Featured Posts
Home » இஸ்லாம் » ஒழுக்கம் » வரதட்சணை ஒரு வன்கொடுமை (eBook)

வரதட்சணை ஒரு வன்கொடுமை (eBook)

வரதட்சணை ஒரு வன்கொடுமை

முன்னுரை

திருமணத்தின் போது மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரிடமிருந்து பெருந்தொகையை வரதட்சணையாகப் பெறுகின்றனர். இந்த கொடுமை இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டிலும் கேரள மாநிலத்திலும் அதிகமாக உள்ளது. உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு நம் நாட்டில் மட்டும் வரதட்சணைக் கொடுமை தலைவிரித்தாடுகின்றது.

வரதட்சணையால் பெண் இனமும் பெண்ணைப் பெற்றவர்களும் படும் துன்பங்களை ஒவ்வொரு நாளும் கண்கூடாக பார்த்துவருகிறோம். இஸ்லாமில் வரதட்சணை வாங்குவதற்கு கடுகளவு கூட அனுமதியில்லை. மனிதனை பாதிக்கும் எந்த செயலானாலும் அதை வன்மையாக கண்டிக்கின்ற மார்க்கம் இஸ்லாம். ஆண்மீக ரீதியில் இது போன்ற பாவங்களை கடுமையாக எதிர்க்கும் மார்க்கம் இஸ்லாமைத் தவிர வேறில்லை எனலாம்.

ஆனால் இஸ்லாமிய சமூகம் இஸ்லாமை சரியாக கடைபிடிக்காத காரணத்தால் வரதட்சணைக் கொடுமை நம் சமுதாயத்திலும் தலைவிரித்தாடுகின்றது. சொல்லப்போனால் மற்ற சமூகங்களை விட நம் சமூகத்தில் தான் அதிக அளவில் வரதட்சணை வாங்கப்படுகின்றது.

முஸ்லிம் அல்லாத மக்களிடம் இஸ்லாமைப் பற்றி நாம் எடுத்துச் சொல்லும் போது அவர்கள் அவர்கள் எழுப்புகின்ற சந்தேகங்களில் இதுவும் ஒன்று. முஸ்லிம்கள் வாங்கும் அளவுக்கு மற்ற சமூகங்களில் அதிக வரதட்சணை வாங்கும் பழக்கமில்லை. முஸ்லிம்கள் ஏன் அதிக வரதட்சணை வாங்குகிறார்கள்? என்று கேட்கின்றனர். இக்கேள்விக்கு இஸ்லாமிய சமுதாயம் என்ன பதில் சொல்ல முடியும்?

இவர்கள் இஸ்லாமை கடைபிடிக்காத காரணத்தால் இப்படிப்பட்ட கொடுமையான காரியத்தை செய்கிறார்கள் என்று கூறுவதைத் தவிர வேறு பதில் சொல்ல முடியாது. வரதட்சணையால் ஏற்படும் விளைவுகளையும் இது குறித்து இஸ்லாம் கூறுவதையும் மக்கள் அறியாத காரணத்தால் இந்த பாவத்தை சர்வசாதாரணமாக செய்கின்றனர். இன்று கணிசமான மக்கள் இந்த பாவத்திருந்து மீண்டு வரதட்சணை வாங்காமல் நபிவழி அடிப்படையில் திருமணம் செய்கின்றனர்.

எனினும் பலர் இன்னும் இது பற்றிய தெளிவில்லாமலும் அச்சமில்லாமலும் இருக்கின்றனர். வரதட்சணை வாங்குவோருடன் ஒப்பிடுகையில் வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்வோரின் எண்ணிக்கை சமுதாயத்தில் மிகக் குறைவாகவே உள்ளது. எனவே வரதட்சணை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நல்லெண்ணத்தில் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.

வரதட்சணைக் கொடுமை தலைவிரித்தாடிய தமிழகத்தில் அதற்கு எதிராக பல மார்க்க அறிஞர்கள் பிரச்சாரம் செய்தார்கள். இவர்களின் உரையின் மூலமாக பலர் இப்பாவத்திருந்து விடுபட்டார்கள். வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்யும் ஒரு கூட்டம் உருவானது. அல்லாஹ் இவர்களுக்கு மகத்தான் நற்கூலியை வழங்குவானாக!

இந்நூலை நாம் விற்பனை செய்யவில்லை. இதை படிக்கும் சகோதரர்களிடம் நாம் ஒன்றை மட்டுமே எதிர்பார்க்கின்றோம். இதில் சொல்லப்பட்டுள்ள உபதேசங்களுக்கு தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு மற்றவர்களுக்கும் இதனை எடுத்துச்செல்ல வேண்டும் என்பதே நம்முடைய எதிர்பார்ப்பு. அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள்புரிவானாக!

இப்படிக்கு

S. அப்பாஸ் அலீ MISc

குறிப்பு: இந்த புத்தகத்தை அச்சுபிரதியாக வெளியிட விருப்பமுள்ளவர்கள் ஆசிரியரை தொடர்புகொள்ளவும்.

தொடர்ந்து வாசிக்க இங்கு கிளிக் செய்து மின்னனு நூலை பார்வையிடவும்/பிதிவிறக்கம் செய்யவும்

வரதட்சணை ஒரு வன்கொடுமை

Sub titles of this eBook:

முன்னுரை

பெண் இனம் வெறுக்கப்படுகின்றது

பிச்சையெடுக்கும் அவலம்

விபச்சாரத்தில் தள்ளும் வரதட்சணை

பெண் சிசு கொல்லப்படுகின்றது

கருணையுள்ள தாயின் கொடூரச் செயல்

அறியாமைக் காலத்தை நோக்கி…

பெண் இனம் இல்லாவிட்டால்…

பிள்ளைகளிடம் பாரபட்சம்

பாகப் பிரிவினையில் அநீதம்

வரதட்சணை கேவலமான செயல்

ஆண்மகனுக்கு அழகல்ல

மஹர் ஏன் கொடுக்க வேண்டும்?

பெண்ணுரிமை பறிக்கப்படுகின்றது

மனைவி ஹலால் இல்லை

பெரும்பாவத்தை விட கொடியது

மஹர் கொடுப்பது ஆண்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாதா?

இஸ்லாம் வரதட்சணைக்கு எதிரான மார்க்கம்

புனிதம் பாழ்படுத்தப்படுகின்றது

சகோதரத்துவம் அழிகின்றது

குழந்தையின் சாட்சி

பாதிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை

இறைவன் கருணைகாட்ட மாட்டான்

ஹராமான பொருள்

எதிராக சாட்சி கூறும் பொருள்

சுமையாக மாறும் பொருள்

பரகத் இல்லாத பொருள்

பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படாது

நன்மைகள் பறிபோகும்

திருப்பிக்கொடுத்து விடுங்கள்

அன்பளிப்பாக கொடுப்பது வரதட்சணையாகுமா?

சந்தேகமானதை விடுவோம்

பெண் வீட்டார் பெண்ணுக்கு நகை போடலாமா?

சீர் வரிசையும் வரதட்சணையே

பெண்வீட்டு விருந்தும் வரதட்சணையே

ஊருக்காக பெண் வீட்டு விருந்து

வரதட்சணையை ஒழிக்க வழி

வரதட்சணைத் திருமணங்களை புறக்கணிப்போம்

பெண்களும் காரணம்

நிர்பந்தம் ஏற்பட்டால்…

பணம் கொடுத்து உதவி செய்யலாமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *