Featured Posts
Home » இஸ்லாம் » மனித உயிர் உரிமை பற்றிய நாற்பது ஹதீஸ்கள் » [3/8] மனித உயிர் உரிமை பற்றிய நாற்பது ஹதீஸ்கள் (ஹதீஸ் 11 – 15)

[3/8] மனித உயிர் உரிமை பற்றிய நாற்பது ஹதீஸ்கள் (ஹதீஸ் 11 – 15)

இந்தியன் இஸ்லாஹி சென்டர் – மஸ்கட் (தமிழ் பிரிவு)
வழங்கும்

சிறப்பு கல்வி வகுப்பு

பாடம்: மனித உயிர் உரிமை பற்றிய நாற்பது ஹதீஸ்கள்

அரபி மூலம்
தொகுப்பு :மிஷ்அல் இப்னு நாஸிர் (ஹபிலஹுல்லாஹ்)
அணிந்துரை: அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் இப்னு முஹம்மத் குனைமான்

பகுதி-3: ஹதீஸ் 11 முதல் 15 வரை

விளக்கவுரை தமிழிலில் வழங்குபவர்:
மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன்
அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்
அல்-கோபர், சவூதி அரபியா

நாள்: 19-08-2017 (சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 வரை)

இடம்: இந்தியன் இஸ்லாஹி சென்டர் – மஸ்கட்

நிகழ்ச்சி ஏற்பாடு:
Indian Islahi Center (Tamil Wing) Muscat
அல்-ஹமரியா அல்-மாஹா பெட்ரோல் பம்ப் அருகில்

மேலதிக தொடர்புக்கு: 00968 97608092

11-6869. ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது (மக்களுக்கு உரையாற்றுகையில்) என்னிடம், ‘மக்களை மெளனமாக இருக்கச் சொல்லுங்கள்’ என்று கூறினார்கள். (அமைதி திரும்பிய பின்னர்) ‘எனக்குப் பின்னால் உங்களில் ஒருவர் மற்றொருவரின் பிடரியை வெட்டிக்கொள்ளும் இறைமறுப்பாளர்களாக மாறிவிடாதீர்கள் (ஒற்றுமையுடன் இருங்கள்)’ என்றார்கள்.8
இந்த ஹதீஸை, நபி(ஸல்) அவர்களிடமிருந்து அபூ பக்ரா(ரலி) இப்னு அப்பாஸ்(ரலி) ஆகியோரும் அறிவித்தார்கள்.

12-48. நான் அபூ வாயிலிடம் முர்ஜிஆ பற்றிக் கேட்டபோது, ‘ஒரு முஸ்லிமை ஏசுவது பாவம்; அவனுடன் போரிடுவது, கொலை செய்வது இறை நிராகரிப்பாகும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என அப்துல்லாஹ் வழியாக என்னிடம் கூறினார்’ என ஜுபைத் அறிவித்தார்.
(குறிப்பு) இறை நம்பிக்கையாளர் செய்யும் எந்தப் பாவத்திற்கும் தண்டனை கிடையாது என்று சொல்லும் வழி கெட்ட பிரிவினர் முர்ஜிஆ எனப்படுவர்.

13-10. ‘பிற முஸ்லிம்கள் எவருடைய நாவு, கையின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிமாவார். மேலும் அல்லாஹ்வால் தடுக்கப்பட்டவற்றைவிட்டு ஒதுங்கியவரே முஹாஜிர் எனும் துறந்தவராவார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.

14-3335. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
(உலகில்) ஒரு மனிதன் அநியாயமாகக் கொல்லப்படும்போது அந்தக் கொலையின் பாவத்தில் ஆதம்(அலை) அவர்களின் முதல் மகனுக்கும் ஒரு பங்கு இருக்கவே செய்யும். ஏனெனில், அவர்தான் முதன் முதலாக கொலை செய்து (ஒரு முன் மாதிரியை ஏற்படுத்தி) அதை வழக்கில் கொண்டு வந்தவர்.
என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

15-6878. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
‘அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவருமில்லை. நான் அல்லாஹ்வின் தூதராவேன்’ என உறுதி மொழி கூறிய முஸ்லிமான எந்த மனிதரையும் மூன்று காரணங்களில் ஒன்றை முன்னிட்டே தவிர வேறெதற்காகவும் கொலை செய்ய அனுமதி இல்லை.
(அவை:) 1. ஒரு மனிதரைக் கொலை செய்ததற்கு பதிலாகக் கொலை செய்வது. 2. திருமணமானவன் விபசாரம் செய்வது. 3. ‘ஜமாஅத்’ எனும் சமூகக் கூட்டமைப்பைக் கைவிட்டு, மார்க்கத்திலிருந்தே வெளியேறி விடுவது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *