Featured Posts
Home » இஸ்லாம் » அல்குர்ஆன் » நீதியான அறிஞர்கள் [அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்]

நீதியான அறிஞர்கள் [அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்]

3:18 – “நிச்சயமாக (உண்மையாக) வணங்கப் படத் தகுதியானவன் தன்னைத் தவிர வேறு யாருமில்லை என்று நீதியை நிலைநாட்டி யவனாக அல்லாஹ் சாட்சி கூறுகிறான். மேலும், வானவர்களும் அறிவுடையோரும் (சாட்சி கூறுகின்றனர். உண்மையாக) வணங்கப்படத் தகுதியானவன் அவனைத் தவிர வேறு யாருமில்லை. அவன் யாவற்றையும் மிகைத்த வனும் ஞானமிக்கவனுமாவான்.”

இந்த வசனம் அறிவின் சிறப்பை விளக்குகின்றது. அதே நேரம் ஏகத்துவத்தின் உண்மைத் தன்மையையும் விளக்குகின்றது. அல்லாஹ்வுடனும் மலக்குகளுடனும் அறிஞர்கள் இங்கே இணைத்துப் பேசப்படுகின்றனர். அதே வேளை எல்லா அறிஞர்களும் இந்த சிறப்பைப் பெற முடியாது. அறிவுடன் நீதியான நிலைப்பாடும் இருக்க வேண்டும் என்பதும் உணர்த்தப்படுகின்றது.

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே என அல்லாஹ்வும் மலக்குகளும் சாட்சி சொல்லும் அதே வேளை நீதியான, நியாயமான பார்வையுடைய அறிஞர்களும், இறைவன் ஒருவன்தான் என்ற ஏகத்துவக் கோட்பாடுதான் உண்மையானது என்று சாட்சி சொல்வார்கள் என இந்த வசனம் கூறுவதன் மூலம் நீதியான, நியாயமான அறிவுடையோர் பல தெய்வ வழிபாட்டை ஆதரிக்க மாட்டார்கள் என்பதையும் உணர்த்தி நிற்கின்றது.

விதண்டாவாதம் செய்பவர்களுடன் விவாதிக்க வேண்டிய அவசியமில்லை:

3:20 – (நபியே!) உம்மிடம் அவர்கள் தர்க்கித்தால், ‘என் முகத்தை அல்லாஹ்வுக்கே அடிபணியச் செய்துவிட்டேன்ளூ என்னைப் பின்பற்றுவோரும் (அவ்வாறே செய்து விட்டனர்)’ என்று கூறுவீராக! வேதம் கொடுக்கப்பட்டோரிடமும் (எழுத்தறிவற்ற) உம்மிகளிடமும் முஸ்லிம்களாகிவிட்டீர்களா? என்று கேட்பீராக! அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் நிச்சயமாக அவர்கள் நேர்வழி பெற்றுவிட்டனர். அவர்கள் புறக் கணித்தால், நிச்சயமாக எடுத்துரைப்பதுதான் உம்மீதுள்ள கடமையாகும். மேலும், அல்லாஹ் அடியார்களைப் பார்ப்பவனாவான்.

விவாதிப்பவர்களுடனெல்லாம் எதிர்வாதம் செய்து கொண்டே இருக்க வேண்டும். அதுதான் ஒருவன் சத்தியத்த்pல் இருக்கின்றான் என்பதற்கான சான்று என சிலர் நினைக்கின்றனர். அது தவறானது என்பதை இந்த வசனம் உணர்த்துகின்றது.

நபி(ஸல்) அவர்களுடன் காபிர்களும் வேதம் கொடுக்கப்பட்டவர்களும் தர்க்கம் செய்தால் எதிர்வாதம் செய்யாமல் நானும் என்னைப் பின்பற்றுபவர்களும் அல்லாஹ்வின்பாலே எமது முகத்தைத் திருப்பிவிட்டோம். நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கின்றீர்களா? என்று கேட்கச் சொல்கின்றது.

எனவே, விவாதம் செய்தால் எதிர்வாதம் செய்துதான் ஆக வேண்டும் என்பதற்கில்லை என்பதை புரியலாம்.

ஈஸா நபி விடயத்தில் தர்க்கம் செய்பவர்களுடன் விவாதம் செய்ய கட்டளை யிடாமல் ‘முபாஹலா’ அழிவுச் சத்தியத்திற்கு அழைக்குமாறு 3:61 வசனம் கட்டளையிடுகின்றது.
அல்லாஹ்விடத்தில் தர்க்கிப்பவர்களிடம் எங்கள் செயல்கள் எங்களுக்கு, உங்கள் செயல்கள் உங்களுக்கு எனக் கூறுமாறு குர்ஆன் கட்டளையிடுகின்றது. (பார்க்க 2:139)

எனவே, விவாதத்திற்கு அழைப்பவர்கள் அல்லது விவாதிக்க முற்படுபவர்களுடனெல்லாம் விவாதித்துத்தான் ஆக வேண்டும் என்பதற்கில்லை. அழைப்பவர்களுடனெல்லாம் விவாதிக்கச் செல்வது சத்தியத்திறகான அளவு கோலும் அல்ல என்பதை இவற்றிலிருந்து புரியலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *