Featured Posts
Home » இஸ்லாம் » குடும்பம் (page 8)

குடும்பம்

இஸ்லாத்தின் பார்வையில் குழந்தை வளர்ப்பு

கோவை மாவட்டம் JWF வழங்கும் பெண்களுக்கான பிரத்யேக தர்பியா வகுப்பு நாள்: 21-01-2013 (காலை 10 மணி முதல்) இடம்: மஸ்ஜித் முஸ்லிமீன் (JAQH) – கோட்டைமேடு கோவை வழங்குபவர்: இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர், உண்மை உதயம் – இலங்கை) Download mp4 Video Size: 268 MB Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/9gr3rjyur3giwiz/childcare-in_view_of_islam-ismail_salafi.mp3]

Read More »

சிறுவர்களும் உளச்சோர்வும்

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ் தேவையான ஊட்டச் சத்துக்களைப் பெறாத போது, நோய்க் கிருமிகளின் தாக்கத்தின் போது உடல் பலவீனப்படுகின்றது. இவ்வாறே உள்ளத்தைப் பாதிக்கும் நிகழ்ச்சிகள், இழப்புக்கள் இடம் பெறும் போது உள்ளம் சோர்ந்து போகின்றது. இந்த உளச் சோர்வு என்பது பெரியவர்களிடம் ஏற்பட்டால் கூட ஓரளவு சமாளித்துக் கொள்ளலாம். ஆனால் சிறுவர்கள் இந்நிலைக்கு ஆளானால் பாதிப்பு பெரிதாகிவிடும்.

Read More »

குழந்தைகளை நெறிப்படுத்துவதில் தண்டணைகளின் பங்கு

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ் குழந்தைகளை நெறிப்படுத்துவதில் தண்டணைகளின் பங்கு “உப்புத் திண்டவன் தண்ணீர் குடிக்க வேண்டும். தப்புச் செய்தவன் தண்டனை பெற வேண்டும்” என்பர். தண்டனைகள் தவறு செய்வதை விட்டும் தடுப்பதற்காகவும், தவறு செய்தவன் மேலும் தவறு செய்யாமல் இருக்கவும் உதவும். நாம் இங்கு குற்றம் செய்யும் குழந்தைகளைத் தண்டித்தல் குறித்து அலச உள்ளோம். குழந்தைகள் குற்றம் செய்தால் பெற்றோர்கள் உடல் …

Read More »

முன்மாதிரி முஸ்லிம் குடும்பம்

தஹ்ரான் தாஃவா நிலையம் (சிராஜ்) வழங்கும் 1433 சிறப்பு தர்பியா நிகழ்ச்சி நாள்: 23-07-2012 இடம்: தஹ்ரான் தாஃவா நிலையம் (சிராஜ்) -சவூதி அரேபியா உரை: அஷ்ஷைக்: ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி – அழைப்பாளர், அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (KIC) வீடியோ: தென்காசி SA ஸித்திக் Download mp4 HD video 1 GB Audio Play: [audio:http://www.mediafire.com/file/doki6dgceq9ksvv/munmathiri_family_HD_ksr.mp3] Download mp3 audio

Read More »

பெண்ணே பெண்ணே! – (தொடர் 9)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் பெண்ணே! பெண்ணே! அநியாயம் வேண்டாம் கண்ணே! பெண்ணின் அன்பு, பாசம் காரணமாகவும் அவள் அநியாயக்காரியாக மாறும் நிலை ஏற்படுகின்றது. தன் பிள்ளை மீது கொள்ளும் பாசத்தின் காரணமாக அடுத்த பிள்ளைகளுக்கு அநியாயம் செய்கின்றாள். ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் நீதி, நியாயமாகப் பேச வேண்டும் என்பதை மறந்து தனது பிள்ளையின் தவறை மறைத்துப் பேசுகின்றாள். அடுத்த பிள்ளைகளின் சின்னத் …

Read More »

ஆன்மீக சூழல் அற்றுப் போகும் முஸ்லிம் வீடுகள்

– இம்தியாஸ் ஸலபி உங்கள் வீடுகளில் உங்களுக்கு அல்லாஹ் நிம்மதியை ஏற்படுத்தினான். (16:80) வீடுகள் அமைதிக்குரியதாகவும் நிம்மதிக் குரியதாகவும் அமைய வேண்டும் என்றே எல்லோரும் எதிர்பார்க்கின்றனர். வீட்டை விட்டு வெளியில் செல்லக் கூடிய எவரும் தங்களுடைய வேலைகளை முடித்து விட்டு வீடு திரும்பி அமைதி பெற வேண்டும் என்றே விரும்புகின்றனர்.

Read More »

பெண்ணே பெண்ணே! – (தொடர் 8)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் அநியாயம் வேண்டாம் கண்ணே! இஸ்லாம் நீதி நெறிகளைப் போற்றும் மார்க்கமாகும். அநியாயத்தை இஸ்லாம் அணுவளவும் ஆதரிக்கவோ, அனுமதிக்கவோ இல்லை. இஸ்லாத்தின் எதிரிகளான யூதர்கள் நபி(ஸல்) அவர்களைக் கொலை செய்ய முயற்சி செய்ததால் யூதர்கள் மீது முஸ்லிம்களுக்கு வெறுப்புணர்வு ஏற்பட்டது. இந்த வெறுப்புணர்வு கூட அநியாயத்திற்குக் காரணமாகிவிடக் கூடாது எனப் போதித்த மார்க்கம் இஸ்லாமாகும்.

Read More »

பெண்ணே பெண்ணே! – (தொடர் 7)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் ஒழுங்கீனம் வேண்டாம் கண்ணே! சில பெண்கள் பண்பாடோ, நாகரீகமோ இல்லாமல் நடந்து கொள்வதைக் காணலாம். இவர்களின் இத்தகைய பண்பாடற்ற நாகரீக மற்ற இயல்புகளும், நடத்தைகளும் அடுத்தவர்களுக்கு பெருத்த அசௌகரியத்தை அளித்து வருகின்றன. எனினும் இத்தகைய பெண்கள் இவ் இழி குணங்களின் பாதிப்பை உணர்வதில்லை.

Read More »

இஸ்லாமிய குடும்ப அமைப்பு

தஃவா நண்பர்களின் குடும்ப ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி வழங்குபவர்: அஷ்ஷைஃக்: அப்துல் வதூத் ஜிஃப்ரி (அழைப்பாளர், இலங்கை) இடம்: சார்க் பீச் கேம்ப், அல்-ஜுபைல் தொழிற்சாலை நகரம், சௌதி அரேபியா நாள்: 02-03-2012 வெள்ளிக்கிழமை Download mp4 video Audio Play: [audio:http://www.mediafire.com/download/joinjnyh4ztt06t/family_system_in_islam_jifri.mp3] Download mp3 audio

Read More »

பெண்ணே பெண்ணே! – (தொடர் 6)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் தப்பெண்ணம் வேண்டாம் கண்ணே! சிலருக்கு அடுத்தவரைப் பற்றி எப்போதும் கீழ்த்தரமான எண்ணம் தான் இருக்கும். அடுத்தவர் எதை ஏன்இ என்ன நியாயத்திற்காகச் செய்கின்றனர் என்று அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் இருக்கும். சிலர் பொறாமை காரணத்திற்காகவும் உளவு மனபப்பான்மையாலும் இந்த நிலைக்கு உள்ளாகின்றனர். பெண்களில் பலருக்கு இந்த நோய் இருக்கின்றது.

Read More »