Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » தடம் புரண்டவர்கள் யார்? [ARTICLE]

தடம் புரண்டவர்கள் யார்? [ARTICLE]

குர்ஆன் மற்றும் சுன்னாவை அடிப்படையாக கொண்டு தவ்ஹீத் ஜமாஅத் செயல்பட்டு வருகிறது. ஆரம்ப காலங்களில் அனைவரும் ஒன்று பட்டு ஒரே அணியாக செயல்பட்டு வந்தார்கள். ஆனால் காலப் போக்கில் ஏதோ சில காரணங்களை கூறி அந்த ஜமாஅத்திலிருந்து பிரிந்து சென்று அதே போன்ற வேறொரு பெயரில் செயல் பட்டுக் கொண்டு, ஆரம்பத்திலிருந்தே ஒரே கொள்கையில் இருப்பவர்களைப் பார்த்து பீஜேயும், அவர்களை சார்ந்தவர்களும் இவர்கள் கொள்கையிலிருந்து தடம்புரண்டுவிட்டார்கள் என்று பகிரங்கமாக பொய் சொல்கிறார்கள் என்பதை அஷ்ஷேக். இஸ்மாயில் ஸலபி அவர்கள் கேள்வி பதில் நிகழ்ச்சியின் போது கொடுத்த வீடியோ கிளிப்பின் பதிலிலிருந்து அதை எழுத்து வடிவத்தில் தொகுத்து வழங்குகிறேன்.

அஷ்ஷேக் இஸ்மாயில் ஸலபி அவர்கள் அளித்த பதில்…

யார் தடம் புரண்டவர்கள், ஆரம்ப தவ்ஹீத்வாதிகளிடம் இருந்து பீஜே தடம் புரண்டாரா அல்லது ஆரம்ப தவ்ஹீத்வாதிகள் தடம் புரண்டார்களா? குர்ஆனுக்கு ஸஹீஹான ஹதீஸ்கள் முரண்படாது என்பது தான் தமிழ் பேசும் தவ்ஹீத்வாதிகளின் அடிப்படை கொள்கையாகும். இந்த கொள்கையை ஆணித்தரமாக பிரச்சாரம் செய்தவரே இந்த பீஜே தான்,1988 அக்டோபர் அல்-ஜன்னத்தில் காதியானிகளின் கல்லரைப் பயணம் என்று தனி ஒரு பகுதி இணைக்கப்படுகிறது. காதியானிகளுக்கும், இவர்களுக்கும் செய்யப்பட்ட விவாத ஒப்பந்தங்கள் சம்பந்தப்பட்ட கடிதங்கள் அதில் பிரசுரிக்கப்படுகிறது.

குர்ஆன் ஹதீஸை வைத்து தான் பேச வேண்டும் அதே நேரம் ஸஹீஹான ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்பட்டால், அந்த ஹதீஸை ஏற்க முடியாது என்று காதியானிகள் முக்கியமான நிபந்தனையாக போடுகிறார்கள். அதற்கு பீஜே அவர்கள் ஸஹீஹான ஹதீஸ் குர்ஆனுக்கு ஒரு போதும் முரண்படாது, அப்படி ஒரு ஐம்பது ஹதீஸ்கள் முரண்படுவதை போல வந்தாலும் அதை முரண்பாடு இல்லாமல் விளங்கப்படுத்துவது எனது பொறுப்பாகும் என்று பதில் கூறுகிறார். மீண்டும், மீண்டும் காதியானிகள் அதில் பிடிவாதமாக இருந்த போது, அந்த சந்தர்ப்பத்தில் அப்படியானால் தலைப்பை மாற்றுவோம் ஆதாரப் பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா, படாதா என்பதை முதலில் விவாதித்து விட்டு, ஈஸா நபி சம்பந்தமான விசயத்தை பேசுவோம் என்ற அளவிற்கு அந்த கருத்தில் ஆழமாக பீஜே இருந்தார்.

எனவே ஆதாரப் பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படாது என்று சொல்லிவிட்டு, காலப் போக்கில் பிறகு ஏதோ சில காரணங்களுக்காக அதற்கு மாற்றமான நிலைப்பாட்டில் பீஜே இருக்கிறார். ஆனால் சமீபகாலமாக மேடைகளில் தவ்ஹீத்வாதிகள் என்ற பெயரில் இன்னார், இன்னார் தடம் புரண்டுவிட்டார்கள் என்று மேடையில் பட்டியல் போட்டு பீஜே பொய்யாக பிரச்சாரம் செய்கிறார்?

நாம் அன்றைக்கு இருந்த கொள்கையில் தான் இன்றும் தெளிவாக இருக்கிறோம். ஆனால் அவர்கள் தடம் புரண்டு சென்று விட்டு, நம்மைப் பார்த்து தடம் புரண்டவர்கள் என்று பொய்யாக மக்களிடம் ஏன் பிரச்சாரம் செய்ய வேண்டும். எல்லோரும் ஒரே கொள்கையில் இருந்தோம். நாங்கள் இன்ன, இன்ன காரணத்திற்காக மாறினோம் என்று நியாயமான முறையில் மக்களிடம் உண்மையை சொல்லுங்கள். மாறியது நீங்கள் தான், பொய் சொல்லி தஃவா செய்ய அவசியம் கிடையாது. இப்போது தடம் புரண்டவர்கள் யார் என்று புரிந்திருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *