Featured Posts
Home » மதங்கள் ஆய்வு » இஸ்லாம் அறிமுகம் (page 10)

இஸ்லாம் அறிமுகம்

இஸ்லாம் உங்கள் மார்க்கம்

முஹம்மத் (ஸல்) அகிலத்தின் அருட்கொடை 21 டிசம்பர் 2012 அன்று பஹ்ரைனில் சவுத் பார்க் அரங்கத்தில் வைத்து நடைபெற்ற இஸ்லாம் உங்கள் மார்க்கம் நிகழ்ச்சியில் மவ்லவி இஸ்மாயீல் ஸலஃபி அவர்கள் “முஹம்மத் (ஸல்) அகிலத்தின் அருட்கொடை” என்ற தலைப்பில் ஆற்றிய உரையின் வீடியோ. முஹம்மத் நபியின் அழகிய பண்பையும் நபித்துவத்தின் உண்மை நிலையையும் மாற்று மத சகோதரர்களுக்கு விளக்கிக் காட்டும் அருமையான சொற்பொழிவு. முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்வைப் பற்றி …

Read More »

இஸ்லாம் ஓர் அறிமுகம்

நிகழ்ச்சி: நோன்புப் பெருநாள் சந்திப்பு – ஹி-1433 வழங்குபவர்: மவ்லவி நூஹ் அல்தாஃபி இடம்: GCT கேம்ப் வளாகம், துறைமுகம், ஜித்தா நாள்: 20.08.2012 Download mp4 video 318 MB Audio Play: [audio:http://www.mediafire.com/file/4t697b408r7rdc1/islam_oru_arimukam_nooh_althafi_rev.mp3] Download mp3 audio

Read More »

இஸ்லாத்தில் இறைவழிபாடு குறித்த கண்ணோட்டம் என்ன?

இஸ்லாத்தில் இறைவழிபாடு குறித்து பலரும் தவறானதொரு கண்ணோட்டம் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, வழமையான சடங்குகளான தொழுகையை நிலைநிறுத்துவது, நோன்பு நோற்பது மற்றும் பன்றி இறைச்சி, மது உள்ளிட்ட போதை பொருட்கள் போன்ற விலக்கப்பட்டவைகளிலிருந்தும் விலகி இருப்பது ஆகியன மட்டுமே இறைவழிபாடு என்று கருதுகின்றனர். ஆனால், உண்மையில் இவையனைத்தும் இறைவழிபாட்டின் ஒரு பகுதியே! இந்த ஒரு பகுதியை மட்டுமே மக்கள் இஸ்லாமிய இறைவழிபாடு எனும் வரம்புக்குள் வைத்து கணிக்கின்றார்கள். மாறாக, இறைவிருப்பத்துக்கு உகந்த …

Read More »

உணவைக் குறித்து….

இஸ்லாம் அனுமதிக்கும் உணவு குறித்த சட்டம், பழங்கால மற்றும் கிறிஸ்தவ-யூத மதங்களைப் பின்பற்றும் உணவு குறித்த சட்டங்களை விட்டும் முற்றிலும் மாறுபட்டது. மனித நலனுக்கு முற்றிலும் உகந்தது. குறிப்பாக (உடலுக்குக் கேடான) பன்றி இறைச்சி, மது போன்ற போதைப் பொருட்கள் ஆகியவற்றை இஸ்லாம் தடை செய்துள்ளது. முஹம்மத் (ஸல்) அவர்கள் அறிவுறுத்தினார்கள்: “உங்கள் உடலுக்கும் உங்கள் மீது உரிமை இருக்கிறது” உணவை வீண் விரயம் செய்யாமல் இருத்தல், ஆரோக்கியமான நல்வாழ்வைப் …

Read More »

போர் பற்றிய இஸ்லாமிய கண்ணோட்டம் என்ன?

கிறிஸ்தவ மதத்தைப் போன்றே இஸ்லாமும் போர் புரிவதை அனுமதித்திருக்கின்றது. ஆனால், அந்தப்போர் சுய பாதுகாப்புக்காகவோ அல்லது தமது மார்க்கத்தைப் பாதுகாக்கவோ அல்லது தங்களின் தாய் மண்ணிலிருந்து வலுக்கட்டாயமாக விரட்டி அடிக்கப்பட்டதற்குப் பதிலடி தரக்கூடியதாகவோ இருக்க வேண்டும் என்பது நிபந்தனை! அதுமட்டுமல்ல, போரின்போது கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டிய சில விதிமுறைகளையும் இஸ்லாம் முன்வைக்கின்றது: குடிமக்களை துன்புறுத்துவது, தாவரங்கள், நெற்பயிர்கள், தானிய இருப்புகளை அழிப்பது போன்ற ஈனத்தனமான செயல்களில் கண்டிப்பாக ஈடுபடக்கூடாது. மேலும், …

Read More »

மரணம் குறித்து முஸ்லிம்களின் கண்ணோட்டம் என்ன?

மரணத்துக்குப் பின் வரவுள்ள நிரந்தர மறுமை உலகத்துக்காகத் தம்மைத் தயார்ப் படுத்திக் கொள்ளச் செய்வதற்கான செயற்களமே இந்த உலகம் என்று யூதர்கள், கிறிஸ்தவர்களைப் போன்றே முஸ்லிம்களும் நம்புகின்றனர். இறுதித் தீர்ப்பு நாள், மீண்டும் உயிர்தெழுதல், சுவனம்-நரகம் ஆகியன இறைநம்பிக்கையின் அடிப்படை விஷயங்களில் அடங்கும். ஒரு முஸ்லிம் – அவர் ஆணாக இருப்பினும் சரி, பெண்ணாக இருப்பினும் சரி மரணமடைந்து விட்டால் முதலில் அவர்கள் குளிப்பாட்டப்படுகின்றார்கள். அவருடைய குடும்ப உறுப்பினர் ஒருவர் …

Read More »

மூத்தோரை முஸ்லிம்கள் மதிப்பது எவ்வாறு?

மிகவும் கடினமாதொரு காலச் சூழலில் மனித சமூகம் உழன்று கொண்டிருக்கின்றது. இத்தகையதொரு சிரமநிலையில், தம்மைப் பெற்ற தாய்-தந்தையரைப் பொறுப்பாகக் கவனித்துக் கொள்வது, இறையருளுக்கும், மதிப்புக்கும் உரிய செயலாகும். அதுமட்டுமல்ல, இறைகட்டளையை மதித்து தமது ஆன்மிக நிலையை வளர்த்து கொள்ளும் ஒரு மாபெரும் வாய்ப்புமாகும் அது! தம்மைப் பெற்றெடுத்த தாய்-தந்தையருக்காக பிரார்த்திக்கும்படி மட்டும் மனிதனுக்கு இறைவன் கட்டளையிடவில்லை. மாறாக, நம்மைப் பராமரித்து வளர்க்க யாருமில்லாது நிராதரவான நிலையில் குழந்தையாக நாம் இருந்தோம். …

Read More »

கிறிஸ்தவ திருமணங்களைப் போன்றவையா இஸ்லாமிய திருமணங்கள்?

இஸ்லாமிய திருமணம் என்பது ஒரு இரகசிய சடங்கு (Sacrament) அல்ல! மாறாக, எளிமையான ஒரு உறவுமுறை ஆகும். இரு தரப்பாரும் நிபந்தனைகள் விதிக்க உரிமை பெற்ற ஒரு சட்டபூர்வ வாழ்க்கை ஒப்பந்தமே அன்றி வேறில்லை! எனவே, திருமண மரபும், வழக்கமும் நாட்டுக்கு நாடு வேறுபடக்கூடிய ஒரு விசாலமான செயல்முறை! விவாக விலக்கு என்பது பரவலான ஒன்றும் அல்ல! தடுக்கப்பட்ட ஒன்றும் அல்ல! மாறாக, வேறு தீர்வே இல்லை எனும் நிலையில் …

Read More »

ஒரு முஸ்லிம் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரை மணமுடிக்கலாமா?

இஸ்லாம் உலக சமூகங்கள் அனைத்துக்கும் ஒரு வாழ்க்கை நெறியாக அருளப்பட்டது. ஒவ்வொரு காலங்களிலும் வலியுறுத்தப்பட்ட இந்த இறைநெறி அந்தந்த சமூக அமைப்பின் பல்வேறு தேவைகளை ஆகுமான வகையில் பூர்த்தி செய்தது. சூழலும் தேவையும் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரை மணமுடிக்கும் கட்டாயத்தை ஏற்படுத்தலாம். இறைவன் அதற்குரிய நிபந்தனையையும் திருக்குர்ஆனில் கூறுகின்றான்: ….ஆனால் (அவர்களிடையே) நீதமாக நடந்திட முடியாது என்று நீங்கள் அஞ்சுவீர்களாயின் ஒரு பெண்ணை மட்டும் மணமுடித்துக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன்: 4:3) …

Read More »

முஸ்லிம் பெண்களின் நிலை என்ன?

இஸ்லாமிய கண்ணோட்டத்தின்படி, பெண் என்பவள், தனக்குரிய சொத்துக்களையும் உடைமைகளையும் தனது விருப்பப்படி ஆகுமான வகையில் பயன்படுத்திக் கொள்ள தன்னுரிமைக் கொண்ட சுதந்திரப் பறவையாவாள். அவள் தனி ஒருத்தியாக இருந்தாலும் சரி, திருமணமானவளாக இருந்தாலும் சரியே! தான் திருமணம் முடிக்க நாடும் ஆண்மகனிடமிருந்து தனக்குரிய பாதுகாப்புக் கவசமாக (மஹர் எனும் பெயரில்) ஒரு குறிப்பிட்ட அளவு செல்வத்தையோ அல்லது அதற்கு பெறுமானமுள்ள ஒன்றையோ பெற்றுக் கொள்கின்றாள். அதுமட்டுமல்ல, மணமுடித்து சென்றாலும் தனது …

Read More »