Featured Posts
Home » இஸ்லாம் » ஒழுக்கம் (page 2)

ஒழுக்கம்

நன்றியுணர்வு ஈமானின் ஓர் அடையாளம் – தொடர் – 02

M.A.Hafeel Salafi (M.A) தொடர் – 02 எதற்காக நன்றி செலுத்த வேண்டும்? அல்லாஹ் எந்தத் தேவையும் அற்றவன். மனிதன் பல்வேறு தேவைகள் உடையவன். மனிதனின் கற்பனைகளில் கற்பிதம் செய்ய முடியாத அளவு அல்லாஹ் மனிதனுக்குப் பல்வேறு அருட்கொடைகளை வழங்கியுள்ளான். அவற்றிற்காக மனிதன் அவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். அவற்றிற் சில அருட்கொடைகளை நோக்குவோம். நேர்வழியைக் காட்டியதற்காக நன்றி: ஒரு மனிதனால் பிற மனிதனுக்கு வழிகாட்ட முடியாது. இறை வழிகாட்டலான …

Read More »

நன்றியுணர்வு ஈமானின் ஓர் அடையாளம் – தொடர் – 01

M.A.Hafeel Salafi (M.A) நன்றி நவிலும் நாகரிகப் பண்பியல்பு, மனிதர்களுக்கு பிறப்பியல்பிலேயே இருக்கும் ஓர் உள்ளார்ந்த உணர்ச்சியாகும். அது ஒரு நாகரிக முதிர்ச்சியுள்ள, ஒழுக்கமிக்க பண்பாகவும் கொள்ளப்படுகிறது. ஒரு முஃமினின் வாழ்வில் நன்றியுணர்வு ஈமானின் அடையாளத்தையும் இஸ்லாமிய பண்பியல் அழகையும் பிரதிபலிக்கிறது. அத்தோடு, அவனில் வெளிப்படும் நன்றியுணர்ச்சி, அளவற்ற அருளாளன் அல்லாஹ்வையும் அவன் அள்ளி வழங்கியுள்ள அருட்கொடைகளையும் உளமாற ஏற்றுக் கொள்வதையும் அதைப் பகிரங்கப்படுத்துவதையும் வெளிப்படுத்துகிறது. ‘உமது இரட்சகனின் அருட்கொடையை …

Read More »

அலைபேசிகளால் ஏற்படும் சமூக அவலங்கள்

எம்.ஏ.ஹபீழ் ஸலபி M.A. நாம் அறிவியலால் ஆளப்படும் தொழில் நுட்பம் நிறைந்த ஓர் உலகில் வாழ்கின்றோம். மனிதன், அவன் பெற்றுள்ள நவீன அறிவைப் பயன்படுத்தி, பல வியத்தகு சாதங்களைப் படைத்து, பெரும் புரட்சிகளைப் புரிந்துவருகின்றான். கற்பனையில் கற்பிதம் செய்யமுடியாத பல புதிய புதிய கண்டுபிடிப்புகளைத் தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தி, ஆச்சரியம் ஏற்படுத்தி வருகின்றான். அவை மனிதர்களுக்கு நன்மை தரும் அதேவேளை, பெருமளவு தீமையும் ஏற்படுத்துகிறது. மனிதனின் இயல்பு தீமைகளின் பால் அதிகம் …

Read More »

நெறிப்படுத்தலை வேண்டி நிற்கும் இளமைப் பருவம்

எம்.ஏ.ஹபீழ் ஸலபி (M.A.) மனித வாழ்வில் மிக முக்கியமான, பெறுமதியான, உறுதியான பருவமாக இளமைப் பருவம் இருக்கிறது. ஒருவனின் செல்நெறியை கெட்டதா? நல்லதா? எனத் தீர்மானிக்கும் காலகட்டமாக உள்ள இளமைப் பருவத்தில், ஒருவனின் உடல் நிலை மாற்றமடைவதைப் போல், உள்ளத்து உணர்வுகளும் சிந்தனைகளும் மாற்றமடையத் தொடங்குகின்றன. இளமைப் பருவம் என்பது, தனி மனித ஆளுமை வளர்ச்சிப் படியில் மிக முக்கிய பருவமாகவும் படித்தரமாகவும் அமைகிறது. உடலாரோக்கியமும் உணர்ச்சி உத்வேகமும் துடிதுடிப்பும் …

Read More »

நாவினால்…!

நாவு என்பது மனித வாழ்க்கைக்கு மிக முக்கியமான உருப்பாக இருக்கிறது. நாவைக் கொண்டே மனிதனால் தெளிவுடன் பேச முடிகிறது. ஒருவனின் நாவை வைத்துத்தான் அவனை நல்லவனா கெட்டவனா என்று உலகம் தீர்மானிக்கின்றது. நாவு என்பது இறைவனின் படைப்பில் ஆச்சரியமான ஒன்றாகும்! மனித உடம்பில் மிகச் சக்திவாய்ந்த தசை நாவுதான். அத்தனை சக்தி வாய்ந்த உறுதியான தசையாக நாவு இருந்தாலும், நாம் எளிதில் அதைக் கையாளும்படி இறைவன் படைத்துள்ளான். மனித நாவில் …

Read More »

மனைவி கணவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள்

வாராந்திர குடும்ப தர்பியா நிகழ்ச்சி இடம்: அழைப்பு மையம், ஸினாயிய்யா, ஜித்தா வழங்குபவர்: ஷைய்க் K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 08-11-2018 (வியாழன்) Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்: ? https://www.youtube.com/subscription_center?add_user=islamkalvi

Read More »

கணவன் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகள்

வாராந்திர குடும்ப தர்பியா நிகழ்ச்சி இடம்: அழைப்பு மையம், ஸினாயிய்யா, ஜித்தா வழங்குபவர்: ஷைய்க் K.L.M. இப்ராஹீம் மதனீ தொடர்-1 நாள்: 25-10-2018 (வியாழன்) தொடர்-2 நாள்: 01-11-2018 (வியாழன்)

Read More »

நவயுகத்தின் அரைகூவலும் இஸ்லாமிய இளைஞர்களும்

மனித வாழ்க்கையில் இளமைப்பருவமே (Child Hood) முக்கியமான காலகட்டமாகும். இப்பருவம் ஒரு கத்திமுனையைப் போன்றது. அதனை ஆக்கத்திற்கும் அழிவுக்கும் பயன்படுத்தலாம். இதே போன்றே இப்பருவமும் ஆக்கத்திற்கோ அல்லது அழிவிற்கோ பயன்படுத்தமுடியுமான பருவமாகும். இளமைப்பருவம் என்பது குழந்தைப் பருவத்திற்கும், முழு வளர்ச்சிப் பருவத்திற்கும் இடைப்பட்ட பருவமென அடையாளப்படுத்தப்படுகின்றது. இது உடல் வலிமையும் வீரியமும் கொண்ட பருவமாகும். வாழ்வில் சுறுசுறுப்பும் இயக்கமும் செயற்திறனும் மிக்க பருவமாகும். வாழ்வில் தன் வாலிபத்தை பயன்படுத்திக் கொள்ளாதவன் …

Read More »

பெருநாளும் நானும்

நோன்புப் பெருநாள் எனக்கு சிறிய சோதனையுடனேயே கடந்துபோனது. பெருநாளைக்கு மூன்று தினங்களுக்கு முன்னர் கால் பெருவிரலில் ஏற்பட்டிருந்த சிறிய சிரங்கொன்று வேலைப்பழுக்களால் வீக்கமுற்று வீட்டு வைத்தியத்திற்கும் அடங்காத வகுதிக்குள் முன்னேறியிருந்தது. அது ஒருபுறம் இருக்க, பெருநாள் தொழுகைக்கிடையில் பித்ராவைக் கொடுத்து நோன்பை வழியனுப்பும் முக்கிய கடமை அனைவருக்கும் காத்திருந்தது. வீட்டிலுள்ளவர்கள் சார்பாக, தேவையான அரிசியினை மனக்கணக்கிட்டு தானே அளந்து ஏழைகளுக்கு கொடுத்துவிடுவது எனது தாயின் வழக்கமாக இருந்து வந்தது. ஆனால், …

Read More »

காரியாலயமும் நானும்

அன்று காரியாலயத்தில் பொதுமக்கள் தினம் என்பதனால் பொறுப்புகள் சற்று அதிகமாகவே இருந்தது. காலை 9.00 மணியுடன் ஆரம்பித்த வேலைகள் பகற்பொழுதைக் கடந்த பின்னர்தான் ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் வந்தது. அந்த நேரம் பார்த்து லுஹருடைய தொழுகையை முடித்துக் கொள்ள எண்ணி வுழு செய்துவிட்டு, தொழுகையறையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். அப்போது, என்னை நோக்கி அவசரமாக அங்கு வந்த ஒரு பொதுமகன் வயதான தாயுடன் வந்ததாகவும், தனது வேலையை அவசரமாக முடித்து தரும்படியும் …

Read More »