Featured Posts
Home » Featured » TNTJ ஜித்தா கிளை சகோதரர்களுக்காக நடைபெற்ற, சிறப்பு கேள்வி-பதில் நிகழ்ச்சி

TNTJ ஜித்தா கிளை சகோதரர்களுக்காக நடைபெற்ற, சிறப்பு கேள்வி-பதில் நிகழ்ச்சி

ஜித்தா TNTJ சகோதரர்களுக்கான சிறப்பு கேள்வி-பதில் நிகழ்ச்சி
பதிலளிப்பவர்: மவ்லவி அப்பாஸ் அலி Misc (முன்னாள் TNTJ ஆய்வாளர்)

நாள்: 20.04.2015 திங்கள் (இரவு 7.30 முதல்)

இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா, ஜித்தா

நேரடி ஒளிபரப்பு ஏற்பாடு: இஸ்லாம்கல்வி.காம்
நன்றி: TMC Live Telecast

பாகம்-1: ஒப்பந்தம் மற்றும் நிகழ்ச்சி அறிமுகம்
ஒப்பந்தம் தொடர்பான விளக்கம்

TNTJ ஜித்தா கிளை சார்பாக: சகோ. முனீப்

ஒப்பந்தம் மற்றும் நிகழ்ச்சியின் அறிமுகம்:
ஸனய்யியா இஸ்லாமிய அழைப்பு மையத்தின் ஆசிரியர் மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ

Download mp3 Audio – 64kbps – சுருக்கப்பட்ட ஃபைல் (small size)
Download mp3 Audio – 128kbps – மிகத் தெளிவானது (big size)
[audio:http://www.mediafire.com/download/66tq2mk1csf1it4/agreement_TNTJ-QA-Jeddah-2015-04-20-128kbps.mp3]

பாகம்-2: கேள்வி-பதில் நிகழ்ச்சி – பதிலளிப்பவர்: மவ்லவி அப்பாஸ் அலி

Download mp3 Audio – 64kbps – சுருக்கப்பட்ட ஃபைல் (small size)
Download mp3 Audio – 128kbps – மிகத் தெளிவானது (big size)
[audio:http://www.mediafire.com/download/ndpw3wcwhfr4q27/TNTJ-QA-Jeddah-2015-04-20-Abbas_Ali_Misc-64kbps.mp3]

————————————————————————————
ஜித்தாவில் TNTJ சகோதரர்களுடன் நடத்தப்பட்ட முன்மாதிரி கேள்வி பதில் நிகழ்ச்சி.

சவூதி அரேபியாவிற்கு வருகைத் தந்த மவ்லவி அப்பாஸ் அலி (முன்னாள் TNTJ ஆய்வாளர்) அவர்களிடம் கேள்விகள் கேட்க வேண்டும் என்று TNTJ சகோதரர்கள் கோரியதன் அடிப்படையில், முறையான ஒப்பந்தம் போடப்பட்டு கேள்வி கேட்க 3 மணி நேரம் அனுமதிப்பட்டது.

TNTJ தரப்பில் 100 பேர்களும் தமிழ் தஃவா கமிட்டி தரப்பில் 100 பேர்களும் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.

மிகவும் எதிர்பார்ப்புடனும் இஸ்லாம்கல்வி.காம் தளத்தில் நேரடி ஒளிபரப்புடனும் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சியில் TNTJ சகோதரர்களால் 20 கேள்விகள் கேட்கப்பட்டது. அனைத்திற்கும் தெளிவாகவும் நிதானமாகவும் அப்பாஸ் அலி அவர்கள் குர்ஆன் ஹதீஸை மேற்கோள் காட்டி பதில் அளித்தார். அவர் கொடுத்த விளக்கத்தை TNTJ சகோதரர்கள் உட்பட அனைவர்களும் கூர்ந்து கேட்டனர்.

TNTJ வின் சூனியம் நிலைப்பாடு, முஃமின்களை முஷ்ரிக் என்ற ஃபத்வா, ஸாலிம்(ரலி) அவர்கள் பால் குடி ஹதீஸ், TNTJ வின் ஹதீஸ் நிராகரிப்பு கொள்கை போன்ற நவீன குழப்பங்களுக்கு தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டது.

TNTJ தரப்பில் எந்தவித சலசலப்பும் இல்லாமல் முழு அமைதியாக நிகழ்ச்சிக்கு ஒத்துழைத்தது இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது. இதை முன் மாதிரியாக எடுத்துக்கொண்டு தமிழகத்திலும் அப்பாஸ் அலி அவர்களை அவர்களை வைத்து, இது போன்ற கேள்வி-பதில் நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துவார்களாயின் இந்த கொள்கை குழப்பங்கள் சம்பந்தமாக TNTJ சகோதரர்களுக்கு தெளிவுகள் நிச்சயம் கிடைக்கும். இதற்கு சகோதரர்கள் முன்வருவார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

குறிப்பு : கடந்த 20 ஆண்டுளாக ஜித்தா மாநகரில் பல்வேறு கோணங்களில் தஃவாபணிகளை செய்து வரும் ஜித்தா தமிழ் தஃவா கமிட்டியின் தஃவா வரலாற்றில் இந்நிகழ்ச்சி ஒரு மைல் கல்லாக அமைந்தது என்றால் மிகையில்லை.

அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.

நன்றி: காரைக்கால் அப்துல் மஜீத்
————————————————————————————

5 comments

  1. “الحمد للاه புகழ் அனைத்தும் அல்லாஹ் விற்கே”, மிகவும் சிறந்த பணி இதற்காக உழைத்த நல்ல உள்ளங்களை பாராட்டி வாழ்த்துகிறேன்,,,,
    جزاكالله خيرا كثيرا very nice speech and very nice editing ma shaa Allah

  2. T n t j makkalukku ethan mulam purithal erppadattum in shaa Allah

  3. இந்த நிகழ்ச்சி மிக நல்லமுறையில் நடந்து இருக்கின்றது. TNTJ சகோதர் மூனிப் அவர்களின் ஒத்துழைப்பை பாரட்டுகின்றேன். மிகவும் நல்ல முறையில் ஒத்துழைப்பு செய்து இருக்கின்றார், இவர் TNTJ யின் நிர்வாக குழு மற்றும் மேல் மட்ட குழுக்கு தேற்வு செய்ய பட வேண்டும். இவரிடம் இருந்து TNTJ நிர்வாகமே பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். ஏன் என்றால் TNTJ யின் நடக்க கூடிய ஒப்பந்த அது தொடர்பான பிரச்சனைகளை பார்த்தால், … அந்த வரலாற்று கறையை முனீஃப் அவர்கள் மாற்ற முயர்ச்சி செய்து இருக்கின்றார்கள் என்றால் அது மிகையல்ல. . .

  4. இன்னும் அதிகமாக Tntj க்கு எதிரான விளக்கங்கள் இந்த தமிழ் பேசும் உம்மத்திற்கு தேவை படும்

    .

  5. Masha Allah

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *