Featured Posts
Home » ஜாஃபர் அலி (page 5)

ஜாஃபர் அலி

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-2-23,24)

23,24. இருவரும் சுவனம் சென்றனர்! ஹதீஸ் 23: ‘இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: ஆதத்தின் மகனுக்கு ஓர் ஓடை நிறைய தங்கம் கிடைத்தால் இரண்டு ஓடைகள் நிறைய தங்கம் வேண்டும் என்று விரும்புகிறான். அவனது வாயை மண்ணைத் தவிர வேறெதுவும் நிரப்பப் போவதில்லை! எவர் பாவமீட்சி தேடி அல்லாஹ்வின் பக்கம் மீளுகிறாரோ அவருக்கு அல்லாஹ் மன்னிப்பு வழங்குகிறான் ” (நூல்: புகாரி, முஸ்லிம்) ஹதீஸ் 24: …

Read More »

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-2-22)

22. இதனை விடவும் சிறந்த பாவமீட்சி உண்டா? ஹதீஸ் 22: இம்றான் ஹுஸைன்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ”ஜுஹைனா என்ற குலத்தைச் சேர்ந்த ஒருபெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்தாள். அவள் விபச்சாரத்தில் ஈடுபட்டதினால் கருவுற்றிருந்தாள். அவள் சொன்னாள்: அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனை பெறும் அளவுக்குத் தவறு செய்து விட்டேன். என் மீது தண்டனை நிறைவேற்றுங்கள். நபி(ஸல்) அவர்கள் அந்தப் பெண்ணின் பொறுப்பாளரை அழைத்தார்கள். அவரிடம் சொன்னார்கள்: நீர் இவளிடம் மிகவும் …

Read More »

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-2-21)

21, தபூக் யுத்தமும் தடுமாற்றமும் ஹதீஸ் 21: கஅப் இப்னு மாலிக்(ரலி) அவர்களின் மகனார் அப்துல்லாஹ் அறிவிக்கிறார்கள்: (இவர்தான் கஅப்(ரலி)அவர்கள் கண்பார்வை இழந்த காலத்தில் அவர்களை வழிநடத்தி அழைத்துச் செல்பவராக இருந்தார்.) கஅப்(ரலி) அவர்கள் தபூக் போரில் கலந்துகொள்ளாமல் நபியவர்களை விட்டும் பின்தங்கி விட்டபொழுது நடந்த நிகழ்ச்சி பற்றி இவ்வாறு அறிவித்ததை நான் கேட்டுள்ளேன். கஅப்(ரலி) அவர்கள் சொன்னார்கள்: நபி(ஸல்)அவர்கள் கலந்துகொண்ட எந்தப் போரை விட்டும் நான் எப்போதும் பின்தங்கியதில்லை., …

Read More »

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-2-20)

20. நூறு கொலை செய்தவனுக்கும் மன்னிப்பு உண்டு. ஆனால்? ஹதீஸ் 20: அபூ ஸயீதில் குத்ரி(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘உங்களுக்கு முன்னர் வாழ்ந்து சென்ற சமுதாயத்தில் ஒருமனிதன் இருந்தான். அவன் தொன்னூற்றி ஒன்பது பேரைக் கொலை செய்திருந்தான்! பிறகு அவன், இந்தப் புவிவாழ் மக்களில் அதிகம் அறிந்தவர் யார் என்று விசாரித்தான். ஒரு துறவியின் பக்கம் அவனுக்கு வழி காட்டப்பட்டது. அவரிடம் வந்தான். நான் தொன்னூற்றி …

Read More »

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-2-19)

19, காலுறை மீது மஸஹ் செய்வதன் சட்டம் ஹதீஸ் 19: ஸிர்ரு பின் ஹுபைஸ்(ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: காலுறைகளின் மீது மஸஹ் செய்வது பற்றி கேட்பதற்காக நான் ஸஃப்வான் பின் அஸ்ஸால்(ரலி) அவர்களிடம் வந்தேன். ‘அப்பொழுது அவர்கள் ஸிர்ரே! என்ன விஷயமாக வந்துள்ளீர்? என வினவினார்கள்” ‘கல்வியைத் தேடித்தான் ” என்றேன். ‘கல்வியைத் தேடுபவருக்காக – அவரது தேடல் குறித்து திருப்தி அடைந்தவாறு மலக்குகள் தங்கள் இறக்கைகளைத் தாழ்த்துகிறார்கள்” என்றார்கள். …

Read More »

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-2-16,17,18)

16,17,18 சூரியன் மேற்கிலிருந்து உதித்தால்! ஹதீஸ் 16: அபூ மூஸா அல் – அஷ்அரி(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘நிச்சயமாக அல்லாஹ், பகலில் பாவம் செய்த மனிதன் பாவமீட்சி தேடட்டும் என்பதற்காக இரவில் தனது கையை விரித்து வைக்கிறான். இரவில் பாவம் செய்தவன் பாவமீட்சி தேடட்டும் என்று பகலில் கையை விரித்து வைக்கிறான். (இது) சூரியன் மேற்கில் இருந்து உதயமாகும் வரையில் (நடந்து கொண்டிருக்கும்) (நூல்: முஸ்லிம்) …

Read More »

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-2-15)

15,  பாவம் செய்த மனிதனும் காணாமல் போன ஒட்டகமும் ஹதீஸ் 15: நபி(ஸல்) அவர்களின் பணியாளரான அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். தன்னுடைய அடியான் பாவமீட்சி தேடி தன் பக்கம் மீளும்பொழுது அதுகுறித்து அல்லாஹ் அதிக மகிழ்ச்சி உடையவனாக இருக்கிறான். ஒரு பொட்டல் பூமியில் தனது ஒட்டகத்தைத் தவறவிட்டிருந்த உங்களில் ஒருவர், திடீரென அது கிடைக்கப் பெற்றதும் அடையும் மகிழ்சியை விட அதிகமாக! ஸஹீஹ் முஸ்லிமின் மற்றோர் …

Read More »

[பாகம்-19] முஸ்லிமின் வழிமுறை

காஃபிர்களுடன் நடந்து கொள்ளும் முறை இஸ்லாமிய மார்க்கத்தைத் தவிர ஏனைய மதங்களும் இஸங்களும் அசத்தியமானவை. அவற்றைப் பின்பற்றக்கூடியவர்கள் காஃபிர்களாவர். இஸ்லாம்தான் உண்மையான மார்க்கம். அதை பின்பற்றக்கூடியவர்கள் முஃமின்கள், முஸ்லிம்களாவர். அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக இஸ்லாம்தான் அல்லாஹ்விடம் (ஒப்புக் கொள்ளப்பட்ட) மார்க்கமாகும். (அல்குர்ஆன்: 3:19) ‘இஸ்லாம் அல்லாத வேறு மார்க்கத்தை யாரேனும் மேற்கொள்ள விரும்பினால் அவனிடமிருந்து அது ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் மறுமையில் அவன் நஷ்டமடைந்தவர்களில் ஒருவனாக இருப்பான். …

Read More »

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-2-13,14)

13, 14. இதில் இரு நன்மைகள் உண்டு! ஹதீஸ் 13: அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதை நான் கேட்டுள்ளேன்: ‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! திண்ணமாக நான் ஒரு நாளில் எழுபது தடவைக்கு அதிகமாக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோருகிறேன். அவன் பக்கம் மீளுகிறேன்’ (நூல்: புகாரி) ஹதீஸ் 14: அஃகர்ரு இப்னு யஸார்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: ‘ஓ! மனிதர்களே! பாவமீட்சி தேடி …

Read More »

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-2)

தௌபா – பாவமீட்சி தேடல் இறைமார்க்க அறிஞர்கள் கூறுவர்: அனைத்துப் பாவங்களில் இருந்தும் பாவமீட்சி தேடுவது கடமையாகும். மனித உரிமையுடன் தொடர்பில்லாமல் – மனிதனுக்கும் இறைவனுக்கும் மத்தியிலான பாவமாக இருந்தால் அதிலிருந்து மீட்சி பெறுவதற்கு மூன்று நிபந்தனைகள் உள்ளன. அந்தப் பாவத்திலிருந்து முற்றாக விடுபடுதல் அதனைச் செய்தது குறித்து வருந்துதல் இனி எப்போதும் அந்தப் பாவத்தைத் திரும்பச் செய்வதில்லை என்று உறுதி கொள்ளல் இந்த மூன்று நிபந்தனைகளில் ஒன்று விடுபட்டால் …

Read More »