Featured Posts
Home » பொதுவானவை » வாழைப்பழம்

வாழைப்பழம்

அல்லாஹ்வின் அற்புதப் படைப்புகள் யாவுமே மனிதர்களுக்கு மிகப் பயனுள்ளது. அதில் நாவிற்கு இனிமையும், உடலுக்கு வலிமையும், முகத்திற்கு அழகையும் தரக்கூடிய புரதச் சத்துக்கள் நிறைந்த கனிவர்க்கங்கள் மனித இனத்திற்கு இறைவனால் அருளப்பட்ட வரப்பிரசாதமே.

நம்மில் பலர் விலையுயர்ந்த கனிவர்க்கங்களைப் பார்க்கும் விதத்தில், விலைகுறைந்த கனிவர்க்கங்களைப் பார்ப்பதில்லை. ஆனால் விலை குறைந்த பழவகைகளிலும் எல்லா சத்துக்களும் நிறைந்து கிடைக்கின்றன. அவ்வகையில் இந்த உலகத்தில் எல்லா பாகங்களிலும், எல்லா நேரங்களிலும் கிடைக்கும் ஒரே கனிவகை வாழைப்பழம் மட்டும்தான். வாழைப்பழம்தானே! என்று எண்ணிவிடாதீர்கள். அவற்றை சற்று அன்போடு, ஆர்வத்தோடு பாருங்கள். அதன் வடிவமைப்பு எவ்வளவு அழகாக இருக்கிறது. வாழைப்பழங்கள் பல நூறு வகைகள் இருந்தாலும் சாதாரணமாக கிடைக்கும் வாழைப்பழத்தின் நன்மையைப் பற்றி சற்று தெரிந்துக் கொள்வோம். இந்த கட்டுரையை படித்த பின்பு வாழைப்பழத்தை நீங்கள் பார்க்கும் விதம் முழுவதுமாக மாறியிருக்கும். இதற்கு பின்பு வாழைப்பழத்தை வாங்கி அதை நாளைக்குச் சாப்பிடலாம் என்று உங்கள் வீட்டு குளிர்சாதனப் பெட்டியில் சிறை வைக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன். வாழைப்பழம் மனிதனின் மூளைக்கு தேவையான எல்லாப் புரதச் சத்துக்களையும் கொண்டுள்ளது.

வாழைப்பழம் மூன்று இயற்கையான இனிப்பு வகைகளைக் (Natural Sugar) கொண்டுள்ளது. அதாவது சக்ரோஸ் (Sucrose), பிரக்டோஸ் (Fructose) மற்றும் குளுகோஸ் (Glucose) உடன் சேர்ந்து நம் குடலுக்குத் தேவையான ஃபைபரையும் (Fiber) கொண்டுள்ளது. இரண்டு வாழைப்பழம் சாப்பிட்ட 11/2 மணி நேரத்தில் உடலுக்குத் தேவையான, உடனடியான, உறுதியான, கணிசமான, ஊக்கமுள்ள ஊட்டச்சத்தை கொடுப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

வாழைப்பழம் ஒரு மனிதனுக்கு கிடைக்ககூடிய ஊட்டச்சத்து மட்டுமல்ல பல நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய நோய்தடுப்பு நாசினியும் கூட. இதை நாம் உடலில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மூளை வலிமை (Brain Power):

மிடில் செக்ஸ் (Middle Sex)ல் உள்ள டிவிக்கென்ஹாம் (Twickenham) கல்வி நிலையத்தில் இவ்வருடம் 200 மாணவர்களுக்கு காலை, இடைவெளி மற்றும் மதிய உணவில் வாழைப்பழத்தை உணவுடன் சேர்த்து கொடுத்து சோதனை செய்து பார்த்தபோது அவர்களது மூளைத்திறன் அதிகரித்ததோடு, பொட்டாசியம் நிறைந்த இந்த உணவு அதிகமான கல்வித்திறனை அளிப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

மலச்சிக்கல் (Constipation):

ஒரு மனிதனுக்கு மலச்சிக்கல் வந்துவிட்டால் அவனது மனித குணமே மாறிவிடும். அதற்கு ஒரே வழி உங்கள் உணவில் தினமும் வாழைப்பழத்தைச் சேர்த்து சாப்பிடுங்கள். வாழைப்பழத்தில் அதிகமான பைபர் (Fiber) இருப்பதால் உங்கள் குடலை சுத்தமாக்கி மலம் இலகுவாக வெளியாவதற்கு வழிசெய்வதோடு மனத்தளர்ச்சியை சுத்தமாக போக்கிவிடுகிறது.

மந்தம் (Hangovers):

நம்மில் சிலர் சிறிது தூங்கிவிட்டு எழும்பிவிட்டால் கூட மந்தமாக இருப்பதாக அலுத்துக் கொள்வார்கள். உங்களுக்கு இதோ வாழைப்பழ மருந்து தயாராகவுள்ளது. வாழைப்பழத்துடன் தேனையும், பாலையும் சேர்த்து ஒரு குவளை மில்க் ஷேக் (Milk Shake) தயார் செய்து குடிக்கவும். வாழைப்பழம் தேனுடன் சேர்த்து வயிற்றை அமைதிப்படுத்தி இரத்தத்திலுள்ள இனிப்புச் சத்தை அதிகமாக்குகிறது. அத்துடன் இதில் பாலும் சேர்ப்பதால் பால், நீர் சத்தை சரியாக வைத்துக்கொள்கிறது. இந்த மூன்றும் சேர்ந்து மந்த நிலைக்கு டாட்டா காட்டிவிடுகிறது.

நெஞ்செரிப்பு (Heart Burn):

உங்களுக்கு நெஞ்செரிகிறதா? வாழைப்பழத்திற்கு இயற்கையாக அமில எதிர்ப்பு சக்தி இருப்பதால் வாழைப்பழத்தை தொடர்ந்து தினமும் சாப்பிட்டு வர நெஞ்செரிப்பு நோய் இன்ஷா அல்லாஹ் உங்களை விட்டு பறந்துவிடும்.

உடற்பருமன் (Over Weight):

ஆஸ்திரியா (Austria)வில் உள்ள மனோதத்துவ நிறுவனத்திலுள்ள (Institute of Psychology) ஆராய்ச்சியாளர்கள் 5000 நோயாளிகளை சோதனை செய்து பார்த்ததில் அதிகமான உயர்ந்த மனஅழுத்த வேலைகளில் உள்ளவர்கள் தான் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள். இந்த அழுத்தத்தின் காரணத்தால் அவர்களது இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவு சீராக இல்லாத காரணத்தால் உடற்பருமன் ஏற்படுகிறது. அவர்களுக்கும் வாழைப்பழத்தை தினமும் உணவில் சேர்த்து அவர்களது இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவை ஒரு ஸ்திரத்தன்மைக்கு கொண்டு வந்து உடற்பருமன் குறைவதாக அந்த ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

குடற்புண் (Ulcers):

வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டால் குடலின் உட்பகுதி மென்மையாகி அதிகமான அமிலத்தன்மை ஏற்படுத்தாததினால் குடற்புண்ணை அழிப்பதுடன் குடற்புண் வராமல் காக்கிறது.

சீரான வெப்பநிலை (Temperature Control):

வாழைப்பழத்திற்கு குளிர்ந்த பழம் (Cooling Fruit) என்ற பெயரும் உண்டு. தாய்லாந்து நாட்டு மக்கள் அதிகமாக வாழைப்பழத்தை சாப்பிடுவதால் அவர்களது உடலின் தட்பவெப்ப நிலை சீராக உள்ளது.

காலநிலை மாற்றம் (Seasonal Affective Disorder):

வாழைப்பழம் சாப்பிடுவதால் காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய ஒரு வித மந்த நிலையை இல்லாமல் ஆக்குகிறது.

புகைப்பிடிப்பது (Smoking):

புகைப்பிடிப்பவர்கள் அந்த கொடுமையிலிருந்து விடிவு பெற வாழைப்பழத்தை சாப்பிடலாம். வாழைப்பழத்தில் B6. B12 அதிகமாக இருப்பதால் புகைப்பிடிப்பதால் ஏற்படும் Nicotine ஐ கொஞ்சம் கொஞ்சமாக குறைப்பதால் புகைப்பிடிப்பதிலிருந்து விடுபடலாம்.

மன அழுத்தம் (Stress):

வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் அவை இதயத்துடிப்பை கட்டுக் கோப்புக்குள் வைத்துக் கொள்வதுடன் ஆக்ஸிஜைனை மூளைக்குச் செலுத்தி உடலின் தண்ணீரின் அளவை சமப்படுத்துகிறது. இதனால் மன அழுத்த நோய் நீங்கும்.

காலைத் தூக்கம் (Morning Sickness):

மூன்று நேர உணவு இடைவேளைக்குள்ளும் வாழைப்பழத்தை சாப்பிட்டால் உடம்பிலுள்ள இரத்தத்தில் உள்ள குளுகோஸ் (Blood Sugar) அளவு அதிகமாக்கப்பட்டு காலைத் தூக்க நோயிலிருந்து விடுபடலாம்.

நரம்பு நாளங்கள் (Nerve System):

இதில் B விட்டமீன்கள் அதிகமாக இருப்பதால் நரம்பு நாளங்கள் நன்றாக செயல்பட்டு நரம்புத் தளர்வை போக்குகிறது.

அழுத்தக் குறைவு (Depression):

‘Mind’ என்ற நிறுவனம் நடத்திய ஆராய்ச்சியின் முடிவாக ஒவ்வொரு உணவிற்குப் பின்பும் வாழைப்பழம் சாப்பிட்டால் அழுத்தக் குறைவு நோயை விரட்டலாம் என்று கூறுகிறது. ஏனெனில் மூளையிலிருந்து கசியக் கூடிய நீரை திட்டப்படி வெளியேற்றி மனிதனை மகிழ்ச்சியாக்குகிறது.

இரத்த சோகை (Anemia):

வாழைப்பழத்தில் அதிக அளவு இரும்புச் சத்து இருப்பதால் அதிக அளவு சிவப்பணுக்களை உண்டு பண்ணி இரத்தச் சோகை வராமல் தடுக்கிறது.

இரத்த அழுத்தம் (Blood Pressure):

குறைந்த அளவு உப்பும் அதிக அளவு பொட்டாசியமும் இருப்பதால் அதிக இரத்த அழுத்தத்தையும், வாதநோயையும் குறைக்க முடிமென்று அமெரிக்க அரசு உணவு நிறுவனம் கூறுவதோடு அதிக வாழை மரங்களை சாகுபடி செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

The new England Journal of Medicines ஆராய்ச்சிப்படி நமது தினசரி உணவில் வாழைப்பழத்தையும் சேர்த்துக் கொண்டால் Stroke கினால் ஏற்படக்கூடிய மரணத்தின் விகிதத்தை 40% குறைக்கலாம் என்கிறது. இவ்வளவு நன்மைகளை சுமந்து நிற்கும் வாழைப்பழத்தை பாதுகாக்கும். அந்த மஞ்சள் நிறத்தைக் கொண்டதால் தன்னால் இயன்ற உதவியை மனிதனுக்கு செய்ய மறக்கவில்லை. ”மறு” என்று சொல்லக்கூடிய கருப்பு வடு உடம்பில் ஏற்பட்டால் வாழைப்பழத் தோலை சிறு துண்டாக வெட்டி உள் தோல் அந்த வடுவின் மேலும் மஞ்சள் தோல் வெளியில் தெரியும் படி வைத்து அதன் மீது சிறிது மருத்துவ டேப் ஒட்டி வைத்தால் நாள்பட அந்த மறு மறைந்துவிடும்.

கொசுக்கடிக்கு மருந்து தேவையா?

வாழைப்பழத்தோலின் உட்பகுதியை கொசுக் கடித்த இடத்தில் வைத்து அழுத்தி தேய்த்தால் கொசுக் கடியால் ஏற்பட்ட வேதனையும் தீரும். வீக்கமும் வற்றிவிடும்.

வாழைப்பழத்தைச் சாப்பிட்டு விட்டு அதன் தோலை குப்பைத் தொட்டியில் எறிவதற்கு முன் அதன் உள்தோலைக் கொண்டு உங்கள் காலணி (Shoe) யை பாலிஷ் செய்து வெள்ளைத் துணியால் துடைத்துப் பாருங்கள். உங்கள் Shoe மினு மினுக்கும்.

எல்லா விட்டமின்களையும் ஒரு பழத்தின் மூலம் தந்து நமது உடல் நலம் பேண வழி வகுத்த வல்லமை படைத்த நம் இறைவனுக்கே எல்லாப் புகழும்.

வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு அதன் தோலை தெருவிலே எறிந்து விடுவதால் அத்தோலின் மெல் கால் வைத்து வழுக்கி மரணம் வரை சென்றவர்கள் உண்டு. அவ்வாறு தூக்கி எறிவதை நாமும் தவிர்த்து மற்றவர்களையும் தடுக்க வேண்டும். வாழைப் பழத் தோலை மனிதர்கள் நடக்குமிடத்தில் கண்டால் அதை எடுத்து குப்பை தொட்டியில் போட்டு அதன் மூலம் நன்மையை தேடிக் கொள்ள முன் வரவேண்டும்.

தமிழாக்கம்: அபுல் அமான்

நன்றி: சுவனப்பாதை மாதஇதழ்

22 comments

  1. மிகவும் பிரயோசனமான தகவல். ஆனால் ஏன் சோம்பேரித்தனத்துடன் வாழைப்பழத்தை ஒப்பீடு செய்து சொல்கிறார்கள் என்று தெரியவில்லை (சரியான வாழைப்பழச் சோம்பேரி).

  2. மேலும் வாழைப்பழத்தில் பலவகை உண்டு எல்லாவகையான பழத்திற்கும் இக்கட்டுரையில் குறிப்பிட்ட பலன்கள் உண்டா? என்பதை பற்றிய தகவல் இருந்து இருந்தால் முழுமையான தகவலாக அமைந்து இருக்கும்.

  3. A very good article by Abul Aman…I enjoyed reading. Best regards….Zainudeen

  4. kadayanallur nayagan

    Assalammu Allaikkum,
    A very good information for the banana.Thanks Abul Aman…You continue….Best Wishes….

  5. Each and every creation of Allah is reflecting Allah’s Power and Grace.

    May Allah make us to obtain the goods of his creations!

  6. Jazakallahu Khair, it is very interesting article. Yes, as brother Arafath says, Allah swt has not created anything without a purpose.

  7. மிக மிக நல்ல தகவல்
    வாழைப்பழத்தை வைத்து சுவையான உண்வு வகைகளை செய்ய இங்கே கிளிக் செய்யுங்க
    http://www.tamilkudumbam.com/index.php?option=com_content&task=view&id=1001&Itemid=91
    பாருங்க ரசிங்க நீங்களும் அசத்துங்க

  8. Assalammu Allaikum

    A very good information for the banana.Thanks

  9. assalamu alaikkum bro abul aman.

    jezakallahu haira for sharing your knowledge with others. keep doing. bring us very usefull stuffs.

    i think bro sathak ( above named ) didnt understand this article.bro u should read this article carefully n u got the answer for ur doubt.

    wassalam.

  10. Assalamu alaikum,

    subhanallah……. subhanallah………..subhanallah
    Allah udaiya maaberum karunai. oru vaalaipalthil…. subhanallah…

    wassalam.

  11. ASSALAMU ALAIKKUM VARAHMATHULLAHI VABARAKATHUHU..

    ITS REALLY A VERY USEFUL MES BRO..

    INSHA ALLAH MAY ALLAH REWARD U FOR EXPOSING UR KNOWLEDGE & MAKING AN AWARENESS..

    CONTINUE DOIN THIS WORK..(INSHA ALLAH)

    JAZHAKALLAH..

  12. The info on using banana skin for mosquito bite treatment and shoe polish is news to me. :)- I liked that better than other medical treatments.

  13. ASSALAMU ALAIKKUM,

    USEFUL ARTICAL,JAZHAKALLAHU HAIR.

  14. SULTAN ABDUL KADER

    Assalammu Allaikum

    A very good information for the banana.Thanks

  15. MSM SULTAN NAGORE

    Assalammu Alaikum

    It is the best message of banana.
    Thank You

    Msm Sultan Maraicar
    Nagore

  16. ASSALAMU ALAIKKUM WARAHMATHULLAHI WABARAKATHUHU.
    THANX 4 UPLOAD THIS..THESE INFORMATIONS R VERY USEFULL TO US.& THESE R NEW TO ME..1ST TIME I HEARD THIS….JAZAKALLAHU HAIRAN…….

  17. மகிழ்ச்சியைப் பரப்ப ஒரு மலிவான வழி THANKS
    god bless ur deam

  18. Pudur Nazeer (cable)

    அல்லாஹ்வின் அற்புதப் படைப்புகள் யாவுமே மனிதர்களுக்கு மிகப் பயனுள்ளது Thanks.

    God belss Your Deam

  19. assalamualaikum,

    its amazing. a very good article. thanks for sharing.

    allah is great.

  20. Asslamu Alaikum Brother

    What a surprise SUBHANALLAH!!! Allah has given so much of energy in BANANA. It’s really wonderful information and Insha Allah I’m going to eat it everyday of my life time. Whoever give this information Allah will give them sound health forever, Alhamdulillah.

  21. மேலும் வாழைப்பழத்தில் பலவகை உண்டு எல்லாவகையான பழத்திற்கும் இக்கட்டுரையில் குறிப்பிட்ட பலன்கள் உண்டு என்பதை பற்றிய தகவல் இங்கே கிளிக் செய்யுங்க.
    http://ajmal-mahdee.blogspot.com/2010/06/blog-post_3026.html

  22. Ma Shaa Allah

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *