Featured Posts
Home » வரலாறு » நபித்தோழர்கள் » யஸீத் பின் முஆவியா (ரழி) பற்றிய விமர்சனப் பார்வை

யஸீத் பின் முஆவியா (ரழி) பற்றிய விமர்சனப் பார்வை

– எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனீ M.A. (Cey)

நபித்தோழர் முஆவியா (ரழி) அவர்களின் மகன் யஸீத் (ரஹ்) பற்றிய விமர்சனப் பார்வை:

சிறிய பாவங்களை அல்லாஹ் மன்னிப்பான் என்பதில் முஃதஸிலாக்களும் சுன்னாவினருக்கு உடன்படுகின்றனர். பெரிய பாவங்கள் செய்தோரை அஹ்லுஸ்ஸுன்னாக்கள் குறிப்பிட்டு நரகவாசிகள் எனக் கூறமாட்டார்கள். மாற்றமாக அவர்கள் அதையும் தாண்டி அல்லாஹ் மன்னிப்பான் என்பார்கள். ஏனெனில் அல்லாஹ் நிச்சயமாக இணைவைப்பவர்களுக்கு மன்னிப்பதில்லை என்றும், தான் நாடினால் பிறதை (பாவங்களை) மன்னிப்பதாகவும் குறிப்பிட்டு இணைவக்காதவர்கள் மீது அல்லாஹ்வின் நாட்டத்தை வரையறை செய்து குறிப்பிடுவார்கள் எனக் குறிப்பிடும் அறிஞர் இப்னு தைமிய்யா அவர்களின் கருத்தை, நவீன காலத்தில் தவ்ஹீத் பெயர்தாங்கிகள் சிந்திக்க வேண்டியவையாகும்.

மேலும் படிக்க: Click Read
பதிவிறக்கம் செய்ய: Click Download

2 comments

  1. அபூ சுமையா

    “கடல் மார்க்கமாக முதலில் போர் செய்யும் வீரர்கள் சுவனம் கட்டாயமாக்கப்பட்டவர்கள்” என்ற ஹதீஸை யசீத் பின் முஆவியாவுக்கு வலிந்து பொருத்துவது போல் தெரிகிறதே?

    ஹுஸைன்(ரலி)யைக் கொன்றதை வரவேற்கவும் இல்லை; எதிர்க்கவும் இல்லை!

    மதீனா முஸ்லிம்கள்மீது போர் தொடுத்து பல அன்ஸாரி தோழர்களையும் சேர்த்து கொன்றொழித்தது; அப்போரில் வன்புணர்வுகள் வரை நடந்தது….

    இத்தகைய நபரை எந்த அடிப்படையில் (ரலி) என எழுதுகிறீர்கள்? நடுநிலையான வரலாற்றுப் பதிவாக நினைத்து இப்புத்தகத்தைத் தொடர்ந்து முடியவில்லை. எதிர் தரப்பினரின் வாதங்களையும் அவர்கள் வைக்கும் ஆதாரங்களோடு சேர்த்து பதிய வைத்திருக்க வேண்டும்!

    மார்க்கத்தை அவரவர் விருப்பத்துக்கு வளைக்கின்றனர். இதில் மாட்டிக்கொண்டு விழிப்பது எங்களைப் போன்ற பாமரர்கள்தாம்.

    யா அல்லாஹ், எங்களை நேரான வழியில் நடத்துவாயாக. யார் மீது கொண்ட வெறுப்பும் அன்பும் எங்களை நீதியிலிருந்து வழிதவற செய்துவிடவேண்டாம்.

  2. சில நேரங்களில் உண்மை கசக்கும் அதை சரியான கண் கொண்டு பார்க்கும் போது இனிக்கும், அருமையான கட்டுரை! வாழ்த்துகிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *