Featured Posts
Home » வரலாறு » பிற வரலாறு

பிற வரலாறு

ஆன்மிக செழுமையும் வாழ்வியல் எளிமையும் நிறைந்த ஆளுமை அஷ்ஷைய்க் பாசில் எஸ்.எம்.முஸ்தபா மவ்லானா

இலங்கை, கிழக்கு மாகாணத்தின் மருதமுனையைச் சேர்ந்த அஷ்ஷைய்க் பாசில் எஸ்.எம்.முஸ்தபா மவ்லானா ஜமாலி அவர்கள். மரபு சார்ந்த ஓர் அரிய ஆளுமை. கொள்கை சார்ந்த சமூக மேம்பாட்டைத் தனது இலட்சியமாகக் கொண்டிருந்தார். இலங்கை முஸ்லிம் சமூகத்தின் அறிவுத் தளத்தில், அதன் கொள்கை மீள் எழுச்சிக்கு தனது எழுத்தாலும் கற்பித்தல் செயல்பாட்டாலும் பெரும் பங்களிப்பை ஆற்றினார், இலங்கை முஸ்லிம் சமூகம் கல்வி, மார்க்கம் போன்ற துறைகளில் முற்போக்கற்ற பொறிமுறைக்குள் சிக்கி இருந்தது. …

Read More »

ஆக்கத் திறனை அதிகரித்த ஆசான் அஷ்ஷைக் பாஸில் எஸ்.எம்.முஸ்தபா மவ்லானா ஜமாலி

அஷ்ஷைக் எம்.ஏ.ஹபீழ் ஸலபி,ரியாதி (M.A.) இலங்கை ஏகத்துவ மதுரசாக் கல்வி வளர்ச்சியில் ஆழமான பதிவுகளை விட்டுச் சென்றவர்களில் ஒருவர், அஷ்ஷைக் பாசில் எஸ்.எம்.முஸ்தபா மவ்லானா ஜமாலி அவர்கள். என்றும் மறக்காத, மறக்க முடியாத, நான் அதிகம் நன்றிக்கடன் பட்ட ஆசான்களில் இவரும் ஒருவர். எனது எழுத்தாற்றலில் இவருக்குப் பெரும் பங்குண்டு. ஸலபிய்யாவின் துணை அதிபராக இருந்தார். மாணவர்களின் ஆக்கத் திறனை வளர்ப்பதிலும் வாசிப்பார்வத்தை அதிகரிப்பதிலும் பெரும் பங்காற்றினார். பள்ளியில் தொழுவிக்கவும் …

Read More »

பேராசிரியர் S.H. ஹஸ்புல்லாஹ் – ஓர் ஆளுமைமிக்க செயற்பாட்டாளர்

அஷ்ஷைய்க் எம்.ஏ.ஹபீழ் ஸலபி,ரியாதி (M.A) இலங்கை முஸ்லிம் சமூகத்தில் ஆய்வும் செயற்திறனுமிக்க ஒரு சிலரில் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் குறிப்பிடத்தக்கவர். சமூகத்தில் பலர் கற்பார்கள். பட்டமும் பெறுவார்கள். ஆனால், சமூக எதிர்பார்ப்பை நிறைவேற்றும் ஆளுமைகள் சொற்பமாகவே உள்ளன. சமூக அக்கறை நிறைந்த அந்த சொற்ப ஆளுமைகளுள் இலங்கை, வடமாகாணத்தில் மிக முக்கிய கிராமமான எரிக்கலம்பிட்டியில் 03/09/1950 ம் ஆண்டு பிறந்த பேராசிரியர் S.H. ஹஸ்புல்லாஹ் அவர்கள் ஒருவராகத் திகழ்கின்றார்கள். இயற்கையில் …

Read More »

கலாநிதி M.A.M சுக்ரியின் சரித்திரமாகும் சாதனைப் பயணம்

அஷ்ஷைக் எம்.ஏ.ஹபீழ் ஸலபி,ரியாதி (M.A.) இலங்கையின் முக்கிய ஓர் ஆளுமையாகத் திகழ்ந்த கலாநிதி M.A.M.சுக்ரி அவர்கள் 2020 ரமழானின் இறுதிப் பத்தில் வபாத்தாகிவிட்டார்கள். அவர் தொடர்பாக மேலும் வாசிக்க PDF வடிவம். பதிவிறக்கம்/Download

Read More »

முகலாய மன்னர் அக்பரின் தீனே இலாஹி – ஒரு விமர்சனப் பார்வை தொடர் – 2

எம்.ஏ.ஹபீழ் ஸலபி  (M.A) முகலாய மன்னர்கள் இந்திய தேசத்தை ஆட்சி செய்த காலகட்டத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டுள்ளனர் என்பதற்கான வலுவான சான்றுகள் இன்றுவரை உள்ளன. ஆனால், அவர்கள் இஸ்லாமிய நன்நெறியில் ஆட்சியை மேற்கொள்ளவில்லை என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. எனினும், இந்தியாவை அவர்கள் வளப்படுத்தினார்கள் என்பதை யாரும் மறுக்கக முடியாத வகையில் வரலாற்றுப் பதிவுகள் உள்ளன. நாட்டின் அபிவிருத்தி, முன்னேற்றம் என்பன கருதி பல சந்தர்ப்பங்களில் இஸ்லாத்தின் அடிப்படைகளைக் கூட விட்டு …

Read More »

முகலாய மன்னர் அக்பரின் தீனே இலாஹி – ஒரு விமர்சனப் பார்வை தொடர் – 1

எம்.ஏ.ஹபீழ் ஸலபி  (M.A) அறிமுகம்: இந்திய உபகண்டத்தை (1526-1858) காலப்பிரிவில் சுமார் 300 வருடங்களுக்கு மேல் ஆட்சி செய்த ஒரு பேரரசையே வரலாற்றாசிரியர்கள் முகலாய சாம்ராஜ்யம் என அழைக்கின்றனர். இந்திய வரலாற்றில் முஸ்லிம்களின் ஆட்சியின் பொற்காலம், முகலாயர் ஆட்சிக் காலப் பகுதியாகும் என அந்நிய ஆய்வாளர்களால் சிறப்பித்துக் கூறப்படுகிறது. குறிப்பாக இப்பேரரசு 1526 முதல் 1707 வரை சுமார் 150 வருட காலம் அக்பர், ஜஹாங்கீர், ஸாஜஹான், அவ்ரங்கஸீப் ஆகிய மன்னர்களின் …

Read More »

முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) ஏகத்துவப் புத்துயிர்ப்பும் வஹ்ஹாபிய வாதமும் ஒரு விமர்சனப் பார்வை – தொடர் 3

எம்.ஏ.ஹபீழ் ஸலபி.ரியாதி (M.A.) தனிமனித சீர்திருத்தம்: அன்றைய அரேபியாவின் சூழலில் ஒட்டுமொத்த சமூகம் தீமையில் திளைத்திருந்தனால், இமாமவர்கள் தனிமனிதர்களை அணுகி, தனது பிரசாரத்தை முன்வைத்தார்கள். ஏற்றுக்கொண்டவர்களுக்கு இஸ்லாத்தை ஆழமாகக் கற்றுக்கொடுத்து, சமூக உருவாக்கத்திற்காகத் தயார்படுத்தினார்கள். இதனால், இமாமவர்களின் பிரசாரம் பயனளிக்க ஆரம்பித்தது. உயைய்னாவில் மேற்கொண்ட பிரசாரத்தால், அவரை ஏற்றுக்கொண்ட இளைஞர்கள் இஸ்லாமிய உணர்வுடனும் உணிர்த்துடிப்புடனும் காணப்பட்டனர். பின்னர் ஹூரைமலாவிலும் அவரது பிரசாரத்தில் கவரப்பட்ட இளைஞர் கூட்டமொன்று உருவானது. அத்தோடு, மக்கா …

Read More »

முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) ஏகத்துவப் புத்துயிர்ப்பும் வஹ்ஹாபிய வாதமும் ஒரு விமர்சனப் பார்வை – தொடர் 2

எம்.ஏ.ஹபீழ் ஸலபி.ரியாதி (M.A.) சீர்திருத்தப் பணிகள் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்கள் ஹிஜ்ரி 1115ல் (கி.பி1703) உயைய்னா என்ற பாலைவனக் கிராமத்தில் பிறந்தார்கள். இவர் அன்றைய அரேபியாவில் புகழ் பெற்ற பனூ தமீம் குலத்தைச் சேர்ந்தவராவார். இவரின் பாட்டனார், சுலைமான் இப்னு அலி உயைய்னா நீதவானா(காழியா)கவும் நஜ்த் மாகாணத்தின் ஷெய்குல் இஸ்லாமாகவும் இருந்தார். முஹம்மதின் தந்தை ஷெய்க் அப்துல் வஹ்ஹாப் உலமாவாகவும் உள்ளுர் காழியாக(நீதவானா)வும் விளங்கினார். இமாம் …

Read More »

முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) ஏகத்துவப் புத்துயிர்ப்பும் வஹ்ஹாபிய வாதமும் ஒரு விமர்சனப் பார்வை – தொடர் 1

எம்.ஏ.ஹபீழ் ஸலபி.ரியாதி (M.A.) முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்கள் இஸ்லாமிய உலகில் நன்கு அறிமுகமான ஓர் நல்லறிஞர். அவர், அல்குர்ஆன் – சுன்னாவின் நிழலில் முஸ்லிம் சமூகப் புனர் நிர்மாணத்தை மிகப் பெரும் தியாகத்துடன் மேற்கொண்டார். முஹம்மத் என்பது அவரது இயற் பெயர். அப்துல் வஹ்ஹாப் என்பது அவரது தந்தையின் பெயர். எனினும், அல்குர்ஆன் – சுன்னாவின் பரம எதிரிகள், தந்தையின் பெயரில் அவரை அப்துல் வஹ்ஹாப் …

Read More »

அஸ்மீர் சிந்திய செங்குறுதிச் சொட்டுக்கள்

அரபுமூலம்: பேராசிரியர் அவ்ரகான் முஹம்மது அலி தமிழில்: எம்.ஏ. ஹபீழ் ஸலபி அது, 1919ம் ஆண்டு மார்ச் திங்கள் அஸ்மீர் நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்வு…. உஸ்மானிய சாம்ராஜ்யம் முதலாம் உலக மகாயுத்தத்தில் மிக மோசமான முறையில் தோல்வியுற்று, பலமிழந்து காணப்பட்டது. இவ்யுத்தத்தால் இலட்சக்கணக்கான இளம் துடிப்புள்ள வாலிபர்களையும் இழந்தது. இப்போரில் பங்குகொள்வதற்கு உஸ்மானிய சாம்ராஜ்யம் பொருளாதார, அரசியல் இராணுவ ரீதியான முன் ஆயத்தம் எதனையும் மேற்கொண்டிருக்கவில்லை. இப்போரில் கலந்துகொள்வதற்கு …

Read More »