Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » இஸ்லாத்தின் பார்வையில் இஜ்திஹாத்

இஸ்லாத்தின் பார்வையில் இஜ்திஹாத்

ஒருவர் இஜ்திஹாத் செய்து செய்து ஒரு முடிவு எடுக்கின்றார், அவரது முடிவு சரியாக அமைந்தால் அவருக்கு இரண்டு கூலிகள் உண்டு. அவரது முடிவு தவறாக அமைந்து விட்டால் அவருக்கு ஒரு கூலி உண்டு’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அமருப்னுல் ஆஸ் (ரழி)இ நூல்கள் : புகாரி, முஸ்லிம்)

மேற்கூறிய நபிமொழியை வைத்து இன்றைய தமிழுலக தவ்ஹீத்-வாதிகள் ஒரு சிலரைத் தவிர ஏனையோர் நான் மார்க்கத்தை ஆய்வு செய்துதான் பின்பற்றுவேன் என்றும் எனது ஆய்வு சரியாக இருக்குமேயானல் எனக்கு இரண்டு கூலி கிடைக்கும் என்ற வாதபிரதி வாதங்கள் செய்வதை காணலாம்.

இஜ்திஹாத் பற்றிய பல்வேறு வினாக்கள், சந்தேகங்கள் உள்ளன. மேலும் இஜ்திஹாத் பற்றிய தெளிவான சிந்தனை நாம் அடையவேண்டும் என்ற நோக்கில் இவ்வுரை இங்கு பதியப்படுக்கின்றது.

இலங்கையிலிருந்து வருகைத் தந்திருக்கும் கலாநிதி அஷ்ஷைக் முபாரக் மஸ்வூத் மதனீ அவர்கள் கடந்த 18-02-2016 அன்று தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுயிருந்த நிகழ்ச்சியில் ‘இஸ்லாத்தின் பார்வையில் இஜ்திஹாத்’ என்ற தலைப்பில் ஒரு தெளிவுரையை வழங்கினார்கள் இதனை கவனமாக செவிமடுத்து நாம் நமது நிலைகளை சீர்படுத்திக்கொள்வோமாக!

இந்த உரையிலிருந்து…

  • இஜ்திஹாத் என்றால் என்ன?
  • இஜ்திஹாத் செய்வதற்கு அரபி மொழியறிவு அவசியமா? அரபு மொழியறிவு இல்லாதவர்கள் என்ன செய்வது?
  • அல்-குர்ஆன் மற்றும் ஹதீஸ் நூல்களின் மொழிபெயர்ப்புகளை (தர்ஜுமாக்களை) வைத்து கொண்டு ஒருவர் இஜ்திஹாத் செய்யலாமா? அப்படி செய்வதால் எற்படக்கூடிய விளைவு என்ன?
  • ஒருவர் என்ன விஷயங்களில் இஜ்திஹாத் செய்யலாம்?
  • இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கை கொள்கை கோட்பாடு (அகீதா-)களில் ஒருவர் இஜ்திஹாத் செய்யலாமா?
  • நபித்தோழர்கள் எந்ததெந்த விடங்களில் இஜ்திஹாத் செய்தார்கள்?
  • இஜ்திஹாத் பிறை தொடர்பான விடயங்களில், சர்வேத பிறையை தமிழுலகத்திற்கு கொண்டுவந்தவர்கள் யார்?
  • உள்ளூர் பிறை மற்றும் கணக்கீடு பிறை கொண்டுவந்தவர்கள் யார்?
  • சவூதி உலமாக்களில் கணக்கீடு பிறை ஆதரிக்ககூடியவர்கள் இருக்கின்றார்களா? வேவ்வேறு தினங்களில் பெருநாள் சவூதியில் உள்ளதா?
  • நபித்தோழர்கள் குறிப்பிட்ட ஒரு ஸுன்னாவைப் புரிந்து கொள்வதற்காக முயற்சி செய்து ஒரு முடிவுக்கு வரும்போது அதே ஸுன்னாவைப் புரிந்து கொள்வதில் மாற்றுக் கருத்தைக் கொண்டோரை அவர்கள் பாவிகள் பட்டியலில் சேர்த்தார்களா? அல்லது அவர்களை வழிகேடர்கள் என்று பிரச்சாரம் செய்தார்களா?
  • தமது கருத்தை, மாற்று கருத்து உடையோரிடம் திணித்தார்களா?
  • இஜ்திஹாதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அவர்களிடையே முரண்பாடுகளையும் பிரிவினைகளையும் தோற்றுவித்ததா?
  • இன்னும் பல…

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி

இடம்: இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC)

நாள்: 18-02-2016

தலைப்பு: இஸ்லாத்தின் பார்வையில் இஜ்திஹாத்

வழங்குபவர்: கலாநிதி. அஷ்ஷைக் முபாரக் மஸ்வூத் மதனீ (அழைப்பாளர், இலங்கை)

Download mp3 audio | Listen mp3 audio

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *