Featured Posts
Home » வரலாறு » ஷிஆக்கள் » ஷீஆக்களும் ஹஜ் வன்முறைகளும்

ஷீஆக்களும் ஹஜ் வன்முறைகளும்

வரலாற்று நெடுகிலும் வழிகெட்ட ஷீஆக்கள் ஹஜ் காலத்தில் ஹரத்தின் புனிதத்தைக் கெடுக்கும் விததிலும் முஸ்லிம்கள் மீதான தங்கள் காழ்புணர்வைக் கக்கும் விதத்திலும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டிருப்பதை எம்மால் காண முடியும்.

இது தொடர்பில் றமழான் அல் கானிம் அவர்கள் அல்-புர்ஹான் இணைய தளத்திற்கு எழுதிய சிறப்புக் கட்டுரையின் சுருக்கம்

1.ஹிஜ்ரி 294ம் ஆண்டு போது காறாமிதஃ எனும் ஷீஆக்கள் ஹஜ்ஜாஜிகள் திரும்பிச் செல்லும் போது அவர்கள் மீது தாக்கதுல் நடாத்தினர். காயமடைந்தவர்களுக்கு ஷீஆப் பெண்கள் தண்ணீர் கொடுப்பது போல் நடித்து உயிருடன் எஞ்சியிருந்தவர்களையும் கொன்றொழித்தனர். இவ்வன்முறையில் சுமார் 20 ஆயிரம் ஹாஜிகள் கொல்லப்பட்டனர்.

2.ஹிஜ்ரி 317ம் ஆண்டு கறாமிதஃ எனும் கேடுகெட்ட ஷீஆக்கள் புனித நாளில் ஹஜ்ஜாஜிகள் மீது தாக்குதல் நடாத்தினர். அபூதாஹிர் எஉம் ஷீஆக்காரனின் தலைமையில் நடந்த இத்தாக்குதலில் பல ஹாஜிகளிடம் கொள்ளையடித்தனர் எக்கச் சக்கமான ஹாஜிகளை கொன்று குவித்தனர்.

ஹாஜிகள் இக்கொடூரத்தில் இருந்து தப்பிக்க கஃபாவின் திரைச் சீலையில் தொங்கிய போதும் அவர்களை இக்கொடூரர்கள் விட்டு வைக்காமல் கொன்றொழித்தனர். கொல்ல‌ப்பட்டவர்களின் ஜனாஸாக்களை ஸம் ஸம் கிணற்றில் வீசி எறிந்தனர். ஹஜருல் அஸ்வத் கல்லை பெயர்த்தெடுத்து அவர்கள் ஊருக்கு எடுத்துச் சென்றனர். இதை இமாம் இப்னு கதீர் அவர்கள் விளக்கியுள்ளார்கள்.

3.வழிகேடன் குமைனி ஆட்சிக்கு வந்த பிறகும் கூட இந்த ஷீஆக்களின் இழி செயல்கள் மாற்றம் பெறவில்லை. ஹிஜ்ரி 1406ம் ஆண்டு சஊதி சுங்க திணைக்கள அதிகாரிகளால் தெஹ்ரானில்(ஈரானிலிருந்து) இருந்து வந்த ஹாஜிகளிடம் இருந்து அதி சக்தி வாய்ந்த வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டன. விசாரனையின் போது கஃபாவை தகர்ப்பதற்காக இந்த வெடிபொருட்களை அவர்கள் கொண்டு வந்ததாக நிரூபணம் ஆகியது.

4. ஹிஜ்ரி 1407ம் ஆண்டு ஸ ஊதி ஷீஆ ஹிஸ்புல்லாஹ் அணியைச் சேர்ந்தவர்கள் ஈரானிய ராணுவத்திலிருந்து ஹஜ்ஜுக்கு வந்த வழிகேடர்களுடன் இணைந்து ஹஜ் கிரியையின் போது ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏற்பட்ட வன்முறையில் 402 ஹாஜிகளும் 85 ஸ ஊதிய பாதுகாப்புப் படையினரும் கொல்லப்பட்டனர்.

5. ஹிஜ்ரி 1409ம் ஆண்டு குவைத்துக்கான ஈரானிய தூதுவராகக் கடமையாற்றிய முஹம்மத் குலூம் என்பவன் குவைத் நாட்டில் இருந்து ஹஜ்ஜுக்கு வந்த ஷீஆக்காரர்களுக்கு வெடி பொருட்களை வழங்கினான். இவர்கள் அதை பயன்படுத்தி ஹரத்தில் அருகில் குண்டு வெடிப்புகளை மேற்கொண்டார்கள்.

6.ஹிஜ்ரி 1410 ஆண்டு ச ஊதி ஷீஆ ஹிஸ்புல்லா அணியினரும் குவைத் ஷீஆ ஹிஸ்புல்லாஹ் வழிகேடர்களும் சேர்ந்து ஹாஜிகள் “முஐஸம்” சுரங்கப்பாதை வழியாக செல்லும் போது விஷ வாயுவைப் பிரயோகித்தனர். இதனால் சுமார் 5000 ஹாஜிகள் வபாத் ஆனார்கள்.

நன்றி: அல்புர்ஹான் இணையதளம்.
கட்டுரை ஆசிரியர்: றமழான் அல் கானிம்

2 comments

  1. பிறகு ஏன் அவர்கள் நுழைய அனுமதி???

  2. Assalamu alaikum
    சகோதரே என் உறவினர் ஷியா கொள்கை
    சரி என கண்டு அதை மிகவும் பிரசரம் செய்கிறார் ஷியா பற்றி அறிந்து கொள்ள சில தமிழில்புத்தம் தேவை எப்படி பெறமுடியும்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *