக் குழுவாக ரோஹிங்ய முஸ்லிம்கள்அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். மியன்மார் அரசாங்கத்தின் முஸ்லிம் சிறுபான்மையான ரோஹிங்யர்களின் மீதான ஒடுக்குமுறை சர்வதேச நாடுகளின் கவனத்தைக் ஈர்த்துள்ள மிக முக்கிய பிரச்சினையாக கருதப்படுகிறது. மியன்மார் ரோஹிங்கியா சிறுபான்மை முஸ்லிம்கள் நீண்ட காலமாகவே கொடுமைகளுக்கு உட்பட்டுவருவோராவர். அதிகமான வரலாற்றாசிரியர்களது கருத்துப்படி 12ம் …

Read More »

குடும்பத்திட்டம் (Family Planning) – ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்

-எம்.ஐ. அன்வர் (ஸலபி)- மனித வாழ்வை நிலைபெறச் செய்யும் முதல் அம்சமாகவும், மனித சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான அடிப்படை அலகாகவும் குடும்பம் திகழ்கிறது. மனித இனம் இவ்வுலகில் நிலை பெற வேண்டும் என்பதற்காக அல்லாஹ் மனிதனை ஜோடியாகப் படைத்துள்ளான் எனவேதான் இஸ்லாம் திருமணத்தின்பால் தூண்டுதளிப்பது மாத்திரமின்றி அதனை தன் இரட்சகனிடம் நெருங்கும் வழியாகவும்; பார்க்கின்றது. அந்தவகையில் இஸ்லாம் துறவறத்தை தடைசெய்து குடும்ப வாழ்க்கையின்பால் மனித சமூகத்தை அழைத்துச் செல்கிறது. ஒரு நாள் …

Read More »

சார்லி ஹெப்டோ – இஸ்லாமோபோபியாவின் மறு வடிவம்

-அஷ்ஷெய்க் எம்.ஐ அன்வர் (ஸலபி) –கிழக்குப் பல்கலைக் கழகம்- பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள சார்லி ஹெப்டோ வார பத்தரிகை அலுவலகத்திற்குள் கடந்த வாரம் புகுந்த செரிப் குவாச்சி மற்றும் சயித் குவாச்சி ஆகிய சகோதரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பத்திரிகை ஆசிரியர், கேலிச்சித்திரம் வரைபவர்கள் (Cartoonist) உற்பட 12 பேர் கொல்லப்பட்டனர். நபி (ஸல்) அவர்களை கிண்டல் செய்து கேலிச்சித்திரத்தை வெளியிட்டதால் இப்பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. தாக்குதல் …

Read More »

முஹாசபா எனப்படும் சுயவிசாரணை

மனிதன் தவறு செய்யமாட்டான் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. மறதியும் தவறும் அவனோடு ஒட்டிக்கொண்ட அட்டைகள் போல் எனலாம். இதை அல்-குர்ஆன் அல்-ஹதீஸ் பட்டவர்த்தனமாக பிரஸ்தாபிக்கின்றன. இதற்கு முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களின் வரலாற்றுத் தவறு ஒரு வலுவான உதாரணமாகும். எனினும் தான் செய்த தவறுகளை நினைத்து மனம் திருந்துபவனே மனிதப் புனிதன் என்று ஒரு நபிமொழி கூறுகிறது. “ஆதமின் மக்கள் அனைவரும் தவறு செய்யக்கூடியவர்கள். எனினும் அவர்களுல் …

Read More »

அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோகம் – ஆசியாவின் மிகப்பெரிய பிரச்சினை

-அஷ்ஷெய்க் எம்.ஐ அன்வர் (ஸலபி) –கிழக்குப் பல்கலைக் கழகம்- இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள். இவர்கள் சமுதாயத்தின் கண்கள். நாட்டின் எதிர்காலத் தூண்கள். ஆனால், அபிவிருத்தியடைந்து வரும் இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில் சிறுவர் துஷ்பிரயோகம் என்பது மிகவும் பூதாகரமாக உருவெடுத்து நாட்டின் சுபீட்சத்தையும் இளம் சிறார்களின் எதிர்காலத்தையும் நாசமாக்கி விடுமோ என்ற அளவுக்கு அச்ச நிலையைத் தோற்றுவித்துள்ளது. சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் தினசரி பத்திரிகையில் ஒரு செய்தி …

Read More »

ஹஜ் எனும் புனித யாத்திரை

அஷ்ஷெய்க் எம்.ஐ அன்வர் (ஸலபி) -கிழக்குப் பல்கலைக் கழகம்- அல்லாஹுதஆலா இவ்வுலகில் தன் அடியார்கள் மீது விதியாக்கியுள்ள கடமைகள் ஒவ்வொன்றும் பல நோக்கங்களையும் குறிக்கோள்களையும் கொண்டமைந்தவை. இந்த வகையில் இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளுல் ஒன்றான ஹஜ் கடமையின் கிரியைகள் நபிமார்களின் தந்தை இப்றாஹீம் (அலை) அவர்களின் வரலாற்றுடன் தொடர்புபட்டு காணப்படுகின்றது. அது மார்க்கத்தின் அடிப்படை கடமைகளுள் ஒன்றாக மாறியுள்ளது.

Read More »

ஆசிரியர்களுக்கு ஒரு முன்னுதாரணம் நபி (ஸல்) அவர்கள்

அஷ்ஷெய்க் எம்.ஐ அன்வர் (ஸலபி) –கிழக்குப் பல்கலைக் கழகம்- எதிர்கால தலைவர்கள் இன்றைய இளைஞர்கள். தலைவர்கள் நல்லவர்களாக இருக்கவேண்டுமானால் இளைஞர்கள் நல்லவர்களாக உருவாக வேண்டும். நல்ல இளைஞர்களை உருவாக்கும் பொறுப்பு பெற்றோர்களுடன் ஆசிரியர்களுக்கும் உரியது. இதனால் அரசும் நற்பிரஜைகளை உருவாக்குவதே கல்வியின் பிரதான நோக்கமாக கொண்டுள்ளது.

Read More »

ஸகாத்: ஒரு சமூகக் கடமை

அஷ்ஷெய்க் எம்.ஐ அன்வர் (ஸலபி) -கிழக்குப் பல்கலைக் கழகம்- நோன்பும் ஸகாத்தும் தனித்தனியாக பிரிந்தமைந்த இரு பெரும் கடமைகள். எனினும் நம் சமூகத்தில் ரமழான் மாதத்திலேயே ஸகாத் கடமையையும் நிறைவேற்றுகின்ற பாரம்பரியம் இருந்து வருகின்றது. இந்நடைமுறை கடடாயம் பின்பற்றப்படவேண்டும் என்றில்லாவிடின் இத்தகைய ஒருங்கிணைப்பு மூலம் செல்வந்தர்கள் தமது சொத்துக்களை வருடாந்தம் கணக்கிட்டு அதன் கடமையை நிறைவேற்றவும் ஸகாத் சேகரிப்பை இலகுபடுத்தவும் முடியாமல் போய்விடுவது நோக்கத்தக்கதாகும்.

Read More »

நோன்பு தரும் ஆரோக்கியம்

அஷ்ஷெய்க் எம்.ஐ அன்வர் (ஸலபி) -கிழக்குப் பல்கலைக் கழகம்- ஆரோக்கியம் என்பதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் (WHOˆ) வழங்கியுள்ள வரைவிலக்கணத்தின்படி ஒருவன் தனது உடல், உள, சமூக மற்றும் ஆன்மீக ரீதியாக அவனது அன்றாட வாழ்வின் நாளாந்த செயற்பாடுகளுக்கு இடையூறற்றவனாக அமையும்போது மாத்திரமே சுகதேகியாகிறான்.

Read More »

ரமழான் – ஓர் ஆன்மீக வசந்தத்தின் உதயம்

– அஷ்ஷெய்க் எம்.ஐ அன்வர் (ஸலபி) –கிழக்குப் பல்கலைக் கழகம் – உலக முஸ்லிம்கள் அனைவரும் புனித ரமழானை உற்சாகத்துடன் வரவேற்றுக் கொண்டிருக்கின்றனர். புறரீதியான வரவேற்பை விட அகரீதியான வரவேற்பையே ரமழான் வேண்டி நிற்கின்றது. வருடம் தோறும் எம்மை நோக்கி வரும் இப்புனித மாதம் ஆயிரம் ஆயிரம் வசந்தங்களுடன் எம் வீட்டு வாசல் வந்து சென்றிருக்கிறது. எனினும் ஒவ்வொரு ரமழானையும் அத்தகைய விரிந்ந பார்வைகளோடுதான் நாம் எதிர் நோக்கி உள்ளோமா? …

Read More »