Featured Posts
Home » இஸ்லாம் » ஒழுக்கம் » சத்தியத்தை அலட்சியமாக்காதீர்கள்

சத்தியத்தை அலட்சியமாக்காதீர்கள்

இஸ்லாத்தில் ஓர் விடயத்தை குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான (ஸஹீஹான) ஹதீஸ்களின் மூலம் எடுத்துக்காட்டப்பட்டால்

செவிமடுத்தோம் கட்டுப்பட்டோம் என்ற நிலையே ஓர் உண்மையான முஃமினின் நிலைப்பாடாகும்.

إِنَّمَا كَانَ قَوْلَ الْمُؤْمِنِينَ إِذَا دُعُوا إِلَى اللَّهِ وَرَسُولِهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ أَن يَقُولُوا سَمِعْنَا وَأَطَعْنَا ۚ وَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ

முஃமின்களிடம் அவர்களுக்கிடையே (ஏற்படும் விவகாரங்களில்) தீர்ப்புக் கூறுவதற்காக அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் (வரும்படி) அழைக்கப்பட்டால், அவர்கள் சொல்(வது) எல்லாம்
“நாங்கள் செவியேற்றோம், (அதற்குக்) கீழ்படிந்தோம்” என்பது தான்; இ(த்தகைய)வர்கள் தாம் வெற்றியடைந்தவர்கள்.
(அல்குர்ஆன் : 24:51)

அதை விட்டு விட்டு,
– அந்த மவ்லவி இப்படி சொன்னாரு?
– அப்ப எங்களுக்கு முன் செஞ்சவரெல்லாம் முட்டாலா?
– ஏன் மார்க்கத்ல கொலப்பத்த உண்டு பன்ரீங்க?
– ஒங்களுக்கு மட்டுமா மார்க்கம் தெரியும் எங்களும் மார்க்கம் தெரியும்?
– வந்துட்டானுகள் எங்களுக்கு மார்க்கத்த சொல்லி தர?
– ஒகட வேலய பாத்துட்டு, பொத்திட்டு போரிங்களா?
– நேத்து மொலச்ச காலான் எங்களுக்கு சொல்ல வந்துட்டு?

போன்ற வார்த்தைகளை செவிமடுப்பது தற்காலத்தில் சர்வசாதாரண விடயமாகப் போய்விட்டது.

இதன் பாரதூரத்தை நாம் அறிந்தால் ஏன் நான் மௌனமாக இருந்திருக்கக் கூடாதா என முஸ்லிமாக பிறந்த ஒவ்வொருவரும் கவலைப்படுவான்.

இப்படிப்பட்ட வார்த்தைகளெல்லாம் பெருமையின் வெளிப்பாடே அன்றி வேரொன்றுமில்லை.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் “பெருமை என்பது : சத்தியத்தை வெறுப்பது, மக்களை இழிவாகக் கருதுவது.”
மேலும் “பெருமை கொள்பவன் சுவனம் செல்லமாட்டான் என்றும் கூறினார்கள்.”

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ رضي الله عنه ، عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يَدْخُلُ الْجَنَّةَ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ كِبْرٍ». قَالَ رَجُلٌ: إِنَّ الرَّجُلَ يُحِبُّ أَنْ يَكُونَ ثَوْبُهُ حَسَنًا وَنَعْلُهُ حَسَنَةً؟ قَالَ: «إِنَّ اللَّهَ جَمِيلٌ يُحِبُّ الْجَمَالَ، الْكِبْرُ: بَطَرُ الْحَقِّ، وَغَمْطُ النَّاسِ» [مسلم].

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : “எவனுடைய உள்ளத்தில் ஓர் அணுவளவேனும் பெருமை இருக்கின்றதோ அவன் சொர்க்கம் நுழையமாட்டான்” என்றார்கள்.
அதற்கு ஒருவர் : “ஓர் மனிதன் தனது ஆடையும், பாதணியும் அழகாக இருப்பதை நாடுகிறார்” என்று கேட்டார்.
அதற்கு நபியவர்கள் : “நிச்சயமாக அல்லாஹ் அழகானவன் அழகையே விரும்புகிறான்.” (மேலும்) பெருமை என்பது : ” சத்தியத்தை வெறுப்பதும், மனிதர்களை இழிவாகக் கருதுவதுமாகும்” என்றார்கள்.
(ஆதாரம் : முஸ்லிம், அபூதாவூத்)

பெருமை அல்லாஹ்வுக்குரிய பண்பாகும். எனவே பெருமை கொள்பவனை அல்லாஹ் நேசிப்பதில்லை.

وَلَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا ۖ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ

“(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைக்காரர், ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
(அத்தியாயம் -லுக்மான்- : 31 , வசனம் : 18)

எனவே , அல்லாஹ்வின் நேசம் வேண்டுமென்பவர்கள், சுவனம் செல்ல வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கும் ஒவ்வொரு முஸ்லிமும் சத்தியத்தை நேசிப்பதுடன் அதனை பின்பற்றவும் வேண்டும்.

By : Razeen Akbar
(2015/05/21)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *