Featured Posts
Home » மீடியா » பதிவிறக்கம் » முஸ்லிம் நரகில் நிரந்தரமாக இருப்பானா? eBook

முஸ்லிம் நரகில் நிரந்தரமாக இருப்பானா? eBook

بسم الله الرحمن الرحيم
முஸ்லிம் நரகில் நிரந்தரமாக இருப்பானா?

இணைவைத்தல் கொலை செய்தல் தற்கொலை செய்தல் வட்டி வாங்குதல் விபச்சாரம் புரிதல் மது குடித்தல் மற்றும் பல்வேறு தீமையான காரியங்களை அல்லாஹ் தடைசெய்துள்ளான்.

அடியான் உலகில் வாழும்போதே தான் செய்த பாவத்திலிருந்து விலகி அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால் அல்லாஹ் இணைவைப்பு உட்பட அனைத்து பாவங்களையும் மன்னித்துவிடுகிறான். ஆனால் பாவத்திலிருந்து விடுபடாமலும் மனம் திருந்தாமலும் மரணித்தால் அவனை மன்னிப்பதும் மன்னிக்காமல் தண்டிப்பதும் இறைவனுடைய தனிப்பட்ட விருப்பமாகும்.

அல்லாஹ்வுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதியான இணைவைப்பை செய்தவர் அதிலிருந்து மீளாமல் அதேக் கொள்கையில் மரணித்தால் அவனை இறைவன் மன்னிக்கவேமாட்டான். அவன் நரகில் என்றென்றும் நிரந்தரமாக கிடப்பான்.

இணைவைப்பு அல்லாத வேறு பெரும்பாவங்களை செய்தவர் பாவமன்னிப்புத் தேடாமல் மரணித்தால் அல்லாஹ் நாடினால் அவரை அவன் மன்னிக்கலாம். அவன் நாடினால் சிறிது காலம் நரகில் தண்டிக்கலாம். அவர் அல்லாஹ்வுக்கு இணைவைக்காமல் அவனை மட்டும் வணங்கியதற்காக மறுபடியும் அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தை வழங்குவான். இணைவைப்பு அல்லாத பாவங்கள் எதுவானாலும் அப்பாவத்தில் அல்லாஹ் இவ்வாறே நடந்துகொள்கிறான்.

எனவே இந்த அடிப்படையில் ஒரு முஸ்லிம் வட்டி விபச்சாரம் மது கொலை கொள்ளை தற்கொலை போன்ற எந்த பாவத்தை செய்தாலும் இதற்கு அல்லாஹ் அவனுக்கு நிரந்தர நரகத்தை வழங்கமாட்டான். அவன் நாடினால் இவரை மன்னித்து நரகத்திற்கு அனுப்பாமல் சுவனத்திற்கு நேரடியாக அனுப்பலாம். அவன் நாடினால் இவர் செய்த பாவத்திற்காக சிறிதுகாலம் நரகில் தண்டித்துவிட்டு பிறகு சுவனத்திற்குள் நிச்சயம் அனுப்புவான். ஆனால் நிரந்தர நரகம் என்பது அவனுக்கு இல்லை.

அல்லாஹ் மறுமையில் நடந்துகொள்ளும் இவ்விதம் பற்றி நாம் யாரும் சுயமாக அறிந்துகொள்ள முடியாது. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் இதுபற்றி கூறினால் அன்றி இதை யாராலும் அறிந்துகொள்ளவோ இது பற்றி கருத்து தெரிவிக்கவோ முடியாது.

அடியார்கள் செய்த பாவங்களில் அல்லாஹ் மறுமையில் இவ்வாறே நடந்துகொள்வதாக அல்லாஹ் கூறியுள்ளான். அவனுடைய தூதர் (ஸல்) அவர்களும் இவ்வாறே கூறியுள்ளார்கள். இதற்குப் பிறகு இவ்விசயத்தில் மாற்றுக்கருத்து கூறுபவர்கள் வழிகேடர்கள் ஆவர். மார்க்கச் சான்றுகளில் பலவற்றை கண்டுகொள்ளாமல் விடுவதும் சிலவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு தன் கருத்திற்கு தோதுவாக அவற்றுக்கு விளக்கம் கொடுப்பதும் வழிகேடர்களின் வழியாகும்.

இஸ்லாமிய வரலாற்றில் கவாரிஜ்கள் முஃதஸிலாக்கள் போன்ற வழிகேடர்கள் இவ்விசயத்தில் தவறான கொள்கையை கொண்டிருந்தார்கள். அதாவது இணைவைப்பு அல்லாத வேறு பெரும்பாவம் செய்தவன் முஸ்லிம் இல்லை என்றும் அவன் நரகத்தில் நிரந்தரமாக கிடப்பான் என்றும் கூறிவந்தனர்.

இது குா்ஆன் சுன்னாவிற்கு எதிரான நம்பிக்கை என்பதால் அன்றிலிருந்தே சத்தியத்தில் இருந்த நபித்தோழர்கள் – அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாத்தினர் – சலஃபுகள் இக்கருத்தை எதிர்த்து வந்தனர். எனவே பெரும்பாவம் செய்தவன் நரகில் நிரந்தரமாக கிடப்பானா? என்ற இவ்விசயம் முஸ்லிம்களின் கொள்கைப் பிரச்சனையாக உருவானது.

இந்த தவறானக் கருத்து தற்காலத்தில் சிலரிடம் தோன்றுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் இது குறித்து குா்ஆன் ஹதீஸ் ஆதாரங்களுடன் அறிந்துகொள்வோம்.

இதற்கு முன்பு இந்த சரியான நம்பிக்கைக்கு மாற்றமான கருத்து தவறுதலாக என்னிடம் ஏற்பட்டது. குறிப்பாக வட்டித் தொடர்பாக நான் எழுதிய நூலில் நவீன வடிவங்களில் வட்டி என்ற நூலில் வட்டி வாங்குவோர் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள் என தவறுதலாக குறிப்பிட்டிருந்தேன். இது தவறான கருத்து என்பதை சகோதரர்கள் என் கவனத்திற்கு கொண்டுவந்தனர். அல்லாஹ் அவர்களுக்கு அருள்புரிவானாக!

நம்மிடம் ஏற்பட்ட தவறை ஒப்புக்கொண்டு சத்தியத்தை மறைக்காமல் யாருக்கும் அஞ்சாமல் அதை தெளிவுபடுத்துவது நல்லடியார்களின் பண்பாகும். இக்கட்டுரை எழுதப்பட்டதற்கு இதுவே முக்கிய காரணமாகும்.
இப்படிக்கு
அப்பாஸ் அலீ MISC

இஸ்லாமிய வரலாற்றில் கவாரிஜ்கள் முஃதஸிலாக்கள் போன்ற வழிகேடர்கள் இவ்விசயத்தில் தவறான கொள்கையை கொண்டிருந்தார்கள். அதாவது இணைவைப்பு அல்லாத வேறு பெரும்பாவம் செய்தவன் முஸ்லிம் இல்லை என்றும் அவன் நரகத்தில் நிரந்தரமாக கிடப்பான் என்றும் கூறிவந்தனர். மேலும் படிக்க இங்கு கிளிக் செய்யவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *