Featured Posts
Home » இஸ்லாம் » கொள்கைகள் » இஸ்லாமின் மூன்று அடிப்படைகளும் அவற்றின் ஆதாரங்களும் (தொடர் 1)

இஸ்லாமின் மூன்று அடிப்படைகளும் அவற்றின் ஆதாரங்களும் (தொடர் 1)

بسم الله الرحمن الرحيم
ثلاثة الأصول وأدلتها للإمام محمد بن عبد الوهاب بن سليمان التميمي
இஸ்லாமின் மூன்று அடிப்படைகளும் அவற்றின் ஆதாரங்களும்
முஹம்மது இப்னு அப்தில் வஹ்ஹாப் (ரஹ்)

ஆசிரியர் குறிப்பு

இஸ்லாமின் மூன்று அடிப்படைகளும் அவற்றின் ஆதாரங்களும் என்ற நுால் அரபுமொழியில் எழுதப்பட்ட நுாலாகும். இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்கள் இந்நுாலின் ஆசிரியாராவார்.

இந்நுால் ஒவ்வொரு முஸ்லிமும் கட்டாயம் அறிய வேண்டிய அடிப்படையான விசயங்கள் குறித்து பேசக்கூடிய அற்புதமான சிறிய நுாலாகும்.

சவூதி அரேபியாவின் தலைநகரமான ரியாதிலிருந்து சுமார் 35 கிமீ தொலைவில் உயைனா என்ற ஊரில் இந்த அறிஞர் ஹிஜ்ரீ 1115 ம் ஆண்டு பிறந்தார்.

சிறுவயதிலேயே குா்ஆனை முழுமையாக மனனமிட்டார். மார்க்கக்கல்வியை சிறப்பாக கற்றுத்தேர்ந்து தான் மரணிக்கும் வரை அழைப்புப் பணி செய்தவர். அன்னாருடைய காலத்தில் இணைவைப்பும் பித்அத்களும் இஸ்லாமியர்களிடம் அதிகமாக பரவி இருந்தது. அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் அஞ்சாமல் இந்த வழிகேடுகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்தார். இதனால் ஏற்பட்ட துன்பங்களையும் இன்னல்களையும் சகித்துக்கொண்டார்.

அப்போது சவூதியின் அமீராக முஹம்மது இப்னு சவூத் (ரஹ்) அவர்கள் இருந்தார்கள். அமீர் அவர்கள் அறிஞர் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்களின் ஏகத்துவப் பிரச்சாரத்திற்கு முழு ஆதரவையும் தெரிவித்தார். இதனால் இணைவைப்பும் பித்அத்களும் ஒழிந்து மக்கள் அல்லாஹ்வை மட்டும் வணங்கி நபி(ஸல்) அவர்களின் வழிமுறைகளை பின்பற்றலானார்கள்.

இந்த மறுமலர்ச்சி அரபு நாட்டுடன் நின்றுவிடவில்லை. இந்த அறிஞர் அரபுமொழியில் பல்வேறு நுாற்களை தொகுத்துள்ளார். அவை அனைத்தும் அதிக பலன்களைக் கொண்டவை. அரபு அல்லாத நாடுகளிலும் தவ்ஹீத் புரட்சி ஏற்படுவதற்கும் இவர்கள் எழுதிய நுாற்களே அடிப்படையாகும்.

ஸலாசத்துல் உசூல் வஅதில்லதுஹா (இஸ்லாமின் மூன்று அடிப்படைகளும் அவற்றின் ஆதாரங்களும்) கிதாபுத் தவ்ஹீத் (ஏகத்துவ நுால்) அல்கவாயிதுல் அர்பஉ (நான்கு அடிப்படைகள்) ஃபள்லுல் இஸ்லாம் (இஸ்லாமின் சிறப்புகள்) கஸ்புஸ் சுபுஹாத் (சந்தேகங்களை தெளிவுபடுத்துதல்) ஆகிய நுாற்கள் இஸ்லாமிய கொள்கையை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கும் நுாற்களாகும். இவையல்லாத வேறு பல நுாற்களையும் தொகுத்துள்ளார். ஹிஜ்ரீ 1206 ம் வருடத்தில் மரணித்தார்கள். அல்லாஹ் இவர்களது பாவத்தை மன்னித்து சொர்க்கத்தை வழங்குவானாக.

இவர்கள் தொகுத்த இஸ்லாமின் மூன்று அடிப்படைகளும் அவற்றின் ஆதாரங்களும் என்ற நுால் குறித்து சிறு குறிப்புகளை இனி தொடர்ச்சியாக அறிந்துகொள்வோம்.

தொடரும் இன்ஷா அல்லாஹ்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *