Featured Posts
Home » இஸ்லாம் » நம்பிக்கை (ஈமான்) » ஈமானில் உறுதி வேண்டும்…

ஈமானில் உறுதி வேண்டும்…


ஒவ்வொரு மனிதனும் தான் கொண்ட கொள்கையில் ஆழமான நமபிக்கை, உறுதியோடு இருக்க வேண்டும்.

கொள்கை உறுதியும், அமல்களில் தெளிவும், இந்த இரண்டும் நம்மை அல்லாஹ்வின் பக்கம் நெருக்கி வைக்கும் களமாக உள்ளது. கொள்கையில் உறுதியாக இருந்து, அமல்களில் தெளிவில்லாமல் அமல்கள் செய்தாலும், அல்லது அமல்களில் தெளிவிருந்து, கொள்கையில் உறுதியில்லை என்றால் நமது முடிவு மோசமாக அமைந்து விடும்.

ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் அவசியம் போல, நாம் மறுமையில் வெற்றி பெற இந்த இரண்டு அம்சங்களும் அவசியமாகும்.

பிலால் (ரலி) அவர்களை வெறும் மேனியுடன் தெருத், தெருவாக, சுடு மணலில் இழுத்துச் சென்ற போது, அஹத், அஹத் அல்லாஹ் ஒருவன், அல்லாஹ் ஒருவன் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். இது பிலால் அவர்களின் கொள்கையின் உறுதிப்பாட்டினால் தான் எதிரிகள் பல விதத்தில் சித்தரவதை செய்த போதும், அவரின் ஈமானிய உணர்வே வெளிவந்துக் கொண்டிருந்தது.

சுமையா(ரலி) அவர்களையும், அவரது கணவர் யாசிர் (ரலி) அவர்களையும் எதிகள் சூழ்ந்திருந்து கடுமையான முறையில் சித்தரவதை செய்த போது, தனது கொள்கையில் உறுதியாக இருந்த நிலையில் இருவரும் உயிரை தியாகம் செய்தார்கள்.

கொள்கையில் உறுதியாக இருந்தால் தான் நமது இறுதி முடிவு சரியாக அமையும். நபிமார்களின் வரலாறாக இருக்கலாம், அல்லது நல்லடியார்களின் வரலாறாக இருக்கலாம், தனது கொள்கையின் வெளிபாடே அவர்களை எதிரிகள் ஒன்றும் செய்ய முடியாமல் திணறிப் போனார்கள்.

எதிரிகள் பல சூழ்ச்சிகளை செய்த போதிலும், கொள்கையின் உறுதியிலிருந்து யாரும் பின் வாங்கிவிடவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இப்றாஹீம் நபி அவர்களுடைய வாழ்க்கையாக இருக்கலாம், அல்லது எந்த நபிமார்களின் வாழ்க்கையாக இருந்தாலும், தான் கொண்ட கொள்கையின் உறுதியினால் எதிரிகளை ஆட்ட காண வைத்தனர்.

சூனியக் காரனும் சிறுவனும் எனும் தலைப்பில் வரும் ஹதீஸின் இறுதியில் அந்த சிறுவனின் நோக்கம் தான் ஏற்றுக் கொண்ட கொள்கை இந்த ஊர் முழுவதும் பரவ வேண்டும். என்பற்காக தான், தன்னை கொல்வதற்கு பல திட்டங்களை போடும் அரசனிடத்தில், பொதுமக்களை ஓரிடத்தில் ஒன்று சேர்த்து பிஸ்மில்லாஹ் என்று அல்லாஹ்வுடைய பெயரை சொல்லி, அம்பால் எறிந்து என்னை கொல்ல முடியும் என்று தானே முன் வந்து சொல்லும் காட்சி, அந்த சிறுவனின் மரணத்திற்கு பிறகு அந்த ஊரே இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளக் கூடிய சரியான பணியை செய்து விட்டு, அந்த சிறுவன் மரணிக்கிறார் என்றால், கொள்கையில் உறுதியாக இருந்தால் தான் இந்த துணிச்சல் வரும். எனது மரணத்திற்கு பிறகு இஸ்லாமிய சரியான கொள்கை ஓங்கி வளர வேண்டும் என்ற அடிப்படையில் இந்த உலகில் நாம் வாழ வேண்டும்.

இன்று உலகில் எங்குப் பார்த்தாலும் முஸ்லிம்கள் பிரச்சினைகளையும்,குழப்பங்களையும் தொடராக சந்தித்து வருகிறார்கள். உச்சக்கட்டமாக கொலை செய்யப் பட்டு, நாட்டை விட்டே துரத்தப்படக் கூடிய நிலைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். கேட்பதற்கு யாருமே இல்லாத ஒரு சமூகமாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

முஃமின்களுடைய உயிர்களை சுவர்க்கத்திற்கு பகரமாக அல்லாஹ் விலைக்கு வாங்கிக் கொண்டான். எனவே நாம் எந்த நேரத்திலும், எந்த நிலையிலும், மரணத்தை எதிர்ப்பார்த்தவர்களாகவே இந்த உலகில் வாழ வேண்டும்.

நமது இறுதி முடிவு சரியாக அமைய வேண்டும் என்றால் முதலில் நாம் ஏற்றுக் கொண்டிருக்க கூடிய இந்த ஏகத்துவ கொள்கையில் உறுதியாக இருப்பதோடு, நபியவர்கள் காட்டித் தந்த அமல்களிலும், சரியாக செயல் படுவோமேயானால், மரணம் எதிரிகளின் கைகள் மூலமாக வந்தாலும் அது சந்தோசமாகவே இருக்கும்.

நமது ஈமானிய மரணங்கள் ஒவ்வொரு எதிரிகளுக்கும், சூழ்ச்சிக் காரர்களுக்கும், மரண பயத்தை தானாக ஏற்படுத்தக் கூடிய நிலையை அல்லாஹ் ஏற்ப்படுத்துவானாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *