Featured Posts
Home » சிறுவர் பகுதி » கதைகள் (page 3)

கதைகள்

உலகம் சுற்றிய பேரரசர் துல்கர்னைன்- 3 [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-22]

துல்கர்னைன் ஈமானிய உறுதியுடனும் மக்களின் எழுச்சியுடனும் அநியாயக்கார அரசனை எதிர்கொண்டார். இதன் மூலம் தனது நாட்டை அநியாயம் நிறைந்த ஆட்சியின் பிடியில் இருந்து விடுவித்தார். ஆனால் அண்டை நாடுகளில் அநியாயமும் அக்கிரமமும் தலைவிரித்துத் தாண்டவமாடும் போது நீதியையும் நியாயத்தையும் நேசிக்கும் இவரால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. எனவே துல்கர்னைன் அல்லாஹ்வின் உதவியுடன் தனது நாட்டை விடுவித்ததுடன் எதிரி அரசனையும் தோற்கடித்து அந்த எல்லைகளையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார். துல்கர்னைன் வெறுமனே …

Read More »

உலகம் சுற்றிய பேரரசர் துல்கர்னைன் – 2 [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-21]

துல்கர்னைன் இளமைப் பருவத்தை அடைந்த போது தனது சமூகத்தின் அடிமைத்தனத்தையும் பலவீனத்தையும் கண்டு கலங்கினார். இந்த அடிமைத்துவ ஆஸ்திகளையெல்லாம் அறுத்தெறிந்து தன் சமூகத்தைச் சுதந்திரமடையச் செய்ய வேண்டும் என்று அவர் மனம் ஆயிரம் விடுத்தம் அடித்துச் சொன்னது. சிறிது காலத்திலேயே துல்கர்னைன் பிரபல்யம் பெற்றார். அவரது கருத்துக்கள் வெகுவேகமாகப் பரவின. மக்கள் அவரால் கவரப்பட்டனர். மக்கள் அவரால் கவரப்பட்டனர். அந்தப் பகுதி மக்கள் அனைவரும் அவருக்குக் கட்டுப்பட்டனர். அவரது தலைமையை …

Read More »

உலகம் சுற்றிய பேரரசர் துல்கர்னைன் – 1 [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-20]

துல்கர்னைன் என்றால் இரண்டு கொம்புகளை உடையவர் என்பது அர்த்தமாகும். இந்த மாமன்னருக்குக் கொம்புகள் இருக்கவில்லை. எனினும், இவர் கண்ட ஒரு கனவிற்கு விளக்கமாகவும் இவரது அந்தஸ்தை உயர்த்திக் காட்டவுமே இவரது மக்கள் இவரை துல்கர்னைன் (இரண்டு கொம்புகளையுடையவர்) என அழைத்தனர். இவர் ஒரு அடிமைச் சமூகத்தில் பிறந்து வளர்ந்து வந்தவராவார். இவரது சமூகத்தை அதிகாரமும் ஆணவமுமிக்க ஒரு கூட்டம் அடிமைப்படுத்தி இருந்தது. இவர்களது சகல உரிமைகளும் பறிக்கப்பட்டிருந்தன. அவர்களோ இழந்த …

Read More »

Awareness Skit – Darul Quran

Performed at the stage of 13th Tamil Islamic Conference – Jeddah held on 20-April-2018 by Darul Quran Madarasa Students Program Organised by… Industrial City Dawah Office & Tamil Dawah Committe – Jeddah, Saudi Arabia Thanks to… Teachers & Management (Darul Quran Madarasa) Media Team (Audio & Video) All the Volunteers …

Read More »

தாலூதும் ஜாலூதும் [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-19]

மூஸா நபியின் மரணத்தின் பின் இஸ்ரவேலர்கள் வழிகேட்டில் சென்றனர். அல்லாஹ்வின் கட்டளைகளை மீறினர். பாவச் செயல்களை பகிரங்கமாகவே செய்தனர். பலர் சிலைகளைக் கூட வழிப்பட்டனர். எனவே, அல்லாஹ் அவர்களைச் சோதித்தான். இஸ்ரவேலரின் எதிரிகள் பலம் பெற்றனர். இவர்களின் அனேகரை அம்லாக்கியர் எனும் எதிரிகள் கொன்றொழித்தனர். பலரைக் கைதிகளாகப் பிடித்து அடிமைகளாக வைத்திருந்தனர். இவர்களின் பல ஊர்களும் எதிரிகளின் வசமாயின. அத்தோடு அவர்களிடம் ‘தாபூத்’ என்றொரு பெட்டி இருந்தது. அதில் மூஸா(அலை) அவர்களின் …

Read More »

கொடுப்பதால் குறையாது [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-18]

முன்னொரு காலத்தில் யெமன் தேசத்தின் சன்ஆவுக்கு அருகிலுள்ள கிராமம் ஒன்றில் ஒரு நல்ல மனிதர் வாழ்ந்து வந்தார். அவர் மிகப் பெரும் செல்வந்தராவார். அவருக்குச் சொந்தமான பல தோட்டங்களும் விவசாய நிலங்களும் இருந்தன. அவருக்கு மூன்று ஆண்பிள்ளைகளும் இருந்தனர். இந்த நல்ல மனிதர் தனது தோட்டத்தில் அறுவடை செய்வதை மூன்றாகப் பிரிப்பார். 1) மீண்டும் பயிரிடுவதற்கு முதலுக்காக. 2) அடுத்த அறுவடை வரை தானும் தன் குடும்பமும் உண்பதற்கு. 3) மூன்றாம் …

Read More »

இஸ்மாயில் நபியும்… ஆடும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-17]

நபி இப்ராஹிம்(அலை) அவர்கள் முற்காலத்தில் வாழ்ந்த ஒரு நபி ஆவார்கள். இவர்களுக்கு நீண்ட காலமாக குழந்தைகள் எவரும் இருக்கவில்லை. நன்றாக வயது சென்ற பின்னர்தான் இஸ்மாயில் என்றொரு ஆண் குழந்தை கிடைத்தது. அதற்கும் பல வருடங்கள் கடந்த பின்னர் இஸ்ஹாக் என்றொரு குழந்தையும் கிடைத்தது. இப்ராஹீம் நபி இயல்பிலேயே மிகவும் இரக்க குணம் கொண்டவர். உங்களைப் போன்ற குழந்தைகள் மீது அதிக அன்பு கொண்டவர். தனது வயோதிக காலத்தில் கிடைத்த …

Read More »

மூஸா நபியும் ஹிள்ர் நபியும் [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-16]

மூஸா நபியும் சமைத்த பின் உயிர்பிழைத்த அதிசய மீனும் முன்னொரு காலத்தில் மூஸா என்ற பெயரில் ஒரு மனிதர் வாழ்ந்து வந்தார். அவருக்கு அல்லாஹ் ‘தவ்ராத்’ எனும் வேதத்தைக் கொடுத்து பனூ இஸ்ரவேலருக்கு நபியாகவும் அவரை ஆக்கினான். அந்த நபி தவ்றாத் வேதத்தைப் போதித்து மக்களை நல்வழிப்படுத்த படாதபாடு பட்டார். அவர் நல்ல நாவண்மை பெற்றிருந்தார். ஒரு நாள் அவர் மக்களுக்கு உரையாற்றிக் கொண்டிருந்தார். அவரது அறிவையும் ஆற்றலையும் கண்டு …

Read More »

குகை தோழர்களின் கதை [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-15]

அன்புள்ள தம்பி தங்கைகளே! அற்புதமான சில இளைஞர்களின் கதையைக் கூறப் போகின்றேன் வாருங்கள்! 300 வருடங்களாக உறங்கிய இளைஞர்கள் இவர்கள். கேட்கவே ஆச்சர்யமாக இருக்கின்றதா? ஆம்! அற்புதமான, அதிசயமான சம்பவம்தான் இது! ஒரு நாட்டை ஒரு மன்னன் ஆண்டு வந்தான். அவன் சர்வாதிகார குணம் கொண்டவன்! சிலைகளை வழிபடுமாறு மக்களை நிர்பந்திப்பவன். அந்தப் பகுதியில் வாழ்ந்த சில இளைஞர்களுக்கு இது பிடிக்கவில்லை. “நாங்களே ஒரு சிலையை வடித்து அதை நாமே …

Read More »

ஸாமிரியும்… காளை மாட்டுச் சிலையும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-14]

மூஸா நபியின் சமூகம் பிர்அவ்னின் பிடியில் இருந்து பாதுகாக்கப்பட்டது. கடல் பிளந்து வழிவிட்டது. மூஸா நபியும் அவரது தோழர்களும் கடலைக் கடந்தனர். பிர்அவ்னும் அவனது கூட்டமும் அழிக்கப்பட்டது. மூஸா நபியின் கூட்டத்தினர் வரும் வழியில் சிலை வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒரு கூட்டத்தைக் கண்டனர். “பார்த்து வணங்க அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பது போல் எங்களுக்கு ஒரு கடவுளை ஏற்பாடு செளியுங்கள்” என்று கேட்டனர். அவர்களின் உள்ளத்தில் சிலை வழிபாட்டின் …

Read More »