Featured Posts
Home » S.A Sulthan

S.A Sulthan

தொழுகையாளிகளைத் தவிர..! (2)

தொழுகை, ஒருவனைப் பக்குவப்படுத்துகின்றது! தொழுகை, ஒருவனின் கெட்ட குணத்தையும் – நற்குணமாக மாற்றி அமைக்கின்றது! தொழுகை, தீய செயல்கள் நிறைந்தவனையும் நற்செயலாற்ற வைக்கின்றது! என்ற விஷயங்களைச் சென்ற தொடரில் கண்டோம். அது எவ்வாறான தொழுகை? அந்த தொழுகையின் மாண்புகள் என்ன என்ற செய்திகளை இப்போது பார்ப்போம். 🔵நிரந்தரமாக நிறைவேற்றுதல்:🔵 அவர்கள் எப்படிப்பட்ட தொழுகையாளிகள்? என்பதை الَّذِينَ هُمْ عَلَى صَلَاتِهِمْ دَائِمُونَ அவர்கள் தொழுகையை விடாமல் நிரந்தரமாக நிறைவேற்றுவார்கள் என்று …

Read More »

தொழுகையாளிகளைத் தவிர…! (1)

மனிதனின் என்னென்ன கீழ்த்தரமான குணங்களைக் கொண்டவன் அவன் எப்படிப்பட்ட குணங்களைக் கொண்டவனாக படைக்கப்பட்டிருக்கின்றான் என்பதை படைத்த இறைவன் விவரிக்கின்றான். اِنَّ الْاِنْسَانَ خُلِقَ هَلُوْعًا ۙ‏ ✳️ اِذَا مَسَّهُ الشَّرُّ جَزُوْعًا ۙ‏ ✳️ وَاِذَا مَسَّهُ الْخَيْرُ مَنُوْعًا ✳️ اِلَّا الْمُصَلِّيْنَۙ ✳️ நிச்சயமாக மனிதன் பேராசையும் – பதற்றமும் நிறைந்தவனாக படைக்கப்பட்டிருக்கின்றான். ஏதேனும் துன்பம் அவனுக்கு வந்தால் பொறுமை இழந்தவனாக அவன் ஆகின்றான். ஆனால் …

Read More »

தோழமையின் இலக்கணம் (1)

நட்பு, சினேகிதம்,தோழமை போன்ற வார்த்தைகளில் “தோழமை” என்ற வார்த்தைக்குத்தான் பொருளும் அந்தஸ்தும் அதிகமாகும். மனிதர்களுக்கு இறைவன் வழங்கிய தாய், தந்தை, கணவன், மனைவி, மக்கள், சகோதரன், சகோதரி என்ற உறவுகளைப் போன்று, தோழமை என்பதும் முக்கியமான ஒரு உறவாகும். ஒரு முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஊர்களில் அண்டை வீடுகளுக்கு மத்தியில் உள்ள ஒத்த வயதுடைய சிறுமிகளை எல்லாம் அழைத்து இவளுக்கு – அவள் …

Read More »

இரண்டு வகை மனிதர்கள்

இவ்வுலகில் இரண்டு வகையான மனிதர்கள் உண்டு! ஒன்று நற்காரியங்களுக்கு (நன்மைக்கு) முன்னோடியாகவும், கெட்ட காரியங்களுக்கு (தீயவைகளுக்கு) தடையாகவும் இருப்பவர்கள். இன்னொன்று கெட்ட காரியங்களுக்கு (தீமைக்கு) முன்னோடியாகவும், நன்மையான காரியங்களுக்கு தடையாகவும் இருப்பவர்கள். “மனிதர்களில் சிலர் நலவுக்கு திறவுகோலாகவும், தீமைகளுக்கு தடையாகவும் உள்ளனர், வேறு சிலர் தீமைகளுக்கு திறவுகோலாகவும் நலவுக்கு தடையாகவும் உள்ளனர், அல்லாஹ் எவரின் கரத்தினால் நலவின் வாயில்களை திறந்து விடுகிறானோ, அவருக்கு சுவசோபனம் உண்டாகட்டும், மேலும் எவன் மூலம் …

Read More »

நயவஞ்சகம் (1)

நிஃபாக் (நயவஞ்சகம்) என்ற அரபு சொல்லுக்கு ஏமாற்றுதல், சதி செய்தல், நன்மைகளை வெளிப்படுத்தி நன்மைக்கு எதிரானவைகளை உள்ளத்திற்குள் மறைத்து வைத்தல் என்று இமாமகள் விளக்கமளித்துள்ளனர். ஈமானை (இறை நம்பிக்கையை) நாவினால் வெளிப்படுத்திவிட்டு குஃப்ரை (இறை மறுப்பை) உள்ளத்தில் மறைத்துக் கொள்ளுதல் என்பதாகும். இறை நிராகரிப்பாளர்களைப் போன்றே நயவஞ்சகர்களும் சமூகத்தில் எல்லா காலகட்டங்களிலும் இருந்துள்ளனர். செல்வத்தில் செழிப்பாகவும் நாவன்மை மிக்கவர்களாகவும் அவர்கள் இருந்துள்ளதை அல்குர்ஆன் பல இடங்களில் விவரிக்கிறது. இருந்தபோதிலும் அவர்களின் இறுதி முடிவு …

Read More »

கொஞ்சுவதும் – முத்தமிடுவதும்

குழந்தைகள் என்றால் அனைவருக்கும் அலாதி பிரியம். அதுவும் பச்சை பிஞ்சுக் குழந்தை என்றால், கேட்கவே வேண்டாம். உடனே எடுத்துக் கொஞ்சத் தொடங்கிவிடுவோம். மிகப்பெரிய கோபக்காரரும் கண்ணசைவில் குழந்தையை சில நொடிகள் கொஞ்சிவிடுவார். யாரென்றே அறிமுகமில்லாதவர் குடும்பத்தோடு பேருந்தில் இருக்கையில் அமர்ந்து பயணிக்கும்போது அவர்களின் பச்சிளம் குழந்தைகளை பின் இருக்கையில் இருப்பவர்கள் கொஞ்சுவதும், அமர்வதற்கு இருக்கை இல்லாமல் நின்றுகொண்டே பயணிக்கும் தாயின் கையிலுள்ள குழந்தையை இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள் வாங்கி தன் மடியில் வைத்துக்கொள்வதும் மனிதனின் இரக்க குணங்களில் உள்ளதாகும். இரக்கம் …

Read More »

எடை போடப்படும் நன்மையும் – தீமையும்!

الوزن அல்வஸ்ன் – எடை, ميزان மீஸான் – தராசு, توازن தவாஸுன் – எடைக் கருவி, மனிதன் தனது வாழ்க்கையில தவிர்க்க முடியாத ஒன்று அளவை கணக்கிட பயன்படுத்தும் கருவி “தராசு”. இந்த நவீன உலகில் மனிதன் பிறந்தவுடன் முதலில் அவனது உடல் தராசில் வைத்து எடை போடப்படுகிறது. அக்குழந்தையின் எடை மூன்று கிலோவுக்கும் அதிகமாக இருந்தால் அது ஆரோக்கியமான குழந்தை என்றும் மூன்று கிலோவுக்கும் குறைவாக இருந்தால் …

Read More »

தொடர்பை வலுப்படுத்துவோம்!

எந்த ஒரு பொருளும் இலகுவாகவும், அது தாரளமாகவும் கிடைக்கும்போது அதன் அருமை பெருமைகளை மனிதன் பெரும்பாலும் உணருவதில்லை! ஏன்..? அது தட்டுப்பாடு ஏற்படும்போதும் அல்லது கிடைப்பதில் சிக்கலும் சிரமங்களும் ஏற்படும்போதுகூட அதன் அருமையை உணரக்கூடியவர்கள் மிகவும் குறைவு! மனிதனின் மிகப்பெரிய பலஹீனம் ஏதாவது ஒரு புதிய சூழ்நிலையை அவனிடம் பழக்கப்படுத்திவிட்டால் சில தினங்களுக்கு மட்டும் பழைய சூழ்நிலையை நினைத்து வருந்துவான் பிறகு அந்தப் புதிய சூழ்நிலைக்குத் தக்கவாறு தன்னை மாற்றிக்கொள்வான். …

Read More »

நேசம் கொள்வது

நேசம் என்ற சொல்லுக்கு அரபு மொழியில் المحبة என்று சொல்லப்படும். இது ஒருவனின் உள்ளம் சாந்த விஷயமாகும். அன்பு, பிரியம், விருப்பம் என்ற வார்த்தைகளும் இதற்குப் பயன்படுத்தப்படுகின்றது. ஒருவன் எதை எந்த அளவுக்கு நேசிக்கின்றான் என்பதை, அவனை அழைத்து (Scale) அளவுகோல் வைத்து அளந்துபார்த்துச் சொல்லிவிட முடியாது! அவனது செயல் மூலமாகத்தான் அவனது நேசத்தை அளவிடமுடியும். மனிதன் பொருளை நேசிக்கின்றான், செல்வத்தை நேசிக்கின்றான், அவனது தொழிலை நேசிக்கின்றான், அவனது அழகிய இல்லத்தை, அழகிய வாகனத்தை நேசிக்கின்றான், தாய் – தந்தையை நேசிக்கின்றான், மனைவி – மக்களை நேசிக்கின்றான், சொந்த பந்தங்களை நேசிக்கின்றான், ஊரை, நாட்டை, அவனது குலம் – …

Read More »

தீங்கிழைத்தவனுக்கு உபகாரம் செய்வது..!

தீங்கிழைத்தவனுக்கு உபகாரம் செய்வது..! மனிதனுக்கு மிகவும் பாரமான காரியம் அவனது கடின உழைப்பு! பழுவான காரியங்களை மிகவும் சிரமப்பட்டுக்கூட செய்து முடித்துவிடுவான், சுமை தூக்கிப் பிழைக்கின்றவனுக்கு எவ்வளவு சிரமங்கள் இருந்தாலும் தினமும் அதைச் சுமந்து சுமந்து அவன் வாழ்க்கையைக் கழித்துவிடுவான். கடுமையான  பொருளாதார சிக்கல் வந்தாலும் பல வழிகளைக் கையாண்டு அதையும் கடந்துவிடுவான். ஆனால் அந்தக் கடின உழைப்பையும் விட, அவன் சுமக்கும் சுமையையும் விட, பொருளாதாரக் கஷ்டத்தையும் விட, மனிதனுக்கு  மிகவும் கடினமானது உள்ளத்தில் நல்ல எண்ணம் கொள்வது! அதிலும் பிறரைப்பற்றி நல்லெண்ணம் கொள்வது. ஒருவன் பரம ஏழையாக இருக்கின்றான், அவனது …

Read More »