Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » வழிகேட்டை அடையாளம் காணுங்கள்

வழிகேட்டை அடையாளம் காணுங்கள்

– இம்தியாஸ் யூசுப் ஸலபி –

அன்புக்குரியவர்களே! அல்லாஹ் தன்னுடைய மார்க்கத்தை நிலை நாடிட இறைத்தூதரையும் அவருக்கென்று ஒரு சமூகத்தையும்; தேர்ந்தெடுத்தான்.

அல்லாஹ் தேர்ந்தெடுத்த தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களைப் பொறுத்தவரையில் அப்பழுக்கற்றவர், நடத்தையில் தூய்மையானவர், மக்கள் அவர் நடத்தைக் குறித்து நற்சான்று வழங்கினார்கள்.

தேர்ந்ததெடுக்கப்பட்ட சமூகத்தினரைப் பொறுத்தவரையில், நடத்தையில் செயற்பாட்டில் வழி தவறில் இருந்தவர்கள். நரகத்தின் படுகுழியின் பக்கம் பயணித்தவர்கள். அல்லாஹ் அவர்களை தனது அருளின் காரணமாக நரகத்திலிந்து காப்பாற்றி நேர்வழியின் பால் நடாத்தி குர்ஆனை நடைமுறைப்படுத்தும் சமூகமாகவும் தன்னுடைய நபியின் தோழமையுள்ள சமூகமாகவும் ஆக்கினான்;. அவர்களைத் தான் ஸஹாபாக்கள் எனகூறப்படுகிறது.

நபி (ஸல்) அவர்கள் 23 வருட காலம் வஹியின் நிழலின் கீழ் அந்த ஸஹாபாக்களை வழிநடாத்தினார்கள். ஸஹாபாக்கள் நபிகளாரிடமிருந்து கேட்டு, கண்டு படித்தவை பின்பற்றியவை நடைமுறைப்படுத்தியவை மார்க்கமாக்கப்பட்டது. அவர்கள் எதனை அமல், ஈமான், அகீதா என படித்துக் கொண்டார்களோ அவை வஹியின் அடிப்படையில் போதிக்கப்பட்டவையாகும்.

நபிகளாரின் வபாத்திற்கு முன்னரே ஸஹாபாக்களின் ஈமான் மற்றும் அகீதா சரியானது – அவர்கள் கொண்டிருந்த கொள்கைகள் சரியானது – என்பதை அல்லாஹ் உறுதிப்படுத்தினான். அவர்களை முஃமின்கள் என்று அழைத்தான். அவர்களைப் பொருந்திக் கொண்டான்.

ஷஷஇந்த முஃமின்கள் நம்பிக்கை கொண்டது போல் ஈமான் கொண்டால் தான் நேர்வழி கிடைக்கும்’ என்றும் ஷஷஅவர்கள் செல்லாத வழியில் பயணிப்பவர்கள் வழி கேட்டில் செல்பவர்கள்’ என்றும் அடையாளப்படுத்தினான். மேலும் இந்த மார்க்கத்தினை எத்திவைக்கும் கூட்டமாக ஆக்கினான்.

நீங்கள் எவற்றறைக் கொண்டு நம்பிக்கை கொண்டீர்களோ அது போன்று அவர்களும் நம்பிக்கை கொண்டால் நிச்சயமாக அவர்கள் நேர்வழி பெறுவர். (அல்குர்ஆன்:- 2:137)

யார் தனக்கு நேர்வழி தெளிவான பின்னரும் இத்தூதருடன் முரண்பட்டு நம்பிக்கை கொண்டோரின் (முஃமின்கள் செல்லாத) வழி அல்லாததைப் பின்பற்றுகின்றாரோ அவர் செல்லும் வழியிலேயே அவனைச் செல்லவிட்டு அவனை நாம் நரகத்தில் நுழைவிப்போம் செல்லுமிடத்தில் அது மிகக் கெட்டதாகும்.( அல்குர்ஆன்:- 4:115)

நலவின் பால் (மக்களை) அழைத்து நன்மைய ஏவி தீமையை விட்டும் தடுக்கும் ஒரு கூட்டம் உங்களில் இருக்கட்டும் அவர்கள் தாம் வெற்றியாளர்கள். (அல்குர்ஆன்:- 3:104)

மனிதர்களுக்காகத் தோற்றுவிக்கப்பட்ட சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கீன்றீர்கள். (ஏனெனில்) நீங்கள் நன்மையை ஏவுகின்றீர்கள். தீமையை விட்டும் தடுக்கின்றீர்கள். மேலும் நீங்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கின்றீர்கள்… (அல்குர்ஆன்:- 3:110)

இந்த உத்தரவாதத்திற்குப் பின்பே அல்லாஹ் மார்க்கத்தை பொருந்திக் கொண்டு பூரணப்படுத்திவைத்தான். நபி(ஸல்) அவர்கள் தெளிவான நேர்வழியில் ஸஹாபாக்களைவிட்டு விட்டு வபாத்தானார்கள்.

இந்த அடிப்படையை முஸ்லிம் என்று சொல்லப்படக்கூடிய ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். இன்று மார்க்கத்தின் பெயரால் நிறையவே குழப்பங்களும் சர்ச்சைகளும் உருவாகியுள்ளன. நாளுக்கு நாள் இந்த குழப்பங்கள் அதிகரிக்கின்றனவே தவிர குறைந்தபாடில்லை. இப்போது மக்கள் குழம்பிப் போயுள்ளார்கள். உண்மையை சத்தியத்தை எப்படி அறிந்து கொள்வது யார் சொல்வதை ஏற்றுக் கொள்வது என்ற குழப்பத்தில் உள்ளார்கள்.

மாரக்கத்தில் குழப்பநிலை, ஸஹாபாக்களுக்குப் பின்னால் உருவானது என்பதை மனதில் கொள்ள வேண்டும். ஸஹாபாக்கள் பயின்ற அகீதா மற்றும் ஈமானிய செயற்பாடுகள் பின்னால் வந்தவர்களால் மாசுப்படுத்தப்பட்டது. அவர்கள் தங்கள் மனோ இச்சைப்படியும் தங்கள் பகுத்தறிவுக்கு தகுந்தவாறும் அகீதாவையும் ஈமானிய நம்பிக்கையும் மாற்றினார்கள். தங்கள் புத்திக்கு பட்டதை அல்லது ஆய்வில் கண்டதை மார்க்கம் என்றார்கள். அதனை ஏற்றுக் கொள்ளாதவர்களை வழிகேடர்கள் என்றார்கள். இதன் காரணமாகவே பல்வேறு குழுக்கள் உருவாகின. அதில் ஷீஆக்கள், கவாரிஜ்கள், முஃதஸிலாக்கள், முர்ஜியாக்கள், ஜஹ்மியாக்கள், ஜாரீய்யாக்கள், சூபியாக்கள் மற்றும்; காதியானிகள் என்று பலரும் அடங்குவர்.

ஒவ்வொரு வழிகேட்டின் தலைவர்களும் பேச்சுவல்லமையிலும் தர்கிக்கும் வல்லமையிலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தார்கள். இதில் முஃதஸிலாக்கள் முன்னிலை வகித்தார்கள். முஃதஸிலாக்களின் தர்க்கத்தின் விளைவாக அன்றிருந்த மஃமூன் என்பவரின் ஆட்சியே முஃதஸிலாவின் செல்வாக்குக்குட்பட்டது.

இந்த குழுக்கள், அன்று மார்க்கம் பேசிய ஸஹாபாக்கள் பயின்ற ஈமான் கொண்ட அடிப்படைக்கு முரனானது என்று ஸஹாபாக்களாலும் இமாம்களாலும் அடையாளம் காட்டப்பட்டது. அந்த வழிகேடர்களின் கொள்கைகளையே இன்றும் சிலரால் ‘நவீன முறையில்’ அப்படியே (தவ்ஹீத் என்ற பெயரால்) முன்வைக்கப்பட்டு பகுத்தறிவு ரீதியாக பேசப்படுகிறது. இவர்கள் தங்களது பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டு ஸஹாபாக்கள் நம்பிக்கை; கொண்டு செயற்படுத்திய வஹியை சந்தேகத்திற்குரியதாக ஆக்கிவருகிறார்கள். பாதுகாக்கப்பட்ட குர்ஆன் சுன்னாவை கேள்விக்குரியதாக ஆக்குகிறார்கள். அதனை பாதுகாத்துத்தந்த உத்தமர்களை கேள்விக்கு உட்படுத்துகிறார்கள்.

இக் கொள்கைகளை முன்வைக்கக் கூடியவர்கள்; மீது பக்தி கொண்டவர்கள், அவர்களின் தர்கத்தில் மயங்கியவர்கள் அவர்கள் சொல்வதை உண்மையானதாகக் கண்டார்கள். மற்றவர்களை வழிகேட்டில் இருப்பதாகச் சொன்னார்கள்.

எனவே இவர்களுடன் தர்கிப்பதை விட முஃமினான்களான ஸஹாபாக்கள் படித்த முறையில் மார்க்கத்தை நடைமுறைமுறைப் படுத்துவதே ஈமானுக்கு பாதுகாப்பாகும். தமிழ் பேசும் உலகத்திற்கு இந்த நவீன பகுத்தறிவாதிகளின் அணுகுமுறை புதிது என்றாலும் வரலாற்றில் பழமைவாய்ந்தது. இவர்கள் நேர்வழிப் பெற்றவர்களால் நிராகரிக்கப்பட்டவர்கள். நாமும் இவர்களை நிராகரிக்க வேண்டும். இந்த அடிப்படையை மக்கள் அடையாளம் காணவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *