Featured Posts
Home » ஷேர்ஷா

ஷேர்ஷா

வீணாகும் நேரம் (ஆண்கள் பிரிவில் மூன்றாம் பரிசு பெற்ற கட்டுரை)

ஜித்தா இஸ்லாமிய பல்சுவை நிகழ்ச்சி (2009), ஆண்கள் பிரிவில் மூன்றாம் பரிசு பெற்ற கட்டுரை – மாலிக் கான் எல்லாப் புகழும் அல்லாஹ்-வுக்கே உரித்தாகுக. பூமியைப் படைத்தபோதே அல்லாஹ் காலத்தின் அளவையும் நிர்ணயம் செய்துவிட்டான். மாதங்களின் எண்ணிக்கை பன்னிரெண்டு என்றும் அதற்கான காலவரையை நாம் அறிந்துகொள்ள சூரியனையும், சந்திரனையும் தத்தமது பாதைகளில் நிர்ணயித்தபடி சுழலவும் செய்துள்ளான். இரவை இருளாக்கி சுகம் பெறுவதற்கும், பகலைப் பிரகாசமாக்கி அவன் அருட்கொடைகளைத் தேடிக்கொள்ளவும் அல்லாஹ் …

Read More »

குற்றங்களின் எண்ணிக்கை

ஏப்ரல்-28, 2008 அரப் நியூஸ் நாளிதழ் தெரிவிக்கும் செய்திக் குறிப்பு, கடந்த மூன்று மாதங்களில் மக்கா ரோந்துக் காவல் துறையினரால் 8,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதாவது கடந்த ஜனவரி 10 முதல் ஏப்ரல் 21ஆம் தேதிவரை மக்காவைச் சார்ந்த ரோந்துக் காவல்துறையினர் 8,068 பேரை பல்வேறு குற்றங்களுக்காக கைது செய்துள்ளனர். இதில் 6,508 எட்டுபேர் பல்வேறு குற்றங்களில் ஈடுபடடுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

Read More »

ஜித்தாவில் “யூசுப் எஸ்ட்” – இஸ்லாமிய நிகழ்ச்சித் தொகுப்பு

இஸ்லாமிய மார்க்கம் உலகம் முழுவதிலும் அதிக மக்களால் படிக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக அமெரிக்க நாட்டில் பல ஆண்களாலும் பெண்களாலும் இஸ்லாம் படிக்கப்பட்டும் பரப்பப்பட்டும் வருகின்றது. சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்திலிருந்து சவூதி அரேபியாவிற்கு பிரபல இஸ்லாமிய அழைப்பாளர் யூசுப் எஸ்ட் அவர்கள் வருகை புரிந்தார்கள். ஜித்தாவிலுள்ள சவூதி ஜெர்மன் மருத்துவமனை வளாகத்தில்

Read More »

கருத்துச் சுதந்திரமா? ஆணவமா?

கடந்த 2005-ம் ஆண்டு செப்டம்பரில், முஹம்மது நபி(ஸல்) அவர்களை கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் டென்மார்க்கிலிருந்து வெளிவரும் ஜீலன்ட்-போஸ்டன் பத்திரிக்கை 12 கேலிச் சித்திரங்களை வெளியிட்டது. ஜீலன்ட் பத்திரிக்கை வெளியிட்ட 12 கேலிச்சித்திரங்களில் பதினொன்று நபி(ஸல்) அவர்களைப் பயங்கரவாதியாகவும் மற்றொன்று அவர்களைப் பாலியல் வாதியாகவும் சித்தரிக்கும் வகையில் வரையப்பட்டிருந்தன. துப்பாக்கி, வாள் ஆகியவைகள் பிடித்துக் கொண்டு இருப்பது போன்றும், அவர்கள் தலைப்பாகையில் வெடிகுண்டு இருப்பது போன்றும் கேலிச்சித்திரங்கள் வெளியாயின.

Read More »

சேதுவா? ராமரா?

தற்போது இந்திய அரசியலில் உருவெடுத்திருக்கும் மிகப்பெரும் பிரச்சினை “சேது சமுத்திரக் கால்வாய் திட்டம்” நிறைவேற்றப்படுமா? என்பதுதான். மதவெறி பிடித்த அமைப்புகளும், அரசியலில் சுய ஆதாயம் தேடிக் கொண்டிருக்கும் கும்பல்களும் இணைந்து இல்லாத இராமர் பாலத்திற்காக இந்தியாவில் ஆங்காங்கே வன்முறைகளை ஏற்படுத்தி வருகின்றனர். சேது சமுத்திரத்திட்டத்தில் ஒரு பகுதியில் அகற்றப்படும் சுண்ணாம்புப் பாறைகள் ராமர் கட்டிய பாலம் என்றும் அதை தேசியச் சின்னமாக அறிவிக்கவேண்டும் என்றும் கருத்துக்களை வைக்கின்றனர். இத்திட்டம் இந்துக்கள் …

Read More »