Featured Posts
Home » இஸ்லாம் » குடும்பம் (page 2)

குடும்பம்

பெருநாளும் நானும்

நோன்புப் பெருநாள் எனக்கு சிறிய சோதனையுடனேயே கடந்துபோனது. பெருநாளைக்கு மூன்று தினங்களுக்கு முன்னர் கால் பெருவிரலில் ஏற்பட்டிருந்த சிறிய சிரங்கொன்று வேலைப்பழுக்களால் வீக்கமுற்று வீட்டு வைத்தியத்திற்கும் அடங்காத வகுதிக்குள் முன்னேறியிருந்தது. அது ஒருபுறம் இருக்க, பெருநாள் தொழுகைக்கிடையில் பித்ராவைக் கொடுத்து நோன்பை வழியனுப்பும் முக்கிய கடமை அனைவருக்கும் காத்திருந்தது. வீட்டிலுள்ளவர்கள் சார்பாக, தேவையான அரிசியினை மனக்கணக்கிட்டு தானே அளந்து ஏழைகளுக்கு கொடுத்துவிடுவது எனது தாயின் வழக்கமாக இருந்து வந்தது. ஆனால், …

Read More »

இஸ்லாம் கூறும் மகிழ்ச்சியான குடும்பம்

ரியாத் ஓல்டு ஸினாயா தஃவா நிலையம் சார்பாக நடைபெற்ற ஜும்ஆ உரையின் தமிழாக்கம். இஸ்லாம் கூறும் மகிழ்ச்சியான குடும்பம் தமிழாக்கம் :- மௌலவி M.M.நூஹ் அல்தாஃபி – அழைப்பாளர், ரியாத் ஓல்டு ஸினாயா தஃவா நிலையம். நாள் :- 06 – 04 – 2018, வெள்ளிக்கிழமை இடம்:- பத்ஹா ஜும்ஆ மஸ்ஜித் – ரியாத்

Read More »

இஸ்லாம் கூறும் குடும்பவியல்

அல்-ஜுபைல் தஃவா நிலையம் வழங்கும் 20வது ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு இடம்: தஃவா நிலைய பள்ளி வளாகம் நாள்: 13-04-2018 தலைப்பு: இஸ்லாம் கூறும் குடும்பவியல் வழங்குபவர்: அஷ்ஷைக். அலி அக்பர் உமரி தலைமை இமாம், அத்-தக்வா பள்ளிவாசல், திருச்சி ஒளிப்பதிவு: மதுரை நிஸார் & சகோ. ஸாதிக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

கரும்பு தின்னக் கூலியா…

உறவினரின் வீட்டு விசேசம் ஒன்றில் நீண்ட நாட்களுக்குப் பின் சந்தித்த அந்த வயதான பெண்ணும் நானும் குசலம் விசாரித்துக் கொண்டோம். அவரது பேச்சில் எப்போதும் விரக்தி கலந்திருக்கும். இளவயதிலேயே கணவனால் கைவிடப்பட்ட பெண்ணாக இருந்து தனது பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி தற்போது பேரப்பிள்ளைகள் கண்டுவிட்ட நிலைமையிலும்கூட கடந்தகால வடுக்களால் நொந்து போனவர். நம்பிக்கையானவர்களிடம் முறையிடுவதால் தன் மனப் பாரம் குறையும் என்று அவர் எண்ணியிருக்கக்கூடும். அந்தவகையில் என்னுடனான அன்றையச் சந்திப்பும் …

Read More »

காவோலைகள்

உங்களின் தோல் சுருக்கங்களில் மறைந்து கிடக்கின்றன வாழும் யுக்திகள் அந்தக் கூன்விழுந்த முதுகில்தான் எம் வாழ்க்கை ஒத்திகை பார்க்கிறது உங்களது அனுபவ நரைகள் எமது குறைகளைச் சிரைக்கும் கத்தி அந்த விரல்கள் பட்ட ஊன்றுகோலின் சிராய்ப்பும் எங்களுக்கு ஆசான் பேசுங்கள் அது எங்கள் வரலாறு இன்னும் பேசுங்கள் அது உங்கள் கடந்தகால வலி இன்னும் இன்னும் பேசுங்கள் அதுவே எமக்கு மருந்து உங்களுக்காய் தியாகித்த பேரூந்தின் இருக்கையில் கிடைக்கிறது ஓராயிரம் …

Read More »

வீட்டு வேலைகள் பெண்களுக்கு சாபமா?

சமையல், சாப்பாடு, உறவு, வீட்டுப் பராமரிப்பு மற்றும் குழந்தை வளர்ப்பு என இல்லத்தரசி என்ற பாத்திரத்தைச் சுமக்காத பெண்கள் எங்கேயும் இருக்க முடியாது. அதேவேளை, தான் விரும்பாமலே இப் பொறுப்புகளை ஏற்க வேண்டிய சூழலுக்கு ஆளாகி விரக்தியோடு பேசும் பெண்களும் எம்மத்தியில் இல்லாமலில்லை. ஆனால், ஓயாமல் தன்னைத் துரத்தும் இந்தக் கடமைகளைப் பெண்கள் உளரீதியாக எவ்வாறு நோக்குகிறார்கள்? என்ன வகையான எண்ணப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள்? என்பதை அவசியம் மீள்பரிசீலனை செய்ய வேண்டியிருக்கிறது. …

Read More »

சிறிய தியாகம்தான்

வீட்டின் மேலதிகச் செலவை ஈடு செய்வதற்காக நகையொன்றை அடகு வைப்பது பற்றி கணவன், மனைவிக்குள் நடந்த உரையாடலைச் செவியுற்ற அவர்களது ஒன்பது வயது மகன் “இல்லம்மா… அடகு வைக்காதீங்க… அது வட்டி…” என்று பிடிவாதமாகக் கூறிவிட்டான். ஏற்கெனவே ஜும்ஆவொன்றில் நிகழ்த்தப்பட்ட உரையொன்றினை செவிமடுத்ததன் விளைவாகத்தான் மகன் இவ்வாறு பேசுகிறான், எனக்கூறி உள்ளூர சந்தோசப்பட்ட இருவரும் அவனது கோரிக்கைக்கு மதிப்பளித்து அவ்வெண்ணத்தை கைவிட்டார்கள். இப்போது சிறுவனுக்கு சோதனையொன்று காத்திருந்தது. ஒரு வாரமாக …

Read More »

இதுவும் தாய்மைதான்

ஒரு தந்தை தன் பிள்ளைகளுக்காக என்னென்ன தியாகங்களை செய்கிறார் என்பதை பற்பல கோணங்களில் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அண்மையில் தந்தை ஒருவரின் செயல் என் மனதைத்தொட்டுப்போனது. அவர்கள் குடும்ப சகிதம் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார்கள். அவரது பிள்ளைகள் இருவருடன் எனது சகோதரியின் மகனும் தனது விளையாட்டுப் பொருட்களுடன் உட்கார்ந்து விளையாடத் தொடங்கியபோது ஆரம்பித்தது பிரச்சினை. பொருட்களின் சொந்தக்காரன் என்றவகையில் எங்கள் வீட்டுப் பிள்ளை அதிகம் உரிமை எடுப்பதும், அதைத் தொட்டு விளையாடக்கூட …

Read More »

போனவர்கள் திரும்பினார்கள்

எனது சகோதரனின் சிறு வயதில் நடந்திருந்த அந்த அனுபவத்தினை முதன்முதலில் கட்டுரையாக எழுதும் வாய்ப்பு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் எனக்கு கிடைத்திருந்தது. தமிழ்மொழியில் குறைந்தபட்சம் ஒரு திறமைச் சித்தி கிடைக்கும் என்ற உற்சாகத்தில் எழுதிவிட்டுத் திரும்பிய எனக்கு, அதை மீண்டும் மீட்டும் சந்தர்ப்பம் இரு தசாப்தங்களின்பின் கிடைத்திருக்கிறது. அதையே எனது சகோதரன் மீட்டவேண்டுமானால், அவன் தனது ஐந்து வயதுக்குத் திரும்பவேண்டும். தனியார் ஆசுபத்திரி ஒன்றிற்குச் செல்ல ஆயத்தமாகிய தனது …

Read More »

மண்வாசனை

அண்மையில் ஊரில் நடைபெற்ற நூல் வெளியீடொன்றும், அதில் இடம்பெற்ற உரைகளும் கடந்த காலங்களில் என் சொந்த ஊருக்கும் எனக்குமிடையில் இருந்த தற்காலிக பிரிவொன்றினை மீட்டுவதற்கான சந்தர்ப்பத்தைக் கொடுத்தது. ஒருவனை தன் பிறந்த ஊரின் ஞாபகம் சூழ்ந்து, அதுவே விடாமல் வாட்டி வதைக்குமானால், அவன் ஊருக்கு வெளியில் எங்கேயோ சூழ்நிலைக் கைதியாக்கப் பட்டிருக்கிறான் என்று அர்த்தம். சொந்த ஊரின் பெறுமதியை உணர்ந்து கொள்ள அதுவும் ஓர் அளவுகோலாகி விடுவதுண்டு. குறைந்த பட்சம் …

Read More »