Featured Posts
Home » பொதுவானவை » Coronavirus disease (COVID-19) » கொரோனா (Corona) போன்ற கொடிய நோய்களின் போது இஸ்லாம் கற்றுத் தரும் பாடங்கள் – தொடர் 4

கொரோனா (Corona) போன்ற கொடிய நோய்களின் போது இஸ்லாம் கற்றுத் தரும் பாடங்கள் – தொடர் 4

எம்.ஜே.எம்.ரிஸ்வான் மதனி. M.A, (cey)

கொரோனாவாகிப் போன இறைத் தண்டனை

உலகின் உரிமையாளனும் ஆட்சியாளனும் அதிபதியும் அல்லாஹ் ஒருவனே. அவனது உலகில் அவன் விதித்த கட்டளைகளை மாறு செய்வோர் மீது அவன் பல்வேறுபட்ட வழிகளில் தண்டனைகளை அமுல் செய்வான்.

உலகச் (சண்டியனாகவும்) ரவுடியாகவும், போலீஸ்காரனாகவும் செயல்படும் வீட்டோ பவர் என்று சொல்லப்படும் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா, ஜேர்மனி போன்ற நாடுகளின் தலைவர்கள் தாம் விரும்பியவாறு செயல்பட முடியுமாக இருந்தால் அனைத்திற்கும் அதிபதியான அல்லாஹ்வால் ஏன் தனது வீட்டோபவரைக் காண்பிக்க முடியாது!!!

அது பற்றிய தெளிவு கீழே தரப்படுகின்றது.

அறிமுகம்
???
உலகில் வந்த இறைத் தூதர்கள் அனைவர்களும் மனித குலத்திற்குரிய உலகியல் நலனைக் கொண்டும், மரணத்தின் பின்னால் உள்ள நிரந்தர சுவனவாழ்வு, நரகவாழ்வு பற்றிய அடிப்படையான இறைச் செய்திகளைக் கொண்டும் இறைத் தூதர்களாக அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ்வால் தேர்வு செய்யப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டனர்.

அவர்கள் இறைக் கட்டளைகளை தமது சமூகத்தினர் மத்தியில் எத்திவைக்கின்ற போது அவற்றைத் தமது குறுகிய அறிவுகளால் மறுத்து பரிகாசம் செய்தனர், அல்லது அவர்களை நிராகரித்ததுடன், நாட்டின் – சமூகத்தின் அபசகுணமாகவும் பிரகடனப்படுத்தி அவர்களைக் கொலையும் செய்தனர்.

சில போது தமது அதிகாரத்தால் அவர்களை அப்பிரதேசங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றி மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.

புவியின் முதல் இறைத் தூதர் நூஹ் (நோவா) முதல், இறுதி இறைத்தூதரான முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரை இந்த அணுகுமுறையைத்தான் இறைவனின் எதிரிகள் கடைப்படித்தார்கள்.

இறைத் தூதர் நூஹ் (அலை) அவர்களின் சமூகம் ராட்சத வெள்ளப்பிரளயத்தால் அழிய, அவரோ தான் தயாரித்த கப்பலில் தன்னை நம்பிய மக்களோடு பாதுகாப்பாக ஜூதி மலையில் இறங்கியது உண்மை என நவீன காலத்தில் அவரது கப்பல் கூறும் நிரந்தர அத்தாட்சிக் கதையாக மாறிய நிகழ்வே; அல்லாஹ், இஸ்லாம், இறைச் செய்தி, தூதுத்துவம், மறுமை வாழ்வு போன்ற அனைத்தும் உண்மை என நம்பிக்கை கொள்வதற்கு போதுமான ஆதாரங்களாகும்.

இறைத் தூதர் மூஸா (அலை) அவர்கள்; ஈருலகிலும் வல்லமை மிக்க ஆட்சியாளன், அர்ஷின் இரட்சகன் அல்லாஹ்வைப் பற்றி; கொடிய இறைமறுப்பாளன் ஃபிர்அவ்னிடம் அறிமுகம் செய்த போது அவன் அவரைக் கேலி செய்து, கிண்டல் அடித்து ;

وَقَالَ فِرْعَوْنُ يَٰٓأَيُّهَا ٱلْمَلَأُ مَا عَلِمْتُ لَكُم مِّنْ إِلَٰهٍ غَيْرِى فَأَوْقِدْ لِى يَٰهَٰمَٰنُ عَلَى ٱلطِّينِ فَٱجْعَل لِّى صَرْحًا لَّعَلِّىٓ أَطَّلِعُ إِلَىٰٓ إِلَٰهِ مُوسَىٰ وَإِنِّى لَأَظُنُّهُۥ مِنَ ٱلْكَٰذِبِينَ
(القصص – 38)

“ஃபிர்அவ்ன் பிரமுகர்களே! உங்களுக்கு என்னை அன்றி வேறொரு தெய்வத்தை உங்களுக்கு நான் அறியமாட்டேன். ஹாமானே! எனக்காக களிமண்ணால் ஒரு கோபுரத்தைக் கட்டு. நான் மெஸூவின் கடவுளை எட்டிப் பார்க்க வேண்டும். அவரைப் பொய்யய்களில் ஒருவராகவே நான் நம்புகிறேன்.”
(அல்கஸஸ் : 38)


எனக் கேவலமாகக் கூறி இஸ்ரவேலின் சந்ததிகளை வழிகெடுத்த அவனே ;

أَنَا۠ خَيْرٌ مِّنْ هَٰذَا ٱلَّذِى هُوَ مَهِينٌ وَلَا يَكَادُ يُبِينُ. (الزخرف : 52)

“இந்தக் கேவலமானவரை விட நானே சிறந்தவன். அவருக்கு நாவு கூட திருத்தம் இல்லையே” (அஸ்ஸுக்ருஃப் : 52)

என்றும் பரிகாசமாகப் பேசினான்.

இறுதி முடிவு

இவனது இறுதி முடிவு நைல் நதியில் அவன் தனது பட்டாளத்தோடு மூழ்கடிக்கப்பட்டான்.

وَجَاوَزْنَا بِبَنِىْۤ اِسْرَآءِيْلَ الْبَحْرَ فَاَتْبـَعَهُمْ فِرْعَوْنُ وَجُنُوْدُهٗ بَغْيًا وَّعَدْوًا‌ ؕ حَتّٰۤى اِذَاۤ اَدْرَكَهُ الْغَرَقُ قَالَ اٰمَنْتُ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّا الَّذِىْۤ اٰمَنَتْ بِهٖ بَنُوْۤا اِسْرَآءِيْلَ وَ اَنَا مِنَ الْمُسْلِمِيْنَ‏ [يونس / ٩٠]

“மேலும், இஸ்ராயீலின் சந்ததியினரை நாம் கடலைக் கடக்க வைத்தோம்; அப்போது, ஃபிர்அவ்னும், அவனுடைய படைகளும், (அளவு கடந்து) கொடுமையும், பகைமையும் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தார்கள்; (அவனது இறுதி நேரம் நெருங்கி) அவன் மூழ்க ஆரம்பித்ததும் அவன்: இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த நாயனை ஈமான் கொண்டுள்ளார்களோ, அவனைத் தவிர வேறு இறைவன் இல்லையென்று நானும் ஈமான் கொள்கிறேன்; இன்னும் நான் அவனுக்கே முற்றும் வழிபடுபவர்களில் (முஸ்லிம்களில்) ஒருவனாக இருக்கின்றேன்” என்று கூறினான்.


آٰلْــٰٔنَ وَقَدْ عَصَيْتَ قَبْلُ وَكُنْتَ مِنَ الْمُفْسِدِيْنَ‏ [يونس / ٩١]

“இந்த நேரத்தில்தானா (நீ நம்புகிறாய்)? சற்று முன் வரையில் திடனாக நீ மாறு செய்து கொண்டிருந்தாய்; இன்னும், குழப்பம் செய்பவர்களில் ஒருவனாகவும் இருந்தாய்.”

فَالْيَوْمَ نُـنَجِّيْكَ بِبَدَنِكَ لِتَكُوْنَ لِمَنْ خَلْفَكَ اٰيَةً  ؕ وَاِنَّ كَثِيْرًا مِّنَ النَّاسِ عَنْ اٰيٰتِنَا لَغٰفِلُوْنَ [يونس / ٩٢]

“எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக நீ இருப்பதற்காக இன்றைய தினம் நாம் உனது உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்” (என்றும் கூறப்பட்டது). (அத்தியாயம் : யூனுஸ், வசனங்கள் : 90-92)

இவன் அகிலங்களின் இரட்சகனாகிய அல்லாஹ்வை எப்படி எல்லாம் பரிகாசம் செய்யலாமோ அப்படி எல்லாம் பரிகாசம் செய்த ஃபிர்அவ்னைப் போன்றே மற்றவர்கள் ஏதோ வகையில் தண்டிக்கப்படுவது நிச்சயமே.

அல்லாஹ்வை நேரடியாக காட்டலாமா ?

அல்லாஹ்வை பார்த்தீர்களா? இல்லை தானே! அப்படியானால் அவனை எவ்வாறு நம்பிக்கை கொள்வது? என்ற கேள்விக்கு புலனுக்குப் புலப்படாத கொரோனா வைரஸ் பதில் சொல்லிக் கொண்டிருக்கின்றது. (அல்ஹம்துலில்லாஹ்)

வேதம் கொடுக்கப்பட்டோர் நேரடியாக வானத்தில் இருந்து ஒரு வேத நூலை வேண்டிக் கொண்டது போன்று, மூஸா அலை அவர்களின் சமூக காஃபிர்களும் அல்லாஹ்வை நேரடியாகக் கண்டால் நம்பிக்கை கொள்வோம் என்றும் விதண்டாவாதம் செய்தனர். அதற்குப்பதில் பேரிடியே தீர்வாக மாறியது.

يَسْـَٔلُكَ أَهْلُ ٱلْكِتَٰبِ أَن تُنَزِّلَ عَلَيْهِمْ كِتَٰبًا مِّنَ ٱلسَّمَآءِ ۚ فَقَدْ سَأَلُواْ مُوسَىٰٓ أَكْبَرَ مِن ذَٰلِكَ فَقَالُوٓاْ أَرِنَا ٱللَّهَ جَهْرَةً فَأَخَذَتْهُمُ ٱلصَّٰعِقَةُ بِظُلْمِهِمْ ۚ [النساء / ١٥٣]

“(நபியே!) வேதமுடையவர்கள் தங்கள் மீது ஒரு வேதத்தை வானத்திலிருந்து நீர் இறக்கி வைக்க வேண்டுமென்று உம்மிடம் கேட்கின்றனர்; அவர்கள் மூஸாவிடம் இதைவிடப் பெரியது ஒன்றைக் கேட்டு: “எங்களுக்கு அல்லாஹ்வைப் பகிரங்கமாகக் காட்டுங்கள்” எனக் கூறினர்; ஆகவே அவர்களுடைய அக்கிரமத்திற்காக அவர்களை இடி தாக்கியது;” (அந்நிஸா : 153)

அவ்வாறுதான் மக்காவாழ் இறைமறுப்பாளர்களும் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு மிக மோசமாக நடந்து கொண்டனர்.

☝️அவர்களிடம் குர்ஆன் இறைவேதம். நான் இறைவனின் தூதர், எனவே எனது போதனைகளை எடுத்து நடவுங்கள்,

?மரணத்தின் பின்னால் மறுமை நாள் என்ற மற்றொரு நாள் உண்டு,

?மீண்டும் எழுப்பப்பட்டு கேள்வி கேட்கப்பட்டு; சொர்க்கமம் – நரகம் என்ற இரு வேறு நிரந்தர இடங்களில் மனிதர்கள் வாழவைக்கப்படுவார்கள்.

☝️அந்த ஒரு நாள்; இவ்வுலகில் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு ஈடான நாள் என இறைத் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போதனை செய்த போது;
புதுமையாகப் பேசுகின்றாரே!
பகுத்தறிவுக்குப் பொருந்தாத சிந்தனையைக் கூறி மக்கள் மத்தியில் குழப்பம் செய்கின்றாரே,
இந்த முஹம்மது அவர்கள் எனக் கூறி அவர்கள் இறைமறுப்பாளர்களாக மாறினர்.

وَلَئِنْ قُلْتَ اِنَّكُمْ مَّبْعُوْثُوْنَ مِنْۢ بَعْدِ الْمَوْتِ لَيَـقُوْلَنَّ الَّذِيْنَ كَفَرُوْۤا اِنْ هٰذَاۤ اِلَّا سِحْرٌ مُّبِيْنٌ‏ [ هود/ ٠٧ ]

இன்னும் நபியே! “நிச்சயமாக நீங்கள் மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவீர்கள்” என்று நீர் கூறினால், (அதற்கு) காஃபிர்கள், “இது நிச்சயமாக தெளிவான சூனியத்தைத் தவிர வேறில்லை” என்றும் கூறுவார்கள். (ஹூத்-07)

وَقَالُوْا مَا هِىَ اِلَّا حَيَاتُنَا الدُّنْيَا نَمُوْتُ وَنَحْيَا وَمَا يُهْلِكُنَاۤ اِلَّا الدَّهْرُ‌ؕ وَمَا لَهُمْ بِذٰلِكَ مِنْ عِلْمٍ‌ ۚ اِنْ هُمْ اِلَّا يَظُنُّوْنَ‏.[الجاثية :٢٤]

“(மறுமையை நம்பாத) அவர்கள்: “நமது இந்த உலக வாழ்க்கையைத் தவிர வேறு (வாழ்க்கை) கிடையாது; நாம் மரணிக்கின்றோம்; ஜீவிக்கிறோம்; “காலம்” தவிர வேறெதுவும் நம்மை அழிப்பதில்லை” என்று கூறுகிறார்கள்; அவர்களுக்கு அது பற்றிய எதுவித அறிவும் கிடையாது – அவர்கள் (இது பற்றிக் கற்பனையாக) எண்ணுவதைத் தவிர வேறில்லை.” (அல்ஜாஸியா : 24)

அதாவது உலகில் நாம் கால் நடைகள் போன்று இலச்சியம் இல்லாத மனித மிருகங்கள் என்பது இந்தக் கூற்றின் விளக்கமாகும்.

முஹம்மது நபியவர்கள் கொண்டு வந்த சத்திய வாழ்வை எதிர்ப்பதில் உச்சகட்டமாக:

وَاِذْ قَالُوا اللّٰهُمَّ اِنْ كَانَ هٰذَا هُوَ الْحَـقَّ مِنْ عِنْدِكَ فَاَمْطِرْ عَلَيْنَا حِجَارَةً مِّنَ السَّمَآءِ اَوِ ائْتِنَا بِعَذَابٍ اَ لِيْمٍ‏ .
(الأنفال – 32)

“(இன்னும் மக்காவின் நிராகரிப்போர்:) “அல்லாஹ்வே! இது உன்னிடமிருந்து வந்த உண்மையானால், எங்கள் மீது வானத்திலிருந்து கல் மாரி பொழியச் செய், அல்லது எங்களுக்கு நோவினைமிக்க வேதனையை அனுப்பு!” என்றும் கூறினர்.” (அல்-அன்ஃபால் : 32 )

இவர்களின் பிரார்த்தனை மறுக்கப்பட இறைத்தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உயிருடன் வாழ்ந்து வந்ததும் அவர்கள் பாமன்னிப்பு வேண்டியதும் ஒரு பாதுகாப்புக் கவசமாகிப் போனதாக அல்குர்ஆன் பிரஸ்தாபிக்கின்றது.

وَمَا كَانَ اللّٰهُ لِيُعَذِّبَهُمْ وَاَنْتَ فِيْهِمْ‌ؕ وَمَا كَانَ اللّٰهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُوْنَ‏ .
(الأنفال : 32)

“ஆனால் நீர் அவர்களிடையே இருக்கும் வரையிலும் அல்லாஹ் அவர்களை வேதனை செய்ய மாட்டான்; மேலும் அவர்கள் பாவமன்னிப்பைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதும் அல்லாஹ் அவர்களை வேதனை செய்பவனாக இல்லை.” (அல்அன்ஃபால் : 32-33)

இறை மறுப்பாளர்களின் பொதுப் புத்தி :

இறை தண்டனை நெருங்கி வரும் வரை உலகின் அதிபதிகளாகவும், சக்திவாய்ந்தவர்களாகவும் தம்மைக் காட்டிக் கொள்ளும் காஃபிர்கள் இறை தண்டனை வந்ததும் விழி பிதுங்கி நிலைகுலைந்து விடுவது எல்லாக் காலத்திற்கும் பொதுவான நடைமுறையாகிப் போனது. இதற்கு கொரோனாவும் விதிவிலக்கல்ல.

وَلَٮِٕنْ اَخَّرْنَا عَنْهُمُ الْعَذَابَ اِلٰٓى اُمَّةٍ مَّعْدُوْدَةٍ لَّيَـقُوْلُنَّ مَا يَحْبِسُهٗؕ اَلَا يَوْمَ يَاْتِيْهِمْ لَـيْسَ مَصْرُوْفًا عَنْهُمْ وَحَاقَ بِهِمْ مَّا كَانُوْا بِهٖ يَسْتَهْزِءُوْنَ (هود/ ٨)

“(கொடிய இறைமறுப்பின் காரணமாக அவர்களுக்கு விதிக்கப்பட வேண்டிய) வேதனையை ஒரு குறித்தகாலம் வரை நாம் பிற்படுத்தினால் “அதைத் தடுத்தது யாது?” என்று அவர்கள் நிச்சயமாக (ஏளனமாகக்) கேட்பார்கள்; அவர்களுக்கு வேதனை வரும் நாளில் அவர்களை விட்டும் (அது) தடுக்கப்படாது என்பதையும், எதை அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ, அது அவர்களைச் சூழ்ந்து கொள்ளும் என்பதையும் அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?” (ஹூத் : 08)

என அல்லாஹ் கேள்வி எழுப்புவது பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.

இறை மறுப்பாளர்கள் தட்டித் தடுமாறும் கொரோனாவை ஒரு சவாலாகவே அல்லாஹ் அனுப்பி உள்ளான் என்றே கூற வேண்டியுள்ளது. இது பற்றி அல்குர்ஆன் ;

اِنْ نَّشَاْ نُنَزِّلْ عَلَيْهِمْ مِّنَ السَّمَآءِ اٰيَةً فَظَلَّتْ اَعْنَاقُهُمْ لَهَا خٰضِعِيْنَ‏ (الشعراء:٤)

“நாம் நாடினால், அவர்களுடைய கழுத்துக்கள் பணிந்து குணிந்து வரும்படி செய்யக் கூடிய அத்தாட்சியை வானத்திலிருந்து அவர்கள் மீது நாம் இறைக்கிவிடுவோம்.” (அஷ்ஷூஅரா : 04)

என 1500 வருடங்களுக்கு முன்னர் அறிவித்து, அதனை சவாலுக்கும் உட்படுத்திவிட்டது.

நடுநிலையோடு சிந்திப்போருக்கு குர்ஆனின் போதனைகளில் நிறைய படிப்பினைகள் உண்டு.

.?????

இறை சோதனை மற்றும் தண்டனைகளின் பெயர் எப்படி வைரஸ் ஆகியது?

மனிதன் எப்படித்தான் தலையைச் சுற்றிக் குட்டிக்கரணம் அடித்தாலும் அல்லாஹ்தான் இந்த உலகின் அதிபதி, அவன் நாட்டமின்றி அணுவும் அசைவதில்லை என்பதை மனித உயிர்களைக் கைப்பற்றும் போது அவன் நிச்சயம் காண்பித்தே தீருவான்.

இருந்தும் அவன் கருணையாளன் என்பதையும் நிரூபித்த பின்பே மனிதர்களைத் தண்டிக்கவும் அழிக்கவும் செய்கின்றான் என்பதை மனிதர்கள் உணர்வதில்லை.

உலகில் மனிதர்கள் கடக்கக் கூடாது என அல்லாஹ் நிர்ணயித்த எல்லைகளை மீறுகின்ற போது மீறியோரை அவன் தண்டிப்பேன் என அறிவுரை கூறி அவற்றை மீறிய பின்பே அவன் அவர்களை அழிக்கின்றான்.

வேதனைகளின் முறைகள்

? கல்மாரி பொழியச் செய்வது,

? பூமியில் சுரிவாங்குவது,

? குரங்குகளாக உருமாற்றப்படுவது, ,

? திடீர் சப்தம்,

? நிலநடுக்கம்,

? பாரிய அழிவை ஏற்படுத்துவது,

? நீர், வெள்ளம் போன்ற இடர்களால் முழுமையாக அழிப்பது,

? காற்று மூலம் அழிப்பது,

…போன்ற பல் வேறு வழிமுறைகள் மூலம் இறைமறுப்பாளர்கள் தண்டிக்கப்பட்டு அழிக்கப்பட்டனர் என குர்ஆன் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகம் செய்துள்ளது. அவற்றில் ஒரு தண்டனை முறையாகவே கொரோனாவையும் வைரஸ் பரவல்களையும் நாம் பார்க்க வேண்டியுள்ளது.

ஏனெனில், இறைத் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவியர்களில் ஒருவரான அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் தாஊன் என்ற பிளேக் பற்றி கேட்ட போது :

فَأخْبَرَها نَبِيُّ اللَّهِ ﷺ: «أنَّهُ كانَ عَذابًا يَبْعَثُهُ اللَّهُ عَلى مَن يَشاءُ، فَجَعَلَهُ اللَّهُ رَحْمَةً لِلْمُؤْمِنِينَ … رواه البخاري »

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ; “(பிளேக், காலரா போன்ற) கொள்ளை நோய் ; அதனை, அல்லாஹுத்தஆலா தான் நாடியவர்களின் மீது அனுப்புகின்ற வேதனையாகும். மேலும், அதனை முஃமீன்களுக்கு அருளாகவும் ஆக்கியுள்ளான்.” எனக் கூறினார்கள். (புகாரி)

الطاعون رِجْزٌ أُرسِل على بني إسرائيلَ أو على مَن قبْلَكم {صحيح ابن حبان }

“காலரா (தாஊன்) நோயானது இஸ்ரேலின் சந்ததியினர் மீது அல்லது உங்களுக்கு முன்பிருந்தவர்கள் மீது அனுப்பப்பட்ட தண்டையாகும்” எனக் கூறியதாக இடம் பெற்றுள்ளது. (இப்னு ஹிப்பான் )

மேற்படி செய்தியை அவதானிக்கின்ற போது இது இறை தண்டனைகளில் ஒன்று என்பது இறைத் தூதரின் போதனையாகும்.

உலகம் கூறும் பெயர் என்ன?

உலகை அல்லாஹ் இயக்குவதை நிராகரிக்கின்ற இயற்பிலாளர்களின் செல்வாக்கு உலக சீரழவில் பாரிய பங்காற்றுகின்றது.

அவர்களே இந்த உலக அழிவிலும், மனிதர்களை வழிகெடுப்பதிலும் பின்னணியில் இருந்து காத்திரமாக செல்வாக்குச் செலுத்துகின்றனர்.

இவர்களே உலக மக்களை அழிவுக்கும், இறை தண்டனைக்கும் வழிவெட்டிக் கொடுப்போராகத் திகழ்கின்றனர்.

சுருக்கமாகச் சொன்னால் மனிதர்களை மிருக வாழ்விற்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு இறை தண்டனையைப் பெற்றுக் கொடுக்கின்றனர்.

أُوْلَٰٓئِكَ يَدْعُونَ إِلَى ٱلنَّارِ ۖ وَٱللَّهُ يَدْعُوٓاْ إِلَى ٱلْجَنَّةِ وَٱلْمَغْفِرَةِ بِإِذْنِهِۦ ۖ وَيُبَيِّنُ ءَايَٰتِهِۦ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ
(البقرة : 221)

“அவர்கள் நரகின் பக்கமாக (மக்களை) அழைக்கின்றனர். அல்லாஹ்வோ சுவனத்தின் பக்கமும் அவனது உத்தரவின்படி மன்னிப்பின் பக்கமும் (அவர்களை) அழைக்கின்றான். மேலும் அவர்கள் படிப்பினை பெறும் பொருட்டு அவன் தனது வசனங்கள் பற்றி தெளிவுபடுத்துகின்றான்.” (அல்பகரா : 221)

அல்லாஹ் அப்படிப்பட்ட வழிகாட்டல்களை மனிதனுக்கு வழங்கவில்லை. மாற்றமாக:

وَٱللَّهُ يَدْعُوٓاْ إِلَىٰ دَارِ ٱلسَّلَٰمِ .
(يونس – 25)

“அல்லாஹ் சமாதானம் நிறைந்த வீட்டின் (சொர்க்கத்தின்) பக்கம் அழைக்கின்றான்.” (யூனுஸ் : 25)

அல்லாஹ்வின் அன்பான இந்த அழைப்பை மனித சமூகம் முழுமனதோடு ஏற்றுக் கொண்டால் அவர்கள் சுவன வெற்றி பெறுவர் என்பது அனைத்தும் பற்றி அறிந்த அல்லாஹ்வின் வாக்காகும். அவன் வாக்குமீறுவதில்லை.

வைரஸ்கள் பற்றிய உலகப் பார்வை

அடியார்களை சோதிப்பதற்காக அல்லாஹ் சில நோய்களை உலகில் இறைக்கி வைக்கின்றான். அதற்கு மருந்துகளும் இல்லாமல் இல்லை.

பல மில்லியன் மக்களின் உயிர்களை இல்லாது செய்யக்கூடியதாக அறியப்பட்ட நோயாக தாஊன் (பிளேக் , கொளரா) போன்ற நோய்கள் காணப்பட்டன. மரணமே அதன் முடிவுத் தீர்ப்பாக இருந்துள்ளதை உலக வரலாற்றைப் படிக்கின்ற போது அறிந்துகொள்ள முடிகின்றது.

இது பற்றிய நபியின் மனைவியரான அன்னை ஆயிஷா (ரழி) அவர்களின் கேள்விக்கு அது இஸ்ரேலிய சமூகத்தினர் மீது அல்லாஹ் அனுப்பிய தண்டனையாக இருந்தது என இறைத் தூதர் கூறியதை இஸ்ரேலிய விஞ்ஞானிகள் மறைப்பதற்காகக் கூட இதற்கு வைரஸ் எனப் பெயரிட்டுக் கொண்டாலும் அல்லாஹ்வின் தண்டனை என்பதையே ஒரு முஃமின் நம்பிக்கை வேண்டும்.

உலகில் பரவிய வைரஸ் பற்றிய சுருக்கம்

கி.பி. 1347_1352 வரையிலான காலப் பகுதியில் ஐரோப்பாவை ஒரு நோய் தாக்கியதில் 40 மில்லியன் மக்கள் மடிந்து போனார்கள். அதற்கு
black plague (or death , the Great or Black Death ), “கருப்பு மரணம்” அல்லது “கருப்பு பிளேக்” எனப் பெயரிடப்பட்டுள்ளது. அதே நோய் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு ஆசியாவிலும் சமகாலத்தில் பரவி மனித இனத்தின் மூன்றில் ஒரு பகுதியை காவுகொண்டது .
(பார்க்க:https://ar.m.wikipedia.org/wiki/)

கி.பி.1720 ல் பிரான்ஸின் மர்ஸலீனா நகரில் ஏற்பட்ட தொற்றால் ஒரு லெட்சம் பேர் வரை இறந்தனர்.

அதன் பின் சரியாக ஒராண்டு கழித்து (1820) இந்தோனேஸியா, பிலிப்பீன், தாய்லாந்து ஆகிய நாடுகளை பாரிய கொளரா நோய் பீடித்தது. அதில் ஒரு லெட்சத்திற்கும் அதிகமான மக்கள் மரணமானார்கள்.

“Spanish flu”

மனிதர்கள் மத்தியில் முதலாம் உலகமகா யுத்தம் முடிந்த கையோடு (1918 – 1920)ல் இஸ்பைன் நாட்டில் தொற்றிய ஒரு வகை வைரஸாகும் . அதற்கு “Spanish flu” எனப் பெயரிடப்பட்டது.

இந்நோய் பற்றி விபரிக்கின்ற வரலாற்று ஆசிரியர்கள்:

ويتفق المؤرخون على أن الإنفلونزا الإسبانية لم تفرق بين البشر، إذ أصابت الكبار والشباب والمرضى والأصحاء، وكانت شديدة للغاية على الشباب الذين تتراوح أعمارهم بين 20-30 عاما، الذين كانوا أصحاء قبل الوباء.

இஸ்பைன் தொற்றானது மனிதர்கள் மத்தியில் வேறுபடுத்தி அவர்களை பீடிக்கவில்லை. மாறாக பெரியவர், சிறியவர், இளைஞர்கள், நோயாளிகள், ஆரோக்கியமானவர்கள் என அனைத்து தரப்பாரையும் அது பலி எடுத்தது.

20-30 வரையான வயதில் உள்ள இளைஞர்களை அது கடுமையாகப் பாதித்தது, அவர்கள் அனைவரும் அதற்கு முன்னர் தேகஆரோக்கியமானவர்களாகவே இருந்தனர் எனக் குறிப்பிடுகின்றனர்.

Spanish flu என்ற இந்த வைரஸ் மூலம் 500 மில்லியன் மக்கள் பாதிக்இப்பட்டனர், அவர்களில் 50 மில்லியன் மக்கள் இறந்து போனார்கள் என்பதில் வரலாற்று ஆசிரியர்கள் ஒருமித்த கருத்தில் உள்ளனர்.

1- https://www-skynewsarabia-com.cdn.ampproject.org/v/s
2- https://www.skynewsarabia.com/amp/technology/1329716-

3- https://en.m.wikipedia.org/wiki/Spanish_flu

நவீன கால வைரஸ் தொற்றுக்கள் :

20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி தொடக்கம் தற்பொழுதைய 21ஆம் நூற்றாண்டுவரை ஒரு சில வைரஸ் தாக்குதலால் பல நாடுகள் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் மிகுந்த கவனம் பெற்று, பல உயிர்களை கொன்ற வைரஸ்கள் குறித்து பார்க்கலாம்.

(1) இபோலா வைரஸ் (Ebola Virus) :

குரங்குகள், பழந்தின்னி வௌவால்கள் போன்ற விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கும், ஒரு மனிதரிடம் இருந்து மற்றொருவருக்கும் வேகமாக பரவக்கூடியது இபோலா வைரஸ்.

1976ஆம் ஆண்டு முதன்முதலில் தற்போதைய தென் சூடான் பகுதியிலும், காங்கோ குடியரசு நாட்டிலும் இபோலா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. காங்கோ குடியரசில் இபோலா என்ற நதி அருகே உள்ள ஒரு கிராமத்தை இந்த வைரஸ் தாக்கியதால், இதற்கு இபோலா வைரஸ் (Ebola Virus) என்று பெயரிடப்பட்டது.

லைபீரியா, கினியா மற்றும் சியாரா லியோனில் 2013 – 2016 வரை பரவிய இபோலா வைரஸ் தொற்றால் 11,300 பேர் கொல்லப்பட்டனர்.

https://www-bbc-com.cdn.ampproject.org/v/s/www.bbc.com/tamil/amp/global-

(2) சார்ஸ் (SARS)

21ஆம் நூற்றாண்டின் மோசமான நோயாகவும், உலக சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாகவும் பார்க்கப்பட்டது சார்ஸ்.

சார்ஸ் என்பதன் பொருள்; தீவிர சுவாசப் பிரச்சனைக்கான நோய்க்குறி என்று அர்த்தம்.

சார்ஸ் வைரஸால் சீனாவில் மட்டும் 774 பேர் உயிரிழந்தனர். இதில் மருத்துவர்களும் அடங்குவர்.

இதனை கட்டுப்படுத்த தவறியதாக சீனாவை ஜ.நா விமர்சித்தது.

?தற்போது வரை இதற்கு எந்த சிகிச்சையும் கிடையாது.

(3) ஜிகா வைரஸ் (Zika virus) :

கொசு வகை கடிப்பால் ஜிகா வைரஸ் தொற்று ஏற்படும். இந்த கொசு, பகல் நேரத்தில் கடிக்கக் கூடியது.

முதன் முதலில் உகாண்டாவில் 1947ல் குரங்குகளிடம் இந்த வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் 1952ல் உகாண்டா மற்றும் தான்சானியாசில் மனிதர்களிடம் இந்த தொற்று கண்டறியப்பட்டது.

பின்னர் 2007ஆம் ஆண்டுதான் மைக்ரொனீசியாவில் உள்ள யாப் எனும் தீவில் இந்த வைரஸ் தொற்று பதிவாகியது. அதனை தொடர்ந்து 2013ல் பிரெஞ்சு பாலினீசியா மற்றும் பசிபிக் எல்லையில் உள்ள மற்ற நாடுகளில் ஜிகா வைரஸ் ஆயிரக்கணக்கான மக்களை தாக்கியது.

?ஜிகா வைரஸிற்கு இதுவரை எந்த சிகிச்சையும் கிடையாது.

(4) நிபா வைரஸ் (Nipah virus) :

நிபா தொற்று விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு கடுமையான நோயை உண்டாக்கும் வைரஸாகும். இதன் பிறப்பிடம் Fruit bats எனப்படும் பழந்தின்னி வௌவால்கள்.

1998ஆம் ஆண்டு முதன்முதலில் மலேஷியாவில் இந்த வைரசால் நோய் தொற்று ஏற்பட்டது.

வௌவால்களிடம் இருந்து பன்றிகளுக்கு இந்த நோய் பரப்பப்பட்டது.

2004ஆம் ஆண்டு வங்க தேசத்தில் பழந்தின்னி வௌவால்கள் கடித்த பன்றியை சாப்பிட்ட மனிதர்களுக்கு நிபா வைரஸ் பரவியது. ஒரு மனிதரிடம் இருந்து மற்றவருக்கு பரவுவதும் கண்டறியப்பட்டது.

இந்த வைரஸ் தொற்றால் கடுமையான சுவாசப் பிரச்சனை ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படலாம்.

?நிபா வைரசால் பாதிக்கப்படும் மனிதர்களுக்கோ, விலங்குகளுக்கோ எந்த தடுப்பூசியும் இல்லை.

https://www-bbc-com.cdn.ampproject.org/v/s/www.bbc.com/tamil/amp/global

(5) கொரோனா (covid-19)

இது சீனாவின் ஓஹான் மாகாணத்தில் முதலாவது ஆரம்பாகப் பரவியது. பின்னர் உலகில் 64 நாடுகளுக்கும் அதிகமான நாடுகளில் பரவி இது வரை … உயிர்களை எடுத்துள்ளது.

ஆனால் விஞ்ஞானமே கடவுள் என மார்தட்டிக் கொள்ளும் இந்த உலகில் ஏனைய வைரஸ்கள் போல இதற்கும் இதுவரை நிரந்தர மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதே, இது இறைவனின் தண்டனைகளில் ஒன்று என்பதை உள்ளார்ந்த அடிப்படையில் நமக்கு உணர்த்துகின்றது .

காரணங்கள் – தீர்வுகள் பற்றி வருகின்ற தொடர்களில் விவாதிக்கப்படும் இன்ஷா அல்லாஹ்….

தொடரும் இன்ஷா அல்லாஹ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *