Featured Posts
Home » பொதுவானவை » தலையங்கம் » சிறுவர் துஷ்பிரயோகத்திற்கெதிராக மரணத் தண்டனை அமுலுக்கு வருமா?

சிறுவர் துஷ்பிரயோகத்திற்கெதிராக மரணத் தண்டனை அமுலுக்கு வருமா?

-இம்தியாஸ் யூசுப் ஸலபி-
தற்போது எமது இலங்கை நாட்டடில் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரித்து செல்வதால் அதனை தடுப்பதற்கு போதுமான தண்டனையில்லாமையினால் மரணத் தண்டனையைக் கொண்டுவர வேண் டும் என பெரும்பாலான மக்கள் கோரி வருகிறார்கள்.

அண்மையில் சேயா எனும் ஐந்து வயது சிறுமி இரவில் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவளது படுக்கை அறையிலிருந்து கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பின் கொலை செய்யப்பட்டாள். இரண்டு நாட்களுக்குப் பின் அவளது சடலம் ஒரு ஓடையிலிருந்து கண்டெக்கப்பட்டது. மனிதாபிமானமற்ற இந்த ஈனச் செயலை செய்தவனை கல்லடித்து கொல்ல வேண்டும் என்று நாடு பூராவும் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகிறாரகள்.

இதற்கு முன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவியும் கடத்திச் செல்லப்பட்டு கொடூரமாக துஷ்பிரயோகம் செய்த பின் கொலை செய்யப்பட்டாள். இது போன்ற துஷ்பிர யோகங்கள் நாடடில் அதிகரித்து வரும் நிகழ்வை காண முடிகிறது.

2011ம் ஆண்டு 4036 சிறுவர்களும் 2012ம் ஆண்டு 6027 சிறுவர்களும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்கள் ஒருவருடத்திற்கு இரண்டாயிரம் பேர் வீதம் துஷ்பிரயோகம் அதிகரித்துள்ளது என அறிக்கை குறிப்பிடுகின்றது.

இன்னுமொரு அறிக்கையின் படி கடந்த நான்கு வருடங்களில் 32353 சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத் திற்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். அதாவது ஒரு வருடத்திற்கு 8000 சிறு வர்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள் ளார்கள். இந்த சிறுவர் துஷ்பிரயோகம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்ற னவே தவிர குறைந்த தாகத் தெரிய வில்லை. இதே வேகத்தில் தான் பெண்கள் துஷ்பிரயோகமும் நடந்து வருகின்றது.

சிறுவர் பெண்களுக்கு எந்த பாது காப்பும் இன்றி கயவர்களால் மானம் மரியாதை கொளவரம் மற்றும் உயிர் பறிக்கப்படுவதால் நடைமுறையிலிருக் கும் தண்டனை போதுமானதாக இல்லை எனவே மரணதன்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்ற மக்களின் ஆதங்கம் ஆட்சியாளர்களை அதிர வைத்துள்ளது.

மரணத்தண்டனையை நிறை வேற்ற தான் தயாராக இருப்பதாகவும் பாராளுமன்றம் அங்கீகரிக்குமானால் உடனே அமுல் படுத்துவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்துள்ளார்.

சந்திரக்கா அம்மையாரின் ஆட்சி யன் போது தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கு இந்துனேஷியா விலிருந்து கையிறும் கொண்டு வரப்பட்டு சிறை வளாகமும் தயார் படுத்தப்பட்டது.ஆனால் சந்திரிக்கா அம்மையார் தூக்குத் தண்டனைக்கு ஒப்புதல் வழங்க தன்னால் முடியாது என க் கூறியதாக முன்னைய நாள் நீதீ அமைச்சர் ஜோன் செனவிரத்ன அவர்கள் குறிப்பிட்டார். அதுபோல் சில பாராளுமன்ற உறுப்பினர்களும் சட்டத் துறையை சார்ந்தவர்களும் மரணத் தண்டைக்கு எதிராக உள்ளனர். எந்த மனிதனுடைய உயிரையும் பறிக்க முடி யாது சட்டத்தினை மேலும் கடுமையாக்க வேண்டும் எனக் கோருகின்றார்கள்.

18 வயதுக்குக் கீழ்படும் பெண்ணை துஷ்பிரயோகம் செய்பவனுக்கு 7 வரு டத்திற்கு குறைவில்லாததும் 20 வரு டத்திற்கு அதிகமில்லாததுமான கடூழிய சிறை தண்டனை வழங்கப்படுவதுடன் 20 ஆயிரத்திற்கு அதிகமில்லாத அபராதமும் விதிக்கப்படும். 16 வயதுக்கு கீழ்பட்ட பிள்ளை துஷ்பிரயோகம் செய்பவனுக்கு 10 வருடத்திற்கு குறைவில்லாமலும் 20 வரு டத்திற்கு அதிக மில்லாததுமான கடூழிய சிறை தண்டனை வழங்கப்படும் என்பதே தற்போது நாட்டிலுள்ள சட்ட மாகும்.

நாட்டின் இச்சட்டதினால் குற்ற மிழைக்கின்றவன் சிறை வாழ்க்கையில் பாதுகாப்பாக இருப்பான் மூன்று நேரத்திற்குரிய சாப்பாடும் மருத்துவ வசதியும் அதனுடன் அவனுக்குரிய அனைத்து வசதிகளும் (குறைவாக இருந்தர்லும்) அனுபவித்து விட்டு வெளியில் வருவான். இங்கே பிள்ளையை பறி கொடுத்தவன் கற்பை பழிகொடுத்தவள் வாழ்க்கைக்கு எந்த உத்தரவாதமுமின்றி கண்ணீருடன் இருப்பாள்.

நாட்டில் நடைப் பெறும் குற்றங்கள், பல முறைசிறைக்குச் சென்றவந்தவர் களால் நடைப் பெறுகின்றது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிக் குரிய தண்டனை போதுமானதாகவும் இல்லை குற்றவாளி குற்றத்தைவிட்டும் ஒதுங்கிக் கொள்வதற்கான அச்சமுமில்லை என்பதை இது காட்டுகின்றது. குற்றவாளிக்காக பரிந்து போசும் சட்டங்கள் அவனுடைய உரிமைக்காக குரல் கொடுக்கும் சட்டங்கள் பாதிக்கப்பட்டவனின் வாழ்வுக்காக எந்தவொன்றையும் செய்யவில்லை.

ஒருவனுடைய உயிரை பறிப்பதற்கு ஒருவருக்கும் உரிமையில்லை என்பது போல் உயிரை பறித்தவன் உயிருடன் வாழ்வதற்கும் உரிமை இல்லை என்ற இஸ்லாமிய சட்டம் மட்டுமே குற்றவாளிகளுக்கு உரிய தண்டiனாகஇருக்கும். இத் தண்டனையே பலபேருடைய உயிருக்கு உத்தரவாதமளிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *