Home » Featured » சூனியம் – மறுக்கப்படும் நபிமொழிகள் இப்போது Android போன்களில்

சூனியம் – மறுக்கப்படும் நபிமொழிகள் இப்போது Android போன்களில்

sooniyamsooniyamதமிழ் பேசுவர்களின் மத்தியில் நவீன வழிகேடான ‘ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை’ மறுக்கும் கொள்கையை ஏகத்துவத்தின் பெயரால் சிலர் வீரியமாக வேரூன்றுவதற்காக பல காரியங்கள் செய்துவந்த நிலையில் எல்லாம் வல்ல அல்லாஹ்-வின் நாட்டத்தின்படி இவர்களது கொள்கையின் ஆணிவேராக நிகழ்ந்த நபரை இவர்களை விட்டும் வெளியேற்றி ஹதீஸ் மறுப்பு கொள்கைக்கு மரண அடி கொடுக்கும் விதமாக இவர்கள் மறுக்க கூடிய ஆதாரபூர்வமான அனைத்து ஹதீஸ்களுக்கும் அழகானதொரு விளக்கத்தினை பாமரனும் புரிந்து கொள்ளகூடிய அளவில் தலைசிறந்த மார்க்க மேதைகள், அறிஞர் பெருமக்களின் கூற்றினை மேற்கோள்காட்டி மவ்லவி அப்பாஸ் அலி MISC (முன்னாள் ததஜ ஆய்வாளர்) ‘சூனியம் – மறுக்கப்படும் நபிமொழிகள்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டார்.

இந்த புத்தகம் பரபரப்பாக விற்று தீர்ந்துவிட்ட நிலையில் இந்த புத்தகத்தில் ‘ஹதீஸ் மறுப்பு கொள்கைக்கு ஏதிராக’ சொல்லபட்ட கருத்தக்களை உலகம் முழுவதும் வாழும் தமிழ் பேசக்கூடிய அனைத்து ஏகத்துவ-வாதிகளுக்கும் கொண்டு சேர்க்கும் விதமாக தாயகத்தை சார்ந்த குவைத் நாட்டில் பணிசெய்ய கூடிய ‘இஸ்லாமிக் தஃவா குவைத்’ என்ற குழுமச் சகோதரர்கள் இதனை Android போன்களில் செயல்பட கூடிய செயலியை (Application) வெளியிட்டுள்ளார்கள். இதனை கீழ்கண்ட இணைப்பில் வழியாக இலவசமாக டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

Android mobile பயன்படுத்தக்கூடிய ஒவ்வொரு சகோதரகளும் இந்த செயலியை தாங்களது போனில் நிறுவி நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதனை வாசித்து நீங்கள் பயன்பெறுவதோடு ‘ஹதீஸ் மறுப்பு கொள்கை’ கூட்டம் உங்களிடம் திறமை காட்ட வரும்போது அவர்களை பின்னங்கால் பிரடியில் பட விரண்டோடச் செய்யவும்.

 • சிறப்பம்சங்கள்:
  தலைப்பு வாரியாக உள்ள அட்டவணை மூலம் வேண்டிய தலைப்பினை விரும்பியவாறு வாசிக்கலாம்.
 • ஹதீஸ்-களின் பாதுகாப்பு, வஹியில் முரண்பாடு வருமா? மார்க்கத்தை அறிய கூடிய வழிமுறை இப்படியான அடிப்படை அம்சங்கள் அட்டவணையாக கொடுக்கப்பட்டள்ளது.
 • முதல் வெளியீட்டில் உள்ள சில அசௌரியங்களை நீக்கி மேம்படுத்தப்பட்ட செயலி இந்த இணைப்பில் உள்ளது.

Click here to download app

 

-இஸ்லாம் கல்வி மீடியா யூனிட்-

One comment

 1. பிஸ்மில்லாஹ் ஹிரஹ்மான் னிர்ரஹீம்
  ஸஹீஹ் முஸ்லிம்
  2876. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
  “குறிப்பிட்ட பத்து தடவைகள் பால் அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும்” என்ற வசனம் (முதலில்) குர்ஆனில் அருளப்பட்டிருந்தது.
  பின்னர் பத்து தடவைகள் என்பது, குறிப்பிட்ட ஐந்து தடவைகள் என மாற்றப்பட்டது. இவ்வசனம் மக்கள் சிலரால் ஓதப்பட்டுவந்த காலத்தில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.
  இந்த ஹதீஸ் ஸஹீஹானதாக இருந்தாலும் இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்தான் என்று ஹதீஸ் மறுப்பாளர்கள் வாதிடுகின்றனர்
  பத்து தடவைகள் பால் அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும் என்றும் பின்னர் பத்து தடவைகள் என்பது, குறிப்பிட்ட ஐந்து தடவைகள் என மாற்றப்பட்டது,திருக்குரானில் இவ்வசனம் மக்கள் சிலரால் ஓதப்பட்டுவந்த காலத்தில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள். என்று இந்த ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாக வந்துள்ளது
  அப்பாடியென்றால் திருக்குரானில் இந்த வசனம் எங்குள்ளது ? இதேபோன்றுதான் ஸஹாபாக்கள் பெயரில் ஸஹீஹ் புஹாரி , ஸஹீஹ் முஸ்லிம் போன்ற நூல்களில் நிறைய இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் இருக்கின்றன என்று ஹதீஸ் மறுப்பாளர்கள் வாதிடுகின்றனர்
  ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குரானுக்கு முரண்படாது என்று நீங்கள் வெளியிட்ட android app மூலம் நிறைய தெளிவான விளக்கம் கிடைத்தது
  அதேபோன்று ஒரு தெளிவான விளக்கத்தை இந்த ஹதீஸ் க்கும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
  உங்களுக்கும் எனக்கும் மற்றும் இஸ்லாமிய சமூகத்தினர் அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் கருணையும் உண்டாவதாக ஆமீன்
  முகமது மைதீன்
  Whatsapp number +919791334020

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *