Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » ஆறு நாட்களில் உலகம் படைக்கப் பட்டதா?

ஆறு நாட்களில் உலகம் படைக்கப் பட்டதா?

ஆறு நாட்களில் உலகம் படைக்கப் பட்டதா?
மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக்குரல் ஆசிரியர் இலங்கை
உலகம் எத்தனை நாட்களில் படைக்கப் பட்டது? என்ற கேள்விக்கான விடையை குர்ஆன், மற்றும் ஹதீஸ்களில் காணலாம். ஆனால் சமீபகாலமாக முரண்பாடு எனும் பெயரில் ஸஹீஹான ஹதீஸ்களை நிராகரிப்போர்கள் உலகிலுள்ள பொருட்கள் படைக்கப் பட்ட தினங்கள் வரக் கூடிய சம்பந்தமான ஹதீஸையும் குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று மறுக்கிறார்கள்.

அல்லாஹ் உலகத்தை ஆறு நாட்களில் படைத்தாக குர்ஆனில் குறிப்பிடுகிறான், ஆனால் ஹதீஸில் ஏழு நாட்களில் படைக்கப்பட்டதாக வந்துள்ளதால் இது குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று சொல்லி அந்த ஹதீஸை நிராகரிக்கிறார்கள்.

உண்மையில் இவர்கள் கூறுவது போல குர்ஆனும், ஹதீஸூம், ஒரே விடயத்தைப்பற்றி முரண்பாடான கருத்துக்களை கூறுகின்றனவா ? அல்லது இவர்கள் கண்மூடித்தனமாக விளக்கம் கொடுத்துள்ளார்களா என்பதை வாசகர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

விடயத்திற்குள் வருவதற்கு முன் குர்ஆனும் வஹிதான், ஹதீஸீம் வஹிதான், என்பதை விளங்கி கொள்ள வேண்டும்.

நான் சொல்வது மட்டும் தான் சரி வேறு யார் விளக்கம் கொடுத்தாலும் அதை நாங்கள் ஏற்று கொள்ள மாட்டோம் என்று பிடிவாதத்தால் ஹதீஸ் என்ற வஹியை மறுத்து காபிரான நிலைக்கு போய்விடக் கூடாது ?

அல்லாஹ் இறக்கி வைத்த சட்டத்தில் மட்டும் தான் மாற்றம் கிடையாது, ஆனால் மனித விளக்கங்களில் முரண்பாடுகளும், மாற்றங்களும் வரலாம்.

இந்த வானமும், பூமியும் ஆறு நாட்களில் படைக்கப்பட்டதாக (07 : 54) (10: 03) (11: 07) (57: 04) போன்ற வசனங்களில் காணலாம். அதே நேரம் ( 41: 09) (41: 11) (41: 12) இந்த வசனங்களின் அடிப்டையில் இந்த வானமும், பூமியும் எட்டு நாட்களில் படைக்கப் பட்டதாக மேலோட்டமாக நம்மால் விளங்க முடிகிறது.

வானங்களும், பூமியும் ஆறு நாட்களில் படைக்கப் பட்டதா ? எட்டு நாட்களில் படைக்கப் பட்டதா ? என்ற கேள்விகள் மேலுள்ள வசனங்களிலிருந்து எழும். அதே நேரம் ஹதீஸில் ஏழு நாட்கள் என வருகிறது எனவே ஹதீஸ் முரண் என்று புறக்கணிக்கப் படுகிறது என்றால் ? அது எந்த அளவிற்கு நியாயமானது என்று புரிய வில்லை. இந்த குர்ஆன் வசனங்களிலும் எண்ணிக்கை வித்தியாசப் படுகிறதே ? அப்படியானால் இந்த குர்ஆன் வசனங்களையும் ஒன்றுக்கு ஒன்று முரண்படுகிறது என்று மறுப்பார்களா ? முரண்பாடு போன்ற இந்த வசனங்களை முரண்பாடு இல்லாமல் விளங்க வேண்டும் என்று சகோதரர் பி ஜேயே கூறுகிறார்.? இதை அவரின் தர்ஜூமத்துல் குர்ஆன் அடி குறிப்பு 179 ல் காணலாம். மேற் குறிப்பிட்ட வசனங்களுக்கு விளக்கம் எழுதிக் கொண்டு வரும் போது நான்காவது பந்தியில் பூமியைப் படைக்க இரண்டு நாட்கள்,(41: 09) வானங்களைப் படைக்க இரண்டு நாட்கள்,(41: 12) என்று கூறப்படுவதை இதற்கு முரணானது என்று கருதக் கூடாது. என்று பி ஜே தனது தப்ஸீரில் கூறியுள்ளார். ஏன் என்றால் (41: 09, 41:12) இந்த இரண்டு வசனங்களை மட்டும் வைத்துப் பார்த்தால் வானங்களும், பூமியும் நான்கு நாட்களில் படைக்கப் பட்டதாக வருகிறது. இந்த வசனங்களை முரணில்லாமல் விளங்க முடியும் என்றால், ஏன் இது சம்பந்தமான ஹதீஸை முரணில்லாமல் விளங்க முடியாது ?

அதே நேரம் இந்த செய்தி ஸஹீஹான ஹதீஸில் மட்டும் வந்திருந்தால் பார்த்தீர்களா ! வானங்களை இரண்டு நாட்களிலும், பூமியை இரண்டு நாட்களிலும், நான்கு நாட்களில் உணவுகளைப் படைத்துள்ளதாக வருகிறது, எனவே கூட்டிப் பார்த்தால் எட்டு நாட்கள் வருகிறது ஹதீஸ் ஸஹீஹாக இருந்தாலும் முரண் தான் என்று மறுத்திருப்பார்கள். ஆனால் இந்த இடத்தில் இவரே இதை முரண்படாமல் விளங்க வேண்டும் என்று விளக்குகிறார் என்றால், ஏன் இந்த ஹதீஸ்களை முரண்படாமல் விளங்க முடியாது ? முடியும் ! இன்ஷா அல்லாஹ்.

அதேப் போல (25:59, 32:04, 50:38,) போன்ற வசனங்கள் வானத்தையும், பூமியையும், அதற்கு இடைப்பட்டவைகளையும் ஆறு நாட்களில் படைக்கப் பட்டதாக குறிப்பிடுகின்றன. என்றாலும் இதிலுள்ள எந்த வசனங்களும் ஒன்றுக்கொன்று முரணில்லை என்பதை விங்கிக் கொள்ள வேண்டும்.

இவர்கள் முரணாக காட்டும் ஹதீஸை கவனிப்போம். அபூ ஹூரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் என் கையைப் பிடித்து பின்வருமாறு கூறினார்கள். மண்ணை அல்லாஹ் சனிக்கிழமை படைத்தான், மலையை அல்லாஹ் ஞாயிற்றுக் கிழமை படைத்தான், மரத்தை அல்லாஹ் திங்கட் கிழமை படைத்தான், வெறுக்கப்பட்டவைகளை அல்லாஹ் செவ்வாய் கிழமை படைத்தான், ஒளியை அல்லாஹ் புதன் கிழமை படைத்தான், பிராணிகளை வியாழக் கிழமை பரவச் செய்தான், ஆதம் நபியை வெள்ளிக் கிழமை அஸருக்குப் பின்னால் படைத்தான் (முஸ்லிம்)

மேற்ச் சுட்டிக் காட்டிய ஹதீஸூக்கும் இந்த குர்ஆன் வசனங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது, ஏன் என்றால் மேற்ச் சுட்டிக் காட்டிய குர்ஆன் வசனங்கள் அனைத்தும் இந்த வானங்களும், பூமியும் படைக்கப் பட்ட எண்ணிக்கையை சொல்கின்றன. ஆனால் இந்த ஹதீஸோ அவைகள் படைக்கப்பட்ட நாட்களை கூறுகிறது.

அடுத்ததாக அல்லாஹ் வானங்களையும், பூமியையும் படைத்து சில காலங்கள் கழித்து தான் ஹதீஸில் சொல்லப்பட்ட படைப்புகளை படைத்துள்ளான் என்பதை பின் வரும் குர்ஆன் வசனத்தின் மூலம் விளங்கலாம்.

‘வானங்களும், பூமியும் இணைங்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா ?… (21:30) இந்த வசனத்தின் படி வானங்களும், பூமியும் படைக்கப் பட்ட ஆரம்பத்தில் ஒட்டித்தான் இருந்தன என்பதிலிருந்து வானங்கள், பூமி படைக்கப் பட்டது வேறு, ஹதீஸில் சொல்லப்பட்ட படைப்புகள் படைக்கப் பட்டது வேறு என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அந்த ஆறு நாட்களுக்குள் மேற் கூறப்பட்ட படைப்புகள் படைக்கப்பட வில்லை என்பதை விளங்கிக் கொண்டால் இந்த ஹதீஸ் முரண் படுவதை போல தோன்றாது..

அடுத்த வசனம் அதை இன்னும் உறுதிப் படுத்துவதை கவனிக்கலாம்.

பூமி அவர்களை சாய்த்து விடாமல் இருப்பதற்காக முளைகளை ஏற்ப்படுத்தினோம்…(21: 31) அதாவது வானங்கள், பூமி படைக்கப் பட்டு, அதன் பின் பிறகு தான் அல்லாஹ் மலைகளை படைத்துள்ளான். வானம், பூமியை படைக்கும் போதே மலைகளையோ, மரங்களையோ, சூரியனையோ, சந்திரனையோ ஏனைய படைப்புகளையோ படைக்க வில்லை. ஏன் என்றால் ஒட்டியிருக்கும் வானம், பூமிக்குள் எப்படி ஏனைய படைப்புகள் உள்ளே படைத்திருக்க முடியும். ? எனவே தான் வானங்களையும், பூமியையும் படைத்ததற்குப் பிறகு தான் இந்த சந்திரன், சூரியன், மலைகள்,ஆதம் நபி, ஏனைய படைப்புகளை படைக்கப் பட்டுள்ளன என்று விளங்கினால் எந்த முரண்பாடும் கிடையாது.

இல்லை முரண்பாடு முரண்பாடு தான் எங்கள் தலைவர் சொல்லும் வரை மாற்றத்திற்கு அதில் எந்த வித மாற்றத்திற்கும் இடமில்லை என்று பிடிவாதம் பிடித்தால், உலகம் ஆறு நாட்களில் படைக்கப்பட்டதாகவும், எட்டு நாட்களில் படைக்கப்பட்டதாகவும் வரும் வசனங்களுக்கு முரணில்லாமல் விளக்கம் கூறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *