Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » ஹதீஸ் கையெழுத்து பிரதியில் இடைசெருகல் செய்வது சாத்தியமா?

ஹதீஸ் கையெழுத்து பிரதியில் இடைசெருகல் செய்வது சாத்தியமா?

ஹதீஸ்களின் துணையின்றி மார்க்கத்தை முழுமையாக அறிந்து கொள்ள முடியாது. இஸ்லாத்தின் மூல ஆதாரம் என்பது அல்-குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான நபிமொழிகள் இதில் எந்த ஒரு முஸ்லிமுக்கும் சந்தேகம் வராமல் ஏற்றுக்கொண்டு செயல்படவேண்டும் என்பது நாம் அறிந்தவைகளே.

அதே போன்று 1000 ஆண்டுகளுக்கு மேலாக முஸ்லிம்களியிடையே அல்-குர்ஆனுக்கு அடுத்த நிலையில் புகாரீ ஹதீஸ் இருந்து வருகின்றது. இது வரை உலகில் வந்த எந்ததொரு மார்க்க மேதையும் புகாரீயில் (அதனுடைய பாதுகாப்பு தன்மையில்) சிறிதளவு கூட சந்தேகத்தை ஏற்படுத்தககூடிய எந்ததொரு செய்தியையும் மக்கள் மன்றதிலோ உலமாக்களின் சபைகளிலோ முன்வைத்தது இல்லை என்பதனை இஸ்லாமிய வரலாற்றை உற்றுநோக்கும் போது அறிந்துகொள்ள முடியும். ஆனால் ஏகத்தும் – தவ்ஹீத் பிரச்சாரம் 1970 பிறகு தமிழகத்தில் எழுச்சியை நோக்கி பயணம் தொடங்கியபோது 80-களில் வெகு ஜனங்களை சென்றடைந்து போதும் 90-களில் அடுத்த நிலையை அடைந்தபோது 90 இறுதிபகுதியில் இலைமறைவு காயாக இருந்து வந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் சிக்கலை ஏற்படுத்த கூடிய செய்திகள் 2002-ம் இறுதியில் பத்தோடு பதினோராவதாக வந்த பீஜே என்றழைக்ககூடிய பீ. ஜைனுல் ஆபிதீன்-யின் தர்ஜுமா வெளிவந்தவுடன் (பூனைகுட்டி வெளிவந்தது) ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் 50-க்கு குறைவான ஹதீஸ்களை நிராகரிக்க வேண்டும் என்று பகிரங்கமாக அறிவித்தார். அதனுடைய பரிணாம வளர்ச்சியாக இன்று நிராகரிக்ககூடிய ஹதீஸ்களின் எண்ணிக்கை எங்கு சென்றுள்ளது என்பதனை கண்டு உள்ளம் பதைபதைக்கின்றது. இத்தோடு நிறுத்துவது இல்லையாம்.

//இப்போது நாம் இதுவரை நாம் ஆய்வு செய்து அறிந்து வைத்துள்ள பட்டியலைக் கொடுத்தாலும் அது முடிந்த முடிவாக இருக்கப் போவதில்லை. மேலும் சில ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுவதாக நமக்குச் சுட்டிக்காட்டப்பட்டு அது சரியாக இருந்தால் அதுவும் பட்டியலில் சேர்ந்து கொண்டே இருக்கும்.// – onlinepj

ஹதீஸ்களில் இவர்கள் ஏற்படுத்தும் சந்தேகங்களை பாருங்கள் (from onlinepj)

  • ஹதீஸ்களைப் பொறுத்தவரை எந்த ஒரு ஹதீஸையும் அனைத்து நபித்தோழர்களும் அறிவிக்கவில்லை.
  • ஹதீஸ்கள் யாவும் ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று நபித்தோழர்கள் வழியாகத் தான் அறிவிக்கப்பட்டுள்ளன.
  • எவ்வளவு தான் நம்பகமானவர்கள் (ஸஹாபாக்கள்) என்றாலும் ஓரிருவர் அறிவிக்கும் செய்திகளில் தவறுகள் நிகழ வாய்ப்புகள் உள்ளன.
  • நம்பகத் தன்மையில் திருக்குர்ஆனும் நபிமொழிகளும் சமமானவை அல்ல.
  • குர்ஆனுடன் மோதும் போது ‘இந்த அறிவிப்பில் எங்கோ தவறு நடந்துள்ளது’ என்று முடிவு
  • இது போன்ற ஹதீஸ்களை மட்டும் நாம் விட்டு விட வேண்டும். இத்தகைய ஹதீஸ்கள் புகாரி மற்றும் முஸ்லிமில் இடம் பெற்றிருந்தாலும் சரி தான்.

இதற்கெல்லாம் மகுடம் வைத்ததற்கு போன்று புகாரீ ஹதீஸ் கிரகந்தத்தின் மீதே சந்தேகத்தை ஏற்படுத்துவது. புகாரீ ஹதீஸ் கிரகந்தத்தின் கையெழுத்து பிரதிகளில் யாராவது ஒருவர் அல்லது இஸ்லாத்தின் எதிரிகள் இடைசெருகல் செய்து இருப்பார்கள் என்று அதாவது புகாரீ இமாம் அவர்கள் தொகுக்காத சில ஹதீஸ்கள் புகாரீ-யில் இடம் பெற்றுள்ளது என்ற மாபெரும் பொய்யை சந்தேகத்தின் பெயரால் மக்கள் மன்றத்தில் தொடர்ந்து பிரச்சாரம் செய்வதை நாம் அவதானித்து வருகின்றோம். இப்படி இவர்கள் சொல்வது போன்று,

ஹதீஸ்கள் பாதுகாக்கப்படவில்லையா?

அல்லது நினைத்தவர்கள் இடைசெருகல் செய்யும் அளவுக்கு பாதுகாப்பற்றதா?

இப்படி கையெழுத்து பிரதிகளில் இடைசெருகல் செய்வது சாத்தியமா?

புகாரீ இமாம் தொகுக்காத ஹதீஸ்களை இனம்காண முடியாதா?

போன்ற சந்தேகத்தின் அடிப்படையில் உள்ள கேள்விகளுக்கு விடைகாண இந்த வீடியோ பதிவினை முழுவதுமாக பார்க்கவும்.

Qatar SLDC வழங்கும்
சிறப்பு மார்க்க விளக்க நிகழ்ச்சி
வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன்
ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்

Download mp3 audio

2 comments

  1. Maideen Abdul Kader

    Salam

    I need ask some question to Usjaz Muzahid bin Rasheen and Ustaz KLM Ibrahim Madhanee.

    Can i have their email id or how can i ask Question

    Thank you

    Maideen

  2. Ma shaa allah super explanation may ALLAH increase ur knowledge

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *