Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » ஸலஃபிய்யா கோட்பாடு வழிகேடா?

ஸலஃபிய்யா கோட்பாடு வழிகேடா?

அன்பிற்கினிய இஸ்லாம்கல்வி.காம் இணையதள வாசகர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அண்மைக்காலமாக ஏகத்துவம் பேச கூடிய தமிழுலகில் ‘ஸலஃப் அல்லது ஸலஃபிய்யா’ என்ற பதம் அதிகமாக பயன்படுத்துவதை காணலாம். இந்த பரப்புரை செய்பவர்கள் இருசாரார்கள்.

முதல் சாரார் குர்ஆன் ஸுன்னாவை பின்பற்ற கூடியவர்களில் ஒரு கூட்டத்தை நோக்கி இவர்கள் ஸலஃபிய்யாக்கள் அதாவது வழிகேடர்கள் என்றும் அரபு நாடுகளில் இருந்து பெறக்கூடிய ஊதியத்திற்காக பாடுபடக்கூடிய கூட்டம் என்றும் இதன் உச்சகட்டமாக வழிகேடான இயக்கங்களை அடையளப்படுத்தி வரும் வேளையில் அதாவது காதியானி, ஷீயாக்கள், சூபிய்யாக்கள் வரிசையில் ஸலஃப் அல்லது ஸலஃபிய்யாக்கள் என்று பரப்புரைப்பவர்கள்.

இரண்டாவது சாரார் நாங்கள் தான் ஒரிஜினல் அக்மார்க் ஸலஃப் (ஸலஃபிய்யாக்கள்) என்றும் மார்க்கத்தை கற்பதற்கும் போதிப்பதற்க்கும் நாங்கள்தான் தகுதியானவர்கள் என்றும். இல்ம் ஸலஃப் (ஆகிய எங்களிடமிருந்து) மூலம் தான் பெற வேணடும். ஸில்ஸிலாத் (சங்கிலிதொடர்) மூலம் மார்க்கத்தை படிக்கவும் போதிக்கவும் முடியும். இதில் ஒரு சிறிய கூட்டமொன்று தெற்காசிவில் தான் நான் ஸலப் அறிஞன் இன்னார் தான் ஸலப் அறிஞர் எனையவர்கள் ஸலஃபிய்யாக்கள் அல்ல என்று கவுன்சில் வைத்த பத்வா கொடுத்துவரக்கூடிய ஒரு மோசமான சூழலை தமிழுலகில் கண்டுவருகின்றோம்.

அதேபோல் தமிழகத்தில் ஒருவர் அவர் ஸலஃப் தானா? இவர் ஸலஃப் தானா? என்று மூத்த தவ்ஹீத் உலமாக்களை பற்றிய கேள்விகளைமட்டும் கேட்டுகொண்டிருப்பதையும் காணலாம். சமூக வலைதளங்களில் ஸலஃப் பற்றிய பல்வேறு வாதபிரதி வாதங்கள் சென்று கொண்டியிருப்பதையும் காணலாம்.

இந்த சூழலில் இதனைப்பற்றி ஒரு புரிந்துணர்வுடன் மக்கள் விளக்கம் பெற வேண்டும் என்ற ஆவலில் சவூதி அரேபியாவின் கிழக்குமாகணம், ராக்கா (தம்மாம்) இஸ்லாமிய கலாச்சார நிலைய அழைப்பாளர் ஆசிரியர் முஜாஹித் பின் ரஸீன் கடந்த 11-02-2016 அன்று தம்மாம் ICC-யின் வாராந்திர பயான் நிகழ்ச்சியில் விளக்கமளித்தார்கள் அதன் வீடியோ பதிவை இஸ்லாம்கல்வி வாசகர்கள் பயன்பெறும் நோக்கில் இங்கு பதியப்பட்டுள்ளது.

குறிப்பு: முக்கியமான சில கேள்விகளுக்கும் பதிலளிக்கப்பட்டுள்ளது அதனையும் பார்க்கவும். இதில் எதேனும் சங்தேகங்கள் இருந்தால் அதனை இங்கு கேள்வியாக பதிந்தால் ஆசியரிடமிருந்து பதிலை பெற்று பதிவிடுவோம் இன்ஷா அல்லாஹ்.

உள்ளடக்கம்:
1. ஸலஃபிய்யா கோட்பாடு என்பது வழிகேடா? அதற்கான காரணம் என்ன?

2. ஸலஃப்கள் ஸஹாபாக்களை பின்பற்ற சொல்கின்றார்களா?

3. ஸஹாபாக்களுக்கு வஹிவந்ததா – இது ஸலஃப்-களின் கூற்றா?

4. நபித்தோழர்கள் அனைவரும் தவறிழைதைத்தவர்களா? திடிரென உருவானதா ஸலஃப் கொள்கை?

5. மார்க்கத்தில் ஸலஃப் என்பதன் நிலைப்பாடு என்ன?

6. ஸலஃப் அல்லது ஸலஃபிய்யாகளை வழிகேட்ட காதியானி, ஷீஆக்கள் மற்றும் ஜமாதே-இஸ்லாமிய இயக்கங்களுடன் தொடர்புபடுத்துவது ஏன்? அதன் பின்னனி என்ன?

7. அரபு பிரதேசங்களில் ஸலஃபிய்யா என்ற பதம் எதற்காக பயன்படுத்தப்படுகிறது?

8. ஸலஃபிய்யாக்களுக்கு ஆன்மீக உத்தரவாதம் உண்டா?

9. அஹ்லுஸ் ஸுன்னா, வஹாபி, தவ்ஹீத்-வாதி என்ற தொடரில் உள்ளதா ஸலஃபிய்யா?

10. நல்லோர்களை அடையாளப்படுத்துவதற்க்கு ஸலஃபிய்யா என்பதனை பயன்படுத்தலாமா?

11. உமையாக்கள், அப்பாசிய ஆட்சியாளர்கள் காலத்தில் என்ன நடந்தது?

12. சவூதி அரசு ஸலஃபிய்யாவா?

13. இமாம் மாலிக் (ரஹ்) அவர்களின் சபையில் நடந்த பிரபல்யமான சம்பவம் என்ன? அதிலுள்ள படிப்பினை என்ன?

14. வழிகேட்டை அடையாளப்படுத்தும் போது நல்லவர்களை தனியாக அடையாளப்படுத்த வேண்டுமா?

15. ஷீயாக்கள் பிரிவை போன்றதா ஸலஃபிய்யா பிரிவும்? வரலாற்றில் ஸலஃபிய்யா என்ற பதம் யாருக்காக பயன்படுத்தப்பட்டது?

16. அல்குர்ஆனில் ஸலஃபிய்யா என்று யாரை அழைக்கின்றது?

இதுபோன்ற கேள்விகளுக்கு விடைகான இந்த வீடியோ பதிவை பார்க்கவும்…

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி

இடம்: இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC)
நாள்: 11-02-2016

தலைப்பு: ஸலஃபிய்யா கோட்பாடு வழிகேடா?

வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன்
அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்

படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Download mp3 audio | Listen mp3 audio

One comment

  1. அஸ்ஸாலாமு அலைக்கும். அழகான பதிவை வெளியிட்டிருக்கிறீர்கள் அல்ஹம்து லில்லாஹ் . உங்களது வீடியோ அனைத்திலும் எடிட்டிங் செய்பவர்கள் இமாம் அவர்களை அங்கும் இங்கும் ஆட்டி கொண்டே இருக்கிறார்கள், அதை அவர்கள் செய்யாமல் இருப்பதே நல்லது, ஏன் என்றால் ஆரம்ப ரெக்கார்டிங் உண்மையிலேயே நல்லா தான் இருக்கு. தேவை இல்லாம இது போன்று செய்வது மனதிற்கு வெறுப்பை ஈர்படுத்துது சகோதரர்களே. இனிமேல் இது போன்று செய்யாமல் பார்த்துக்கொள்ளுங்கள். தயவு செய்து என்னை மன்னிக்கவும். அஸ்ஸலாமு அலைக்கும் வரமதுல்லாஹி வபரக்காத்துஹு. நான் உமர் பாரூக். அமீரகம், ராஸ் அல் கைமா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *