Featured Posts
Home » இஸ்லாம் » படிப்பினைகள்

படிப்பினைகள்

கேட்போருக்கும் கேட்காதோருக்கும் உதவுங்கள்

ஆக்கம். மவ்லவி. தாஹா ஃபைஜி – அழைப்பாளர், சென்னை சமுதாயத்தில் சில நபர்களுக்கு பொருளாதாரத்தை அதிகமாகவும் இன்னும் சில நபர்களுக்கு பொருளாதாரத்தை குறைவாகவும் அல்லாஹ் வழங்கி இருக்கின்றான். அல்லாஹ் நாடியிருந்தால் ஒட்டுமொத்த மனிதர்களையும் பெரும் பணக்காரர்களாக ஆக்கியிருக்கலாம் அல்லது அனைவரையும் ஏழையாக ஆகியிருக்கலாம் ஆனால் சில மனிதர்களை பணக்காரனாகவும், சில மனிதர்களை ஏழைகளாகவும் ஆக்கியிருக்கின்றான். இது ஏன் என்பதை அல்லாஹ் நமக்குத் தெளிவுபடுத்துகிறான். நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியோருக்கு ரிஸ்க்கை …

Read More »

முஸ்லிம்களும் சோதனைகளும்

மனிதர்களை சோதனைக்கு ஆளாக்குவது என்பது அல்லாஹுவின் நியதியாகும். அவர்களில் மூஃமின்கள் யார்? முனாஃபிகுகள் யார்? உண்மையாளர்கள் யார்? பொய்யர்கள் யார்? என்பதையெல்லாம் பிரித்தறிய மனிதர்களுக்கு அல்லாஹ் சோதனைகளை ஏற்படுத்துகிறான். அல்லாஹ் கூறுகிறான், “நிச்சயமாக அவர்களுக்கு முன்னிருந்தார்களே அவர்களையும் நாம் சோதித்திருக்கின்றோம் – ஆகவே உண்மையுரைப்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் அறிவான்; இன்னும் பொய்யர்களையும் அவன் நிச்சயமாக அறிவான். (அல்குர்ஆன் 29:2,3) அல்லாஹுவையும் மறுமை நாளையும் நம்பிக்கைக்கொண்டோம் என அனைவராலும் வாதிடமுடியும். ஆனாலும் …

Read More »

அல்லாஹ்வின் உதவி யாருக்கு?

கஷ்ட நேரங்களிலும் சோதனை கட்டங்களிலும் அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் விரைவாக கிடைக்கவேண்டுமென்பது முஃமின்கள் அனைவரின் எதிர்பார்ப்பும், பிரார்த்தனையுமாகும். எப்போதெல்லாம் முஸ்லிம் சமுதாயம் நெருக்கடிகளுக்கும் அடக்குமுறைக்கும் ஆளாக்கப்படுவார்களோ அப்போதெல்லாம் அல்லாஹ்வின் உதவி எப்போது வரும் என்பது தான் அவர்களின் முழக்கமாக இருக்கும் இந்த முழக்கத்தை நபிமார்களுக்கு அடுத்தபடியாக இந்த சமுதாயத்தின் சிறந்தவர்களாக இருந்த நபித்தோழர்கள் சோதனைகளுக்கு ஆளாக்கப்பட்டும் மிக கடுமையான முறையில் உலுக்கப்பட்டும் எதிரிகளால் நான்கு புறங்களிலும் சூழப்பட்டு அவார்களின் உயிர் …

Read More »

நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் வரலாறு தரும் படிப்பினைகள்

உரை: மவ்லவி சரீஃப் பாக்கவி அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற அரஃபா தின சிறப்பு நிகழ்ச்சி நாள்: 10/08/2019, சனிக்கிழமை

Read More »

மர்யம் (அலை) வாழ்வு தரும் படிப்பினைகள்

உரை: மவ்லவி அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தவ்ஸி அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர வகுப்பு நாள்: 12/09/2019, வியாழக்கிழமை

Read More »

படிப்பினையூட்டும் வரலாறுகள்

Keep Yourselves updated:Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? Subscribe our Channel

Read More »

அந்த மூன்று வார்த்தைகள்

தலைவலி, காய்ச்சல் போன்ற தாங்கமுடிந்த சில வேதனைகளை நோயாகக் கருதி நான் மருத்துவரிடம் சென்றதாக ஞாபகமில்லை. ஆனால், அவ்வப்போது தலைகாட்டிப்போகும் சில நோய் அடையாளங்கள் “முதுமையை நோக்கி நகர்கிறேன்” என்பதை அப்பட்டமாகக் கூறிப்போக வந்தாற்போல போல இருக்கும். சரி, முதுமை வரும்போது வரவேற்பது நாகரீகம் என்பதற்காக வைத்தியரை நாடாதிருக்க முடியுமா? பிறகு வைத்தியர்களெதற்கு? என்றெண்ணியவளாய், குளத்தினுள்ளிருந்து தலையை நீட்டிக் கொண்டிருக்கும் ஆமைகளைப் போன்று, எனக்குள் எட்டிப்பார்த்திருந்த சில பெயரறியா வருத்தங்களை …

Read More »

சகவாழ்வு

பெரும்பான்மை உத்தியோகத்தர் ஒருவருக்கு சுகயீனம் ஏற்பட்டதனால், அவர் பல நாட்களாக காரியாலயத்திற்குச் சமூகமளித்திருக்கவில்லை. அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுப் பின் வீடு திரும்பிவிட்டார் என்ற தகவலையடுத்து, காரியாலய உத்தியோகத்தர்களிடம் அவருக்காக அறவிடப்பட்ட தொகையுடன் பெரும்பான்மைச் சகோதரர்களுள் இருவரோ அல்லது மூவரோ அவரது வீட்டிற்குச் சென்று சுகம் விசாரித்து வர எண்ணியிருந்தார்கள். ஒன்றரை மணித்தியாலங்கள் பயணித்துச் செல்ல வேண்டிய தூரத்தில் அவரது இல்லிடம் இருந்த காரணத்தினாலேயே அவ்வாறு முடிவாகியிருந்தது. ஆனால், …

Read More »

நான்கு விசயங்களில் கவனம் செலுத்துவோம்!

அல்-ஜுபைல் தஃவா நிலையம் வழங்கும் அல்-ஜுபைல் 2 – SKS கேம்ப் தஃவா நிகழ்ச்சி இடம்: SKS கேம்ப் பள்ளி வளாகம் நாள்: 17-06-2018 தலைப்பு: நான்கு விசயங்களில் கவனம் செலுத்துவோம் வழங்குபவர்: அஷ்ஷைக். அன்சார் ஹுசைன் ஃபிர்தவ்ஸி அழைப்பாளர், ரிஸாலாத் இஸ்லாமிய அழைப்பகம், அல்-ஜுபைல் (RC) ஒளிப்பதிவு: நிஸார் – மதுரை படத்தொகுப்பு: Islamkalvi Media Unit நன்றி: SKS தஃவா குழுமம் Keep Yourselves updated: Subscribe …

Read More »

அவனது அருளுக்காய்

அண்மையில் ஊரில் நிகழ்ந்த இளம் பெண்ணொருவரின் மரணம் என்னையும் பாதித்திருந்தது. அவர் சில மாதங்களுக்கு முன் நோய்வாய்ப்பட்டு மருத்துவம் பலனளிக்காத நிலையில் மரணத்தை தழுவியிருந்தார். வைத்தியர்கள் மூலம் தனது இறுதிமூச்சு நெருங்குவதை அறிந்திருந்த அப்பெண் ஆத்மீக ரீதியாக ஏற்கெனவே பண்பட்டவராயினும் தன்னை அதில் மேலும் ஈடுபடுத்தியதோடு, தான் நினைத்த எல்லைவரை இறை திருப்திக்காக முயற்சித்துக் கொண்டிருந்தார். அந்த முயற்சியின் உச்சமாக புனித உம்றாக் வணக்கத்தையும் நிறைவேற்றிக் கொண்டார். எதிர்வு கூறியபடியே …

Read More »