Featured Posts
Home » பொதுவானவை » உங்கள் சிந்தனைக்கு » வேர்களைப் பாழ்படுத்தி, கிளைகளைப் பாதுகாக்கும் மனிதர்கள்! [உங்கள் சிந்தனைக்கு… – 022]

வேர்களைப் பாழ்படுத்தி, கிளைகளைப் பாதுகாக்கும் மனிதர்கள்! [உங்கள் சிந்தனைக்கு… – 022]

இமாம் இப்னுல் ஜவ்சீ (ரஹ்) கூறுகின்றார்கள்:-
“மனிதர்களில் அதிகம் பேரை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் அசுத்தமொன்றைத் தெளித்து பூசிக்கொள்ளாதவாறு பக்குவமாகவும் பாதுகாப்பாகவும் இருந்து கொள்கிறார்கள்; ஆனால், புறம்பேசுவதிலிருந்து விலகித் தூரமாகாமல் அவர்கள் இருந்து விடுகின்றார்கள்!

தானதர்மங்களை அவர்கள் அதிகமாகச் செய்கிறார்கள்; ஆனால், வட்டியுடன் தொடர்பான கொடுக்கல் வாங்கல்களில் அவர்கள் கணக்கில்லாமல் இருக்கிறார்கள்!

இரவில் அவர்கள் தஹஜ்ஜுத் தொழுகிறார்கள்; ஆனால், பர்ழான தொழுகையை உரிய நேரத்தில் தொழாமல் பிற்படுத்துகிறார்கள்!

இவ்வாறு, அடிப்படைகளைப் பாழ்படுத்திக்கொண்டு கிளைகளை (மட்டும்) பாதுகாக்கும் இவர்களது விடயங்களின் எண்ணிக்கை நீண்டு செல்கிறது… !

இதற்கான காரணம் என்னவாக இருக்கும்? என நான் ஆய்வு செய்து பார்த்தபோது, பின்வரும் இரண்டு விடயங்களிலிருந்துதான் அது வந்திருக்கிறது என்பதாக கண்டுகொண்டேன்:
1- (மக்களால் பின்பற்றப்பட்டு வரும்) வழமை.
2- தேடப்படுபவற்றைப் பெற்றுக்கொள்வதில் மனோ இச்சை வெற்றியடைந்தமை : சில நேரங்களில் இந்த மனோ இச்சை வெற்றிபெற்று விடுகிறது! அப்போது இது, (நல்லதைச்) செவிமடுக்கும்படியோ, பார்க்கும்படியோ மனிதனை விட்டு விடாது!”
{ நூல்: ‘ஸைதுல் ஹாதிர்’, 01/177 }

قال الإمام إبن الجوزي رحمه الله تبارك تعالى:-
[ رأيت كثيرا من الناس يتحرزون من رشاش نجاسة، ولا يتحاشون من غيبة! ويكثرون من الصدقة، ولا يبالون بمعاملات الرّبا!ويتهجدون بالليل، ويؤخرون الفريضة عن الوقت! في أشياء يطول عددها، من حفظ فروع وتضييع أصول!
فبحثت عن سبب ذلك؟ فوجدته من شيئين:-
أحدهما: العادة.
الثاني: غلبة الهوى في تحصيل المطلوب، فإنه قد يغلب، فلا يترك سمعا ولا بصرا ]
{ صيد الخاطر ، ١/١٧٧ }

தமிழில்…
அஷ்ஷெய்க். N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *