Featured Posts
Home » வரலாறு » நபித்தோழர்கள் » ஸஹாபாக்களை குறைகாண முடியுமா? Part-03

ஸஹாபாக்களை குறைகாண முடியுமா? Part-03

-மவ்லவி யூனுஸ தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர்-
இதற்கு முன் இரண்டு இதழ்களில் பொதுவாக பிறரை குறைகாண முடியாது, இழிவாக பேச முடியாது அப்படி மீறி பேசுபவர்கள் அல்லாஹ்வுடைய தண்டனைக்குரியவர்கள் என்பதையும், மேலும் பிறரை குத்திக்காட்டி அவர்களின் குறைகளை எடுத்துக் காட்டலாம் என்பதற்காக அவர்களால் வைக்கப்படும் ஹதீஸை பிழையாக விளக்கம் கொடுத்து, தனது தவறை நியாயப்படுத்த முனைவதையும் சுட்டிக் காட்டியிருந்தோம்.

இந்த இதழில் பீஜேயால் எந்த அளவிற்கு ஸஹாபாக்கள் கொச்சைப் படுத்தப்படுகிறார்கள் என்பதை அவர் பேசிய வார்த்தைகளையே உங்களுக்கு சுட்டிக்காட்டி ஸஹாபாக்களின் சிறப்பை எடுத்துக் காட்டவுள்ளேன்.

இவர்களை பொருத்தவரை ஸஹாபாக்களின் விளக்கம் தேவை இல்லை, என்பார்கள். ஆனால் ஸஹாபாக்களின் சரிதைகளை மார்க்கமாக பேசுவார்கள். குர்ஆனுக்கு முரண் என்று ஸஹீஹான ஹதீஸையே துாக்கி எறிபவர்கள், சரித்திரங்களை எப்படி ஆதாரம் காட்டி பேச முடியம்? இவர்களுக்கு தேவைப்படாவிட்டால் ஸஹாபாக்களின் விளக்கமோ, சரித்திரங்களோ தேவையில்லை என்பார்கள். தேவைப் பட்டால் பெரிதாக துாக்கி காட்டுவார்கள்.

உதாரணத்திற்கு உம்மு ஹராம் சம்பவத்தை எடுத்துக் கொள்ளலாம். நபியவர்கள் உம்மு ஹராம் மடியில் படுத்தார்கள் என்று ஹதீஸில் இல்லாத வாசகத்தை பீஜே வேண்டும் என்று சேர்த்து சொல்லி ஸஹீஹான ஹதீஸை மறுப்பதோடு, நபியவர்கள் மீது பொய் சொல்கிறார். நபியவர்களும், உம்முஹராம் அவர்களும் பால்குடி உறவு என்று முஸ்லிம் இமாமின் விரிவுரையிலும், சரித்திரத்திலும் எடுத்துக் காட்டினால் அதை ஏற்றுக் கொள்ள முடியாதாம், அதற்கு குர்ஆன், ஹதீஸ் ஆதாரம் தேவையாம். ஆனால் இவர்கள் ஸஹாபாக்களை குத்திக் காட்டி குறையாக பேசும் சரித்திரத்திற்கு குர்ஆன் ஹதீஸ் ஆதாரம் தேவையில்லையாம். நேரத்திற்கு நேரம் இவர்கள் கொள்கையை மாற்றுவார்கள்.

அம்ருப்னு ஆஸ் (ரலி) அவர்களைப் பற்றி பீஜே பேசும் போது இவர் ஒரு கிரிமினல் என்று இழிவாக பேசுகிறார். இது ஷீஆக்களின் பின்னணியில் உருவாக்கப்பட்ட சம்பவம் என்பதை பல அறிர்களின் கூற்றுக்களை முன் வைத்தும், இது பலகீனமான சம்பவம் என்பதை தக்க ஆதாரத்துடன் எடுத்துக் காட்டியும், பீஜே இது வரை நான் இப்படி பேசியது தவறு என்று ஏற்றுக் கொள்ள முன் வரவில்லை? இது இவரின் ஆணவத்தின் வெளிப்பாடு?

மாறாக அவர்களின் சகாக்கள் கிரிமினலை கிரிமினல் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது என்று, பீஜேயைப் போல ஸஹாபியை குறையாக குத்திக்காட்டி பேசுகிறார்கள். என்றாலும் இமாம் புகாரி அவர்களின் வரலாற்று நுாலான தாரீஹ் என்ற நுாலில் குறிப்பிடப் பட்டுள்ளதே சரியானது என்பதை வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். எனவே பொய்யான தகவலை பீஜேயும், அவர்களின் சகாக்களும் நம்பி ஸஹாபியை ஏசுகிறார்கள். உறுதி செய்யப் பட்ட ஸஹீஹான ஹதீஸை மறுக்கிறார்கள். புனையப் பட்ட செய்தியை நம்புகிறார்கள் என்றால் இவர்களை என்னவென்று சொல்வது நீங்களே சிந்தியுங்கள்.

மேலும் நபியவர்கள் மரணித்த போது அன்சாரிகளும், முஹாஜிரீன்களும் பிரச்சனைப் பட்டார்கள் என்ற செய்தியை பிஜே தவறாக சித்தரித்து பேசுகிறார்.

அன்சாரிகள் பேசிக் கொண்டார்களாம் (முஹாஜிரீன்களுக்கு) போனா போகுது என்று சாப்பாட்ட கொடுத்தோம், தங்க இடத்த கோடுத்தோம் இப்ப ஆட்சியை பிடிக்க வாராங்க விடக்கூடாது என்று சொன்னார்களாம். இப்படி அன்சாரிகளை குத்திக் காட்டி குறையாக இவர் பேசுகிறார்.

அன்சாரிகள் இப்படி பேசினார்கள் என்று எந்த ஸஹீஹான நுாலில் பதிவு செய்யப் பட்டுள்ளது? எந்த குா்ஆன் வசனத்தில் அல்லது எந்த ஹதீஸில் உள்ளது? எடுத்துக் காட்ட முடியமா? மக்களை சிரிக்க வைக்க இந்த உன்னத ஸஹாபாக்களா பீஜேக்கு கிடைத்தார்கள்?

ஏன் பேசாத வார்த்தைகளை பேசியதாக பொய் சொல்லி தஃவா செய்ய வேண்டும். ஸஹீஹான ஹதீஸ்களை மட்டும் தான் நாங்கள் ஏற்றுக் கொள்வோம் என்று வீராப்பு பேசுபவர்கள், ஏன் நடக்காத விடயங்களை நடந்ததாக ஜோடித்து அன்சாரிகள் மீது பொய் சொல்கிறார்கள்? ஸஹாபாக்களை மட்டம் தட்டி தன்னை உயா்வானவா் என்று காட்ட வேண்டும் என்பதற்காக தான் பீஜே ஸஹாபாக்கள் மீது வேண்டு்ம் என்று பொய் சொல்கிறார்?

மேலும் ஸஹாபக்களில் முர்த்தத்தான ஸஹாபாக்களும் இருக்கிறார்கள். அது மறுமையில் தான் தெரிய வரும் என்று மறுமை நாளில் ஹவ்லுள் கவ்ஸருக்கு அருகிலிருந்து விரட்டப் படுபவர்கள் இந்த முர்தத்தான ஸஹாபக்கள் தான் என்று ஹதீஸை புரிந்து கொள்ள தெரியாமல் பேசுகிறார்.

இப்படி பல செய்திகளை அடுக்கிக் கொண்டே போகலாம். ஷீஆக்கள் தான் ஸஹாபாக்களை குறை காண்பார்கள். ஆனால் இந்த பீஜே ஏன் ஸஹாபாக்களை குறை காணுகிறார் என்று தெரியவில்லை?

இவா் சுட்டிக் காட்டும் இப்படியான சம்பவங்கள் குா்ஆனுக்கு முரணாக தெரியவில்லையா? அறிவுக்கு முரணாக படவில்லையா? நடைமுறைக்கு சாத்தியமாக தெரியவில்லையா? அதையும் தாண்டி பிறர் குறைகளை பேசாதீர்கள் என்ற குா்ஆனின் வசனங்களும், ஹதீஸ்களும் இந்த பீஜேயின் கண்களுக்கு படவில்லையா?

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறை நம்பிக்கையாளரைத் தவிர வேறெவரும் அன்சாரிகளை நேசிக்க மாட்டார்கள்; அவர்களை நயவஞ்சகர்களைத் தவிர வேறெவரும் வெறுக்கவும் மாட்டார்கள். யார் அவர்களை நேசிக்கிறார்களோ அவர்களை அல்லாஹ்வும் நேசிக்கிறான். யார் அவர்களை வெறுக்கறார்களோ அவர்களை அல்லாஹ்வும் வெறுக்கிறான்.
என பராஉ(ரலி) அறிவித்தார். புகாரி 3783

இவர்களைப் பொருத்த வரை இந்த விடயத்தி்ல் பிடிவாதமாக இருப்பார்கள். எனவே இறை விசுவாசிகள் இவர்களின் இப்படியான விடயங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

One comment

  1. the reasons behind PJs criticism on sahabis are so many:-
    1.) PJ cannot give his own fitnah opinions on various islamic issues. Because someone says “ibnu abbaas told this explanation and ibnu masood give that explanation. when remove the good opinion on sahabas from the minds of people then PJ’s own aqeedha has been easily planted.
    2) When PJ changed his opinions then the big crowd who blindly followed him will doubt him and deviate themselves from the path of PJ
    3) the fame and prestige so far earned by pJ will be destroyed
    4) Actually PJ did not verify so many things including hadheeths.
    5) Belief his reason and mindset i.e.,he decided that no one is more brilliant than him
    lot of reasons only ALLAH knows

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *