Featured Posts
Home » அப்துல்லாஹ்

அப்துல்லாஹ்

அழுகியது முட்டையா அல்லது மூளையா?

அழுகியது மூளையாக இருந்தால்தான் சிந்தனைகள் தாறுமாறாக இருக்கும். அதுதான் இப்போது நேசகுமாருக்கு நேர்ந்துள்ளதோ என்று ஐயப்படும் அளவிற்கு அவருடைய வார்த்தைகளும், எழுத்துக்களும் அமைந்துள்ளன. அவர் எழுதியதிலிருந்தே அவரிடம் கேட்டக் கேள்விகளுக்கு இன்றுவரை பதில் சொல்லாமல் காலம் தாழ்த்தியவர் இப்போது ஒரு புதுக் காரணத்துடன் வந்திருக்கிறார். ஒரு சிலர் அவரைத் தனிப்பட்ட முறையில் தாக்குதல் செய்வதால்தான் பதில் சொல்லாமல் இருப்பதாக வருந்தியிருக்கிறார். இவர் பிறரை தனிப்பட்ட முறையில் தாக்கலாம், ஆனால் இவரை …

Read More »

நேசகுமாரின் மறைத்தலும் திரித்தலும் (பாகம் 3)

அபூஸுஃப்யான் என்ற நபித்தோழருக்காக கண்ணீர் வடித்த நேசகுமார் வழக்கம் போல் யானையைத் தடவிப் பார்த்த குருடன் போல் இங்கொன்றும் அங்கொன்றும் படித்துவிட்டு அபு அபூஸுஃப்யானுக்காக அழுது வைத்தார். அபூஸுஃப்யானின் உண்மை வரலாறு நேசகுமாருக்குத் தெரியுமா? வாளால் பரப்பப்பட்டதுதான் இஸ்லாம் என்றும் அதற்கு நபித்தோழர் அபூஸுஃப்யான்(ரலி) அவர்களின் இஸ்லாத்திற்கு முந்தைய வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சியில் மறைத்தல் திரித்தல் செய்திருந்தார். அய்யா நேசகுமார், நீர் நடுநிலையில் நின்று அதை செய்தியாக எழுதி இருந்தீரென்றால் …

Read More »

மறைத்தல், திரித்தல், பொய் பேசுதல்

கருப்பண்ணசாமியின் வரவால் நேசகுமாருக்கு ‘கருப்பாவேசம்’ வந்து மயிலாடுதுறை சிவாவின் ‘இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் மெக்காவிற்கு போக முடியுமா’ என்ற பதிவில் வதவத (நன்றி ஆரோக்கியம்) என்று எனக்கு பதில் எழுதிவிட்டார். மூன்று மாத காலமாக இந்த கருப்பண்ணசாமி எங்கே போயிருந்தார்? ஆக நான் கண்ணியமாகவும், மரியாதையாகவும் கேட்ட கேள்விகளுக்கு சரக்கில்லை என்பதால் பதில் இல்லை. கேட்டால், இன்னும் படிக்கவில்லை, யாராவது படித்து அதிலிருந்து ஒன்றிரண்டு முக்கியமானதை எடுத்துச் சொன்னால் பதில் சொல்கிறேன், …

Read More »

ஆரோக்கியமான விவாதம்

நண்பர் ஆரோக்கியம் எனது வலைப்பதிவில் பின்னூட்டத்தின் மூலமாக ‘நான் விவாதத்திற்கு தயார்’ என்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து முஸ்லீம்களுக்கு இஸ்லாமிய மதத்தை விட்டு வெளியேற உரிமையில்லை, அப்படி அவர்கள் செய்தால் அவர்களுக்கு மரண தண்டனையே என்றும் அது தொடர்பாக தனது பதிவிலே ஒரு சில விளக்கங்களையும் சுட்டிக் காட்டியுள்ளார். அவரது இந்த குறிப்பிட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கு முன்னர் ஒரு சில விஷயங்களை தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன். ‘முஸ்லீம்கள் எல்லோரும் தீவிரவாதிகள்’ …

Read More »

நேசகுமாரின் மறைத்தலும் திரித்தலும் [பாகம் 2]

நேசகுமாரிடம் நான் அவர் எழுதியதிலிருந்து இரண்டு கேள்விகளும் அதற்கான விளக்கமும், ஆதாரமும் கேட்டிருந்தேன். அதற்கு இன்றுவரை பதிலில்லை. அத்தனை சீக்கிரம் பதில் வராது என்று தெரிந்திருந்துதான் கிட்டத்தட்ட மூன்று வார காலங்கள் இந்த பக்கமே வராமல் சொந்த வேலைகளில் கவனமாக இருந்தேன். உடனே பதில் சொல்லக் கூடியவராக இருந்தால் அவர் உண்மையிலேயே இஸ்லாம் சம்பந்தப்பட்ட ஆய்வுகளை செய்துவருகிறார் என்பதை எல்லோரும் புரிந்துக் கொள்ளலாம். அவர் செய்து வருவதெல்லாம் வெறும் அவதூறு …

Read More »

நேசகுமாரின் மறைத்தலும் திரித்தலும்

இஸ்லாத்தின் தோலை உரித்துக் காட்டுகிறேன் என்று தொடங்கிய நேசகுமார் அவர்கள் தனது விமர்சனங்களும் விளக்கங்களும் என்ற பதிவில் அவருடைய தன்னிலை விளக்கத்தை படிக்க நேர்ந்தது. தனி ஒரு மனிதனாக போராட வேண்டியிருக்கிறது, நானும் குடும்பஸ்தன், பன்முகங்கள் பல கொண்டவன், சமுதாய வாழ்க்கையில் பங்கு கொள்ளல் என்றெல்லாம் தனது இயலாமையை, இயல்பை எழுதியிருந்தார். அவரின் இந்த விஷப்போராட்டத்தில் தனது உண்மையான முகம் வெளிப்படப் போகிறது என்பதை அவர் புரிந்துக் கொள்ளும் நேரம் …

Read More »

வாருங்கள் விவாதிக்கலாம்

முஸ்லீம் அல்லாதவர்கள் இஸ்லாத்திப் பற்றி விவாதிக்கலாமா என்ற ஒரு கேள்விக்கு, பதிலளிக்கும் வகையில் நேசகுமார் அவர்களுக்கு “இறை ஆவேசம்” வந்ததில் ஆச்சர்யமில்லை. என் மதத்தைப் பற்றி எவன் எவனோ விமர்சனங்கள் செய்யும்போது மற்ற மதங்களைப் பற்றி நான் ஏன் விமர்சனம் செய்யக்கூடாது என்று அவர் கேட்பது புரிகிறது. யாரய்யா வேண்டாம் என்று சொன்னது? நன்றாக விமர்சனம் செய்யுங்கள். அதைத்தானே நானும் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன். விமர்சனம் செய்யும்போது விளக்கங்கள் கேட்பார்களே …

Read More »

எது ஆதாரம், எது ஆதாரமற்றது – விளக்கம்

நேசகுமாரின் வார்த்தை விளையாடல்களை படித்தப் போது முதலில் இஸ்லாத்தின் ஆதாரங்கள் எப்படியிருக்க வேண்டும், எதை ஏற்றுக் கொள்ள வேண்டும், எவைகள் ஆதாரமற்றவைகள் என்று ஒதுக்க வேண்டும் என்பதை நேசகுமார் போன்றவர்களுக்கு முதலில் விளக்கம் கொடுத்துவிடலாம் என்று நினைக்கிறேன். ஏனென்றால், இஸ்லாத்தை அறிமுகப் படுத்துகிறேன் என்ற பெயரில் நபிகளாரின் மறைவுக்குப்பின் முஸ்லிமாக மாறிவிட்டதாக நடித்த சில யூதர்கள் நபிகளின் பெயரைச் சொல்லி இஸ்லாத்தில் இல்லாததையும், பொல்லாததையும் திரித்தும் மறைத்தும் கதை சொன்னார்களோ …

Read More »

நேசகுமாரின் உள்ளொன்று புறமொன்று

நேசகுமாரின் “இஸ்லாம் ஒரு முழு அறிமுகம்” வலைப்பதிவிற்குள் சென்றபோது, எனக்கு முதலில் தென்பட்டது, வலைப்பதிவின் தலைப்பு “இஸ்லாம் முஸ்லீம் அல்லாதோர் பார்வையில்” என்று மாறியிருந்ததுதான். ஏன் இப்படி உள்ளொன்றும், புறமொன்றுமாக தலைப்பு இருக்கிறதென்று புரியவில்லை. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவதன் காரணத்தாலோ என்னவோ. அவரின் கருத்துக்களும், எழுத்து நடைகளும் கிட்டத்தட்ட அப்படித்தான் எனக்கு காட்டுகின்றன. ஒரு வேளை இது தொழில் நுட்பக் கோளாராகக் கூட இருக்கலாம். இந்த தொழில் நுட்பக் …

Read More »