Featured Posts
Home » மீடியா » வீடியோ ஆடியோ » தமிழ்பேசும் முஸ்லிம்கள் குறிப்பாக உலமா பெருமக்கள் கவனத்திற்கு

தமிழ்பேசும் முஸ்லிம்கள் குறிப்பாக உலமா பெருமக்கள் கவனத்திற்கு

மாபெரும் நற்செய்தி – தமிழ்பேசும் முஸ்லிம்களுக்கு குறிப்பாக உலமா பெருமக்களுக்கு

அஷ்ஷைக். ஸாலிஹ் அஹ்மத் ஷாமீ (80 வயதில் உள்ளவர்) நபிகளார் (ஸல்) அவர்களின் அனைத்து பொன்மொழிகளையும் (ஹதீஸ்களை) ஒழுங்கமைத்தல் அதாவது ஸுன்னாவை வரிசைப்படுத்துல் திரும்ப திரும்ப வரக்கூடிய ஹதீஸ்களை தவிர்த்து அதனை முறைமைப்படுத்தி தலைப்பு வாரியாக பிரித்து அதனை ஓழுங்குபடுத்தல் பணியினை மரியாதைக்குரிய அஷ்ஷைக் ஸாலிஹ் அஹ்மத் ஷாமீ அவர் மிக திறம்பட செய்து அதனை உம்மத் பயன்பெறும் வகையில் தந்துள்ளார். ஹதீஸ்களை வரிசைப்படுத்துல் என்ற அடிப்படையில் நபிகளாரின் (ஸல்) அனைத்து பொன்மொழிகளும் 1,14,194 ஆகும். அதிலிருந்து திரும்ப திரும்ப இடம்பெறாத 28,430 ஹதீஸ்களை பிரித்து எடுத்தார். அதிலிருந்து 3,921 ஹதீஸ் என்ற வரைமுறைக்குள் கொண்டு வந்துள்ளார். அதாவது இந்த 3921 ஹதீஸ்களை அறிந்து கொண்டால் நபிகளாரின் அனைத்து செய்திகளின் சாராம்சத்தை அறிந்துகொள்ள முடியும். 3921 ஹதீஸ்களை கொண்ட இந்த புத்தகத்தின் பெயர் معالم السنة النبوية (மாஆலிமுஸ் சுன்னா அந்நபவிய்யா) பல்வேறு தலைப்பின் கீழ் இதனை தொகுத்துள்ளார்.

சுமார் 3921 ஹதீஸ்களை கீழ்கண்ட முறைமையின் கீழ் சுமார் 14 கிதாபுகளிலிருந்து தொகுத்துள்ளார்.

الجامع بين الصحيحين ஜாமிஆ பைன ஸஹீஹைன் (மொத்தம் 2 கிதாபிலிருந்து)  Click here
இதில் புகாரீயில் இடம்பெறாத முஸ்லிமில் உள்ள செய்திகளை புகாரீயுடன் சேர்த்தார் அதாவது திரும்ப திரும்ப இடம்பெறாத ஹதீஸ்களை ஒன்று இணைத்தார்.

زوائد السنن على الصحيحين ஜவாயீத் ஸுனன் அலா ஸஹீஹைன்: (மொத்தம் 5 கிதாபிலிருந்து)  Click here
ஸுனன் அபீதாவூத், ஸுனன் திர்மிதி, ஸுனன் நஸாயீ மற்றும் ஸுனன் இப்னு மாஜா மற்றும் ஸுனன் தாரமீ இந்த 5 கிதாபிலிருந்து புகாரீ முஸ்லிம் இடம்பெறாத ஹதீஸ்களை தொகுத்து ஜவாயீத் ஸுனன் அலா ஸஹீஹைன் என பெயரிட்டு இந்த கிதாபை வெளியிட்டார்.

زوائد الموطأ والمسند ஜவாயீத் முஅத்தா மற்றும் முஸ்னத் (மொத்தம் 2 கிதாபிலிருந்து) Click here
முஅத்தா மாலிக், முஸ்னத் அஹமத் என்ற இரு கிதாபிலிருந்து மேற்சொன்ன 7 கிதாபுகளில் இடம் பெறாத ஹதீஸ்களை தொகுத்து ஜவாயீத் முஅத்தா மற்றும் முஸ்னத் என்று தனி கிதாபை வெளியிட்டார்கள்.

جامع الأصول التسعة ஜாமிவு உஸூலுத் திஸ்ஆ: Click here
மேற்சொன்ன 9 கிதாபுகளில் திரும்ப திரும்ப வரும் ஹதீஸ்களை நீக்கி விட்டு புதிய கிதாபை வெளியிட்டார்கள் அதன் பெயர்தான்: جامع الكتب التسعة ஜாமிவு குதுபுத் திஸஅ.

زوائد السنن الكبرى للبيهقي ஜவாயீத் ஸுனன் குப்ரா பைஹகீ Click here
பைஹகீ கிதாபில் மேற்சொன்ன 9 கிரந்தங்களில் இடம்பெறாத ஹதீஸ்களை தனியாக பிரித்தெடுத்து இந்த கிதாபை வெளியிட்டார்.

زوائد ابن خزيمة وابن حبان والمستدرك على الكتب التسعة ஜவாயீத் இப்னு குஸைமா , இப்னு ஹிப்பான் Click here
(மொத்தம் 2 கிதாபிலிருந்து)
மேற்சொன்ன 10 கிரந்தங்களில் இடம்பெறாத ஹதீஸ்களை ஸஹீஹ் இப்னு ஹிப்பான் மற்றும் இப்னு குஸைமா என்ற கிரந்தங்களிலிருந்து தனியாக பிரித்தெடுத்து இந்த கிதாபை வெளியிட்டார்.

زوائد الأحاديث المختارة لضياء الدين المقدسي على الكتب التسعة Click here
மேற்சொன்ன 9 கிரகந்தங்களில் இடம்பெறாத ஹதீஸ்களை தனியாக பிரித்தெடுத்து இந்த கிதாபை வெளியிட்டார்.

ஆக மொத்தம் 14 கிரந்தங்களிலிருந்து 3921 ஹதீஸ்களை கொண்ட இந்த புத்தகத்தின் பெயர் معالم السنة النبوية  Download Vol-1 | Download Vol-2 | Download Vol-3 (மாஆலிமுஸ் சுன்னா அந்நபவிய்யா) இந்த கிதாபிலிருந்து நோன்பு பற்றிய அனைத்து ஹதீஸ்களையும் நான்கு பிரதான தலைப்பின் கீழ் சுமார் 53 உப தலைப்பின் கீழ் சுமார் 99 நபிமொழிகளை தொகுத்து தந்துள்ளார். இதனை சவூதி அரேபியாவின் தம்மாம்-ராக்கா தஃவா நிலையத்தில் பணியாற்றிவரும் ஆசிரியர் முஜாஹித் இப்னு ரஸீன் நான்கு வாரங்களாக நடத்திய வகுப்பின் வீடியோ பதிவை இஸ்லாம்கல்வி.காம் இணையதள வாசகர்கள் மற்றும் ஏனைய தமிழ்பேசும் முஸ்லிம்கள் அனைவரும் பயன்பெரும் பொருட்டு இங்கே வெளியிடப்படுகின்றது.

இந்த 99 நபிமொழிகளை அறிந்து கொள்வதன் மூலம் நோன்பு பற்றிய அனைத்து நபிமொழிகளிலிருந்து பெறுகின்ற செய்திகளை அறிந்து கொள்ள இயலும் என்பதனை நினைவில் கொள்ளவும்.

தமிழ் பேசும் உலமாக்கள் பயன் பெறும் பொருட்டு இங்கே குறிபிடப்பட்டுள்ள அஷ்ஷைக். ஸாலிஹ் அஹ்மத் ஷாமீ கிதாபின் அரபி மொழியிலான PDF பைல்கள் டவுன்லோட் வசதியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

நன்றி: ஆசிரியர். முஜாஹித் இப்னு ரஸீன்
அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய நிலையம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *