Featured Posts
Home » பொதுவானவை » அறிவிப்புகள் » அல்-கோபர் தர்பியா-3 நிகழ்ச்சி (பாடத்திட்டம் – Syllabus)

அல்-கோபர் தர்பியா-3 நிகழ்ச்சி (பாடத்திட்டம் – Syllabus)

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
தம்மாம், கோபர், ராக்கா, தஹ்ரான், ரஹிமா மற்றும் ஜுபைல் பகுதியில் வாழும் தமிழறிந்த சகோதர சகோதரிகளுக்கான இஸ்லாமிய மார்க்கத்தை அதன் மூல ஆதாரங்களிலிருந்து அறிந்து கொள்ள சிறந்ததோர் வாய்ப்பு! (ஏனைய எமது இஸ்லாம்கல்வி இணையதள வாசகர்களுக்கு இந்த வகுப்பின் வீடியோ பதிவுகளை உடனுக்குடன் பதிவேற்றும் செய்யப்படும் – இன்ஷா அல்லாஹ்.

எங்கே?
நெறிப்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தின் அடைப்படையில் நான்கு மாத கால (எட்டு வாரங்கள் கொண்ட) சிறப்பு தர்பியா நிகழ்ச்சியை அல்-கோபர் (ஹிதாயா), தஹ்ரான் (சிராஜ்), ராக்கா மற்றும் தம்மாம் (ICC) தாஃவ நிலையங்கள்; சார்பாக 2017 ஆண்டு ஏப்ரல் மாதம் 28 தேதி முதல் அல்-கோபர் நகரில் அமைந்துள்ள அல்-பஷாயிர் என்ற அரபி பாடசாலையில் (பிரசித்தி பெற்ற Al-Rashid Mall அருகில்) நடைபெற்று வருகின்றது.

எப்பொழுது?
பிரதி மாதம் 2வது மற்றும் 4வது வெள்ளிகிழமைகளில் ஜும்ஆ தொழுகைக்கு பிறகு இந்த வகுப்பு நடைபெறும்.

இந்த தர்பியாவின் வகுப்பு ஆசிரியர்கள்:

மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி
அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம்

மவ்லவி. அப்பாஸ் அலி MISC
அழைப்பாளர், அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா)

மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன்
அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்

மவ்லவி. மஸ்வூத் ஸலபி
அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்

மவ்லவி. அப்துல் அஜிஸ் முர்ஸி
அழைப்பாளர், இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) – தம்மாம்

மவ்லவி. அஜ்மல் அப்பாஸி
அழைப்பாளர், தஹ்ரான் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (சிராஜ்)

எப்படி?
நான்கு பிரதான தலைப்புகளில் இந்த தர்பியா வகுப்பு நடத்தப்படுகின்றது.

1. அகீதா (இஸ்லாமிய அடிப்படைக்கொள்கை) 2. பிஃக்ஹ் (மார்க்க சட்ட விளக்கம்)
3. அஹ்லாக் (ஒழுக்கம் மற்றும் பண்பாடு) 4. தப்ஃஸீர் (திருக்குர்ஆன் விளக்கவுரை)

1. அகீதாவிற்கான பாடத்திட்டம்:
நூல்: பிஃக்ஹுல் பிஃதன் – குழப்பங்கள் பற்றிய தெளிவு
ஆசிரியர்: ஸுலைமான் இப்னு அஸ்-ஸலீம் அல்-ரிஹைலீ

வாரம்-1: பிஃத்னா பற்றிய முன்னுரை
வாரம்-2: பிஃத்னாவைப் புரிந்து கொள்ள ஆறு அடிப்படைகள்
வாரம்-3: பிஃத்னாவைப் புரிந்து கொள்ளும் அடிப்படைகள்-1
வாரம்-4: பிஃத்னாவைப் புரிந்து கொள்ளும் அடிப்படைகள்-2
வாரம்-5: பிஃத்னாவைப் புரிந்து கொள்ளும் அடிப்படைகள்-3
வாரம்-6: பிஃத்னாவைப் புரிந்து கொள்ளும் அடிப்படைகள்-4
வாரம்-7: சில குறிப்பிட்ட பிஃத்னாக்கள் பற்றிய விளக்கம்
வாரம்-8: இதுவரை நடைபெற்ற பாடத்தின் சுருக்கம்

2. பிஃக்ஹ் (மார்க்க சட்ட விளக்கம்)
நூல்: அத்ததல்கீஸாத் லிஜுல்லி அஹ்காமிஸ் ஜகாத்
(ஜகாத் தொடர்பான முக்கிய சட்டங்கள்)
ஆசிரியர்: அப்துல் அஸீஸ் பின் முஹம்மத் ஸல்மான்

வாரம்-1: ஜகாதின் அடிப்படைகளும் முன்னுரையும்
வாரம்-2: ஜகாத் கடமையாகும் சொத்துக்கள்
வாரம்-3: தங்கம், வெள்ளி, புதையல் போன்றவற்றுக்கான ஜகாத்
வாரம்-4: ஜகாத் பெறத்தகுதியுடையவர்கள்
வாரம்-5: ஜகாத் வழங்கப்படக் கூடாதவர்கள்
வாரம்-6: எப்போது ஜகாத் கொடுக்க வேண்டும்
வாரம்-7: ஜகாத் தொடர்பான சில கேள்விகள்
வாரம்-8: இதுவரை நடைபெற்ற பாடத்தின் சுருக்கம்

3. அஹ்லாக் (ஒழுக்கம் மற்றும் பண்பாடு)
நூல்: ரவ்லதுல் உகலா வநுஸ்ஹதுல் புழலா
ஆசிரியர்: இமாம் அபூ ஹாதிம் இப்னு ஹிப்பான் அல்-புஸ்தி (ரஹ்)

வாரம்-1: இறை அச்சத்துடன் அந்தரங்கத்தை சீர் செய்தல்
வாரம்-2: அறிவைத் தேடுவதன் அவசியம்
வாரம்-3: மௌனமாக இருப்பதும், நாவைப் பேணுவதும்
வாரம்-4: உண்மையைப் பேசுதல் பொய் சொல்லாதிருத்தல்
வாரம்-5: வெட்கமும், மானக்கேடானவைகளும்
வாரம்-6: பணிவும் பெருமையும்
வாரம்-7: நல்ல விடயங்களில் மனிதர்களை நேசித்தல்
வாரம்-8: ஸலாத்தைப் பரப்புதல், மலர்ந்த முகத்துடன் பழகுதல்,
நகைச்சுவையில் ஆகுமானவையும். தடுக்கப்பட்டவையும்.

4. தப்ஸீர் – தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய வசனங்களில் விரிவுரை
நூல்: தப்ஸீர் இப்னு கஸீர் (ரஹ்)
ஆசிரியர்: இமாம். இப்னு கஸீர் (ரஹ்)

வாரம்-1: ஆயத்துல் குர்ஸீ விளக்கவுரை (பாகம்-1)
வாரம்-2: ஆயத்துல் குர்ஸீ விளக்கவுரை (பாகம்-2)
வாரம்-3: சூறத்துல் பகராவின் இறுதி வசனங்களின் விளக்கவுரை (பாகம்-1)
வாரம்-4: சூறத்துல் பகராவின் இறுதி வசனங்களின் விளக்கவுரை (பாகம்-2)
வாரம்-5: சூறா ஆலு இம்ரானின் இறுதி 10 வசனங்களின் விளக்கவுரை (பாகம்-1)
வாரம்-6: சூறா ஆலு இம்ரானின் இறுதி 10 வசனங்களின் விளக்கவுரை (பாகம்-2)
வாரம்-7: சூறா கஹ்பிஃன் முதல் 10 வசனங்களின் விளக்கவுரை (பாகம்-1)
வாரம்-8: சூறா கஹ்பிஃன் முதல் 10 வசனங்களின் விளக்கவுரை (பாகம்-2)

சிறப்பு ஏற்பாடுகள்:
• இந்த தர்பியா வகுப்பில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் தரமான மதிய உணவு மற்றும் தேனீர் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
• பெண்களுக்கு தனி இடவசதி மற்றும் குழந்தைகளுக்கு (வகுப்புகள் நடைபெறும் சமயம் சிறுவர் ரூ சிறுமியர்களுக்கு தனி அமர்வு)
• 8 வாரங்களுக்கு பின் நடைபெறும் தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

கலந்துகொள்ள விருப்பமுடையவர்கள் செய்ய வேண்டியவை:
தொடர்ச்சியாக அனைத்து தர்பியா வகுப்பில் கலந்து கொள்ள முடியுமாயின் கீழ்கண்ட அலைபேசியில் எதாவது ஒன்றில் உங்கள் வருகை உறுதிசெய்து கொள்ளவும். அத்துடன் மேலகதிக விவரங்கள் தெரிந்துகொள்ளலாம்.

0599148665 | 0558090443 | 0596481392 | 0534802476 | 0504774197

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *