Featured Posts

மஸ்ஜிதுல் அக்ஸாவின் சிறப்புகள்

01) அபிவிருத்தி (பரகஹ்) செய்யப்பட்ட பூமி
(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான். (17:1)

02) உலகில் நிர்மானிக்கப்பட்ட இரண்டாவது பள்ளிவாசல்
அபூதர் (ரழி) அவர்கள் அறிவிக்கும் ஒரு செய்தியில் நபி (ஸல்) அவர்களிடம் எந்த பள்ளிவாசல் முதன்முதலாக நிர்மானிக்கப்பட்டது என கேட்ட போது அல் மஸ்ஜிதுல் ஹராம் (கஃபா இருக்கும் பள்ளி) என்றும் அதற்குப் பின் எது என கேட்ட போது மஸ்ஜிதுல் அக்ஸா என்றார்கள். இவை இரண்டிற்கும் இடைவெளி எத்துனை வருடங்கள் என கேட்ட போது 40 வருடங்கள் என்றார்கள். ஆதாரம் புகாரீ

03) முஸ்லிம்களின் முதலாவது கிப்லா
அல்பராஃ (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நாம் நபி (ஸல்) அவர்களோடு பைத்துல் முகத்தஸ் நோக்கி 16 அல்லது 17 மாதங்களாக தொழுது வந்தோம். பின்னர் கிப்லா மாற்றப்பட்டது. ஆதாரம் முஸ்லிம்.

(நபியே!) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம். எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம்;. ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பித் கொள்ளுங்கள்;. நிச்சயமாக எவர்கள் வேதம் கொடுக்கப்பட்டிருக்கின்றார்களோ அவர்கள்இ இது அவர்களுடைய இறைவனிடமிருந்து வந்த உண்மை என்பதை நிச்சயமாக அறிவார்கள்; அல்லாஹ் அவர்கள் செய்வது பற்றிப் பராமுகமாக இல்லை. (2:144)

04) பிராயாணம் செய்ய அனுமதிக்கப்பட்ட பள்ளிவாசல்
அபூ ஹுறைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பள்ளிகளைத் தவிர (நல்லறங்கள் செய்யும் எண்ணத்தில்) பிரயாணம் செய்யாதீர்கள்: மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுர் ரஸுல் (ஸல்), மஸ்ஜிதுல் அக்ஸா. ஆதாரம் புகாரீ

05) நபி (ஸல்) இஸ்ரா பயணம் மேற்கொண்ட பள்ளி
(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான் (17:1)

06) இப்பள்ளியில் தொழுவது பாவங்களை அழித்துவிடும்
ஸுலைமான் (அலை) அவர்கள் பைத்துல் முகத்தஸை கட்டிய பின் அல்லாஹ்விடம் 3 விடயங்களை கேட்டார்கள். அல்லாஹ்வின் தீர்ப்பை ஒத்த தீர்ப்பு வழங்கும் தன்மை; அவருக்கு பின்னால் வரக்கூடிய யாருக்கும் வழங்கிடாத ஆட்சி; இந்த பள்ளிவாசலுக்கு தொழும் எண்ணத்தில் வருபவர்களின் பாவங்கள் அன்று பிறந்த பாலகனைப் போன்று மன்னிக்கப்பட வேண்டும். ஆதாரம் நஸாயீ, இப்னு மாஜா, ஸஹீஹ் இப்னு ஹிப்பான், அஹ்மத்.

07) வெற்றி கொள்ளப்படுவது மறுமையின் அடயாளங்களில் நின்றும் உள்ளது
அவ்ப் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் அறிவிக்கும் செய்தியில் தபூக் யுத்தத்தின் போது மறுமையின் 6 அடயாளங்ளை நபியவர்கள் குறிப்பிட்டார்கள்; அவற்றில் எனது மரணம், பைத்துல் முகத்தஸ் வெற்றி கொள்ளப்படுவது …. என்றார்கள். ஆதாரம் புகாரீ

08) இதன் வெற்றிக்காக சூரியன் மறையாது இருந்தமை
அபூ ஹுறைரா (ரழி) அவர்கள் அறிவிக்கும் செய்தியில் யூஷஃ இப்னு நூன் பைத்துல் முக்கதஸை கைப்பற்ற சென்ற போது அல்லாஹ் அவருக்காக சூரியனை (மறையாது) பிடித்துக் கொண்டான்; இது இவரைத் தவிர வேறு எந்த மனிதனுக்காகவும் மறையாது பிடிக்கப்படாது. என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் அஹ்மத்.

09) தஜ்ஜால் இங்கே நுழைய மாட்டான்
தஜ்ஜால் நுழைவதற்கு தடுக்கப்பட்டுள்ள இடங்களில் மஸ்ஜிதுல் அக்ஸாவும் ஒன்று என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் அஹ்மத்.

10) இந்த பள்ளியில் தொழுவது ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட சிறந்தது
250 மடங்கு சிறந்தது என்றும், 500 மடங்கு சிறந்தது, 1000 மடங்கு சிறந்தது என்றும் பல அறிவிப்புக்கள் இடம் பெறுகின்றன. ஆனால் சில செய்திகள் ஹஸன் என்ற தரத்திலும் இன்னும் சில செய்திகள் பலகீனமாகவும் உள்ளன. எனவே இது விடயத்தில் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து முரண்பாடு உள்ளது. அல்லாஹ் மிக அறிந்தவன்.

M. ரிஸ்கான் முஸ்தீன் 13/12/2017

இஸ்லாம்கல்வி YouTube சேனலின் புதிய வீடியோக்களை உடனுக்குடன் பெற, கீழ்க்கண்ட இணைப்பைச் சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யுங்கள்.

🔔 Subscribe our YouTube Channel

2 comments

  1. மஸ்ஜிதுல் அக்ஸாவில் முதன் முதலில் அதான் கூறியவர் யார்

  2. ஜகரிய்யா (அலை) அவர்களின் காலத்தில் மஸ்ஜிதுல் அக்ஸாவின் நிர்வாகி யார்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இஸ்லாம்கல்வி.காம் – இணையத்தில் ஓர் நூலகம்
Online Islamic Classes

ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் தலைசிறந்த உலமாக்களின் வீடியோக்கள், கட்டுரைகள் மற்றும் மின் புத்தகங்கள்:

  • குர்ஆன் ஓதுவதற்கான எளிமையான தஜ்வீத் சட்டங்கள்
  • தொழுகைச் சட்டங்கள் மற்றும் துஆக்கள்
  • ஹஜ், உம்ரா செய்முறை விளக்கம்
  • ரமளான் சிறப்புகள் மற்றும் சட்டங்கள்
  • இதர மார்க்க விளக்கங்கள் மற்றும் சட்டங்கள்
  • அரபு மொழி மற்றும் இலக்கணப் பாடம் – தமிழில்
  • சிறுவர்களுக்காக திருக்குர்ஆன் கூறும் கதைகள்
  • வாரிசுரிமைச் சட்டங்கள் (பாகப்பிரிவினை)
  • வரலாறு, கேள்வி-பதில்கள், அகீதா தொடர்கள், மதங்கள் ஆய்வு
  • இஸ்லாம் அறிமுகம் மற்றும் புதிய முஸ்லிம்களுக்கான வழிகாட்டுதல்கள்
  • மேலும் பல...