Featured Posts
Home » மீடியா » இயேசுவை இழிவுபடுத்தும் பைபிள் » இயேசுவை இழிவுபடுத்தும் பைபிளும் கண்ணியப்படுத்தும் குர்ஆனும் -12

இயேசுவை இழிவுபடுத்தும் பைபிளும் கண்ணியப்படுத்தும் குர்ஆனும் -12

இயேசுவின் சிலுவை மரணம் பற்றிப் பேசும் புதிய ஏற்பாடு ஆதி முதல் அந்தம் வரை முரண்பட்ட தகவல்களையே தந்து கொண்டிருக்கின்றது என்பதை விரிவாகப் பார்த்து வருகின்றோம். இந்த முரண்பாடுகள் அந்த சம்பவத்தின் உண்மைத் தன்மையில் பலமான சந்தேகத்தை எழுப்புகின்றது.

கல் எப்போது உயர்த்தப்பட்டது?
இயேசுவின் கல்லறைக்கு வந்தவர்கள் யார் என்பது பற்றிப் பேசும் போதும் சுவிசேசகங்கள் முரண்பட்ட தகவல்களைத் தருகின்றன.

‘அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்திறங்கி வந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான்.’ (மத்தேயு 28:2)

அவர்கள் வந்த போது அவர்களுக்கு முன்னாலேயே கல்லறையில் கல் தேவ தூதனால் அகற்றப்பட்டது என மத்தேயு கூறுகின்றார்.

‘வாரத்தின் முதல் நாள் காலையில், அதிக இருட்டோடே, மகதலேனா மரியாள் கல்லறை யினிடத்திற்கு வந்து கல்லறையை அடைத்திருந்த கல் எடுத்துப் போட்டிருக்கக் கண்டாள்.’
(யோவான் 20:1, லூக்கா 24:2, மாற்கு 16:4)

கல்லறைக்கு வந்த போதே கல் புரட்டப் பட்டிருந்ததாக இம்மூவரும் கூறுகின்றனர். கல் எப்போது புரட்டப்பட்டது, அவர்கள் வந்த போதா? வரும் முன்னரா? ஏன் இந்த முரண்பாடு? இதில் யார் சொல்வது உண்மை! இரண்டும் உண்மையாக இருக்க முடியாது. இரண்டில் ஒன்று எப்படியும் பொய்யாகவே இருக்க வேண்டும். பொய் எப்படி புனித ஆவியால் உந்தப்பட்டு எழுதப்பட்டது! பொய் எப்படி புனித வேதமானது!

கண்ட காட்சி என்ன?
கல்லறைக்கு வந்தவர்கள் கண்ட காட்சி பற்றி பைபிள் இப்படிப் பேசுகின்றது.

‘அவர்கள் கல்லறைக்குள் பிரவேசித்து, வெள்ளையங்கி தரித்தவனாய் வலதுபக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு வாலிபனைக்கண்டு பயந்தார்கள்.’
(மாற்கு 16:5)

வெள்ளை ஆடை தரித்த ஒரு வாலிபனைக் கண்டதாக உள்ளது.

‘அதைக் குறித்து மிகுந்த கலக்கமடைந் திருக்கையில், பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த இரண்டுபேர் அவர்கள் அருகே, நின்றார்கள்.’
(லூக்கா 24:4)

இங்கு இரண்டு பேரைக் கண்டதாக உள்ளது.

‘அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்திறங்கி வந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான்.’ (மத்தேயு 28:2)

இவர்கள் சென்றதன் பின்னர் வானத்தி லிருந்து இறங்கி வந்த ஒரு தேவ தூதனைக் கண்டதாக இங்கே சொல்லப் படுகின்றது.

‘இயேசுவின் சரீரம் வைக்கப்பட்டிருந்த இடத்திலே வெள்ளுடை தரித்தவர்களாய் இரண்டு தூதர்கள், தலைமாட்டில் ஒருவனும் கால்மாட்டில் ஒருவனுமாக, உட்கார்ந்திருக்கிறதைக் கண்டாள்.’
(யோவான் 20:12)

இரண்டு தூதர்கள் என்று கூறப் படுகின்றது. ஏன் இந்த முரண்பாடுகள்!

இயேசுவை முதலில் எங்கே கண்டார்கள்?:

இயேசுவை முதலில் கண்டவர் பற்றிய தகவல் மற்றும் இயேசுவின் உயிர்த்தெழுதல் சம்பந்தமாக முதலில் நற்செய்தி செய்தவர் பற்றியும் தகவலைக் கவனியுங்கள்.

‘அவர்கள் அவளை நோக்கி: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய் என்றார்கள். அதற்கு அவள், என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எனக்குத் தெரியவில்லை என்றாள்.’

‘இவைகளைச் சொல்லிப் பின்னாகத் திரும்பி, இயேசு நிற்கிறதைக் கண்டாள்; ஆனாலும் அவரை இயேசு என்று அறியாதிருந்தாள்.’

‘இயேசு அவளைப் பார்த்து, ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி, ஐயா, நீர் அவரை எடுத்துக் கொண்டு போனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக் கொள்ளுவேன் என்றாள்.’

‘இயேசு அவளை நோக்கி, மரியாளே என்றார். அவள் திரும்பிப் பார்த்து, ரபூனி என்றாள்; அதற்குப் போதகரே என்று அர்த்தமாம்.’
(யோவான் 20:13-16)

மரியாள் கல்லறையிலேயே இயேசுவைச் சந்தித்ததாக இங்கே கூறப்படுகின்றது. தேவ தூதர்கள் கூறாமலேயே இயேசு உயிருடன் இருப்பதை மரியாள் உணர்த்து கொண்டாள் என்பது இதிலிருந்து புரிகின்றது.

‘தூதன் அந்த ஸ்திரீகளை நோக்கி, நீங்கள் பயப்படாதிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன்.’

‘அவர் இங்கே இல்லை. தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்;.’

‘சீக்கிரமாய்ப் போய், அவர் மரித்தோரி லிருந்து எழுந்தார் என்று அவருடைய சீஷர் களுக்குச் சொல்லுங்கள். அவர் உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார்; அங்கே அவரைக் காண்பீர்கள்; இதோ, உங்களுக்குச் சொன்னேன் என்றான்.’

‘அவர்கள் பயத்தோடும் மகா சந்தோஷத் தோடும் கல்லறையை விட்டுச் சீக்கிரமாய்ப் புறப்பட்டு, அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்க ஓடினார்கள்.’

‘அவர்கள் அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்கப் போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர ;பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்டவந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்து கொண்டார்கள்.’

‘அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் போய், என் சகோதரர் கலிலேயாவுக்குப் போகும்படி அவர்களுக்குச் சொல்லுங்கள்; அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் என்றார்.’ (மத்தேயு 28:5-10)

இயேசு உயிர்த்தெழுந்தார் என தேவதூதர் சொல்கின்றார். இயேசு கலியோ வுக்குப் போய்விட்டதாகவும் கூறுகின்றார். அவர்கள் கல்லறையை விட்டும் வந்து சீஷர்களை நோக்கிச் செல்லும் வழியில் இயேசு அவர்களைச் சந்தித்தார் என்று கூறப்படுகின்றது.

இயேசு உயிர்த்தெழுந்தார் என மரியாள் தானாக உணர்ந்து கொண்டாளா அல்லது தேவதூதன் கூறியதால் அறிந்தாளா? இயேசுவைக் கல்லறையில் கண்டாளா அல்லது கல்லறைக்கு வெகு தூரத்தில் முதலில் சந்தித்தாளா? இதில் யார் சொல்வது உண்மை?

உரைத்தனரா? மறைத்தனரா?:
‘நடுக்கமும் திகிலும் அவர்களைப் பிடித்த படியால், அவர்கள் சீக்கிரமாய் வெளியே வந்து, கல்லறையை விட்டு ஓடினார்கள்; அவர்கள் பயந்திருந்த படியினால் ஒருவருக்கும் ஒன்றும் சொல்லாமற் போனார்கள்.’ (மாற்கு 16:8)

பயத்தின் காரணத்தினால் செய்தியை ஒருவருக்கும் சொல்லவில்லை என்கின்றது மாற்கு!

‘கல்லறையை விட்டுத் திரும்பிப் போய், இந்தச் சங்கதிகளெல்லாவற்றையும் பதினொருவருக்கும் மற்றெல்லாருக்கும் அறிவித்தார்கள்.’ (லூக்கா 24:9)

மீதி பதினொரு பேருக்கும் அறிவித்ததாக லூக்கா சொல்கின்றார். இதில் எது உண்மை?

முதலில் யாருக்கு வெளிப்பட்டார்:

இயேசு முதன் முதலில் மரியாளுக்கு வெளிப்பட்டதாக மாற்கு 16:9, யோவான் 20:14 கூறுகின்றன. இரண்டு மரியாள்கள் முதலில் கண்டதாக (மத்தேயு 28:9) கூறுகின்றார்.

எருசலேம் நோக்கிச் சென்ற இரண்டு சீடர்களுக்குத்தான் அவர் முதலில் வெளிப்பட்டார் என லூக்கா கூறுகின்றார். (பார்க்க – லூக்கா 24:13-31)

இதில் யார் சொல்வது உண்மை, யார் சொல்வது பொய்? இரண்டும் உண்மையாக இருக்க முடியாது. இரண்டில் ஒன்று பொய்யாகவே இருக்கும். பொய் எப்படி வேத நூலாகும்.

எத்தனை முறை வெளிப்பட்டார்?

மரியாளுக்கும், சீடர்களுக்கும் மீண்டும் ஒரு முறை சீடர்களுக்குமாக இயேசு மூன்று முறை தோற்றமளித்ததாக யோவான் கூறுகின்றார். (பார்க்க – (யோன் 20:19-26)

இயேசு ஒரேயொரு முறைதான் காட்சி யளித்ததாக மற்றைய மூவரும் விபரிக்கின்றனர். (பார்க்க – (லூக்கா 24:36-51, மத்தேயு 28:16, மாற்கு 16:14)

இதில் யார் கூறுவதை ஏற்பது? யார் கூறுவதை மறுப்பது? இந்த முற்றிப் போன முரண்பாடுகள் சிலுவை சம்பவத்தில் உண்மைத் தன்மையை கேள்விக்குரியாக்குகின்றதா இல்லையா? கிறிஸ்தவ நண்பர்கள் நடுநிலையாகச் சிந்தித்து தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டும்.
தோமா எப்போது கண்டார்?:

இயேசுவின் சீடர்கள் 12 பேராகும். அதில் ஒருவன் இயேசுவைக் காட்டிக் கொடுத்து அழிந்து போனவன். இயேசு உயிர்த்தெழுந்ததைக் கண்டவர்கள் இந்தச் செய்தியை பதினொரு பேருக்கும் சொன்னதாக லூக்கா 24:9 கூறுகின்றார். இயேசுவின் சீடர்கள் இயேசுவைக் கண்டது பற்றிக் கூறும் போதும் முரண்பாடுகளைக் காணலாம்.

‘பதினொரு சீஷர்களும், கலிலேயாவிலே இயேசு தங்களுக்குக் குறித்திருந்த மலைக்குப் போனார்கள்.’

‘அங்கே அவர்கள் அவரைக் கண்டு பணிந்துகொண்டார்கள், சிலரோ சந்தேகப்பட்டார்கள்.’
(மத்தேயு 28:16-17)

கலிலோவில் குறித்த ஒரு மணியில் வைத்து 11 சீடர்களும் இயேசுவைக் கண்டதாக இங்கே கூறப்படுகின்றது.

‘இயேசு வந்திருந்தபோது பன்னிருவரில் ஒருவனாகிய திதிமு என்னப்பட்ட தோமா என்பவன் அவர்களுடனேகூட இருக்கவில்லை.’

‘மற்றச் சீஷர்கள்: கர்த்தரைக் கண்டோம் என்று அவனுடனே சொன்னார்கள். அதற்கு அவன்: அவருடைய கைகளில் ஆணிகளினாலுண்டான காயத்தை நான் கண்டு, அந்தக் காயத்திலே என் விரலையிட்டு, என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்கமாட்டேன் என்றான்.’
(யோவான் 20:24-25)

இயேசு வந்த போது தோமா என்ற சீடர் இருக்கவில்லை என்று கூறப்படுகின்றது. ஏற்கனவே 11 பேருக்கும் காட்சியளித்ததாக மத்தேயு 28:16-17 இல் கூறுகின்றார். இதில் யார் சொல்வது உண்மை?

யோவான் 20:26-28 மீண்டும் எட்டு நாட்களுக்குப் பின்னர்தான் ‘தோமா’ இயேசுவைக் கண்டு அதன் பின்னர்தான் நம்பியதாகக் கூறப்படுகின்றது. இயேசுவை ‘தோமா’ எல்லோருடனும் முதலில் கண்டாரா? இல்லையா? மத்தேயு, யோவான் இவர்களில் இவர்கள் இருவரில் யார் உண்மையாளர்? யார் பொய்யர்? கிறிஸ்தவ உலகு முடிவு செய்யுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *