Featured Posts
Home » பொதுவானவை » உங்கள் சிந்தனைக்கு » புகைத்தலைப் புதைக்க ரமளான் ஓர் அரிய சந்தர்ப்பம்! [உங்கள் சிந்தனைக்கு… – 032]

புகைத்தலைப் புதைக்க ரமளான் ஓர் அரிய சந்தர்ப்பம்! [உங்கள் சிந்தனைக்கு… – 032]

அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) கூறுகின்றார்கள்:-
“உறுதியான தீர்மானத்தை உண்மையாகவே எடுத்து, தீங்கை ஏற்படுத்தும் மோசமான இந்த புகைத்தலிலிருந்து விடுபட விரும்புபவருக்கு ரமளான் மாதம் ஓர் அரிய சந்தர்ப்பமாகும். ரமளானின் பகல் பொழுதில் புகைக்காமல் தடுத்துக்கொண்டிருந்தவருக்கு (புகைத்தலை விடுவதற்கான சிறந்த) சந்தர்ப்பமாகவே இதை நான் பார்க்கிறேன். அல்லாஹ் இவருக்கு ஆகுமாக்கி இருக்கும் உணவிலிருந்தும் பானத்திலிருந்தும் உட்கொள்வதன் மூலம் இரவிலும் இப்புகைப் பழக்கத்தை விட்டும் இவர் முடியுமானவரை விலகிவிட வேண்டும். மேலும், வலமும் இடமுமாக பள்ளிவாயல்களுக்குச் செல்வதோடு நல்ல நண்பர்களுடன் சேர்ந்திருக்க வேண்டும்.
அத்துடன் புகைப்பழக்கத்தால் பீடிக்கப்பட்டு சோதிக்கப்பட்டவர்களை விட்டும் இவர் தூரமாகியிருக்கவும் வேண்டும்.

இப்படி, இம்மாதத்தில் புகைத்தலை விட்டும் தன்னை இவர் தடுத்துக்கொண்டால் எஞ்சியிருக்கும் வாழ்நாளில் இதை விட்டு விடுவதற்கு இவருக்கு மிகப்பெரும் உதவியாக இருக்கும். புகைப்பவர்களுக்கு இச்சந்தர்ப்பம் தவறிப்போகாமல் இருப்பது கட்டாயமாகும்!”.
{ நூல்: ‘மஜ்மூஉ fபதாவா’, 19/204 }

قال العلامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:-
[ شهر رمضان فرصة لمن صدق العزيمة، وأراد أن يتخلص من هذا الدخان الخبيث الضّارّ. أرى أنها فرصة لأنه سوف يكون ممسكا عنه طول نهار رمضان! وفي الليل بإمكانه أن يتسلّى عنه بما أباح الله له من الأكل والشرب، والذهاب يمينا شمالا إلى المساجد، وإلى الجلساء الصالحين، وأن يبتعد عمن ابتلوا بشربه.
فهو إذا امتنع عنه خلال الشهر فإن ذلك عون كبير على أن يدعه في بقية العمر، وهذه فرصة يجب أن لا تفوت المدخنين”.
{ مجموع فتاوى، ١٩ /٢٠٤ }

தமிழில்:

அஷ்ஷெய்க். N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *