Featured Posts
Home » மதங்கள் ஆய்வு » விமர்சனம் விளக்கம் (page 5)

விமர்சனம் விளக்கம்

அன்பின் நண்பன்

அன்பின் அபூமுஹை, வேலைப்பளு காரணமாக, வெறும் இணைப்புகளை மட்டும் கொடுத்து விட்டு, வேறு எதுவும் எழுத முடியாமல் போய்விட்டது. குரான் மொழி பெயர்ப்பில், சிறந்தவை எனவும், ஆதாரப்பூர்வமானது என அங்கீகாரம் பெறப்பட்டதுமான மொழி பெயர்ப்புகளைத் தான் நான் கொடுத்துள்ளேன். அவர்களில் ஒருவரின் வரலாறு மிகவும் சுவையானது. அவர் – பிக்தால். வில்லியம் மர்மட்யூக் பிக்தால். ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட முதல் குரானை இவர் தான் செய்தார். அர்த்தங்களைத் தான் தன்னால் …

Read More »

kaaba புனித ஆலயம்.

மக்காவில் அமைந்துள்ள காபத்துல்லாஹ் எனும் இறையில்லம் முஸ்லிம்களின் முதன்மை வணக்கத்தலமாகத் திகழ்கிறது. இது மிகவும் தொன்மையான ஆலயம். ”பழமையான அந்த ஆலயத்தை அவர்கள் தவாஃப் செய்யட்டும்” (022:029) ”மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம்” (003:096) என்று திருக்குர்ஆன் சான்று பகர்கின்றது. இங்கு காபத்துல்லாஹ்வின் வரலாறு பற்றி எழுதும் நோக்கமல்ல. சவூதி அரபியா நாட்டில் மக்கா எனும் நகரத்தில் அமைந்த இந்த இறையில்லம், உலக முஸ்லிம்களுக்கு தொழும் திசையாக இருக்கிறது. முஸ்லிம்கள் …

Read More »

கணவன்-மனைவி-ஆடை!

கணவன் – மனைவி – ஆடை! என்ற தலைப்பில் இப்னு ஹம்துன் அவர்கள் தமது வலைப்பூவில் ஒரு பதிவெழுதியிருந்தார். இஸ்லாம் மார்க்கத்தில் கணவன், மனைவி ஒருவருக்கொருவர் ஆடையாகத் திகழ்கிறார்கள் என்பதை திருக்குர்ஆன், 002:187வது வசனத்தை மேற்கோள் காட்டி இல்லற வாழ்க்கையில் கணவன், மனைவி இருவரும் சமமே என இஸ்லாத்தின் இயல்பை மிக அழகாக பதிவின் வழியாக பகிர்ந்து கொண்டார். சகோதரத்துவம், சமத்துவம் என்றால் என்னவென்றே தெரியாதவர்களுக்கு இது பொருக்குமா..? அவர்களால் …

Read More »

குரைஷி குலத்தில் 12 ஆட்சியாளர்கள்.

இஸ்லாம் மார்க்கத்தில் சமூகம், இனம், குலம், கோத்திரத்திற்கெல்லாம் எந்த மதிப்பீடுமில்லை என்று வரும் 049:013ம் இறைவசனம் எடுத்துக் கூறுகிறது. குலங்கள், கோத்திரங்களாக இருப்பதும் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காகவேயன்றி, உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற அடிப்படையில் பெருமை பாராட்டுவதற்கல்ல. நீங்கள் எந்தக் கோத்திரத்தையும் – எந்த குலத்தையும் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அதனால் உங்களில் ஒருவர் உயர்ந்தவராகவே, தாழ்ந்தவராகவோ ஆகிவிட மாட்டார். இறைவனை எவர் அஞ்சுகின்றரோ அவரே இறைவனிடத்தில் அதிகம் சிறந்தவராவார். மனிதர்களே! நாம் …

Read More »

முன் மாதிரியாக ஒரு வரலாறு.

இஸ்லாம் வழங்கிய ஷரியா என்பது, இஸ்லாத்தின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். மார்க்க அறிஞர்கள், நீதிபதிகள், ஆட்சியாளர்கள், அதிகாரிகள் மற்றும் முஸ்லிம்கள் எவராயினும் அவர்கள் வழங்கும் தீர்வுக்கு திருக்குர்ஆன், சுன்னாவைக் கொண்டு வலு சேர்த்திருக்க வேண்டும். திருக்குர்ஆன், சுன்னாவிலிருந்து பெறப்படாத தீர்ப்பு – விளக்கம் எதுவாயிருந்தாலும் அது சொன்னவரின் கருத்தாகவேக் கொள்ளப்படும். அல்லாஹ் அருளியதைக் கொண்டே தீர்ப்பளிக்க வேண்டும் என்ற முக்கிய நிபந்தனையை திருக்குர்ஆன் விதிக்கிறது… எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் …

Read More »

நபியின் எளிய வாழ்க்கை.

தருமி அவர்களே, நீங்கள் அடிக்கடி எம்மை நினைவுபடுத்திக் கொள்கிறீர்கள் நன்றி! உங்களின் மறுமொழியை அனுமதித்தேன். தொழில் நுட்பக் கோளாறோ என்னவோ தெரியவில்லை, மறுமொழி சம்பந்தப்பட்ட பதிவில் வெளி வரவில்லை. மீண்டும் அனுமதித்துப் பார்த்தேன் இது ஏற்கெனவே வந்து விட்டதென்று ஏற்க மறுத்து விட்டது. நீங்கள் கேள்வியாக வைத்திருப்பதால், விளக்கத்தைத் தனிப் பதிவில் சொல்லலாமே என்று இப்பதிவு! உங்கள் மறுமொழி… Dharumi has left a new comment on your …

Read More »

முக்தரன் மாயும் முஸ்லிம் உலகமும்!

முக்தரன் மாயும் முஸ்லிம் உலகமும்! முக்தரன் மாய். பரபரப்பாக பேசப்பட்ட, தனக்கிழைக்கப்பட்ட பாலியல்கொடுமைக்கு நீதி கேட்டுப் போராடிய பாகிஸ்தானிய பெண். பாகிஸ்தானின் அழுக்கை வெளிநாடுகளில் அம்பலப்படுத்துவதாக அந்நாட்டு அதிபரால் செய்யப்பட்ட கண்டனத்தை மீறி நியாயத்துக்காகப் போராடியவர். பாகிஸ்தான். இஸ்லாமியக் குடியரசு (அ) இராணுவ அரசு என்று தன்னைப்பிரகடனப்படுத்திக்கொண்டாலும், கெடுத்தவனுக்கே பெண்ணைக் கட்டிவைக்கும் கேணத்தனமான பஞ்சாயத்துத் தீர்ப்புகளை விடவும் மோசமான கட்டைப் பஞ்சாயத்துகள் அதிகமதிகம்புழக்கத்தில் உள்ள நாடு. முஸ்லிம் உலகம். தன் …

Read More »

ஹராமென்றால் இழிவானதா?

இஸ்லாம் மார்க்கத்தைப் பற்றி நீலகண்டன் – http://arvindneela.blogspot.com/2006/12/blog-post_20.html – சொல்கிறார், ”ஹராம்” என்றால் ”இழிவானது” என்று. கணவனுள்ள பெண்களும் – ”ஹுர்ரிமத் அலைக்கும்”… – (மணமுடிக்க தடுக்கப்பட்டுள்ளார்கள். 004:024) எப்படியிருக்கிறதென்று பாருங்கள்? ஏற்கெனவே ஒருவனுக்கு மனைவியாக இருப்பவள் இன்னொருவனைத் திருமணம் செய்து அவனுக்குப் பிள்ளையும் பெற்றாளாம். (இன்னும் மூவரைக் கட்டிக் கொண்டால் சுத்தமாக இருக்கும்) ஒருவனுக்கு மனைவியாய் இருப்பவள் அவனிடமிருந்து விவாகரத்துப் பெறாமல் வேறொருவனை மணமுடிக்கக் கூடாது என்று இஸ்லாம் …

Read More »

வரலாற்றில் ரீ மிக்ஸ்.

இஸ்லாம் மார்க்கத்தில் ஜாதிகள் இல்லையா? எனக் கேட்டு இஸ்லாத்தில் ஜாதிகளை நிறுவ, இஸ்லாத்திலிருந்து ஒரு சான்றைக்கூட வைக்காமல் வழக்கம் போல் தமது ரீ மிக்ஸ் கைங்காரியத்தை செய்திருக்கிறார் ஒரு இந்துத்துவவாதி. அடக் கைச்சேதமே. //இது சம்பந்தமாக நிறைய இணையக் கட்டுரைகள் இருக்கின்றன. யோகிந்தர் சிக்கந்த் கூட தலித் முஸ்லிம்கள் பற்றியெல்லாம் எழுதியுள்ளார். இருப்பினும், என் சார்பாக இஸ்லாமிய சமுதாயத்தில் இருக்கும் சாதிகளின் அடிப்படையில் செய்யப்பட்ட ஒரு கள ஆய்வுக் கட்டுரையிலிருந்து …

Read More »

ஆடு மேய்ப்பவனுக்கு பெண் கொடுக்கலாமா?

இஸ்லாம் மார்க்கத்தின் நிழலில் நபித்தோழர் பிலால் (ரலி) அவர்களுக்குக் கிடைத்த சிறப்பு – என்பது பாரம்பர்யமோ, குலச்சிறப்பு, குடும்பச் சிறப்பு, பொருளாதார வலிமையோ இல்லாத, விலை கொடுத்து வாங்கிய, எஜமானின் கட்டளைக்கு உழைத்த ஒரு கருத்த அடிமைக்கு இத்தனை மதிப்பா? என்று – குறைஷிகள் மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு உயர்வாகவே இருந்தது. ”எங்கள் தலைவர் அபூபக்ர், எங்கள் மற்றொரு தலைவர் பிலாலுக்கு விடுதலை வழங்கி விட்டார்” என்று நபித்தோழர் …

Read More »