Featured Posts
Home » பொதுவானவை » எச்சரிக்கை » நரகத்தில் பெண்கள் [நரகத்தில் சில காட்சிகள் – 4]

நரகத்தில் பெண்கள் [நரகத்தில் சில காட்சிகள் – 4]

சென்ற மூன்று தொடர்களில் நரகத்தில் நடக்கும் பலவிதமான தண்டனைகளின் காட்சிகளை உங்களுக்கு எடுத்துக் காட்டியிருந்தேன்.
இந்த தொடரிலும் சில பயங்கரமான நிகழ்சிகளை கவனிப்போம்.

நரகவாசிகளுக்கு மரணம் கிடையாது…
“இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மறுமை நாளில்) கருமை கலந்த வெண்ணிற ஆடு ஒன்றின் தோற்றத்தில் மரணம் கொண்டுவரப்படும். அப்போது அறிவிப்புச் செய்யும் (வானவர்களில்) ஒருவர், சொர்க்கவாசிகளே!இதை (இந்த ஆட்டை) நீங்கள் அறிவீர்களா? என்று கேட்டார். அவர்கள், ஆம்! இதுதான் மரணம் என்று பதிலளிப்பார்கள். அவர்கள் அனைவரும் அதை (முன்பே) பார்த்திருக்கிறார்கள். பிறகு அவர் நரகவாசிகளை நோக்கி: நரகவாசிகளே! என்று அழைப்பார். அவர்கள் தலையை நீட்டிப் பார்ப்பார்கள். அவர் இதை நீங்கள் அறிவீர்களா? என்று கேட்பார். அவர்கள், ஆம் (அறிவோம்;) இதுதான் மரணம் என்று பதில் சொல்வார்கள். அவர்கள் அனைவரும் அதை (முன்பே) பார்த்துள்ளனர். உடனே அது (ஆட்டின் உருவத்திலுள்ள மரணம்) அறுக்கப்பட்டுவிடும். பிறகு அவர், சொர்க்கவாசிகளே நிரந்தரம்; இனி மரணமே இல்லை. நரகவாசிகளே! நிரந்தரம்; இனி மரணம் என்பதே இல்லை என்று கூறுவார்.
இதை  அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார் (புகாரி 4730)

மன்னிக்கப்படக்கூடிய நரகவாசிகள் மன்னிக்கப்பட்டு சுவத்திற்கு அனுப்பிய பிறகு, நரகவாசிகள் தொடராக வேதனையை அனுபவித்துக்
கொண்டே இருப்பார்கள்.

நரக நெருப்பின் தன்மை…
“அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், உங்கள் (உலக) நெருப்பு, நரக நெருப்பின் எழுபது பாகங்களிலிருந்து ஒரு பாகமேயாகும் என்று கூறினார்கள். உடனே, இறைத்தூதர் அவர்களே! இந்த (உலக) நெருப்பே (பாவம் செய்தவர்களை எரித்து வேதனைப்படுத்தப்) போதுமான தாயிற்றே என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், (அப்படியல்ல.) உலக நெருப்பை விட நரக நெருப்பு அறுபத்தொன்பது பாகங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொரு பாகமும் உலக நெருப்பின் வெப்பத்திற்குச் சமமானதாகும் என்றார்கள். (புகாரி 3265)

உலக நெருப்பின் தாக்கத்தையே நம்மால் தாங்க முடியாது என்றால் இதை விட அறுபத்தொன்பது மடங்கு கடுமையாக சூடேற்றப்பட்ட
நெருப்பின் தாக்கத்தை நாம் பயந்து நல்லறங்களில் அதிகமாக நாம் ஈடுபட வேண்டும்.

நரகில் பாவியின் குடல் வெளியே…
பிறருக்கு நன்மையான விடயங்களை ஏவிவிட்டு, அவைகளை ஏவியவர்கள் செய்யாவிட்டால், நரகில் கிடைக்கும் தண்டனையை பின்
வரும் ஹதீஸ் எச்சரிப்பதை காணலாம்.

“மறுமை நாளில் ஒருவர் கொண்டு வரப்பட்டு நரகத்தில் போடப்படுவார். அப்போது அவரின் குடல்கள் வேகமாக நரகத்தில் வந்து விழும். கழுதை
செக்கைச் சுற்றி வருவதைப் போல் அவர் சுற்றி வருவார். அப்போது நரகவாசிகள் அவரைச் சுற்றி ஒன்று கூடி, இன்னாரே! உமக்கேன் இந்த
நிலை? நீர் (உலக வாழ்வின் போது) நற்செயல் புரியும்படி எங்களுக்குக் கட்டளையிட்டு, தீமை புரிய வேண்டாமென்று எங்களைத் தடுக்க
வில்லையா? என்று கேட்பார்கள். அதற்கு அவர், நற்செயல் புரியும்படி உங்களுக்கு நான் கட்டளையிட்டேன்; ஆனால், அந்த நற்செயலை நான்
செய்யவில்லை. தீமை புரிய வேண்டாமென்று உங்களை நான் தடுத்து வந்தேன்; ஆனால், அந்தத் தீமையை நானே செய்து வந்தேன் என்று
கூறுவார். (புகாரி- 3267)

நரகத்தில் ஒரு பெண்…
தன் வீட்டில் வசித்து வந்த பூனைக்கு எந்த விதமான உணவையும் கொடுக்காமல் கட்டிப் போட்டதினால் நரகத்தில் அவள் வேதனையை
அனுபவிக்கிறாள் என்று நபியவர்கள் எச்சரிப்பதை பின் வரும் ஹதீஸில் காணலாம்.

“இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (முன்னொரு சமுதாயத்தைச் சேர்ந்த) பெண்ணொருத்தி ஒரு பூனை(க்குத் துன்பம் தந்த) விஷயத்தில் வேதனைப்படுத்தப்பட்டாள். அந்தப் பூனையை அது பசியால் துடித்துச் சாகும் வரை அவள் அடைத்து வைத்திருந்தாள். அதன் காரணத்தால் அவள் நரகத்தில் புகுந்தாள். அப்போது அல்லாஹ்வே மிக அறிந்தவன் – நீ அதைக் கட்டிவைத்து அதற்குத் தீனி போடவுமில்லை; தண்ணீர் தரவுமில்லை; அது பூமியிலுள்ள புழு பூச்சிகளைத் தின்று (பிழைத்துக்) கொள்ளட்டும் என்று அதை அவிழ்த்து விடவுமில்லை என்று
அல்லாஹ் கூறினான்.
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.(புகாரி 2365)

மனிதர்களோ, மிருங்களோ அனைத்து ஜீவராசிகளுடன் இரக்கமாக நடந்து கொள்ள வேண்டும். மீறினால் நரகில் தண்டனை அனுபவிக்க
வேண்டும், என்பதை தான் மேற்ச் சுட்டிக்க காட்டிய ஹதீஸ் நமக்கு எச்சரிக்கிறது.

நரகத்தில் பெண்கள்…
நரகத்தில் பெண்கள் அதிகமாக இருப்பதாக நபி (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள். பெண்கள் அதிகமாக குறை பேசி திரிவதினாலும்,
கணவருக்கு நன்றி கெட்டவர்களாக இருப்பதினாலும், மேலும் மறுப்பதினாலும் அதிகமாக நரகத்தில் தண்டனைகளை அனுபவிக்கிறார்கள். அதனால் தான் அதிகமாக தர்மங்களை செய்வதன் மூலம் அந்த பயங்கரமான நரகத்தை விட்டும் பாதுகாப்பு பெறுவதற்கான வழியை நபியவர்கள் பெண்களுக்கு விசேடமாக கூறுகிறார்கள். அன்றாடம் நல்லமல்களை தொடராக செய்வதோடு குறிப்பாக அதிகமாக ஸதகாக்கள் கொடுக்க கூடிய பழக்கத்தை பெண்கள் அமைத்துக் கொள்ள வேண்டும்.

“நரகவாசிகளில் பெண்களையே அதிகமாகக் கண்டேன் என்று கூறினார்கள். மக்கள் ஏன் (அது), அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர்களின் நிராகரிப்பே காரணம் என்றார்கள். அப்போது இறைவனையா நிராகரிக்கிறார்கள்? என்று கேட்கப்பட்டது. அதற்கு கணவர்களை நிராகரி(த்து நிந்தி)க்கிறார்கள். (கணவர் செய்த) உதவிகளுக்கு நன்றி காட்ட மறுக்கிறார்கள். காலமெல்லாம் அவர்களில் ஒருத்திக்கு நீ உதவி செய்து, பிறகு உன்னிடம் ஏதேனும் (குறை ஒன்றைக்) கண்டால் உன்னிடமிருந்து எந்த நலனையும் ஒருபோதும் நான் கண்டதேயில்லை என்று சொல்லிவிடுவாள் என்று பதிலளித்தார்கள். (புகாரி- 1659)

எனவே குடும்பம் என்றால் பல கஷ்டங்கள் இருக்க தான் செய்யும் அதற்காக எதற்கெடுத்தாலும் கணவரை குறை சொல்லக் கூடிய
நிலையில் மனைவிமார்கள் இருக்க கூடாது. இருப்பதை கொண்டு சமாளித்து போக கூடிய நிலையை பெண்கள் அமைத்துக் கொள்ள
வேண்டும். கணவரைப் பற்றி தப்பாக வீட்டிற்குள்ளேயும், வீட்டிற்கு வெளியேயும், பேசி திரியக் கூடாது. பெண்கள் தங்களை
பக்குவபடுத்திக்கு கொள்வதோடு,அமல்களில் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும். ஏன் என்றால் அமல்களில் பெண்கள் குறை
நிலையிலே படைக்கப் பட்டுள்ளனர் என்பதை பின் வரும் ஹதீஸ்கள் தெளிவுப் படுத்துகின்றன.

“இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுவதில்லை; நோன்பு நோற்பதில்லை அல்லவா? அதுதான் மார்க்கத்தில் அவளுக்குள்ள குறைபாடாகும். இதை அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.( புகாரி 1951)

மேலும் “அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். பெண்களின் சாட்சியம் ஆண்களின் சாட்சியத்தில் பாதியளவு அல்லவா? என்று நபி(ஸல்) அவர்கள் (பெண்களை நோக்கிக்) கேட்டார்கள். அவர்கள், ஆம் (பாதியளவு தான்) என்று பதிலளித்தார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், அதுதான் அவளுடைய அறிவின் குறை பாடாகும் என்று கூறினார்கள்.(புகாரி 2658)

எனவே ஏற்கனவே அமல்களில் குறைவான நிலையில் படைக்கப்பட்டவர்கள், எல்லை மீறி கணவனின் குறைபாடுகளை விமர்சனம் செய்யும் போது மறுமையில் நிலைமை மிக மோசமாக மாறிவிடும் என்பதை புரிந்து பெண்கள் செயல் பட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *