Featured Posts
Home » 2020 » February

Monthly Archives: February 2020

ரஜப் மாதம் தொடர்பான ஆடியோ, வீடியோ மற்றும் கட்டுரைகள்

ரஜப் மாதம் தொடர்பான துஆ – ஹதீஸின் நிலை - மிஃராஜ் நபித்துவத்திற்கு முன்னரா? பின்னரா? - [13/30] மிஃராஜ் பயணமும் அதன் படிப்பினைகளும் - மிஃராஜ் (மிஹ்ராஜ்) தரும் படிப்பினை - மிஃராஜ் பயணம் என்பது கனவா? - விஞ்ஞானம் விழித்திடுமுன் விந்தை நபியின் விண்வெளிப்பயணம் - மிஹ்ராஜ் தினத்தை நோன்பு மற்றும் விஷேச அமல்கள் மூலம் சிறப்பிப்பது பித்அத்தாகும்

Read More »

அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – சூறா அந்நிஸா(4) தொடர்- 30

– S.H.M. Ismail Salafi ஈமானின் அடிப்படைகள் ‘நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை யும் அவனது தூதரையும், அவன் தனது தூதருக்கு இறக்கிவைத்த இவ்வேதத்தையும், இதற்கு முன் அவன் இறக்கிவைத்த வேதத்தையும், நம்பிக்கை கொள்ளுங்கள். யார் அல்லாஹ்வை யும், அவனது வானவர்களையும், அவனது வேதங்களையும், அவனது தூதர்களையும், இறுதி நாளையும் நிராகரிக்கின்றானோ நிச்சயமாக அவன் வெகு தூரமான வழி கேட்டில் சென்று விட்டான்.’ (4:136) இந்த வசனத்தில் ஈமானின் ஆறு அடிப்படைகளில் …

Read More »

நன்றியுணர்வு ஈமானின் ஓர் அடையாளம் – தொடர் – 03

M.A.Hafeel Salafi (M.A) நன்றி மறப்பது நன்றன்று ஓர் அடியான் நன்றி தெரிவிப்பதன் ஊடாக, அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தையும் அன்பையும் நிறைவாகப் பெற்றுக் கொள்கின்றான். மனிதனுக்கு அவனை சிருஷ்டித்து, செம்மைப்படுத்திய இரட்சகனினால் அருளப்பட்டுள்ள அருட்கொடைகள் பாதுகாக்கப்படுவதற்கும் அவைகளை மேலும் அதிகமாகப் பெற்றுக் கொள்வதற்கும் நன்றியுணர்வும் அதன் வெளிப்பாடும் காரணமாய் அமைகிறது. அல்லாஹ் தேவையற்றவன் என்பதால் அவனிடமிருந்து கிடைக்கும் நிறைவான அருளுக்குப் பதிலீடாக மனிதனால் நன்றி செலுத்துவதைத் தவிர வேறு எதுவும் …

Read More »

இலங்கை முஸ்லிம்களின் வரலாறு

– S.H.M. Ismail Salafi உண்மை உதயம், Jan 2020 இலங்கை முஸ்லிம்களின் வரலாறு மிகவும் தொன்மையானதாகும். இருப்பினும் இனவாதிகள் இதனை இருட்டடிப்புச் செய்து, இலங்கை முஸ்லிம்களை 100-200 வருடங்களுக்கு முன்னர் தெரு செப்பணிடும் பணி செய்வதற்கு வந்தவர்களாகக் காட்ட முற்படுகின்றனர். இலங்கை முஸ்லிம்கள் இலங்கையின் தேசிய இனம் என்பதை மறைத்து, அவர்கள் அனைவரும் அரபு நாட்டில் இருந்து வந்த வந்தேறு குடிகள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் வரலாற்று வக்கிரமம் …

Read More »

நன்றியுணர்வு ஈமானின் ஓர் அடையாளம் – தொடர் – 02

M.A.Hafeel Salafi (M.A) தொடர் – 02 எதற்காக நன்றி செலுத்த வேண்டும்? அல்லாஹ் எந்தத் தேவையும் அற்றவன். மனிதன் பல்வேறு தேவைகள் உடையவன். மனிதனின் கற்பனைகளில் கற்பிதம் செய்ய முடியாத அளவு அல்லாஹ் மனிதனுக்குப் பல்வேறு அருட்கொடைகளை வழங்கியுள்ளான். அவற்றிற்காக மனிதன் அவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். அவற்றிற் சில அருட்கொடைகளை நோக்குவோம். நேர்வழியைக் காட்டியதற்காக நன்றி: ஒரு மனிதனால் பிற மனிதனுக்கு வழிகாட்ட முடியாது. இறை வழிகாட்டலான …

Read More »

அல்லாஹ்வின் உதவி யாருக்கு ?

கஷ்ட நேரங்களிலும், சோதனை கட்டங்களிலும் அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் விரைவாக கிடைக்க வேண்டுமென்பது முஃமின்கள் அனைவரின் எதிர்பார்ப்பும், பிரார்த்தனையுமாகும். எப்போதெல்லாம் முஸ்லிம் சமுதாயம் நெருக்கடிகளுக்கும் அடக்குமுறைக்கும் ஆளாக்கப்படுவார்களோ, அப்போதெல்லாம் அல்லாஹ்வின் உதவி எப்போது வரும் என்பது தான் அவர்களின் முழக்கமாக இருக்கும். இந்த முழக்கத்தை நபிமார்களுக்கு அடுத்தபடியாக இந்த சமுதாயத்தின் சிறந்தவர்களாக இருந்த நபித்தோழர்கள் சோதனைகளுக்கு ஆளாக்கப்பட்டும் மிக கடுமையான முறையில் உலுக்கப்பட்டும் எதிரிகளால் நான்கு புறங்களிலும் சூழப்பட்டு அவார்களின் …

Read More »

ஹவாரிஜுகளுக்கும் இப்னு அப்பாஸ் அவர்களுக்கும் நடந்த விவாதம்

ஸிஃப்ஃபீன் போருக்கு பின்னர் அலீ அவர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்தவர்கள் தான் ஹவாரிஜுகள். அல்லாஹ்வின் வேதத்தைக்கொண்டு தீர்ப்பு வழங்க வேண்டுமென்ற கருத்தின் பால் நபித்தோழர்கள் சென்றபோது அதற்கெதிராக கிளர்ந்தெழுந்தவர்கள் தான் இவர்கள். அரபி மொழி அகராதியான முஃஜமுல் வஸீத் என்ற நூலில் அலீ அவர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்த இஸ்லாமிய பிரிவினர்களில் ஒரு பிரிவினர் தான் ஹவாரிஜுகள் ஆவார்கள் கலிஃபாக்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்பவர்களுக்குத் தான் பொதுவாக ஹவாரிஜுகள் என்று …

Read More »

மாணவர்களே சிந்திப்பீர்!…

உலகில் ஒரு முஸ்லிம் அடையக்கூடியவற்றில் மிகச்சிறந்தது கல்வியாகும். அதிலும் குறிப்பாக மார்க்க கல்வி. இஸ்லாம் இதற்கு ஏராளமான சிறப்புகளை வழங்கியுள்ளது. அதனை கற்பதை நம் மீது கடமையாகவும் ஆக்கியுள்ளது. இறைநம்பிக்கையாளர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் உயர்வும் அந்தஸ்தும் கல்வியைக்கொண்டுதான். உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும்; கல்வி ஞானம் அளிக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான் 58:11 ஆமிர் பின் வாஸிலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாஃபிஉ பின் அப்தில் ஹாரிஸ் (ரலி) அவர்கள், (கலீஃபா) …

Read More »

ஸூரத்துந் நாஜிஆத் – 1 [தஃப்ஸீர் – 03 | 1441 தர்பியா]

உரை: மெளலவி அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மய்யம், ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மய்யம், மற்றும் இஸ்லாமிய கலாச்சார மையம் தம்மாம் இணைந்து நடத்தும் 1441 ம் ஆண்டு தர்பியா வகுப்பு நாள் : 24-1-2020 வெள்ளிக்கிழமை

Read More »

ஸலா(த்)துத் ததவ்வு – 3 [ஃபிக்ஹ் | 1441-தர்பியா]

உரை: மெளலவி மஸூத் ஸலபிஅல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மய்யம், ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மய்யம், மற்றும் இஸ்லாமிய கலாச்சார மையம் தம்மாம் இணைந்து நடத்தும் 1441 ம் ஆண்டு தர்பியா வகுப்புநாள் : 24-1-2020 வெள்ளிக்கிழமை

Read More »