Featured Posts
Home » சுட்டுவிரல்

சுட்டுவிரல்

மோடியின் வெற்றியும் அதில் மகிழ்பவர்களும்

குஜராத் தேர்தலில் மீண்டும் நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பற்றி பலரும் பதிவிட்டுள்ளனர். அவற்றில் சிறந்தப் பதிவாக கருதப்படுகிற நண்பன் ஷாஜியின் பதிவுக்கும், பனிமலரின் பதிவுக்கும் நானளித்த பின்னூட்டம் இது: ஜனநாயகம் என்பது பணபலமும் படைபலமும் தான், சாமானியனுக்கு அதில் பங்கில்லையோ என்று எண்ண வைத்தது மோடியின் தேர்தல் வெற்றி. எல்லோருமே எதிர்பார்த்த ‘இந்த வெற்றி’யில் புளகாகிதமடைந்து பதிவிடுபவர்களும் நாம் ‘எதிர்பார்த்தவர்கள்’ தான்.100க்கு 41 பேர் (விருப்புவெறுப்பு, பயம், விரக்தி, அலட்சியம் …

Read More »

முக்தரன் மாயும் முஸ்லிம் உலகமும்!

முக்தரன் மாயும் முஸ்லிம் உலகமும்! முக்தரன் மாய். பரபரப்பாக பேசப்பட்ட, தனக்கிழைக்கப்பட்ட பாலியல்கொடுமைக்கு நீதி கேட்டுப் போராடிய பாகிஸ்தானிய பெண். பாகிஸ்தானின் அழுக்கை வெளிநாடுகளில் அம்பலப்படுத்துவதாக அந்நாட்டு அதிபரால் செய்யப்பட்ட கண்டனத்தை மீறி நியாயத்துக்காகப் போராடியவர். பாகிஸ்தான். இஸ்லாமியக் குடியரசு (அ) இராணுவ அரசு என்று தன்னைப்பிரகடனப்படுத்திக்கொண்டாலும், கெடுத்தவனுக்கே பெண்ணைக் கட்டிவைக்கும் கேணத்தனமான பஞ்சாயத்துத் தீர்ப்புகளை விடவும் மோசமான கட்டைப் பஞ்சாயத்துகள் அதிகமதிகம்புழக்கத்தில் உள்ள நாடு. முஸ்லிம் உலகம். தன் …

Read More »

ஒரு பயணத்தின் பின்னால்! (சிறுகதை)

மாடொன்று சினிமா போஸ்டரை சாவகாசமாய்த் தின்றுக்கொண்டிருக்க, சாலையின் குறுக்கே வந்துவிட்ட மொபெட்டை இறங்கி வந்து வைதுக்கொண்டிருந்தார் போக்குவரத்துக்காவலர் என்றெல்லாம் எழுத இடம் தராத ரியாத் மாநகர சாலை. பஸ்களும் ஸ்கூட்டர்களும் ஆட்டோவும் இல்லாத சாலையில் கார்களே கார்களை முந்திக் கொண்டிருந்தன.

Read More »

பலதாரமணம்: பாவமா? பரிகாரமா? பகுதி-2

முன் பதிவின் தொடர்ச்சி… பலதாரமணத்தை தடை செய்திருக்கும் இடங்களிலெல்லாம் சமூக அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். உதாரணத்திற்கு இரண்டாம் உலகப் போரில் பல இலட்சம் ஜெர்மானியர்கள் செத்து மடிந்த போது அவர்களின் விதவைகளுக்கு மறுவாழ்வு கொடுக்கும் நோக்கில் பலதாரமணத்தை சட்டமாக்கிட கோரிக்கை எழுந்தபோது , கிறிஸ்தவ தேவாலயங்களால் அது முற்றாக நிராகரிக்கப்பட்டது. விளைவாக, இன்று விபச்சாரம் அங்கு ஒரு தொழிலாகவே அங்கீகரிக்கப்பட்டு விட்டது. பாலியல் தொழிலாளர்கள் …

Read More »

பலதாரமணம்: பாவமா? பரிகாரமா? பகுதி-1

பலதாரமணம்: பாவமா ? பரிகாரமா? இஸ்லாமும் பெண்களும் என்று விவாதம் வரும்போது பிற மத சகோதரர்களாலும் , ஏன் பாமர முஸ்லிம்களாலும் சரியாகப் புரிந்து கொள்ளப்படாத ஒரு விடயமாக முஸ்லிம் ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள ‘பலதாரமணம் ‘ (Polygyny) உள்ளது. உலகில் மிக அதிகமாக விவாதிக்கப்பட்ட விஷயங்களுள் ஒன்றின் கருப்பொருளாக ‘பலதாரமணம் ‘ (Polygyny) என்பதும் இருக்கிறது. எந்த அளவுக்கு அது விளங்கிக் கொள்ளப்படாததாக இன்னமும் இருந்து வருகிறதோ அந்த அளவுக்கு …

Read More »

அரேபியாவில் ஓடுமா ஆறுகள்……?

அரேபியாவில் ஓடுமா ஆறுகள்……? Dr. Alfred Coroz உலகின் தலைசிறந்த புவியியல் அறிஞருள் ஒருவர். அவரிடம் அரேபியாவின் புவிவள நிலமையினைக் குறித்துக் கேட்கப்பட்டது. “அரேபியா எப்போதேனும் பசுமையாக ஆறுகள் நிரம்பி இருந்ததுண்டா?” . எதிர்பாராத ஆனால் நேர்மறையான பதில் அவரிடமிருந்து வந்தது- “ஆம்’! பனியுகத்தில் அவ்வாறு இருந்தது”. அடுத்து ஒரு கேள்வி அவர் முன் வைக்கப்பட்டது: “எதிர்காலத்தில் மீண்டும் அரேபியாவின் பாலைவனம் பசுமையாகும் வாய்ப்புகள் ஏதேனும் உண்டா…….?” ஆச்சர்யமூட்டும் வகையில் …

Read More »

உண்மைக்கு வித்திடும் அறியாமைகள்

‘சரிவரத் தெரிந்துக்கொள்ளாமல் எதைப்பற்றியும் ஒரு வார்த்தைக் கூட பேசி விடாதே!அது உன் அறியாமைக்கு விளக்கமாகி விடும்’ – முஸ்லிம்களின் நான்காவது கலீபாவான அலீ (ரலி) அவர்கள் தன் மகனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் காணப்படுகிற வாசகங்கள் இவை! குர்ஆனில் ஒரு வசனம் இருக்கிறது: ‘தொழுகையாளிகளுக்கு கேடு தான்’ என்று!இதை வைத்து இஸ்லாத்தின் இறைவன் தொழுகையாளிகளைச் சபிக்கிறான் என்று விமர்சனம் செய்தால் எப்படி இருக்குமோ அப்படித் தான் இஸ்லாமைப் பற்றிய இன்றைய விமர்சனங்களும் …

Read More »

கருத்துச் சுதந்திரமா….? கறுத்த எண்ணமா….?

கருத்துச் சுதந்திரமா….? கறுத்த எண்ணமா….? ‘என் கையை எந்தப்பக்கம் வேண்டுமானாலும் வீசுவதற்கு எனக்கு உரிமை உண்டு. அதே சமயம் அது அடுத்தவரின் மூக்கில் இடித்துவிடாமலிருக்க மிக கவனமாக இருக்கும் பொறுப்பும் எனக்கு உண்டு’ என்பதே கருத்துச் சுதந்திரத்திற்கான இலக்கணமாக கருதப்படுகிறது. மனிதமான மூக்கில் தான் இடித்துவிடாதிருக்க வேண்டுமே தவிர, மூக்கு போல் முகங்காட்டுகிற கோமாளித்தனங்களை , அசைய மறுக்கும் அபத்தங்களை அகற்றுவதற்கு கை வீசினால் தவறில்லை என்பதும் ஏற்றுக்கொள்ளவேண்டியதே…! ஆனால் …

Read More »

விவாதங்கள் விவாதங்களாகவே..

இஸ்லாம் குறித்த என்னுடைய ஒரு பதிவுக்குப்பின் அக்பர் பாட்சாவின் ‘இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்’பதிவும் அப்துல்லாஹ்வின் ‘வாருங்கள் விவாதிக்கலாம்’ பதிவும் நேசகுமாரின் ‘விவாதங்களும் சில விளக்கங்களும்’கூடப் படித்தேன். இந்நிலையில் என்கருத்து இது தான்: யாரும் யாரையும் தாக்காமல் எங்கிருந்தோ கிடைத்த/கிடைக்கிற; படித்த/படிக்கிற அவதூறுகளை அள்ளி வீசாமல் அழகிய ஆரோக்கியமான விவாதங்களைத் தொடங்கித் தொடர்ந்து எழுதி வரலாம். நிறைய விஷயங்கள் தெளிவாகும் நிறையப்பேருக்கு!மாதிரிக்கு:1).கடவுள் கொள்கை எப்படி இருந்தால் நலம்?2).பர்தா எது – அது …

Read More »

இஸ்லாம் – பார்வைகளும் கோணங்களும்

இஸ்லாம் குறித்து சகோதரர்’நேச’ குமாரும் எதிர்வினையாக முஸ்லிம் சகோதரர்களும் பதிகிற வலைப்பதிவுகளை அவதானித்தே வருகிறேன். என் கருத்துக்களைப் பதியும் எண்ணம் அவ்வப்போது தோன்றினாலும் என் சிற்றறிவு கருதியே சும்மா இருந்து வந்தேன். தவிர, இந்த ப்பதிவுகளிலிருந்து என் மூளைக்கும் நல்ல தீனி கிடைத்தது. ‘நேச’ குமாரின் பதிவுகளில் புத்திசாலித்தனமான எழுத்து வெளிப்படுகிறது. அது மழுப்பலாகவே இருந்தாலும். (அதற்காக, மற்ற சகோதரர்கள் புத்திசாலித்தனமற்றவர்கள் என்று அர்த்தமில்லை). தன்னுடைய கேள்விகளுக்கு பிறர் எதிர்கேள்வி …

Read More »