Featured Posts
Home » பொதுவானவை » உங்கள் சிந்தனைக்கு » அவரா சொன்னார்? அப்ப அது உண்மையாகத்தான் இருக்கும்!! [உங்கள் சிந்தனைக்கு… – 068]

அவரா சொன்னார்? அப்ப அது உண்மையாகத்தான் இருக்கும்!! [உங்கள் சிந்தனைக்கு… – 068]

அவரா சொன்னார்!? அப்ப அது உண்மையாகத்தான் இருக்கும்!!

இமாம் முஸனீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:
(எனது ஆசான்) இமாம் ஷாfபிஈ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் எனக்கு இவ்வாறு கூறினார்கள்:-
“(ஈராக்கின்) பக்தாத் நகரத்தில் ஒரு இளைஞனை நான் கண்டேன். அவர், ‘(இந்த ஹதீஸை, அல்லது இச்செய்தியை இன்னார்) எங்களுக்குத் தெரிவித்தார்!’ என்று கூறினால், ‘உண்மையையே அவர் உரைத்துவிட்டார்!’ என்று மக்கள் எல்லோரும் சொல்வார்கள். அப்போது நான் இமாம் ஷாfபிஈ அவர்களிடம், யார் அவர்?’ என்று கேட்டேன். அதற்கவர், ‘இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள்தான் அவர்!’ எனக் கூறினார்”.
{ நூல்: ‘சியரு அஃலாமின் நுbபலா’, 11/195 }

قال الإمام المزني رحمه الله تعالى: قال لي الإمام الشافعي رحمه الله تعالى:-
[ رأيت ببغداد شابا إذا قال: « حدّثنا » قال الناس كلّهم: صدق! قلت: ومن هو؟
قال: ‘أحمد بن حنبل رحمه الله’ ]
{ سير أعلام النبلاء، ١١/١٩٥ }

தமிழில்…
அஷ்ஷெய்க் N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *