Home » பொதுவானவை » பீஜே/ததஜ » பீ ஜேயின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு விமர்சன ஆய்வு

பீ ஜேயின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு விமர்சன ஆய்வு

அல்ஹம்துலில்லாஹ் இன்று ஞாயிற்றுக்கிழமை 21-05-2016 ம் திகதி ஸஊதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் அமைந்திருக்கும் மன்னர் ஸஊத் பல்கழைக்கழகத்தின் கல்விக் கல்லூரியில் இஸ்லாமிய கற்கைகளுக்கான பிரிவில் தப்ஸீர் துறையில் முதுமானிக் கற்கைநெறிக்கான ஆய்வைச் சமர்ப்பிக்கப்பட்ட தருணத்தில் ஆய்வைக் கலந்துறையாடிய தப்ஸீர் துறையில் உலகப்புகழ்பெற்ற அறிஞரும் அத்துறையில் பல ஆக்கபூர்வமான திட்டங்களை உலகுக்குச் சமர்ப்பித்தவருமான அஷ்ஷைக் அப்துர்ரஹ்மான் சிஹ்ரி அவர்கள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுக்கொண்டிருக்கும் அல்முக்தஸர் பித்தப்ஸீர் என்ற நூலை தமிழில் மொழிபெயர்ப்பதற்கான தனது விருப்பத்தை வெளியிட்டிருப்பது தமிழ் உலகுக்குக் கிடைத்த மிகப்பெரும் வரப்பிரசாதமாகும். ஏனெனில் அரபி மூலத்தில் உள்ள அப்புத்தகம் இதுவரைக்கும் எந்தவொரு புத்தகமும் ஆய்வுசெய்யப்படாத அளவு மிகத்துல்லியமாக பல்துறை அறிஞர்களால் மீளாய்வு செய்யப்பட்ட ஒரே புத்தகம் என்ற சிறப்பு அதற்கு உண்டு. இச்சந்தர்ப்பம் நமக்குக் கிடைத்திருப்பது ஆய்வுக்குக்கிடைத்த முதல் பயனாகக் கருதப்படுகிறது. அதற்குரிய முழுச்செலவையும் அவர்களே ஏற்றுக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். < >

சகோதரர் பீ ஜே அவர்களின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு மற்றும் விரிவுரை சம்பந்தமான
600 பக்கங்களைக் கொண்ட விமர்சன ஆய்வின் முடிவுகளில் சில!!!

அறிஞர்களது பேச்சு வழக்கில் வந்த வார்த்தைகளுக்கு அகராதியில் அர்த்தம் தேடியாவது தமது தவறைச் சிலர் மறைக்கப்பார்க்கின்றனர். அதே முறையில் பின்வரும் அவர்களது வார்த்தைகளுக்கும் கருத்தை அவராகவே முன்வைப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ليس عنده معرفة بأصول شرعية ولا بأصول التفسير ولا علوم القرآن والقراءات والقراءات فيها صفر
சரியான கருத்து அவரிடம் மார்க்க அடிப்படைகள் தப்ஸீர் அடிப்படைகள் குர்ஆனிய கலைகள் பற்றிய அறிவு இல்லை. கிராஅத் கலையில் அவர் பூச்சியம்.

சாதகங்கள்

1. ஆசிரியரின் நுணுக்கமான பாராட்டத்தக்க சில புரிதல்கள்
2. ஆதாரமற்ற ஹதீஸ்கள் மிகக்குறைவு
3. ஓரிறைக் கொள்கைக்கு முக்கியத்துவம்
4. வழிதவறிய கூட்டங்களுக்கான மறுப்புக்கள்

பாதகங்கள்;
5. ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மறுத்தல்
6. தவறான மொழிபெயர்ப்பு முறைகள்
7. அறிவியல் சான்றுகள் என்ற பெயரில் வசன நடைக்கும் அறபு மொழி மற்றும் நல்லறிஞர்களின் விளக்கங்களுக்கும் முரணாக அமைந்த ஆய்வுகள்
8. முன் பின் முரணான கருத்துக்கள்
9. அல்குர்ஆனியக் கலைகள் சார்ந்த பாரிய தவறுகள்
10. தப்ஸீரின் அடிப்படைகள் பற்றிய அறிவீனம்
11. வரலாற்றில் யாரும் கூறாத தவறான சொந்த விளக்கங்கள்
12. அல்லாஹ்வின் சில பண்புகளுக்கு வலிந்துரை போன்ற அகீதா ரீதியான தவறுகள்
13. பிக்ஹ் ரீதியான தவறுகள்
14. தவறான விமர்சனங்கள்
15. ஆய்வுமுறைக் குறைபாடுகள்
16. தனது சொந்தக் கருத்தை மார்க்கத்தின்; அடிப்படையாக்கி அல்குர்ஆனின் நேரடிக் கருத்துக்களை திரிபுபடுத்தல்
17. சில கேள்விகளுக்குப் பதில் ஹதீஸில் இருக்கும் போது சொந்த விளக்கத்தின் அடிப்படையிலும் பைபிளின் அடிப்படையிலும் விளக்கம் கூறல்
18. ஊகத்தின் அடிப்படையில் விளக்கமளித்தல்
19. ஸஹாபாக்களின் கருத்துக்களை எடுப்பதில்லை என்று கூறிவிட்டு அவற்றை மேற்கோள் காட்டுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டமை.
20. அறிஞர்கள் கூறாதவற்றை அவர்களின் மீது கூறல்
21. அறிஞர்களின் கூற்றுக்களைப் பற்றிய தவறான புரிதல்
22. அல்குர்ஆன் வசனங்களுக்கிடையில் தேவையற்ற முரண்பாடுகளைத் தோற்றுவித்து மாற்றுவிளக்கம் கூறல்.
23. அஸ்அரிய்ய முஃதஸிலா சிந்தனைகளின் பாதிப்பு
24. நவீன பகுத்தறிவுவாத சிந்தனைப் பள்ளியின் தாக்கம்

Abdullah Uwais Meezani
(ஆய்வை சமர்ப்பித்த மாணவர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *