Home » இஸ்லாம் » கொள்கைகள் » இதுவே எங்களுடைய அழைப்புப் பணியும் மேலும் எமது கொள்கைக் கோட்பாடும் – 04

இதுவே எங்களுடைய அழைப்புப் பணியும் மேலும் எமது கொள்கைக் கோட்பாடும் – 04

“ஹாதிஹீ தஃவதுனா வ அகீததுனா”
(“இதுவே எங்களுடைய அழைப்புப் பணியும் மேலும் எமது கொள்கைக் கோட்பாடும்”)

அஷ்ஷேய்ஹ் முக்பில் இப்னு ஹாதி அல்வாதியீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள்

தமிழ் மொழியில்: அபூ அபதிர்ரஹ்மான் அப்துர்ரஸ்ஸாக் இப்னு முஹம்மத் நஸார் அஸ்ஸைலானீ

8. நாங்கள் தத்துவவியல் அறிவை வெறுக்கின்றோம். மேலும் நிச்சயமாக இந்த உம்மத்தை பிரிப்பதற்குறிய மிக மகத்தான காரணங்களில் ஒன்றாக அது இருக்கின்றது, என்றும் நாம் கருதுகின்றோம்.

9. மார்க்க சட்ட திட்டங்களை விளக்கும் (பிக்ஹ்) புத்தகங்களிருந்தும்; மேலும் குர்ஆன் விளக்கவுரை (தப்ஸீர்) புத்தகங்களிலிருந்தும்; மேலும் பழைய கதைகளிலிருந்தும், மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றிலிருந்தும், அல்லாஹ்வைத் தொட்டும் அல்லது ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தொட்டும் உறுதியானவற்றையே அன்றி வேறெதனையும் நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம். மேலும் நிச்சயமாக நாம் அவைகளைத் தூக்கி எறிந்து விட்டோம் என்பதோ, அல்லது நிச்சயமாக நாம் அவைகளை விட்டும் தேவையற்று இருக்கின்றோம் என்று நாம் எண்ணுகின்றோம் என்பதோ இதன் கருத்தல்ல. அவ்வாறல்லாமல், மார்க்க சட்ட திட்டங்களை அறிந்த எங்களுடைய அறிஞர்களினதும்; மேலும் அவர்களல்லாத வேறு அறிஞர்களினதும் விளக்கங்களிலிருந்து நாம் பிரயோசனம் பெறுகின்றோம். என்றாலும் சரியான ஒரு ஆதாரத்தைக் கொண்டே அன்றி மார்க்க சட்டத்தை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம் .

10. குர்ஆனை; அல்லது ஆதாரம் பிடிப்பதற்கு சீரான ஹதீஸையே அன்றி எமது நூல்களிலே நாம் எழுத மாட்டோம். மேலும் எமது பாடங்களிலே நாம் கற்றுக் கொடுக்க மாட்டோம். (அவைகளைக் கொண்டே அன்றி) நாம் எமது குத்பா பிரசங்கங்களை செய்ய மாட்டோம். அதிகமான எழுத்தாளர்களிடமும், பேச்சாளர்களிடமும் காணப்படுகின்ற பொய்யான கதைகளை, பலஹீனமான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களைக் கொண்டும் எழுதுவதையும், பேசுவதையும் அவர்களிடமிருந்து நாம் வெறுக்கின்றோம்.

11. எந்த ஒரு முஸ்லிமையும், அல்லாஹ்வைக்கொண்டு இணைவைப்பது அல்லது தொழுகையை விடுவது; இன்னும் மதம் மாறுவது போன்ற பாவங்களைக் கொண்டே அன்றி வேறு எந்த ஒரு பாவத்தைக்கொண்டும் அவன் இறை நிராகரிப்பாளன் என்று நாம் கூற மாட்டோம். அல்லாஹ் எங்களையும்; உங்களையும் அவைகளை விட்டும் பாதுகாப்பானாக!

12. நிச்சயமாக அல் குர்ஆன் அல்லாஹ்வுடைய பேச்சாகும்; அது படைக்கப்பட்டதல்ல என்று நாம் விசுவாசங்கொள்கின்றோம்.

13. எந்த ஒரு முஸ்லிமாக இருந்தாலும் அவருடன் சத்தியத்திலே உதவி புரிவது கடமையாகும் என்று நாம் காண்கின்றோம். மடமைக்கால அழைப்புக்களிலிருந்து அல்லாஹ்விடத்தில் நாம் நிரபராதிகளாக ஆகிவிடுகின்றோம்.

14. முஸ்லிம்களின் ஆட்சியாளர்கள், அவர்கள் முஸ்லிம்களாக இருக்கும் காலமெல்லாம், நாம் அவர்களுக்கு எதிராக வெளியேறுவதை எமது கொள்கையாக கருத மாட்டோம். மேலும் ஆட்சி கவிழ்ப்புகள் (சமூகத்தை) சீர் செய்வதற்குறிய ஒரு காரணமாகும் என்று நாம் கருத மாட்டோம். மாறாக அது சமூகத்தை சீர் கெடுக்கும் ஒரு காரணமாகும் . “அதன்” என்று சொல்லப்படக்கூடிய ஊருடைய ஆட்சியாளர்களைப் பொறுத்தமட்டில்; அவர்கள் நாத்திகத்திலிருந்தும் மேலும் சோசலிசத்திலிருந்தும் மேலும் இறை நிராகரிப்பின் தலைவர்களான லெனின், கால்மார்க்ஸ் மேலும் இவர்கள் இருவருமல்லாதவர்களையும், வணங்குவதின் பக்கம் மக்களை அழைப்பதிலிருந்தும் அல்லாஹ்விடம் தவ்பா செய்து மீளும் வரைக்கும் அவர்களுடன் கட்டாயமாக போரிட வேண்டும் என்று நாம் கருதுகின்றோம்.

* அடிக்குறிப்பு: அவர்களை அல்லாஹ் கடுமையான; சக்தி வாய்ந்த பிடியாக பிடித்து விட்டான். இப்போதய நிலமையை பொறுத்தமட்டில்; அது இஸ்லாமிய அரசாங்கமாக இருந்துக்கொண்டிருக்கின்றது.

இன்ஷாஅல்லாஹ்

தொடரும்…

One comment

  1. RASHID RAHMATHULLHA

    ALLAHOO AKBAR

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *