Featured Posts
Home » இஸ்லாம் » அல்குர்ஆன் » இரண்டு பாதைகளில் எந்தப் பாதையை நீ தேர்ந்தெடுத்திருக்கின்றாய்? [உங்கள் சிந்தனைக்கு… – 016]

இரண்டு பாதைகளில் எந்தப் பாதையை நீ தேர்ந்தெடுத்திருக்கின்றாய்? [உங்கள் சிந்தனைக்கு… – 016]

அல்லாமா அஹ்மத் பின் யஹ்யா அந்நஜ்மீ (ரஹ்) கூறுகின்றார்கள்:-
“அல்லாஹ்வின் அடியானே! சத்தியத்திற்கு நீ உதவி செய்தது பற்றியும், அல்லது அதற்கு உதவி செய்யாமல் விட்டு விட்டது பற்றியும் அல்லாஹ்வின் முன்னிலையில் நீ வினவப்படுவாய். அப்போது, சத்தியத்திற்கு உதவி புரிந்தவனாக நீ இருந்துவிட்டால் (அல்லாஹ்வின் அருட்பேறுகளைக்கொண்டு) நீ நன்மாராயம் பெற்றுக்கொள்ளலாம்.

ஏனெனில், சத்தியத்திற்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ் இவ்வாறு வாக்குறுதியளித்துவிட்டான்:
“நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால் அவன் உங்களுக்கு உதவி செய்வான். மேலும், உங்கள் பாதங்களைப் பலப்படுத்துவான்” (அல்குர்ஆன், 47:07)

மேலும் அல்லாஹ் கூறுகிறான்:
“நிச்சயமாக நாம் நமது தூதர்களுக்கும், நம்பிக்கை கொண்டோருக்கும் இவ்வுலக வாழ்விலும், சாட்சிகள் எழுந்து நிற்கும் நாளிலும் உதவி செய்வோம்.
(அது) அநியாயக்காரர்களுக்கு அவர்களின் சாட்டுப்போக்கு பயனளிக்காத நாளாகும். மேலும், அவர்களுக்குச் சாபம் உண்டு; இன்னும் அவர்களுக்கு மோசமான வீடும் உண்டு”.(அல்குர்ஆன், 40: 51,52)

அல்லாஹ்வின் அடியானே! சத்தியத்திற்கும், சத்தியவாதிகளுக்கும் நீ உதவி செய்யாது விட்டிருந்தால், “அல்லாஹ்விடம் தூய உள்ளத்துடன் வருபவரைத் தவிர செல்வமோ, பிள்ளைகளோ பயன் தராத அந்நாளில்”(அல்குர்ஆன், 26:88,89) அதன் பெறுபேற்றை கண்டு கொள்வாய்!”.

{ நூல்: ‘அத்துரருன் நஜ்மிய்யா பீ ரத்தி பஃழிஷ் ஷுபுஹாதில் அகதிய்யா வல்மன்ஹஜிய்யா’, பக்கம்: 50 }

قال العلامة أحمد بن يحي النجمي رحمه الله تعالى:-
[ وأنت يا عبد الله! مسؤول أمام الله عن نصرتك للحق أو خذلانه. فإن كنت نصرت الحق فأبشر، والله قد وعد الناصرين للحق بقوله تعالى: « يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبّت أقدامكم » وبقوله عز وجل: « إنا لننصر رسلنا والذين آمنوا في الحياة الدنيا ويوم يقوم الأشهاد، يوم لا ينفع الظالمين معذرتهم ولهم اللعنة ولهم سوء الدار » ويا عبدالله! إن كنت خذل الحق وأهله فإنك ستجد مغبة ذلك في « يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم » ] { الدرر النجمية في رد بعض الشبهات العقدية والمنهجية ، ص – ٥٠ }

தமிழில்…
அஷ்ஷெய்க். N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *