Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » ஏகத்துவம் மாத இதழ் ஆசிரியர்கள், மற்றும் ஆலோசனைக் குழுவினர்க்கு

ஏகத்துவம் மாத இதழ் ஆசிரியர்கள், மற்றும் ஆலோசனைக் குழுவினர்க்கு

Articleதிருந்தி, நம்பிக்கைகொண்டு பின்னர் நேர்வழியில் நடப்பவரை நிச்சயமாக நான் மன்னிப்பவானாக இருக்கிறேன் (20:82).

இறைவா! எங்களுக்கு சத்தியத்தை சத்தியமாகக் காட்டி அதை பின்பற்றும் பாக்கியத்தை எங்களுக்கு வழங்குவாயாக!

இறைவா! அசத்தியத்தை எங்களுக்கு அசத்தியமாகக் காட்டி அதிலிருந்து தவிர்ந்து கொள்ளும் பாக்கியத்தையும் எங்களுக்கு அருள்வாயாக!

ஏகத்துவம் மாத இதழ் ஆசிரியர்கள், மற்றும் ஆலோசனைக் குழுவினர்க்கு கே.எஸ். ரஹ்மத்துல்லா இம்தாதி ஸலாமுடன் எழுதிக்கொள்வது,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

உங்களின் ரமழான் மாத இதழின் 52-ம் பக்கம் ஜாக் பின்பற்றுவது… என்ற செய்திகளை படித்தேன். குர்ஆன், ஹதீஸ் அடிப்படிடையில் செயல்படுவதாக கூறும் உங்களின் நடையைக் கண்டேன். அதன் குறைகளை எழுதியாக வேண்டும் என்ற எண்ணம் வரவே இதை எழுதுகிறேன்.

‘ஜாக் பின்பற்றுவது… இஸ்ரேல் காலண்டரோ’ என்று எழுதிய நீங்கள் ‘முதல் பிறையா? மூன்றாம் பிறையா?……. முஹம்மது (ஸல்) அவர்களையும்… என்றும் எழுதியுள்ளீர்கள். உங்களுக்கு மறுப்பு எழுதும் நான் ஜாக்கில் அங்கம் வகிப்பதாலோ, அல்லது உங்கள் அமைப்பில் அங்கத்தினராக இல்லை என்பதாலோ இதை எழுதவில்லை. மாறாக, குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் நாட்களை கணிப்பதுதான் சரி என்ற கருத்தை ஆய்வு செய்ததால் எழுதுகிறேன். எனவே, நான் ஆய்வு குழுவில் கலந்து கொண்டு தெளிவுபெற்ற விஷயத்தை தாங்கள் கவனத்திற்க்கு கொண்டு வருகின்றேன். அதனை படித்துவிட்டு நிதானமாக பதில் தாருங்கள்.
அதற்கு முன்னால் உங்களை அறியாமலேயே… ஒரு விஞ்ஞானியாக சிந்தித்தால் சிரிப்பு வருகின்ற ஒரு தத்துவத்தை 54-ம் பக்கத்தில் ‘பிறை பார்க்கும் விஷயத்தில் யாரும் காலண்டரைப் பார்த்து முடிவு செய்வது கிடையாது….. ஸஹீஹான ஹதீஸ்கள்கூட குர்ஆனுக்கு (உங்கள் சிந்தனையில்) மோதுவதாக இருந்தால் எடுத்துக்கொள்ளக் கூடாது, ஸஹாபாக்களை பின்பற்றக்கூடாது என்றும், அப்படிச் சொல்பவர்கள் மத்ஹப் வாதி என்றெல்லாம் குறிப்பிடுகின்ற நீங்கள் ‘உமர் (ரலி) அவர்களின் கருத்தையும் உங்களுக்கு ஆதார பலமாக இழுத்துக்கொண்டீர்கள். உங்களைக் கேட்கிறேன், நோன்பிற்கும், பெருநாளுக்கும் காலண்டரைப் பார்த்து முடிவு செய்வதில்லை என்று எழுதியிருக்கிறீர்களே!

பிறை பார்த்துதான் நோன்பும், பெருநாளும் வைக்க வேண்டும் என்பதில் உங்களுக்கு தெளிவும், உறுதியும் இருந்தால் காலண்டரை எப்படி நீங்கள் அச்சிட்டீர்கள்? காலண்டர் என்றாலே 12 மாதங்கள் அடங்கியதுதானே! அந்த 12-ல் உள்ளதுதானே நோன்பும், பெருநாளும்.

பிறை பார்த்துத்தான் நோன்பும், பெருநாளும் மட்டும் முடிவு செய்வது என்றிருந்தால் உங்களின் இயக்கத்தின் விளம்பரத்துடன் ஹிஜ்ரி காலண்டர் எப்படிப் போட்டீர்கள்? மாதம் மாதம் பிறை பார்த்து வந்தால்தானே ரமழானைக் கண்டுபிடிக்க முடியும். உங்களுக்கு நீங்களே முரண்படுவது உங்களுக்குப் புரியவில்லையா? மட்டுமின்றி உங்கள் பார்வையில் நோன்பும் பெருநாளும் மட்டும்தான் பிறைபார்க்க வேண்டுமென்றால் மாதம் மாதம் 13, 14, 15 ஆகிய அய்யாமுல் ஃபீழ் நோன்பை எப்படி நோற்பது, துல்ஹஜ் 8-ம் நாள் ஹஜ்ஜுக்கு இஹ்ராம் கட்ட எதைப்பார்ப்பது? அவசரக்காரனுக்கு புத்தி மட்டு என்பார்கள். அதுபோன்று அவசரத்தில் கைபோன போக்கில் எழுதித் தள்ளியிருக்கிறீர்கள்.

அன்றாட முஸ்லிம் நாட்களை குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் நோன்பிற்கும், பெருநாளுக்கும் ஹிஜ்ரா அடிப்படையில் நாட்காட்டி போடுபவர்களை யூதயிசம், ஷியாயிசம் என்று எழுதியிருந்தீர்கள். நீங்கள் அல்லவா, அல்லாஹ்வையும், அவனது தூதரையும் இழிவுபடுத்தியுள்ளீர்கள் (நஊதுபில்லாஹ்).

விஷயத்திற்கு வருகிறேன்
நான்கைந்து ஆண்டுகளாக, நோன்பிற்கும், பெருநாளுக்கும் முஸ்லிம்கள் அன்றாட நாட்களை அறிந்து கொள்வதற்கும் காலண்டர் தயார் செய்தது யூதயிசமல்ல. தூய இஸ்லாமிய இசம்.. இதை நான் உங்களைப்போன்று……… கூறாமல், குர்ஆனையும், ஹதீஸையும் அடிப்படை ஆதாரமாக வைத்துக்கூறுகிறேன்.

‘அவனே சூரியனை வெளிச்சமாகவும், சந்திரனை ஒளியாகவும் ஆக்கினான். சந்திரனுக்கு பல படித்தரங்களை நிர்ணயித்தான், எனெனில் நீங்கள் பல ஆண்டுகளையும், கணக்கையும் அறிந்து கொள்வதற்காக….’ (10:5)

அல்லாஹ் வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் நிச்சயமாக அல்லாஹ்விடம் மாதங்களின் எண்ணிக்கை பண்ணிரண்டாகும்…’ (9:36)

‘சூரியனும் சந்திரனும், அதற்குரிய கணக்கின்படி சுழல்கின்றன’ (55:5)

‘முஹம்மதே! ஆவர்கள் பிறைபற்றி உம்மிடம் கேட்பார்கள், அவை மக்களுக்கு நாட்காட்டிகளாகும், மேலும் ஹஜ்ஜுக்குரிய (நாள்காட்டும்) என்று நீர் கூறுவீராக…’ (2:187)

‘நிச்சயமாக நாங்கள் எழுதப்படிக்கத் தெரியாத, கணக்குப்பார்க்கத் தெரியாத சமூகமாகும். எனவே மாதம் என்பது 29 அல்லது 30 நாள்கள் என கைகளை சைகை செய்து காட்டினார்கள் (புஹாரி)

எல்லாக் காலங்களிலும் சத்தியத்தை குர்ஆன், ஹதீஸ் வழியாக சரியாக ஆய்வு செய்யாத காலங்களில் மக்கள் ஒரே அணியாகவே இருந்து வந்திருக்கிறார்கள். குர்ஆன், ஹதீஸை சரியாக ஆய்வுசெய்து, விஷயங்களை முன்வைக்கும்போது, அவர்கள் அநாதைகளாகத்தான் இருந்து வந்திருக்கிறார்கள். நாம் தவ்ஹீதை, ஷிர்க்கை, சுன்னத்தை, பித்-அத்தை குர்-ஆன் ஹதீஸ் தெளிவில் எடுத்து வைத்தபோதும் நாமும் படு அநாதைகளாக இருந்தோம் என்பதெல்லாம் எப்படியோ, யாராலோ உங்களை மறக்க வைத்துள்ளது. குர்ஆன், ஹதீஸ் ஆய்வில் அநாதை ஆக்கப்படும் கருத்துத்தான் பிரச்சனையாக இருக்கும் என்பதை நினைவில் கொள்க!

1. நபி(ஸல்) அவர்கள் பிறையை எப்போது, எங்கு எப்படிப்பார்த்தார்கள்?
2. ஸஹாபாக்கள் ரமழானுக்கும் மட்டும் பெருநாளுக்கும் மட்டும் பிறையை எப்போது எங்கு பார்த்தார்கள்?
3. பிறை எங்கே உதிக்கிறது?. எங்கே மறைகின்றது?
4. ஹிஜ்ரா காலண்டரை நமதூரில் தயாரித்தவர்கள் யார்?
5. பிறையை பார்க்க வேண்டும் என்ற நீங்கள் எப்படி காலண்டர் போடுவதை சரி காண்கிறீர்கள்?
6. நீங்கள் சந்திரக் கணக்கை காலண்டரில் போட்டிருப்பது எந்த அடிப்படையில்?
7. மேகமூட்டம் ஏற்பட்டால்’ என்றால் எப்போது அது?
8. மேகமூட்டம் இல்லாமலிருந்தால் மாதம் எப்படி முடிவு செய்வது?
9. மாதம் 29 எப்போது? 30 எப்போது? என்று எப்படி முடிவு செய்வது?
10. ஷஃபானில் 29-ல் மட்டும் எப்படி நீங்கள் ஷஃபானை 29 என்று முடிவு செய்வீர்கள்?

அல்லாஹ் மிக அறிந்தவன்

அன்புடன் கே.எஸ். ரஹ்மத்துல்லாஹ்
சௌதி அரேபியா

13 comments

  1. assalamualaikkum moulavi rahmathulla imthathi, jazakkallahu khair.

  2. அஸ்ஸலாமு அலைக்கு{வரஹ்)

    இது போன்ற விசயங்களை சரியான நேரத்தில் கூறிப்பிட வேண்டும். காரணம் மனம் போன போக்கில் கைக்கு வந்ததை எழுதி தன்னுடைய கருத்துகளை தெரிவிப்பதற்காக பத்திரிக்கையில் எழுதி விடுகிறார்கள்.

    நாங்கள் சொல்வதுதான் தவ்ஹீத் என்று இல்லாமல், இஸ்லாம் என்ன சொல்கிறது, என்ன போதிக்கிறது என்று படிப்பதற்காக மக்கள் வாங்கி பயனடைய வேண்டும் என்ற வகையில் எழுதவேண்டும்.

    அல்லாஹ் உங்களையும் என்னையும் நேர் வழியில் வாழ வழி செய்ய வேண்டும். எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.

    அன்புடன்,
    நெல்லை செய்யத்

  3. பிறகு ஏன் சவுதி அரேபியாவில் காலண்டர் படி இல்லாமல் பிறை பார்த்து தான் நோண்பு வைக்கிறார்கள்? (காண்க : http://www.fatwa-online.com/news/index.htm)

    அது மட்டும் இல்லாமல், ஜாக் தனியாக் பெருநாள் கொண்டாடுவது, கருத்து வேறுபட்டு பிறிவது அல்லவா? புலூகுல் மராமில் 510 ஆவது ஹதீஸ், மக்கள் என்று குர்பானி கொடுக்கிறார்களோ அன்றே குர்பானி கொடுக்கும் நாள், மக்கள் என்று நோண்பு பிடிக்கிறார்களோ அன்றே நோண்பு பிடிக்கும் நாள் என உள்ளது அல்லவா?

    இப்படிக்கு
    எந்த அமைப்பயும் சேராத அடியான்
    -நவாஸ்

  4. mariyaadaikkuriya moulavi imthaadi avarhalukku miha nandri. jazaakallahu khair.

    Neengal ippadi velippadaiyaah eludi thelivu paduththiyadu mihavum varavaetkath thakkadu.

    adae pole, ungal JAQH ameer munnukkup pin muranaaha eludi “sodappiyapoludum” idu maadiri velippadaiyaaha eludiyirundaal innum nandraaha irundirukkum.

    appodu thaan neengal iyakkaththitku appaatpatta, niyaamaana karuthu kooruvubavar endru emmaip poandra inda iyakka jaahiliyyaththil sikkaadavarhal nambuvoam.

    ungal maarkka saevai pala kaalam thodara irayvanai vaenduhiraen.

  5. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்

    அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிய வேண்டும்.
    இந்தக் கட்டுரையை (கடிதத்தை) மின்னஞ்சல் மூலம் சகோதரர் ஜைனுல் ஆப்தீன் அவர்களுக்கு onlinepj.com தளத்துக்கு அனுப்பி வைத்தேன்.

    ஏகத்துவவாதிகள் பிடிவாதங்களை விட்டு குர் ஆன் ஹதீஸ் அடிப்படையில் அணுகு முறைகளை முன்னெடுப்பார்களேயானால் அதுவே நன்மையாக இருக்கும். அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

    வஸ்ஸலாம்
    அபூ பௌஸீமா

  6. அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹ்.

    சகோதரர்தலே உங்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்தால் அதனை நீங்கள் உங்களுக்குள் விவாதித்து ஒரு தீர்வு கொண்டு வாருங்கள். அதனை விடுத்து சமுதாயத்தை குழப்பாதீர்கள். பஃர்லான விஷயத்தை கடைபிப்பதை விட்டு விட்டு சுன்னத்தான மற்றும் தேவை இல்லாத விஷயத்தை விவாதிப்பதேய் உங்க்களுடைய வேலையாய் மாறிவிட்டது . சமுதாய ஒற்றுமைக்காக பாடுபடுங்கள் சகோதரர்துவம் வளரபாடுபடுங்கள் பிரிவினயை களையுங்கள் ஜாக் என்றும் தௌகீத் ஜமாஅத் என்றும் தனியாக செல்லாதீர்கள்; நான் தான் என்ற கர்வம் கொள்ளாதீர்கள்.

  7. assalamu alaikkum.

    insha allah anaivarukkum ellam valla allahuthala vuridhiyana

    eemanai thara rabbidam irainguvom.

  8. Assalamu Alaikum.

    PJ yin Quranukku Saheehana hadees muranpadum endra valikettai naan Allaahvirkaaga veruthaalum, pirai vishyathil ,pirai paathu nonbai thuvakkum Sunnathul jamaat ulemaaskkal kooda hijri calender senjuttuthaan irukkaanga. Ithudukku PJ vai mattum kurai solluvathu thappu.

    Ibn Taymiyyah kaalathileye, Calculation padi piraiyai theermaanikka makkal sollumbodu, idhu oru periyya valikkeedu, Oru periya bid ah endru thaan Ibn Taymiyyah mudal, indru ulla, Tawheed adippadaiyil ulla ulamaakkalin egopitha karuthaagum.

    Imam Ibn Taimiyyah also said these words in his, Fatawa, “Our Ummah (Muslims) is not like the People of the Scripture who do not memorize their Holy Books by heart. Rather, if all copies of the Quran vanished, the Quran would still be kept in the hearts of the Ummah. Hence, Muslims are an Ummi Ummah from this perspective, after the Quran was revealed and memorized by heart. The Sahih [collections of al-Bukhari and Muslim] reported that Abdullah Ibn Umar said that, the Prophet, salla-llahu `alaihi wa-sallam, said,
    ” We are an Ummi nation; we neither Naktubu (write; record), nor Na`hsubu (count; calculate). The month is like this and this, i.e . sometimes of 29 days and sometimes of thirty days.”
    Note that he, salla-llahu `alaihi wa-sallam, did not say, ‘We cannot read a book or memorize (especially since many companions knew how to read, write, count and memorize) .’ Rather, he said, ‘We do not write or count’, i.e., our religion does not need to be recorded and calculated for as is the case with the People of the Scripture who know the timings of their fast and breaking the fast [and other religious activities] by using records and calculations.

    Pls visit : http://darsalaf.googlepages.com/letteronhilaal

  9. வலைதளங்களில் இஸ்லாம் படிக்க மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால், மற்றவர்களை சாடியே ஒவ்வொரு கட்டுரையும் இருப்பது முகம் சுளிக்க செய்கிறது. குறிப்பாக பி ஜெய்னுல் ஆபிதீன் அவர்களை சாடியே இருப்பது நல்லதாக படவில்லை. கட்டுரைகளிலும், குரான் ஹதீஸை எடுத்துசொல்வதிலும் எனது ஆயுளில் பி ஜெய்னுல் ஆப்தீன் அவர்களை போல் நான் கண்டதில்லை. எனக்கு வயது 55 இந்த வயது வரை பி ஜே அவரகளைப்போல் மாற்று மத சமூகத்தினருக்கும் இஸ்லாத்தை எடுத்து கூறும் பக்குவத்தை தமிழ் மவுலவிகளில் நான் அறியேன். இஸ்லாமிய அறிவு முதிர்ச்சியில் அவரை போல் எவரும் இதுவரை இஸ்லாம் பற்றி தெளிவு படுத்தவில்லை என்றே கூறவேண்டும். எவரையும் சாடாமல் இஸ்லாத்தை கூறும் கொள்கையை சரியாக பேணுங்கள் நன்றி

    அஹமத் அலி
    வேலூர், சென்னை

  10. DEARS,
    ASSALAAMU ALAIKKUM
    SOME ONE ARE SUPPORTING TOO MUCH TO PJ. PJ NEITHER FOLLOWS HATHEES NOR QURAN. EXAMPLE.
    IT IS COMMANDED IN QURAN WHEN SOME ONE SAYS SALAM REPLY THEM BETTER THAN WHAT HE GREETS. BUT IF SOME ONE SAYS SALAM TO PJ HE REPLIES “WA ALAIKUMUSSASALAAM” ONLY HE SHOULD SAY WA ALAIKUMUS SALAM RAHMATHULLAHI WA BARAKAATHUHU. BUT HE NEVER SAYS.

    SECONDLY PROPHET (P.B.U.H) ORDEREDD BE FIRST IN GREETING YOUR BROTHER i.e WHEN MEET SOME ONE YOU SHOULD BE THE FIRST TO GREET THE OTHERS. BUT THOWHEED PEOPLE NEVER SAY SALAM TO ANY ONE.

    TOTALLY BY THE MAGIC WORD PJ IS SPOILING THE YOUTHS.

    MAL ALMIGHTY ALLAH SAVE THEM FROM HELL

    MOHIDEEN

  11. Mr. Mohideen,

    How did you intend that all thowheed people shall go to hell and how did you know about your thereafter.

    How much is your contribution for springing islam. There is no offence for not adding the sentence wa rahmathullahi wabarakkathahu… where as the reply is mandatory for salam. ok. if we add the above sentence with the reply will give more benefits. ok. you must understand the case first. according to me your commend states that you are not fit to post any commends against Mr. P J. Let me make you know that in sunnathul jamath, “n” no of people even never say proper reply for salam… i mean the never say walaikum salam , if we say salam, they will slightly express the smile instead give proper reply. Its fully offence in the view of islam.

  12. Assalamu alaikum! Please kindly criticised pj on the basis of Quran and Sunnah! Do you think only because of PJ the thowheed is established in tamil nadu! Only because of Almighty Allah Islam established everywhere! Remember and dont praised anybody as equal to Messenger of ALLAH

  13. assalamuallaikum
    dear mr.ahamedali vellore,chennai
    brother p.j only always attacking other brother muslims. by seeing his activities he never want muslim to be unity. telling islam to others is a covering his misdeeds.
    may allah give right path to him before his die

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *